newlanka.lk :யாழ். பலாலி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் திருப்பதிக்கான விமான சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த ஆண்டிற்குள் குறித்த விமான சேவை ஆரம்பிக்கப்படும் அரசாங்கத்தின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்திய அரசாங்கம் நிதியுதவி அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வலம்புரி : யாழ்ப்பாணத்தில் இருந்து மக்கள் நேரடியாக வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்வதற்கும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வத ற்கும் வான்வழி மற்றும் கடல்வழி சேவைய ஆரம்பிப்பதற்கான துரித நடவடிக்கையை இந்தியா ஆரம்பித்துள்ளதாக
யாழ். இந்திய துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வு நேற்று யாழ்ப்பாணத்தில்
கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு
தெரி வித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
சுதந்திரத்துக்கு முற்பட்ட வரலாற்று காலத்தில் இருந்து இன்று வரை
இலங்கை இந்திய உறவானது பிரிக்க முடியாது பின்னி ப்பிணைந்து
காணப்பட்டுள்ளது.
இந்திய துணை தூதரகம் 2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில்
ஆரம்பித்ததில் இருந்து தனது சேவைகளை வடக்கு மக்களுக்கு வழங்கி வருகிறது.
அண்மையில் பல மில்லியன் செலவில் வைத்தியத்துறை, சுகாதாரத்துறை,
கல்வித் துறை, சமூக சேவை என்பவற்றில் பல்வேறு அபிவிருத்திகள் நடைபெற்று
வருகிறது.
மேலும் குறிப்பாக சர்வதேச யோகா தின த்தை முன்னிட்டு மாணவர்களின்
ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முகமாக மாணவ ர்களுக்கு யோகா கலை வழங்கப்பட்டு
வருகிறது.
இந்த அபிவிருத்தி திட்ட வரிசையில் 160 கோடி ரூபாய் செலவில்
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டு வரும் மத்திய கலாசார நிலையத்தின் கட்டுமான
பணிகள் விரைவுபடுத்த ப்பட்டுள்ளன.
மேலும் முல்லைத்தீவு மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கென 150 மீன்பிடி
படகுக ளும் 300 மீன்பிடி வலைகளும் 100 மில்லியன் ரூபா செலவில்
வழங்கப்படவுள்ளன.
நான் துணைத்தூதுவராக பதவி ஏற்ற பின்னர் மக்கள் தூதரக சேவைகளை பெற்
றுக்கொள்வதற்காக என்னை முன் அனுமதி இன்றி சந்திப்பதற்காக தூதரகத்தில் புதன்
கிழமைகளில் மக்கள் சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளோம்.
இந்த நாளில் மக்கள் நேரடியாக என்னை சந்தித்து தமது பிரச்சினைகள்
தொடர்பில் கலந்துரையாட முடியும் மேலும் மக்கள் தமது குறைநிறைகளை எமது
அலுவலகத் தில் தூதரக அலுவலகத்தில் உள்ள பரிந்துரை பெட்டிகளில் போடமுடியும்
அவை நேரடியாக என்னால் பரிசீலிக்கப்படும்.
வடக்கை பொறுத்த வரையில் தமிழ் மொழி முதன்மையாக உள்ளது. எனவே தூதரக
தொடர்பாடல் மொழி தமிழாக உள்ளது. அலு வலக கடிதம் ஆங்கிலத்தில் அமையவேண்
டியது கட்டாயமல்ல.
அவசர தேவை தவிர் ந்த ஏனைய விடயங்கள் தூதரகத்தால் அனு ப்பப்படும்
கடிதங்களும் தமிழிலேயே அமை ந்திருக்கும். மக்கள் தமிழில் கடிதங்களை எமக்கு
எந்தவித தயக்கமும் இன்றி அனுப்ப முடியும்.
எதிர்கால திட்டங்களை பொறுத்தவரை யில் யாழ் பல்கலைக்கழக நடனத்துறை,
இசைத்துறை, சித்தமருத்துவ பிரிவு, இந்து நாகரிகத்துறை, முகாமைத்துவ பீடம்
மற்றும் கணித துறைகளுக்கான பல வேண்டுகோள் கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை
தொட ர்பில் எம்மாலான முயற்சிகள் மேற்கொள்ப்பட்டு வருகின்றன.
மேலும் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து ள்ள வடக்கு மாகாண
பொருளாதாரத்தின் முன்னேற்றத்துக்கான முக்கிய விடயங்க ளான காங்கேசன் துறை
துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலையம் இவை இரண் டும் இலங்கை அரசின்
வேண்டுகோளுக்கு அமைவாக மக்களின் தேவையை பூர்த்தி செய்ய விரைவில்
ஆரம்பிக்கப்படுவதற்கான உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விரைவில் யாழ்ப்பாணத்தில் இருந்து விமானம் மூலம் நேரடியாக வெளிநாடுகளு
க்கு சென்றுவரவும் கப்பல் மூலம் ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கைகளை மேற்கொள்
ளும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.
யாழ்.இந்திய துணைத்தூதரகம் தொடர்ந்தும் வடக்கு மாகாண மக்களுக்கு தனது பங்களிப்பினை செய்யும் என மேலும் தெரிவித் தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக