Kathiravan Mayavan : திமுக ஒரு கருத்தியல் இயக்கம்.
எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
நானும் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டேன்.
விடுதலை சிறுத்தை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா (ரெட்டியார்) அவர்கள் பேச்சையும் கேட்டேன்
காஞ்சி பெரியவர் சரஸ்வதி சாமி அவர்களை நல்ல சாமி என்றும் மற்றவர்கள் அனைவரும் போலி சாமியார்கள் என்றும் அவர் பேசியது மிகப்பெரிய ஹைலைட்.
விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவனின் உடைய எண்ணங்கள் அனைத்தும் இந்த புத்தக வெளியீட்டு விழாவில் சுற்றியே இருக்கும் என அவர் பேசியது மற்றொரு ஹைலைட்.
சனி, 7 டிசம்பர், 2024
நடிகர் விஜய் ஆதவ் அர்ஜுனா கூட்டணி - திமுக தமிழ்நாட்டில் வரலாற்று புரட்சிகளை சாதித்த கருத்தியல் இயக்கம்!
ஆதவ் அர்ஜுனாவுக்கு உதயநிதி பதிலடி : நான் சினிமா செய்திகளை பார்ப்பதில்லை
பிறப்பால் இனி ஒருவர் முதல்வராகக் கூடாது என்று விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசியதற்கு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தான் முதல்வர் ஆகிறோம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (டிசம்பர் 7) பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகர் விஜய் ஆவேசம் : 200 வெல்வோம் என எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களை எச்சரிக்கிறேன்..
கூட்டணி கட்சியின் அழுத்தத்தால் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொள்ளவில்லை என பேசியுள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்.
சென்னையில் நடைபெற்ற எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய அவர்," அம்பேத்கரின் வாழ்க்கை குறித்த பயோகிராபி என்னை வெகுவாக பாதித்தது வெயிட்டிங் ஃபார் தி விசா என அதற்கு அம்பேத்கர் தலைப்பு வைத்திருந்தார்.
பாலு ஜுவலேர்ஸ் தெரியுமா? ஜெயாவும் சசியும் மொத்தமாக சுருட்டிய நகைகள்! பாலு செட்டியார் தற்கொலை செய்துகொண்டார்
ராதா மனோகர் : பாலு ஜுவலேர்ஸ் தெரியுமா? வரலாறு முக்கியம் ரசிகர்களே
சுதாகரன் திருமணத்திற்கு வாங்கிய / பறித்த நகைகள்..பணம் கொடுக்கவே இல்லை ..
பாலு செட்டியார் தற்கொலை செய்துகொண்டார்!
1991-96 காலக் கட்டத்தில் ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்த காலம் அது.
தனது வளர்ப்பு மகன் திருமணத்திற்காக பாலு ஜுவல்லரியில் இருந்து சசிகலாவின் கில்லாடித் தனத்தால்… 40 கோடி ரூபாய்க்கு தங்கம் கடனாக வாங்கப்பட்டது.
பணம் தருகிறேன் முதலில் நாங்கள் கேட்கும் நகைகளை தாருங்கள் என்று கூறி,
அக்கடையின் நிறுவனர் பாலுவை தனது வீட்டுக்கே வரவழைத்து,
அக்கடையின் ஒட்டுமொத்த நகைகளையும் போயஸ் தோட்டத்திற்கு எடுத்து வர செய்தனர்..!
அனைத்து நகைகளையும் பார்த்துவிட்டு கடையில் இருந்த முக்கால்வாசி நகைகளையும் தங்களுக்கு தேவையானதுதான் என தேர்வு செய்து எடுத்துக் கொண்டார் சசிகலா.
வெள்ளி, 6 டிசம்பர், 2024
இலங்கை சிறையில் 486 தமிழக மீனவர்கள்- ஒன்றிய அரசு
மாலை மலர் : டெல்லியில் பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இங்கு, பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில், இலங்கை சிறையில் 486 தமிழக மீனவர்கள் இருப்பதாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சினை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. ராபர்ட் ப்ரூஸ் கேள்வி எழுப்பினார்.
அப்போது, இலங்கை சிறையில் 486, பாகிஸ்தானில் 7, பஹ்ரைனில் 37 தமிழக மீனவர்கள் சிறையில் உள்ளனர் என்று பாராளுமன்றத்தில் வெளியுறவு இணையமைச்சர் கீர்த்திவரதன் சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த வழக்கு ரத்து: BJP முருகனுக்கு திடீர் நிம்மதி
பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் முருகன், கடந்த 2020ல் அளித்த பேட்டியில், 'முரசொலி அறக்கட்டளையின் சென்னை அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது' என்று கூறியிருந்தார். இதையடுத்து அவருக்கு எதிராக, முரசொலி அறக்கட்டளை சார்பில் அவதுாறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு, சென்னையில் உள்ள எம்.பி., - எம்.எல்.ஏ-.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகன் தாக்கல் செய்த மனு, கடந்த ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது.
தமிழ்நாடு என்றும் அண்ணா நாடுதான்
ராதா மனோகர் : தமிழக வரலாற்றில் பேரறிஞர் அண்ணா பெற்ற புகழை இதுவரை எவரும் பெறவில்லை!
கலைஞரும் எம்ஜியாரும் ஒருவருக்கு ஒருவர் கடுமையாக மோதிக்கொண்ட போதும் அண்ணாவை புகழ்வதில் அவர்களுக்கு இடையே ஒரு போட்டியே இருந்தது என்று கூறினால் மிகையல்ல.
முழுத்தமிழ்நாடும் எந்தவிதமான தயக்கம் இன்றி தமிழ்நாடு அண்ணாநாடுதான் என்று கூறுமளவுக்கு அண்ணா மிகப்பெரிய வரலாற்று ஆளுமையாக அறியப்படுகிறார்!
பேரறிஞர் அண்ணா அப்படி என்னதான் செய்துவிட்டார்?
ஏன் எல்லோரும் அவரை அளவு கணக்கில்லாமல் புகழ்கிறார்கள்?
இதுவரை பேரறிஞர் அண்ணாவின் வரலாறு போதிய அளவு பொதுவெளியில் கூறப்படவில்லைஎன்று கூட ஒரு கருத்து உண்டு.
இன்னும் கூட அண்ணாவின் சாதனைகள் பற்றி புரிதல் பொதுவெளிக்கு இல்லை என்ற சந்தேகம் கூட எனக்கு உண்டாவதுண்டு!
வியாழன், 5 டிசம்பர், 2024
ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக பதவி ஏற்கவில்லை என்றால்... சிவசேனாவை சேர்ந்த எவரும் பதவி ஏற்கமாட்டார்கள்?
மாலை மலர் : மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் மகாயுதி கூட்டணி (பா.ஜ.க., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்) அமோக வெற்றி பெற்றது.
முதல்வர் யார் என்பதில் கூட்டணிக்குள் இழுபறி நீடிக்கிறது.
ஏற்கனவே முதல்வராக இருந்த ஏக்நாத் ஷிண்டேதான் மீண்டும் முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என சிவசேனா கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.
அதேவேளையில் பாஜக 130 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றதால் பட்நாவிஸ் முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என பா.ஜ.க. தலைவர்கள் கூறி வந்தனர்.
பிரான்சில் ஆட்சி கவிழ்ந்தது! நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி !
தினமலர் பாரிஸ்: பிரான்ஸ் பிரதமர் மைக்கேல் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்ததால், ஆட்சி கவிழ்ந்தது.
பிரான்ஸ் நாட்டில் மூன்று மாதங்களுக்கு முன் பதவியேற்ற மைக்கேல் பார்னியர் தலைமையிலான அரசுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 2025ம் ஆண்டிற்கான பிரதமர் பார்னியர் முன்மொழிந்த பட்ஜெட்டிற்கு கடுமையான எதிர்ப்பு உருவானது. இதனால் நம்பிக்கையில்லா ஓட்டெடுப்பு முன்னெடுக்கப்பட்டது. இதில் ஆளும் கட்சியினர், எதிர்க்கட்சியினர் பலர் ஒன்றிணைந்து அரசுக்கு எதிராக ஓட்டளித்தனர்.
சமஸ்கிருதத்தில் எந்த ஒரு ஒரிஜினல் சொல்லையாவது காட்ட முடியுமா?
ராதா மனோகர் : சமஸ்கிருதம் ஒருபோதும் சாதாரண சமூகங்களால் பேசப்பட்ட மொழியல்ல!
அன்றாட வாழ்க்கையில் சாதாரண மக்களுக்கு புரிந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் இயற்றப்பட்ட ஒரு சங்கேத மொழியாகும்.
ஏராளமான செக்ஸ் ரகசிய குறிப்புக்களும் கதைகளும் அவற்றில் தாராளமாக உண்டு.
அவை பெண்களுக்கு தெரிந்துவிட கூடாது என்பதற்காகவே பெண்களுக்கு சமஸ்கிருதம் மறைக்கப்பட்டது.
சாதாரண மக்களுக்கு தங்களின் சுரண்டல் ரகசியங்கள் தெரிந்து விடக்கூடாது என்பதற்காகவே அம்மொழியை ஏனைய ஜாதியினருக்கு தவிர்க்கப்பட்டு ஒரு மறை பொருளாக வைத்திருந்தனர்
ஒருவேளை தப்பி தவறி ஏனைய மக்கள் சமஸ்கிருதத்தை அறிந்துவிட்டால் அவர்களின் காதில் ஈயத்தை ஊற்ற விதி எழுதிவைத்தார்கள்.sanskrit-myth-and-truth.
புதன், 4 டிசம்பர், 2024
தென் கொரியாவில் ராணுவ ஆட்சி - அதிபர் அறிவிப்பு
BBC News தமிழ் : தென் கொரியாவில் ராணுவ ஆட்சி - அதிபர் அறிவிப்பு; காரணம் என்ன?
தென் கொரியாவில் ராணுவ ஆட்சி பிரகடனத்தை அந்நாட்டின் அதிபர் யூன் சாக் யோல் அறிவித்துள்ளார். ஜனநாயக நாட்டில் கடந்த 50 வருடங்களில் முதல் முறையாக ராணுவ ஆட்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடாளுமன்ற கட்டடம் அருகே மக்கள் போராட்டம் நடத்தினர்.
வடகொரிய ஆதரவாளர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் சாசன அமைப்பை காப்பாற்றவே இது செய்யப்பட்டுள்ளதாகவும் தனது தொலைக்காட்சி உரையில் யூன் சாக் யோல் கூறினார்
செவ்வாய், 3 டிசம்பர், 2024
அமைச்சர் பொன்முடி மீது பாஜக ஆதரவாளர் சேறு வீச்சு - நடந்தது என்ன?
hindutamil.in : விழுப்புரம் அருகே இருவேல்பட்டு கிராமத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் பொன்முடி மற்றும் ஆட்சியர் பழனி மீது சேற்றை வாரி இறைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம்: விழுப்புரம் அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அடிப்படை வசதிகளை கேட்டு இருவேல்பட்டு பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற வனத்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் மாவட்ட ஆட்சியர் பழனி மீது சேற்றை வாரி இறைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் வைத்து டாக்டர் அர்ச்சுனா ராமநாதன் மீது தாக்குதல்?
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தனக்கான நேர ஒதுக்கீடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் விசாரிக்க சென்ற போது இவ்வாறு தன்னை தாக்கியதாக அவர் முறையிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மகாதீப மலை மண் சரிவில் 7 பேர் உயிரிழப்பு |
hindutamil.in : திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும் மலையில் ஏற்பட்ட திடீர் மண் சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
5 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மற்ற 2 பேரின் உடல்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த 1-ம் தேதி இரவு முதல் கனமழை கொட்டியது.
திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும் 2,668 அடி உயர அண்ணாமலையில் இருந்து வழிந்தோடிய மழைநீரால் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது.
தெலுங்கானாவில் கலப்புத் திருமணம் செய்த கான்ஸ்டபிள் தங்கையின் கழுத்தை அறுத்து 'ஆணவக்' கொலை செய்த அண்ணன் -
மாலை மலர் : தெலுங்கானாவில் சாதி மாறி திருமணம் செய்த இளம் பெண் போலீஸ் கான்ஸ்டபிள் அண்ணனால் ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம், இப்ராஹிம்பட்டினம் மண்டலம், ராய்போல் கிராமத்தை நாகமணி. ஹயத்நகர் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வரும் நாகமணி, கடந்த 15 நாட்களுக்கு முன்பு, தான் காதலித்து வந்த ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். குடும்பத்தின் எதிர்பை மீறி நாகமணி - ஸ்ரீகாந்த் திருமணம் நடந்துள்ளது.
திங்கள், 2 டிசம்பர், 2024
மம்தா பானர்ஜி :பங்களாதேசுக்கு ஐ.நா. அமைதிப் படையை அனுப்ப வேண்டும்.
மாலை மலர் : வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் ஆட்சி கவிழ்க்கப்பட்டதிலிருந்து சிறுபான்மையினரான இந்துக்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.
இதுவறை 200க்கும் மேற்பட்ட கோவில்கள் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்கான் அமைப்பின் இந்து மதத் துறவிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வங்கதேசதுக்கு ஐநாவின் அமைதி காக்கும் படையை அனுப்பி வைக்க [பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவே பின்பற்றும் தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் திட்டம் - தினத்தந்தி பாராட்டு !
Kalaignar Seithigal - Praveen : : தமிழ்நாடு அரசு அறிவித்த மகளிருக்கான மகளிர் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் வாழ்வு முன்னேற்றம் கண்டுள்ளதாக கண்டு இந்த திட்டத்தை நாடே பாராட்டி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி தமிழ்நாடு அரசைத் தொடர்ந்து இந்த திட்டத்தை பல்வேறு மாநில அரசுகளும் செயல்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய மாநிலங்களுக்கு தமிழ்நாடு ஒரு முன்னுதாரண அரசாக திகழ்ந்து வருகிறது.
இந்த நிலையில், இதனைக் குறிப்பிட்டு தினத்தந்தி நாளேடு தமிழ்நாடு அரசை பாராட்டியுள்ளது.
இந்தியாவே பின்பற்றும் தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் திட்டம் - தினத்தந்தி பாராட்டு !
தினத்தந்தி சிறப்பு கட்டுரை பின்வருமாறு :
தமிழ்நாட்டில் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்குவதுபோல், இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இந்த திட்டம் வெவ்வெறு பெயர்களில் செயல்பட்டு வருகிறது.
இலங்கை அரசியலில் ஒரு புதிய தமிழ் நட்சத்திரம் டாக்டர் அர்ச்சுனா! யார் இவர்
யார் இவர்
சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு வரை டாக்டர் அர்ச்சுனா ராமநாதன் என்பவர் யாரென்று தெரியாது.
இன்று இவர் வட மாகாண மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் ,
இலங்கை அரசியலில் . குறிப்பாக தமிழர் அரசியலில் இவர் ஒரு அதிரடி கதா நாயகன் என்றே பலராலும் கூட்டப்படுகிறது.
வழக்கமான அரசியல்வாதிகளுக்கு உரிய எந்த இலக்கணமும் இவரிடம் இல்லை.
மருத்துவ துறையில் இவர் மேற்கொண்ட அதிரடி செயல்பாடுகள் பெரும் விமர்சனத்திற்கு உரியன.
அதன் காரணமாகவே மக்களின் ஆதரவையும் பெற்றுள்ளார் என்றும் கூறலாம்.
ஞாயிறு, 1 டிசம்பர், 2024
சங்கிகளின் வளர்ச்சிக்கு இந்த எலீட் பெரியார்வாதிகளும் ஒரு காரணம்தான்!
Loganayaki Lona : "விடுதலை","பெரியார்முழக்கம்" துணுக்குச் செய்தில கூட என் பணி நீக்க ப்ரச்சனை வரவில்லை.
அதே ஒரு நடிகை பரியாரை ஆதரித்து பேசினார் எனில் ,உடனே அந்தச் செய்தி வரும்.அடுத்த படத்துல அந்தம்மா சீதை, கெட்டப்புக்கு போய்ரும்.
ஆட்சில இருக்குற அமைச்சருக்கு பெரியார் விருது கொடுப்பார்கள்.
அந்தம்மா பெரியார்னு வாய்ல ஒரு வார்த்தை கூட சொல்லிருக்காது.
நான் மருத்துவத்தில் மக்கள் உரிமை ,தொழிலாளர் நலன் ,தொழிலாளர் உரிமைக்கு தான் குரல் கொடுத்தேன்.
நான் இனி தனியா ஒருத்தர் எழுதும் புத்தகங்களுக்கு ஆதரவு கொடுத்து எழுதமாட்டேன்,பேசமாட்டேன்.
அமைச்சர் துரைமுருகன் : டங்ஸ்டன் சுரங்க பணிக்கு எந்த அனுமதியும் தரவில்லை!
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த சுரங்கப் பணிகளுக்கும் தமிழக அரசு எப்போதும் அனுமதி அளிக்காது என்று உறுதியளித்து,
இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட சுரங்க உரிமத்தை ரத்து செய்யுமாறு வலியுறுத்தி பிரதமருக்கு, தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
இதை ஏற்று பொது மக்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டுள்ளனர்.
குருக்கள் காசிலிங்க சர்மா கொலை (1962) கோகிலாம்பாள் கொலைவழக்கு!
ராதா மனோகர் : 1962 இல் மிகவும் பரப்பாக பேசப்பட்ட கோகிலாம்பாள் கொலைவழக்கு!
உருத்திரபுரம் பிள்ளையார் கோயில் குருக்கள் காசிலிங்க சர்மா கொலை!
மேற்படி காசிலிங்க அய்யரின் மனைவி கோகிலாம்பாள் கொலைக்குற்றவாளியாக இனம் காணப்பட்டு
தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது!
இந்த வழக்கு 1963 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது!
இந்த வழக்கு அந்த காலத்தில் மக்களின் அன்றாட பேசுபொருளாக இருந்தது..
அன்றைய ஈழநாடு நாளிதழ் தினசரி காலை மாலை என இரு பதிப்புக்களை வெளியிட்டது.
ஒரு கோயில் குருக்களையே அவரது மனைவி தீர்த்து கட்டியது அதுவரை கேள்விப்படாத ஒரு விடயமாக இருந்தது.
கொலையுண்ட திரு காசிலிங்க அய்யரும் சரி அவரது மனைவி கோகிலாம்பாளும் சரி தமிழகத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடி பெயர்ந்தவர்கள்தான்
இவர்களது ஒரு மகன் தற்போது கனடாவில் மிகப்பிரபலமான ஒரு கோயிலில் பெரிய குருக்களாக கோலோச்சி கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதுஇது பற்றி அவ்வப்போது பொதுவெளிக்கு வந்த செய்திகளின் தொகுப்பு இது,