வியாழன், 16 ஆகஸ்ட், 2018

TVS குழும வேணு சீனிவாசன்.அறக்கட்டளை கோயில்களில் புனரமைப்புகளை ... சந்தேகம் இருக்கிறது ...

Savithri Kannan : அடேங்கப்பா,எத்தனை அச்சுறுத்தல்கள், அறிக்கைகள்..அவரை
விசாரிக்கவே கூடாதாம்,அவர் மீது புகார் கொடுக்கப்பட்டதற்கே விசாரணை நடத்த வேண்டுமாம்!அரசியல் தலைவர்களும்,வி வி ஐ பி களும் வரிந்து பேசி கொண்டு, நிற்பது யார்க்காக?
இந்தியாவின் மிக செல்வாக்குள்ள தொழிலதிபரான டி வி எஸ் குழுமங்களின் தலைவர் வேணு சீனிவாசனுக்காக!
சிலை கடத்தல் வழக்கில் தன்னை கைது செய்யக் கூடாது, என வேணு சீனிவாசன் முன் ஜாமீன் கோரியது ஏன்?
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக் கோயிலில்,மயிலொன்று மலரெடுத்து சிவனுக்கு பூஜை செய்யும் சிலை 2004 ல் காணாமல் போகிறது.அதற்கு மாற்றாக வேரொன்று வைக்கப்படுகிறது.
அதற்கடுத்து,திருவரங்கம் ரங்கனாதன் கோயில் மூலவர் விக்ரம் களவாடப்பட்டு,வேறு ஒன்று மாற்றப்பட்டதாகப் புகார்.
இவை தொடர்பாக இது வரை அற் நிலைய துறைக்கும், காவல் துறைக்கும் புகார் தரப்பட்டும் எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில் தான் நீதி மன்றத்தை ரங்க ராஜன் என்பவர் அணுகுகிறார்.

நீதி மன்றம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பொன்மாணிக்கவேல் அவர்களை விசாரிக்க ஆணையிடுகிறது.உடனே முன் ஜாமின் கோருகிறார் வேணுகோபாலன்!
அதாவது,இது நாள் வரை,அற நிலைய துறையும்,காவல் துறையும் எந்த நபர் குறித்த புகார்களை சட்டை செய்யாமல், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கே சல்யூட் அடித்து வந்தனரோ..அந்த நபர் விசார்க்கவே படலாகாது என்பது தான் மாண்புமிகு அரசியல்வாதிகள் சிலரும், வி வி ஜ பி க்கள் சிலரும் வைக்கும் கோரிக்கை!
ஏனென்றால்,வேணு சீனிவாசன் செல்வாக்கு அப்படிபட்டது!
ஜெயலலிதா ஆட்சியில் 1995 தொடங்கி,சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் ஒரு பேரலல்[இணை] அற நிலையதுறையையே நட்த்தி வருபவர் தான் இந்த வேணு சீனிவாசன்.இவரது அறக்கட்டளை எந்தெந்த கோயில்களில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்கிறதோ, அங்கெல்லாம் இவரே அறங்காவல் குழு தலைவர், அந்தந்த கோயில்களில் அற நிலையத் துறைக்கு உள்ளது போலவே டி வி எஸ் குழுமத்திற்கும் ஒரு அலுவலகம்,சம்பந்தப்பட்ட
கோயில்களின் முக்கியமான அலுவலர்கள்
மற்றும் அதிகாரிகளுக்கு டி வி எஸ் குழுமத்தில் இருந்தும் சம்பளமாம்!
இந்த நிலையில் தான் கபாலீஸ்வரர் கோயில், திருவரங்கம் கோயில்களில் சிலை திருட்டு நடந்துள்ளது.பக்தர்கள் பதற, கதற , கலங்க...அற நிலைய துறையோ அமைதி காத்துள்ளது இது நாள் வரையில்!
அற நிலைய துறையில் உள்ள அனுபவமுள்ள ஸ்தபதிகள் சிலரிடம் பேசிய வகையில், இந்த இரண்டு கோயிகளில் மட்டுமல்லாது, டி வி எஸ் குழுமம் எங்கெங்கெல்லாம் புனரமைப்பு பணிகள் மேற் கொண்டதோ ,அங்கெல்லாமே இந்த புகார்கள் நீண்ட காலமாகவே அந்தந்த பகுதி மக்களால் வேதனையுடன்
கூறப்பட்டு வந்தாலும்,இது வரை நடவடிகையே இல்லை என்பது தான் நிஜம்!
உதாரணத்திற்கு ஓசூர் சந்திர மெளீஸ்வரர் கோயில்,அதன் அருகேயுள்ள அகரத்தில் உள்ள சிறிய கோயில்[இங்குள்ள க்ல்தூண்கள் களவு] திருனெல்வேலி திருக்க்ருங்குடி வைஷ்ணவ கோயில் போன்றவை ! அதுவும் திருக்குருங்குடியில் வைஷ்ணவ கோயிலில் எப்படி சிவன் சிலை இருக்கலாம் என கேள்வி எழுப்பிய டி வி எஸ் குழுமத்தினர், முத்ல் பிரகாரத்தில் இருந்த சிவனை வெளியில் எடுத்து வைத்து விட்டனராம்! இதை காண பொறுக்காமல் கேள்வி கேட்ட ஒரு சிவ பக்தர் அடுத்த ஒரிரு நாளில் மர்மமான முறையில் மரணமடைந்ததை இன்று வரை அப்பகுதி மக்கள் அச்சத்துடன் பேசி வருகின்றனர்.
மக்களின் பெரு நம்பிக்கையை பெற்றுள்ள பொன் மாணிக்கவேல் அவர்கள் இவற்றையும் சேர்த்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு!
மற்றொரு முக்கிய விஷயம்,இனி கோயில்களை புனரமைக்க நிதி உதவி செய்ய விரும்புபவர்கள் அரசிடம் பணம் செலுத்த வேண்டுமேயல்லது தாங்களே எல்லா அதிகாரத்தையும் கையில் எடுக்க அனுமதிக்க கூடாது.ஆந்திராவில் இப்படித்தான் அரசிடம் பணம் தந்துவிடுகிறார்கள்.
வேணு சீனிவாசன் தன் சொந்த பணம் எதையும் எடுத்து கொடுத்துவிடவில்லை !வெளி னாடு வாழ் பக்தர்கள் தரும் பணத்தை தான் அறக்கட்டளை வழி தருகிறார்.
அவருக்காக சவுண்டுவிடும் அரசியல்கட்சி தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.தேர்தல் நேரத்தில் கிடைக்கும் பணத்திற்காக மிகப் பெரிய
அதர்மத்திற்கு,அநியாயத்திற்கு
துணை போகாதீர்கள்!
விசாரித்து, உண்மைகள் வெளிப்பட அனுமதியுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக