சனி, 1 நவம்பர், 2025

கோடநாடு வழக்கில் இபிஎஸ் ஏ1 எனில் பிடித்து உள்ளே போடுங்கள்...” - திண்டுக்கல் சீனிவாசன் ஆவேசம்

 Hindu Tamil  : மதுரை: “கோடநாடு வழக்கில் பழனிசாமி ஏ1 குற்றவாளியாக இருந்தால் பிடித்து உள்ளே போடுங்கள்; யார் வேண்டாம் என்றது? திமுக ஆட்சிதானே நடக்கிறது” என்று அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் ஆவேசமாக கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட தங்கக் கவசத்தை குருபூஜை விழாவுக்காக மதுரை வங்கி பெட்டகத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்டது. தற்போது விழா நிறைவுற்றதை தொடர்ந்து தங்க கவசத்தை மீண்டும் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள், மதுரை வங்கியில் இன்று ஒப்படைத்தனர்.

வெள்ளி, 31 அக்டோபர், 2025

இலங்கை கல்லூரி மாணவி உள்ளிட்ட 4 பெண்களின் சடலங்கள் கரை ஒதுங்கியது. அகதி முகாமை சேர்ந்தவர்கள்

 தினமணி :சென்னை கடற்கரையில் பரபரப்பு.. இலங்கை அகதிகள் முகாமை சேர்ந் ஒரு கல்லூரி மாணவி உள்ளிட்ட 4 பெண்களின் சடலங்கள் கரை ஒதுங்கியது.
“சென்னை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரையில் நான்கு பெண்களின் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளது. கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந் ஒரு கல்லூரி மாணவி உள்ளிட்ட 4 பெண்களின் உடல்கள் கரை ஒதுங்கியது.
கடல் அலையில் சிக்கிய கல்லூரி மாணவியை காப்பாற்றச் சென்ற பெண்களும் அலையில் சிக்கி பலியானதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை முஸ்லீம் இனச்சுத்திகரிப்பு - அக்டோபர் 1990 - அந்த இருண்ட 35 ஆண்டுகள்!

 
Sivarajah Sinnathamby 
: வடக்கு முஸ்லிம்களின் துயர வெளியேற்றத்தின் 35ஆம் ஆண்டு நினைவு!
   அக்டோபர் 1990: இலங்கையின் நவீன வரலாற்றில் ஒரு இருண்ட அத்தியாயமான, வடக்கு முஸ்லிம் மக்கள் விடுதலைப் புலிகளால் (LTTE) கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சோக நிகழ்வின் 35வது ஆண்டு நினைவுநாள் இன்று.
• யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற வட மாவட்டங்களில் வசித்த சுமார் 70,000 முதல் 80,000 வரையிலான முஸ்லிம் மக்கள், தங்கள் சொந்த நிலத்தில் இருந்து விரட்டப்பட்டனர்.
• அவர்களுக்கு வழங்கப்பட்ட அவகாசம் வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே. தங்கள் வீடுகள், நிலங்கள், பள்ளிவாசல்கள், கடைகள் என வாழ்வாதாரம் அனைத்தையும் விட்டு வெறும் உடுத்திய துணியுடன் அவர்கள் வெளியேறினர்.

ஐந்து இலட்சம் காணி உறுதி மூலபத்திரங்களை அள்ளிச்சென்ற புலிகள் - 1988

  யாழ் காணிப்பதிவு திணைக்களத்தில் இருந்து 5 இலட்சம் காணி உறுதிகளின் மூலப்பிரதிகள் காணாமல் போய்விட்டன!
காணி மூலப்பதிவேடுகளின் 250  தொகுப்புக்கள் volumes யாழ் காணி பதிவு திணைக்களத்தில் இருந்து சமீபத்திய அசம்பாவிதங்கள் போது காணாமல் போய்விட்டன என்று தெரியவருகிறது.
இந்த பதிவேடுகளில் தொகுப்பு ஒவ்வொன்றிலும் சுமார் இருநூறு காணி மூல பிரதிகள் வரை தொகுத்து வைக்கப்பட்டிருந்தன   என்று கூறப்படுகிறது. 
இதன்படி யாழ் மாவட்டத்தில் சுமார் ஐந்து இலட்சம் காணி உறுதிகளுக்கான மூலப்பிரதிகள் காணாமல் போயிருப்பதாக மதிப்பிட பட்டிருக்கிறது.

வியாழன், 30 அக்டோபர், 2025

மும்பாய் - பணய கைதிகளாக அடைக்கப்பட்ட 17 குழந்தைகள் மீட்பு! ரோஹித் ஆர்யா சுட்டுக்கொலை!

 தினமலர் :மும்பை: மும்பையில் ஸ்டுடியோவில் 17 குழந்தைகளை பிணைக்கைதிகளாக அடைத்து வைத்திருந்த ரோஹித் ஆர்யா என்பவர் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பவாய் பகுதியில் ஆர்.ஏ. ஸ்டுடியோ ஒன்று உள்ளது. இங்கு குழந்தைகளுக்கு நடிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. பல்வேறு, சினிமா, தொலைக்காட்சி தொடர்களுக்கு குழந்தைகள் தேர்வும் இங்கு நடத்தப்பட்டது.
இந்த ஸ்டுடியோவில் வேலை பார்த்த ரோஹித் ஆர்யா என்ற நபர் பல குழந்தைகளை பிணைக் கைதிகளாக அடைத்து வைத்திருப்பதாக இன்று ( அக்.,30) மதியம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் குழந்தைகளை பாதுகாப்பாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சீமானை ‘செந்தமிழர் சீமான்’ என பசும்பொன் சந்திப்பில் முழக்கமிட்ட வைகோ!

 hindutamil.in  : மதுரை: அரசியலில் எதிரும், புதிருமாக இருந்து வந்த வைகோ, சீமான் பசும்பொன்னில் ஒன்றாக சந்தித்துக் கொண்டதோடு, சீமானை ‘செந்தமிழர் சீமான்’ என முழக்கமிட்டதோடு அவரை ஆரத்தழுவி கட்டி அனைத்துக் கொண்டது, நாதகவினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழக அரசியலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தங்கள் அரசியல் நிலைப்பாடுகளில் எதிரெதிர் துருவமாக செயல்பட்டு வந்தனர். விடுதலைப் புலிகள் அமைப்பு சம்பந்தமான விவகாரத்தில் ஒருவர் மீது ஒருவர் மிகக் கடும் விமர்சனங்களை செய்துவந்த நிலையில் இன்று இருவரும் ஒரே நேரத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு வந்தனர். இருவரும் ஒரே நேரத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

பிஎம்ஶ்ரீ திட்டம்: கேரளா பின்வாங்கியது- தமிழகம் உறுதியாக நிற்பது ஏன்?

 மின்னம்பலம் -  Mathi  :  மத்திய அரசின் “பிஎம்ஶ்ரீ” (Prime Minister’s Schools for Rising India பிரதம மந்திரி பள்ளிகள் எழுச்சி இந்தியா) திட்டம், தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ அமல்படுத்துவதற்கான முன்மாதிரிப் பள்ளிகளை உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்டாலும், 
மாநிலங்களின் கூட்டாட்சித் தத்துவ உரிமை குறித்த பெரும் விவாதத்தை நாடு முழுவதும் கிளப்பியுள்ளது. குறிப்பாக, 
கேரளா அரசு,புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில வாரங்களிலேயே அதில் இருந்து விலகி, ஆய்வுக் குழுவை அமைத்திருப்பதும், தமிழ்நாடு தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து, நிதி நிறுத்தம், உச்ச நீதிமன்ற வழக்கு என சட்டப் போராட்டத்தை முன்னெடுத்திருப்பதும் இத்திட்டத்தின் மீதான அரசியல் மற்றும் சித்தாந்த மோதல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

புதன், 29 அக்டோபர், 2025

பைசன் - கதைகளை விட உண்மை வரலாறுகள் எப்போதுமே சுவாரஸ்யமாகவே இருக்கின்றன.

No photo description available.
சுமதி விஜயகுமார்  :  பைசன் திரைப்படத்தை பலரும் பலவிதமாக சிலாகித்து எழுதிய பதிவுகளை படிக்க நேர்ந்தது. 
அவை எல்லாவற்றையும், இன்னும் கொஞ்சம் அதிகப்படியாக சொல்ல வேண்டுமென்றால், 
பைசன் திரைப்படத்தையும் தாண்டிய ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு என்றால்,
 அது அரண்செய் தோழர் மதன் அறிவழகன் பேரலை ஊடகத்துக்கு கொடுத்த பேட்டி தான்.
மாரி செல்வராஜ் ஜாதிய திரைப்படங்களாக எடுக்கிறார் என்ற விமர்சனத்தில் எனக்கு கருத்து மாறுபாடில்லை. 
அவர் எடுப்பது அனைத்தும் ஜாதி ஒடுக்குமுறை திரைப்படங்கள் தான். 
ஆனால் அந்த கதைகளில் ஜாதி வேறுபாடு, பகை கொண்டவர்களில் கூட தோழமையுடன் பழகவும், உதவி செய்யவும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை தவறாமல் அனைத்து திரைப்படங்களிலும் சொல்லி வருவதை அழகாக தன் நேர்காணலில் தோழர் குறிப்பிட்டுள்ளார். 

ஆபரேஷன் பூமாலை - 5 அன்டோனோவ் பிளேன்கள் - 4 மிராஜ் பிளேன்கள்

May be an image of poster and text that says 'បល់ மில்லர் லர் MOVIE LAUNCH EVENT GLIMPSE'

ராதா மனோகர் : 1987 ஜூன் மாதமளவில் இலங்கை படைகள் யாழ்ப்பாணத்தில் வேகமாக முன்னேறின.
அச்சுவேலி வரை முன்னேறியது . இன்னும் சில மாதங்களில் புலிகளை முற்று முழுதாக ஒழித்து விடுவோம் என்று இலங்கை அரசு அறிவித்தது.
இந்த நிலையில், 
இந்திய வான்படை  4 June 1987 அன்று  யாழ்ப்பாணத்தில் அரிசி பருப்பு போன்ற உணவு மூட்டைகளை  போட்டது!
ஆபரேஷன் பூமாலை என்ற பெயர் கொண்ட இந்த ராணுவ நடவடிக்கையில் 
 5 Antonov An-32 military transport aircraft- 5 அன்டோனோவ் பிளேன்கள் 
4 Mirage 2000H jet fighters[1]   4 மிராஜ் பிளேன்கள் பயன்படுத்த பட்டன.
இந்தியாவின் இந்த அதிரடி ராணுவ சிக்னலை புரிந்து கொண்ட 
இலங்கை அரசு உடனே தாக்குதல்களை நிறுத்தியது!
பேச்சு வார்த்தைக்கு தயார் என்று ஜேயார் ஜெயவர்த்தனா ராஜிவ் காந்திக்கு டெலிபோனில் கூறினார்.

செவ்வாய், 28 அக்டோபர், 2025

விமான பயணிகள் மீது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியர் மீது குற்றச்சாட்டு

 தினமலர் : நியூயார்க்: விமான பயணத்தில் இரு இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் கடந்த அக்டோபர் 25 ஆம் தேதியன்று சிகாகோவிலிருந்து ஜெர்மனிக்குச் சென்றுகொண்டிருந்த லுப்தான்சா விமானத்தில் இரண்டு இளைஞர்கள் மீது 28 வயது இந்தியர் ஒருவர் முள் கரண்டியால் குத்தியதாகவும், சக பயணியை அறைந்ததாகவும் குற்றச்சாட்டப்பட்டுள்ளார்.
இது குறித்து மாசசூசெட்ஸ் மாகாண வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:
சிகாகோவிலிருந்து ஜெர்மனிக்குச் செல்லும் விமானத்தில், பிரணீத் குமார் உசிரிபள்ளி 28, என்ற இந்தியர் பயணித்தார்.

விஜய் மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன்- சீமான் ஆவேசம்!

 மின்னம்பலம் -Pandeeswari Gurusamy  : பாஜகவுடனான கூட்டணிக்கு விஜய் வரவில்லை என்றால் அவர் மீது வழக்குப்பதிவு செய்வார்கள் என சீமான் தெரிவித்துள்ளார்.
கரூரில் செப்டம்பர் 27ம் தேதி நடிகர் விஜய் கலந்து கொண்ட தவெக பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் குறித்து உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 28) நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ” கரூரில் 41 பேர் உயிரிழந்த குற்றத்திற்கு முதன்மை காரணம் விஜய்தான். தவறு இல்லை என்றால் ஏன் முன்ஜாமீன் கேட்கிறார்கள்? குற்றத்திற்கு காரணமானவரையே சிபிஐ விசாரிக்காது என்றால் பிறகு எப்படி நியாயம் வரும்? 

குகேஷூக்கு ரூ.5 கோடி, கார்த்திகாவுக்கு ரூ.25 லட்சம்’ – தமிழக அரசின் ஊக்கத்தொகை எவ்வாறு முடிவாகிறது?

BBC tamil :  ஆசிய இளையோர் போட்டிகளில் கபடியில் இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் ஆகிய இரு அணிகளும் தங்கம் வென்றுள்ளன. அந்த அணிகளில் தமிழகத்தை சேர்ந்த கார்த்திகா ரமேஷ் மற்றும் அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
18 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில், பஹ்ரைனில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் இரானை எதிர்த்து விளையாடி இந்திய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
கார்த்திகா, அபினேஷ் ஆகிய இருவருக்கும் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அவர்கள் விமானத்தில் சென்னை வந்தவுடன் கோலாகலமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்கள் இருவரையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

DUDE படக்கதை பிரதமர் வாஜ்பாயின் சொந்த வாழ்க்கையா?

Dude (2025 film) - Wikipedia
The Untold Vajpayee: Politician and ...

 Muralidharan Pb : அக்கால டியூடின் கதை.
அந்த இளைஞன் மிகவும் துடிதுடிப்பானவன். வசீகரமான தோற்றம் கொண்ட அவன்  குவாலியரில் படித்துக் கொண்டிருந்த போது பெண் ஒருவளிடம் காதல் வயப்பட்டான். ஆனால் இவன் வேலைக்கு ஏதும் போகிற எண்ணமெல்லாமல் இல்லை என்பதாலும்  அதோடு  அரசியலுக்காக ஜெயிலுக்கு போனவன் என்ற காரணத்தினாலும் அவனை அந்த பெண்ணின் தந்தை வெறுத்தார். தன் மகளுக்கு வேறொரு இடத்தில் மாப்பிள்ளை தேடினார். 
காஷ்மீரிலேயே பெண்ணுக்கு மாப்பிள்ளையை தேடிபிடித்து மணமுடித்து வைத்தார். ஆகவே காதலர்கள் பிரிந்தை ஒட்டி அவன் சோகத்திலேயே கான்பூருக்கு போக அவளோ டெல்லிக்கு சென்றுவிட்டாள். பிறகு லக்னெள சென்று அரசியலில் புகழ்ச்சி அடைகிறார் காதலன்.

தமிழ்நாட்டிலும் SIR... ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் அறிவிப்பு!

 மின்னம்பலம் - christopher  : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து ஆலோசிக்க வரும் நவம்பர் 2ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் தீவிர வாக்காளர் சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி வெளியிடப்படும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் இன்று (அக்டோபர் 27) அறிவித்தார்

திங்கள், 27 அக்டோபர், 2025

ஓ பன்னீர்செல்வம் : மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரும்

 மின்னம்பலம் - Kavi :  மீண்டும் திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பிருக்கிறது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் இன்று (அக்டோபர் 27) மருது சகோதரர்களின் 224-ஆம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் 6.5 கிலோ எடையுள்ள வெள்ளி கவசத்தினை வழங்கினார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.
கேள்வி பதில்கள்
2026 சட்டமன்றத் தேர்தல் வருகிறது. நீங்கள் என்டிஏ கூட்டணியில் இருந்து விலகி விட்டீர்கள்… மீண்டும் இந்த கூட்டணியில் இணைவீர்களா? அல்லது வேறு கூட்டணியில் இணைவீர்களா? 

ஆந்திரா பேருந்து தீக்கிரை - 23 பேர் உயிரிழப்பு

dinamalar :தினமலர் : ஆந்திரா மாநிலம் கர்னூலில் பயணிகள் 39 பேருடன் சென்று கொண்டிருந்த சுற்றுலா பஸ் தீப்பற்றியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இதில், இரண்டு பேர் சிறுவர்கள்.இவர்களது உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகின்றன.

ஞாயிறு, 26 அக்டோபர், 2025

Karur Killings - சிபிஐ விசாரிக்கும் போது நடிகர் விஜய்யின் மாமல்லபுரம் சந்திப்புக்கு தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு?

 மின்னம்பலம் -Mathi  : கரூரில் பலியானவர்களின் குடும்பத்தினரை தவெக தலைவர் நடிகர் விஜய் மாமல்லபுரத்துக்கு ‘வரவழைத்து’ ஆறுதல் கூறுவதற்கு எதிராக சென்ன உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடர வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது.
கரூரில் தவெக தலைவர் நடிகர் விஜய் செப்டம்பர் 27-ல் நடத்திய பிரசாரத்தின் போது நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர்.
இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது. 
இந்த விசாரணைக்கு எதிராக தவெக தரப்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். 

கனடாவில் குயிபேக் மாநில தனிநாடு கோரிக்கை வலுக்கிறது

 ராதா மனோகர்  : கனடாவின் பிரெஞ்சு மொழி பேசும் கீபேக் (குயிபேக்) மாகாண சுதந்திர கோரிக்கை வலுக்கிறது.
தங்கள் மாநிலத்தின் அடையாளம் மொழி போன்றவை கனடாவின் ஆங்கில மேலாண்மையால் அழிந்து கொண்டு வருகிறது என்று பிரெஞ்சு மொழி பேசும் மக்கள் கருதுகிறார்கள்.
இந்த மாநிலம் பிரிந்து போவதற்கு உரிய பொதுவாக்கெடுப்பு முன்பு இருமுறை நடந்தது.
ஆனால் அந்த இரு வாக்கெடுப்பிலும்  தனிநாட்டு கோரிக்கைக்கு ஆதரவான வாக்குகள் போதிய வாக்குகள் இன்மையால் அது வெற்றி பெறவில்லை.
1980 Quebec referendum, the 1980 plebiscite to grant the Government of Quebec a mandate to negotiate sovereignty-association
1995 Quebec referendum, the 1995 referendum to allow the Government of Quebec, after offering a partnership to Canada, to declare independence
கடந்த 1995 இல்  நடந்த சுயநிர்ணய பொதுவாக்கெடுப்பு சுமார் 40 ஆயிரம் வாக்குகளால் மட்டுமே தோற்கடிக்கப்பட்டது.

Vijay : பவன் கல்யாண் மாதிரி ஆக சொல்றீங்களா? எந்த பவரும் இருக்காது.. புலம்பிய விஜய்? நடந்தது என்ன?

 tamil.oneindia.com  - Shyamsundar :  சென்னை: விஜயை பாஜக கூட்டணிக்குள் இழுக்க பாஜகவின் டாப் தலைகள் தீவிரமாக முயன்று வருகின்றனராம். ஆனால் பவன் கல்யாண் போல ஆக நான் விரும்பவில்லை என்று விஜய் தனக்கு நெருக்கமான சிலரிடம் கூறி உள்ளாராம்.
நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் மற்றும் அவரது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் குறித்து பலத்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, விஜயை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டுவர பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் முயற்சிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாமக செயல் தலைவராக ராமதாஸ் மூத்த மகள் ஸ்ரீகாந்தி நியமனம்!

 மின்னம்பலம் - Kavi  : பாமகவில் கடந்த ஓராண்டாகவே நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இருவரும் இரு துருவமாக செயல்பட்டு வருகின்றனர். 
அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த ராமதாஸை அன்புமணி சந்திக்கவில்லை. மருத்துவமனைக்கு சென்ற அவர் மருத்துவர்களிடம் மட்டும் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்துவிட்டு வந்துவிட்டார்.
இதற்கிடையே பாமகவின் விதிகளுக்கு புறம்பாக நடந்து கொண்டதாக அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் இதற்கு அன்புமணி பதிலளிக்காததால் அவரைக் கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார் ராமதாஸ். 

ஆ ராசாவும் அருந்ததி ராய்களும்! திராவிட ராசாவும் ஆரிய அருந்ததியும்

May be an image of one or more people, people smiling and dais
May be an image of one or more people
Pranoy roi -  Arundhahti rai

 ராதா மனோகர் : உலக புகழ் பெற்ற மனித உரிமை பிரபலமும் எழுத்துலக பிரபலமுமான அருந்ததி ராய் பற்றி முன்பு எழுதியிருக்கிறேன். 
மீண்டும் மீண்டும் அவரை விமர்சிக்க வேண்டுமா என்ற கேள்வியும் எனக்குள் எழுகிறது.
ஆனாலும் அவ்வளவு இலகுவாக இந்த குற்றவாளியை தப்ப விட முடியாது என்ற எண்ணமே எனக்குள் மேலோங்குகிறது.
இந்திய இடதுசாரிகள் முற்போக்குகள் பெரிதும் பார்பனிய கோட்பாட்டு பாதுகாவலர்கள்தான்!
இந்த கும்பலுக்கு ஒரு சரியான உதாரணமாக அருந்ததி ராய்தான் எனக்கு தெரிகிறார்.
நுனி நாக்கு ஆங்கிலம், அசல் ஆரிய வெள்ளை நிறம் , இலகுவாக மனதில் நிற்க கூடிய முகம் . சினிமாவுக்கு உரிய முகவெட்டு,  மிக சிறந்த கதை சொல்லும் திறமை  . போதிய அளவு எழுத்தாற்றல் நல்ல வாசிப்பு,  புகழ் பெறக்கூடிய பிரச்சனைகளை கண்டறியும் ஆற்றல் போன்றவை இவர் மீடியாக்களுக்கு எப்போதும் அசல் தீனி போடும் ஆளுமையாக தெரிகிறார்.
இதை விட மிக முக்கியமான விடயம்  ஊடகங்களுடனான இவரின்  குடும்ப தொடர்புகள் மிக மிக அதிகம்! 
இவ்வளவு திறமையும் ஆற்றலும் உள்ள இவர் மீது ஏனிந்த விமர்சனம் என்று பலரும் கருத கூடும்.