செவ்வாய், 28 அக்டோபர், 2025

DUDE படக்கதை பிரதமர் வாஜ்பாயின் சொந்த வாழ்க்கையா?

Dude (2025 film) - Wikipedia
The Untold Vajpayee: Politician and ...

 Muralidharan Pb : அக்கால டியூடின் கதை.
அந்த இளைஞன் மிகவும் துடிதுடிப்பானவன். வசீகரமான தோற்றம் கொண்ட அவன்  குவாலியரில் படித்துக் கொண்டிருந்த போது பெண் ஒருவளிடம் காதல் வயப்பட்டான். ஆனால் இவன் வேலைக்கு ஏதும் போகிற எண்ணமெல்லாமல் இல்லை என்பதாலும்  அதோடு  அரசியலுக்காக ஜெயிலுக்கு போனவன் என்ற காரணத்தினாலும் அவனை அந்த பெண்ணின் தந்தை வெறுத்தார். தன் மகளுக்கு வேறொரு இடத்தில் மாப்பிள்ளை தேடினார். 
காஷ்மீரிலேயே பெண்ணுக்கு மாப்பிள்ளையை தேடிபிடித்து மணமுடித்து வைத்தார். ஆகவே காதலர்கள் பிரிந்தை ஒட்டி அவன் சோகத்திலேயே கான்பூருக்கு போக அவளோ டெல்லிக்கு சென்றுவிட்டாள். பிறகு லக்னெள சென்று அரசியலில் புகழ்ச்சி அடைகிறார் காதலன்.


பல காலங்கள் கழித்து அவர்கள் இருவரும் டெல்லியில் கல்லூரி விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வரும் காதலனை காதலி சந்திக்க நேரிட்டது. அவரோ ஒரு பெரிய புகழ்மிக்க செல்வாக்கு பெற்ற எம்பி. அவரது காதலியோ ஒரு கல்லூரியில் பேராசிரியையாக. அக்கல்லூரி விழாவில் இவர்களது நட்பு(காதல்)மலர்ந்தது. 
அவளது கணவன் அதே கல்லூரியில் கண்டிப்பான விடுதி காப்பாளர் Warden. படிக்கும் மாணவர்கள் வெளியே மது குடிக்காமல் இருக்க அவரது கண்டிப்பு தடையாக இருந்ததால் அவரது மனைவியிடம் அனுமதி கேட்க சென்ற மாணவர்கள் கண்டது ஒரு வியப்பான காட்சி. அந்த வளரும் லக்னௌ அரசியல்வாதி அவரது வீட்டில் இருந்தது தான் வியப்புக்குரிய காட்சி. அவர்களுக்குள் அங்கு என்ன நடந்திருக்கும் என்பது அவரவர் சிந்தனைக்கு விட்டுவிடுவோம்.
ஆண்டுகள் கடந்து அந்த அரசியல்வாதி நாட்டின் அமைச்சராகிறார். அவருடைய செல்வாக்கு எந்த அளவுக்கு போகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக அவரது இல்லமும் தனது முன்னாள் காதலியும் பக்கத்து பக்கத்து வீட்டில் வாழ்கின்றனர். இவர்கள் வீட்டின் மதில் சுவரில் அவரது காதலியின் வீட்டுக்கு வழி அமைத்து வெளியே செல்லாமல் காதலியை கண்டு வரலாம். அதுவே கடைசிவரை அமைந்துவிடுகிறது. தனது காதலியின் மகளை காதலன் தத்தெடுக்கிறார். பின்னாளில் அவளது தத்து பெண்ணின் வழியாக பேத்தியும் வருகிறார். அவர்கள் இருவரும் இவரிடத்தில் பாசத்தோடு இருக்கிறார்.
ஒரு பேட்டியில் காதலியிடம் பழைய காதலன் வீட்டின் அருகே வாழ்வதை இது மிக முதிர்ச்சியான நட்பு என பட்டும் படாமலும் அவர்களது காதலைப் பற்றிய கேள்விக்கு தனது காதலை அடையாளப்படுத்துகிறார் காதலி.
அவரது காதலி நோய்வாய்ப்பட்டு 2014 இல் இறந்து போகிறார். வயதான காரணத்தினால் படுத்த படுக்கையோடு தனது இறுதி காலத்தில் இருக்கும் போது காதலியின் மரணத்திற்கு கூட அவரால் எழுந்து நடமாடமுடியாத சூழல். இறுதியாக முன்னாள் பிரதமர் என்ற வகையில் அவர் இறந்து போக அவரது சிதைக்கு தீ மூட்டுகிறார் தனது தத்து மகள். 
பேத்தியின் பெயர் நிஹாரிக்கா
தத்து மகள் பெயர் நமிதா
காதலியின் கணவர் பெயர் பிரஜ் நாராயண்  கவுல்
காதலியின் தந்தை பெயர் கோவிந்த் நாராயண் ஹக்ஸார்
காதலியின் பெயர் ராஜ்குமாரி கவுல்
காதலன் தான் முன்னாள் இந்திய பிரதமரும் நீண்ட கால அரசியல் வரலாறும் பொதுவாழ்வும் கொண்ட அடல் பிகாரி வாஜ்பாய்.
எல்லா பெரிய மனிதர்களுக்கும் மறைவான பக்கங்கள் உண்டு. வெளியில் அவருக்கு நற்பெயர் மற்றும் ஊடகத்தில் செல்வாக்கு இருந்ததால் இந்த Dude பற்றி வெளியே வராமல் பார்த்துக்கொண்டது அவர் சார்ந்த இயக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக