ஞாயிறு, 26 அக்டோபர், 2025

கனடாவில் குயிபேக் மாநில தனிநாடு கோரிக்கை வலுக்கிறது

 ராதா மனோகர்  : கனடாவின் பிரெஞ்சு மொழி பேசும் கீபேக் (குயிபேக்) மாகாண சுதந்திர கோரிக்கை வலுக்கிறது.
தங்கள் மாநிலத்தின் அடையாளம் மொழி போன்றவை கனடாவின் ஆங்கில மேலாண்மையால் அழிந்து கொண்டு வருகிறது என்று பிரெஞ்சு மொழி பேசும் மக்கள் கருதுகிறார்கள்.
இந்த மாநிலம் பிரிந்து போவதற்கு உரிய பொதுவாக்கெடுப்பு முன்பு இருமுறை நடந்தது.
ஆனால் அந்த இரு வாக்கெடுப்பிலும்  தனிநாட்டு கோரிக்கைக்கு ஆதரவான வாக்குகள் போதிய வாக்குகள் இன்மையால் அது வெற்றி பெறவில்லை.
1980 Quebec referendum, the 1980 plebiscite to grant the Government of Quebec a mandate to negotiate sovereignty-association
1995 Quebec referendum, the 1995 referendum to allow the Government of Quebec, after offering a partnership to Canada, to declare independence
கடந்த 1995 இல்  நடந்த சுயநிர்ணய பொதுவாக்கெடுப்பு சுமார் 40 ஆயிரம் வாக்குகளால் மட்டுமே தோற்கடிக்கப்பட்டது.


எனவே அவர்களின் கோரிக்கை நூலிழையில் தோற்கடிக்க பட்டது!
இனி எதிர்காலத்தில் நடக்கப்போகும் வாக்கெடுப்பில் பிரெஞ்சு மக்கள் வெற்றி பெறுவார்களா இல்லையா என்பது பொறுத்திருந்து பார்க்கவேண்டிய விடயம்.  
இது ஒரு புறம் இருக்க கனடாவின் மேற்கு மாநிலங்களில் ஒன்றான அல்பேட்டா மாநிலத்திலும் தனி நாட்டு கோரிக்கை வலுவடைந்து வருகிறது.
சுமார் நாற்பத்தி மூன்று கோடி மக்கள் தொகை (4,368,370) கொண்ட அல்பேட்டா மாநிலம் அங்குள்ள பெட்ரோலியம் காரணமாக  வட அமெரிக்காவின் சவூதி அரேபியா என்று குறிப்பிட படுகிறது!
அவர்களும் எதிர்காலத்தில் சுதந்திர ஆல்பேட்ட்டாவை நோக்கி நகருவார்கள் என்று தெரிகிறது,
தங்களின் பொருளாதார வளம் கனடியார்களால், குறிப்பாக ஒன்டாரியோ மாகாணத்தால் சுரண்ட படுகிறது என்று அவர்கள் கருதுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக