புதன், 29 அக்டோபர், 2025

ஆபரேஷன் பூமாலை - 5 அன்டோனோவ் பிளேன்கள் - 4 மிராஜ் பிளேன்கள்

May be an image of poster and text that says 'បល់ மில்லர் லர் MOVIE LAUNCH EVENT GLIMPSE'

ராதா மனோகர் : 1987 ஜூன் மாதமளவில் இலங்கை படைகள் யாழ்ப்பாணத்தில் வேகமாக முன்னேறின.
அச்சுவேலி வரை முன்னேறியது . இன்னும் சில மாதங்களில் புலிகளை முற்று முழுதாக ஒழித்து விடுவோம் என்று இலங்கை அரசு அறிவித்தது.
இந்த நிலையில், 
இந்திய வான்படை  4 June 1987 அன்று  யாழ்ப்பாணத்தில் அரிசி பருப்பு போன்ற உணவு மூட்டைகளை  போட்டது!
ஆபரேஷன் பூமாலை என்ற பெயர் கொண்ட இந்த ராணுவ நடவடிக்கையில் 
 5 Antonov An-32 military transport aircraft- 5 அன்டோனோவ் பிளேன்கள் 
4 Mirage 2000H jet fighters[1]   4 மிராஜ் பிளேன்கள் பயன்படுத்த பட்டன.
இந்தியாவின் இந்த அதிரடி ராணுவ சிக்னலை புரிந்து கொண்ட 
இலங்கை அரசு உடனே தாக்குதல்களை நிறுத்தியது!
பேச்சு வார்த்தைக்கு தயார் என்று ஜேயார் ஜெயவர்த்தனா ராஜிவ் காந்திக்கு டெலிபோனில் கூறினார்.


இரு நாடுகளும் பேச்சு வார்த்தைக்கு உரிய ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தன!
அதிகாரிகள் மட்ட பேச்சு வார்த்தை நடந்த கொண்டிருந்தது,.
மக்களின் மனம் அமைதியடைந்தது 
மகிழ்ச்சியும் நம்பிக்கையும் இலங்கை மக்கள் மனதில் துளிர் விட்டது.
இந்த மகிழ்ச்சியை கண்டு பயந்தனர் துரோகிஸ்தானியர்கள் 
இந்த பயத்தின் வெளிப்பாடாகவே நெல்லியடி ராணுவ முகாம் மீது தற்கொலை  தாக்குதல் நடத்தப்பட்டது...
மக்களின் மகிழ்ச்சியை குலைக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் தேவையே இல்லாமல் மில்லரை வெடிகுண்டுகளோடு அனுப்பினார்கள் துரோகிஸ்டுகள்.
இந்திய வான்படை உணவு பொதிகளை போட்ட ஒரு மாத்திற்கு பின்புதான்  நெல்லியடி முகாமை  மில்லர் ஜூலை 5, 1987 இல் தாக்குதல் இடம் பெற்றது..
இப்போதும் பலர் மில்லரின் தாக்குதலை கண்டுதான்  இலங்கை அரசு இந்தியாவிடம் கெஞ்சியது என்ற ரேஞ்சுக்கு கதை அளக்கிறார்கள்! 
இப்போது இந்த மில்லர் என்ற பெயரில் ஒரு திரைப்படம் உருவாகிறதாம் 
யாழ்ப்பாணத்தில் நடந்த அதன் தொடக்க விழாவுக்கு  கவிஞர் வைரமுத்து இயக்குனர் பாண்டிராஜ் நடிகர் ரஞ்சித்து போன்ற சினிமா வியாபாரிகளும்  கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் 
நிரந்தர வியாபாரம் அன்றி  வேறொன்றும் அறியேன் பராபரமே என்று வாழும் ஜீவன்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக