திங்கள், 2 டிசம்பர், 2024

இலங்கை அரசியலில் ஒரு புதிய தமிழ் நட்சத்திரம் டாக்டர் அர்ச்சுனா! யார் இவர்

ராதா மனோகர் :: இலங்கை அரசியலில் ஒரு புதிய தமிழ் நட்சத்திரம்  டாக்டர் அர்ச்சுனா!
யார் இவர்
சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு வரை டாக்டர் அர்ச்சுனா ராமநாதன் என்பவர் யாரென்று தெரியாது.
இன்று இவர் வட மாகாண மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் ,
இலங்கை அரசியலில் . குறிப்பாக தமிழர் அரசியலில் இவர் ஒரு அதிரடி கதா நாயகன் என்றே பலராலும் கூட்டப்படுகிறது.
வழக்கமான அரசியல்வாதிகளுக்கு உரிய எந்த இலக்கணமும் இவரிடம் இல்லை.
மருத்துவ துறையில் இவர் மேற்கொண்ட அதிரடி செயல்பாடுகள் பெரும் விமர்சனத்திற்கு உரியன.
அதன் காரணமாகவே மக்களின் ஆதரவையும் பெற்றுள்ளார் என்றும் கூறலாம்.
 அர்ச்சுனவின் அரசியல் மிக குறுகிய காலத்தில் எக்கச்சக்கமான எதிர்ப்புக்களையும் ஆதரவுகளையும் ஒருங்கே பெற்றுள்ளது.
இவரின் பல விடயங்களில்  ஒத்து போக முடியாது.
ஆனால் இவரிடம் இருந்து ஏனைய தமிழ் அரசியல் வாதிகள் கற்றுக்கொள்ள சில விடயங்கள் உள்ளன.
குறிப்பாக,
 இவர் சாதாரண மக்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி கொள்வதிலும் அவர்களின் வாழ்வியலில் தன்னை ஒரு தவிர்க்க முடியாத மனிதராக நிலை நிறுத்தி கொள்வதிலும் பெரும் முயற்சிகளை மேற்கொள்கிறார்.
 அடிக்கடி தமிழ் தேசிய அரசியலை பேசினாலும் அது ஒரு மேக்கப் பூச்சு போலத்தான் தோற்றமளிக்கிறது.
மறுபுறத்தில் இவர் மருத்துவ துறை பற்றி பேசுவது விமர்சனங்களை தாண்டி மக்களை தொட்டு இருக்கிறது.
இவர் பேசுவது சரி அல்லது பிழை என்பதல்ல விடயம் . ஆனால் மக்களின் பல ஆதங்கங்களுக்கு,
 இவரின் இந்த ஈடு பாடு  இவருக்கு  பெரும் வரவேற்பை பெற்று கொடுத்துள்ளது    
டாக்டர் அர்ச்சுனாவை கடுமையாக  விமர்சிப்பவர்கள் கூட இவரை வெறுக்கவில்லை.
இது இவரின் பலம்!
அரசியல் என்றால்   பொதி  -  தீர்வு -  13 -  சமஷ்டி - தமிழர் -  பிரச்சனை -  சர்வதேசம் போன்ற தவில் கச்சேரிகளுக்கு நடுவில்,
  டாக்டர் அர்ச்சுனவின் குரல் மட்டுமே பாதிக்கப்பட்ட மக்களின் செவிகளை எட்டி  உள்ளது .
இவரின் குறுகிய கால அரசியலும் அதில் பெற்ற பிரமிக்கத்தக்க வெற்றியும்  இலகுவில் கடந்து போக முடியாத பாடமாகும்.
இவரை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை பார்த்து கற்றுக்கொள்ள மறுக்கும் தமிழ் அரசியல்வாதிகள் வாய்ப்புக்களை இனியும் தவற விடுவார்கள் என்றே தோன்றுகிறது
file video :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக