தினத்தந்தி : பல ஆண்டுகளுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள பழைய வழக்குகள் அதிரடியாக ரத்துசெய்யப்பட்டுள்ளன.உச்ச நீதிமன்றம்ல் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்கும் நடவடிக்கையாக ஒரே நேரத்தில் 13 ஆயிரத்து 147 பழைய வழக்குகள் அதிரடியாக ரத்துசெய்யப்பட்டுள்ளன. சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் சிராக் பன்னுசிங் நேற்று முன்தினம் இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
இந்த வழக்குகள் 2014-ம் ஆண்டுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டவை. 1987-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளும் அடங்கும். இவற்றுக்கு டைரி எண் அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை. மனுவில் உள்ள குறைபாடுகளை சரி செய்யுமாறு மனுதாரர்களிடம் கூறப்பட்டு இருந்தது.
ஆனால், பல ஆண்டுகள் ஆனபோதிலும் அவர்கள் குறைபாடுகளை சரிசெய்யவில்லை. எனவே, விதிமுறைப்படி, அந்த வழக்குகள் ரத்துசெய்யப்பட்டு இருப்பதாக சிராக் பன்னுசிங் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
சனி, 17 செப்டம்பர், 2022
ஒரே நேரத்தில் 13 ஆயிரம் வழக்குகள் ரத்து - உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
சவுக்கு சங்கருக்காக பிரசாந்த் பூஷன் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகிறார்
மின்னம்பலம் : சவுக்கு சங்கருக்காக உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகும் பிரசாந்த் பூஷன்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் யு ட்யூபர் சவுக்கு சங்கருக்கு மதுரை உயர் நீதிமன்றம் நேற்று (செப்டம்பர் 15) ஆறு மாத கால சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் உடனடியாக அடைக்கப்பட்டார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து சவுக்கு சங்கர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
பேராசிரியர் சுப வீரபாண்டியனின் திராவிட பள்ளியில் சேது சமுத்திர எதிரிகளுக்கு என்ன வேலை?
Ravishankar Ayyakkannu : திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் திராவிடப் பள்ளியில் சேரலாம் என்று அதன் பாடத்திட்டத்தை நோட்டம் விட்டேன்.
பூவுலகின் நண்பர்கள் சுந்தர் ராஜன் எழுதிய போலி சூழலியவாதம் குறித்த ஒரு பாடத்தையும் கற்பிக்கிறார்கள் என்பதை அறிந்த உடன் என் எண்ணத்தைக் கைவிட்டேன்.
பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களே, திராவிடம் என்னும் அரசியல் பாடத்தில் போலி சூழலியவாதத்தைக் கற்பிப்பதற்கான தேவை என்ன? அந்தப் பாடத்திட்டத்தை எழுதிய பூவுலகின் நண்பர்களின் தகுதி என்ன?
ஆள்வது திமுகவாக இருக்கும் போது, இப்படி அரசை எதிர்க்கச் சொல்லித் தந்து திராவிட இளைஞர்களை மூளைச் சலவை செய்ய வேண்டிய தேவை என்ன?
இதைப் படித்து விட்டு வருகிறவர்கள் தான் நாளை துறைமுகம், விமான நிலையம், ஏன் கலைஞர் சிலை கூட வேண்டாம் என்று போராடத் துவங்குகிறார்கள்.
சிங்கராயர் ஆரோக்கியசாமி : கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டிய கடும் நோய் பிடித்த நாயை நாம் என்ன செய்ய நினைப்போம்?
இது அந்த ரகம்தான். விடுங்கள். நமக்கு வேலை அதிகமாக உள்ளது.
எப்பொழுது எப்படி என்பதைக் காலம் நமக்குக் கட்டளையிடும்.
அப்போது பார்க்கலாம். உண்மையில் நேரமில்லாமல் அய்யா சுபவீயோடு ஓடிக்கொண்டிருக்கிறோம்.
ரோஷனாரா பேகம் - குடியிருந்த கோயில் குங்குமப் பொட்டின் மங்கலம்' பாடலை எழுதிய ரோஷனாரா பேகம் யார்?
vikatan.com : `குங்குமப் பொட்டின் மங்கலம்' பாடலை எழுதிய ரோஷனாரா பேகம் யார்?
விகடன் டீம்
குடியிருந்த கோயில்' என்றாலே ரசிகர்கள் மனத்தில் `குங்குமப் பொட்டின் மங்கலம்' பாடல் சட்டென நிழலாடும்; கூடவே வெண்ணிற சேலையில் நளினமாக ஆடும் ஜெயலலிதாவும், அலட்டலில்லாத காதலை வெளிப்படுத்தும் எம்.ஜி.ஆரும் மனக்கண் முன்வந்து போவார்கள். இரு முன்னாள் முதல்வர்கள் நடித்த அந்தப் பாடலை எழுதியவர், நம் முதல் பெண் ரோஷனாரா பேகம்!
வெள்ளி, 16 செப்டம்பர், 2022
சவுக்கு சங்கர் கைதை எதிர்ப்பதா? ஆதரிப்பதா..? சாவித்திரி கண்ணன்
இதற்கான பதிலை ஒற்றை வரியில் சொல்ல முடியாது.
தனி நபர் சார்ந்து பார்க்க வேண்டிய விவகாரமல்ல, இது!
சற்று ஆழமான புரிதலோடு அணுக வேண்டிய விவகாரமாகும்!
இந்த விவகாரத்தில் நீதிமன்றம் அவசரப்பட்டு உள்ளது!
”இந்தக் கைது ஏற்புடையதல்ல” என்பதை முதலில் சொல்லி விடுகிறேன்.
சவுக்கு சங்கர் கைதின் வழியாக ஜனநாயகத்திற்கான வெளியை நீதிமன்றம் முற்றிலும் முடக்க முன்னெடுக்கும் வாய்ப்புகள் தொடர ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது! நான் கைது செய்யப்பட்ட போது சவுக்கு சங்கர் அதை மிக, மிக நியாயமான நடவடிக்கை என்றார். ”பத்திரிகை சுதந்திரம் என்று தட்டை தூக்கிட்டு வருவாங்க. ரெண்டு மிதிமிதிச்சி விடுங்க” என டிவிட் போட்டிருந்தார்! அதில் எனக்கு தனிப்பட்ட வருத்தம் எதுவுமில்லை.
மதுரையில் ரூ.600 கோடியில் Tidal Park: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு - மக்கள் மகிழ்ச்சி!
மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் விடுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 'தோள் கொடுப்போம் தொழில்களுக்கு' தெற்கு மண்டல மாநாடு தொடங்கியது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடக்கும் தென்மண்டல மாநாட்டில் தொழில்துறையின் பங்கேற்றுள்ளனர்.
கரூர், ராமநாதபுரம் தொழிற்பேட்டையில் ரூ.2.83 கோடியில் பொது வசதி கட்டிடங்கள் திறக்கப்பட்டது. வங்கி கடனுக்கான தடையின்மை சான்று, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட 12 சேவைகளுக்கு ஆன்லைன் வசதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :-
சவுக்கு சங்கர்! "பேசிய கருத்துக்காக ஒருவரைத் தண்டிக்க முடியாது - நீதிபதி ஹரி பரந்தாமன் பேட்டி
சவுக்கு சங்கர் நீதிமன்றம் குறித்தும் நீதிபதிகள் குறித்தும் வெளிப்படுத்திய கருத்துகளுக்காக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அவருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்துள்ளது. ஆனால், ஒருவர் பேசுவதற்காக சிறை தண்டனை விதிக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்புகிறார், சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விமர்சகர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்தது.
ச ென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஒருவரை சந்தித்த பிறகுதான் யூடியூபர் மாரிதாசுக்கு எதிரான வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்ததாக அவர் ட்விட்டரில் பதிவிட்ட இடுகையை மேற்கோள்காட்டி, ஜூலை மாதம் மதுரை உயர் நீதிமன்ற கிளை அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில்தான் அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
உ.பி.| பட்டியலின சிறுமிகள் இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு தூக்கிட்டு படுகொலை; 6 பேர் கைது
hindutamil.in : லக்கிம்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் பட்டியலினத்தைச் சேர்ந்த இரண்டு மைனர் சகோதரிகள் பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தி, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
லக்கிம்பூர் மாவட்டம் நிகாசன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடத்தில் புதன்கிழமை மாலை 17, 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் உத்தப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக, சுஹைல், ஜூனைத், ஹபிசுல், ரஹ்மான், கரிமுதீன், ஆரிஃப் மற்றும் சோட்டு ஆகிய ஆறு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திமுக முப்பெரும் விழாவில் . கலைஞரின் 4041 கடிதங்கள் நூல் தொகுப்பு வெளியீடு
விருதுநகரில் இன்று (செப்டம்பர் 15) நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், திமுக நிர்வாகிகள் என தமிழகத்திலிருந்து லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர். விழாவில் ’கலைஞரின் கடிதங்கள்’ மற்றும் ‘திராவிட மாடல் ஆட்சி’ ஆகிய தொகுப்பு நூல்கள் வெளியிடப்பட்டன. தொடர்ந்து சிறப்பாக கட்சி பணியாற்றியவர்களுக்கு பரிசும், சான்றிதழ்களும், கழக முன்னோடிகளுக்கு விருதுகளும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. விழாவில் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் பேசினர்.
வீட்டு வாடகைக்கு 18% ஜிஎஸ்டி.. யாருக்கெல்லாம் பாதிப்பு..? வீட்டு உரிமையாளர்கள் நிலை என்ன..?
tamil.goodreturns.in - Prasanna Venkatesh : புதிய ஜிஎஸ்டி விதிகளின்படி, ஜிஎஸ்டி கீழ் பதிவு செய்யப்பட்டோர் ஒரு வீடு, அலுவலகம் என எந்தச் சொத்தை வாடகைக்கு எடுத்தாலும் 18 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியைச் செலுத்த வேண்டும்,
இந்தப் புதிய வரி ஜூலை 18 முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
ஜிஎஸ்டி வரி விதிப்புகளும், தொடர்ந்து செய்யப்பட்டு வரும் மாற்றங்களும் மக்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
கனடா சுவாமிநாராயண் கோவிலில் சேதம் .. காலிஸ்தான் ஜிந்தாபாத் வாசகங்கள்
இந்நிலையில், சுவாமிநாராயண் கோவில் சேதப்படுத்தப்பட்டு, கோயில் சுவரில் 'காலிஸ்தான் ஜிந்தாபாத்' என்று எழுதப்பட்டிருந்தது. டொராண்டோவில் உள்ள சுவாமி நாராயண் கோயிலின் சுவர்களில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இதற்கு கனடாவில் உள்ள இந்திய உயர் ஆணையரகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மலேசியா முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு காலமானார்
துன் என்ற மலேசிய நாட்டின் உயரிய பட்டத்தை அவர் பெற்றிருந்தாலும், அதற்கு முன் அவர் பெற்ற டத்தோ என்ற பட்டமே அவரது அடையாளமாக மாறியது. தமிழ்நாட்டில் பரவலாக அவர் டத்தோ சாமிவேலு என்றே அவர் அறியப்பட்டார்.
மலேசியாவில் நீண்ட காலம் மத்திய அமைச்சராகப் பதவி வகித்தவர் சாமிவேலு. சுமார் 29 ஆண்டுகள் நாட்டின் தொழில்நுட்பத் துறை, பொதுப் பணித்துறை உள்ளிட்ட பல அமைச்சுகளுக்கு பொறுப்பேற்று சிறப்பாகச் செயல்பட்ட அவர், மலேசிய இந்திய சமுதாயத்தின் அடையாளமாகத் திகழ்ந்ததாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வியாழன், 15 செப்டம்பர், 2022
பசியோடு வருபவர்களை பட்டினியாக வைத்து பாடம் சொல்லித் தரக்கூடாது..” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம் !
நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரின், அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்துடன் சேர்த்து காலை உணவும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை அறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த நாளான இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைத்தார்.
காலை சிற்றுண்டி திட்டத்தை தொடக்கி வைத்த பின் மாணவர்களுக்கு முதலமைச்சர் உணவு பரிமாறியதுடன் அவர்களுடன் சேர்ந்து காலை உணவும் சாப்பிட்டார்.
பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, "தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதன் முழுப்பயனை இன்றைய தினம் நான் பெற்றுவிட்டதாகவே நினைக்கின்றேன்.
சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை.. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளதாக யூடியூபில் விமர்சித்திருந்தார் சவுக்கு சங்கர். அவர் மீது உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்தது.
கடந்த 8ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சவுக்கு சங்கரிடம் நீதிபதிகள் சரமாரியாக கேள்விகள் எழுப்பியதுடன், ஒரு வாரத்திற்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு ஒன்றிய அரசு கைவிரித்தது .. சட்டத்தில் இடமில்லையாம்
இந்தியாவில் இருந்து உக்ரைன் சென்று மருத்துவ படிப்பு படித்து வந்த மாணவ, மாணவிகள் உக்ரைன் - ரஷியா போர் காரணமாக தாயகம் திரும்பிவிட்டனர். உக்ரைன் - ரஷியா போர் காரணமாக தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள சுமார் 20,000 மாணவர்கள் இந்தியா திரும்பி இருந்தார்கள். அவர்களின் எதிர்காலம் பாதிக்கக்கூடாது, அவர்கள் தங்கள் கல்வியை இங்கேயே தொடர வழிவகை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு பல தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
சோனியா காந்தி : பாஜகவினர் ஜனநாயகத்தை குறைத்து மதிப்பிடுகின்றனா்:
இதுதொடா்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் அவா் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதாவது: ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது நாட்டின் வளமும் வாய்ப்புகளும் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென நாங்கள் கருதினோம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், உணவுப் பாதுகாப்பு சட்டம், தகவலறியும் உரிமை சட்டம், ஆதாா் அட்டை என பொதுமக்களின் நலனில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முதலீடு செய்தது.
பஞ்சாப் தனிநாடு கோரி செப்.18ல் பொதுவாக்கெடுப்பா? கனடாவில் பரபரப்பு
uthayamugam.com : பஞ்சாப்பை பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாடு வேண்டும் என்று 1980களில் சீக்கியர்கள் மாபெரும் போராட்டம் நடத்தினார்கள். பொற்கோவிலையே தலைமையிடமாகக் கொண்டு பிந்தரன்வாலே என்பவர் தலைமையில் ஆயுதப் போராட்டத்துக்கும் தயாராகி வந்தனர்.
இந்தப் போராட்டத்தை அடக்கவே, அன்றைய பிரதமர் இந்திரா பொற்கோவிலுக்குள் ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். அந்த நடவடிக்கையில் காலிஸ்தான் தீவிரவாதிகள் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். அந்த நடவடிக்கைக்கு எதிராகவே பிரதமராக இருந்த இந்திராவை சீக்கிய பாதுகாவலர்கள் சிலர் சரமாரியாக சுட்டுக் கொன்றனர்.
இந்திரா கொல்லப்பட்டதைத் தொடர்ந்து டெல்லியிலும் மற்ற மாநிலங்களிலும் வாழ்ந்த சீக்கியர்கள் ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டனர்.
மீண்டும் இந்தி? அமித் ஷா பிரதமர் பதவிக்கு குறிவைத்து இந்தி வெறியை கையிலெடுக்கிறார்
முன்னதாக, கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியும் இந்தியைக் கொண்டாடும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பாஜக அரசின் இந்தி திணிப்பு முயற்சிகளுக்கு தென் மாநிலங்களில் இருந்து பரவலாக எழுந்துள்ள வன்மையான எதிர்ப்பு,
அமித்ஷாவின் இன்றைய பேச்சு மூலம் இன்னும் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் செயல்பாடுகள் இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை முன்னிறுத்தும் வகையில் தொடர்ந்து இருந்து வருகிறது.
“சென்னை அண்ணா விமான நிலையத்தில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட விமானங்கள்” அப்புறப்படுத்த படுகின்றன
கலைஞர் செய்திகள் : சென்னை விமான நிலையத்தில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, முன்னாள் விமான நிறுவனங்களை சோ்ந்த 12 பழைய விமானங்களை அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளன.
சென்னை விமான நிலையத்திலிருந்து ஏற்கனவே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு, என்.இ.பி.சி., கிங்பிஷர்,ஜெட் ஏா்வேஸ், டெக்கான் ஏா்லைன்ஸ், பேராமவுண்ட் ஆகிய விமான நிறுவனங்களை சோ்ந்த விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது அந்த விமான நிறுவனங்கள் செயல்பாட்டில்லை.
காரைக்கால் சிறுவனுக்கு எலி மருந்தை கொடுத்தது கொன்றதாக சிறுமியின் தாயார் பரபரப்பு வாக்குமூலம்
நக்கீரன் : காரைக்கால் சிறுவன் மரணம்; சிறுமியின் தாயார் பரபரப்பு வாக்குமூலம்
காரைக்காலில் தனது மகளை விட அதிக மதிப்பெண்கள் எடுத்ததாகக் கூறி சிறுவனுக்கு விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்த வழக்கில் சகாயராணி விக்டோரியா என்பவர் கைது செய்யப்பட்டார். மருத்துவமனையில் அந்த மாணவர் உயிரிழந்த நிலையில் மாணவரின் குடும்பத்தார், குற்றவாளியைக் கைது செய்தாலும் மருத்துவமனையின் அலட்சியத்தால் தான் சிறுவன் உயிரிழந்ததாக போராட்டம் நடத்தினர்.
பாகிஸ்தான் பெண் டாக்டர் துப்புரவு தொழிலாளியை திருமணம் செய்தார்
இந்த சமபவம் வைரலாகி உள்ளது. இஸ்லாமாபாத் பாகிஸ்தானில் ஆஸ்பத்திரி ஒன்றில் ஹவுஸ் கீப்பிங் ஊழியராக பணிபுரிந்த ஒருவரை அதே ஆஸ்பத்திரியில் டாகடராக பணிபுரியும் ஒரு பெண் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த ஜோடி தற்போது இணையத்தில் வைரலாகி பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது.
பாகிஸ்தானில் கிஷ்வர் சாஹீபா என்ற பெண் டாக்டர் தெஹ்சில் ஒகாரா மாநிலத்திலுள்ள திபால்பூரில் வசித்து வருகிறார் அவர் அங்கேயே ஆஸ்பத்திரில் ஒன்றில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.
புதன், 14 செப்டம்பர், 2022
இலங்கை - தலைமன்னார் டாலர் பரிவர்த்தனை பிரதேசமாக .. மக்காவ் ஹாங்காங் போல ..? Sri Lanka dreams of dollarized tourism hub in Mannar?
தலைமன்னார் டாலர் பரிவர்த்தனை பிரதேசமாக மாறப்போகிறது?
திறந்த பொருளாதார கொள்கையை போன்று அமெரிக்க டாலர் மட்டுமே பயன்படுத்தும் பிரதேசமாக தலைமன்னாரை மாற்றும் ஒரு திட்டம் இலங்கை அரசின் ஆலோசனையில் உள்ளதாக தெரிகிறது
இது பற்றி இலங்கை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே கூறியதாவது - மக்காவ் போன்று டொலரை தனது நாணயமாகப் பயன்படுத்தும் பொழுதுபோக்கு நிறைந்த சுற்றுலாப் பிரதேசமாக மன்னார் தீவை இலங்கை உருவாக்க முடியும்!
சிங்கப்பூர் துபாய் அல்லது ஹொங்கொங் போன்ற பொருளாதார மையங்களாக இலங்கை அமையக்கூடிய வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது .தலைமன்னார் டாலர் பரிவர்த்தனை பிரதேசமாக .
மன்னார் தீவை மக்காவ் தீவைப் போன்று பொழுதுபோக்கு இடமாக மாற்ற முடியும் என அமைச்சர் கமகே தனது கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் தெரிவித்தார்.
''இது இந்தியா... 'ஹிந்தி' யா என பிளவுபடுத்த முயல வேண்டாம்''- ஸ்டாலின் அமித் ஷாவுக்கு அதிரடி
தமிழ் உள்ளிட்ட மொழிகளை இந்தியாவின் அலுவல் மொழியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கலாச்சாரம், வரலாற்றின் ஆன்மாவை புரிந்து கொள்ள அலுவல் மொழியான இந்தியைக் கற்க வேண்டும் என்ற மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்வினை ஆற்றும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
ஸ்ரீ வள்ளி திருமணம் M.K தியாகராஜ பாகவதர் N.S.சுந்தராம்பாள் யாழ்ப்பாணத்தில் .. 1935 இல்
N.S.Suntharambal Singer Actress |
எம் கே தியாகராஜ பாகவதர் என் எம் சுந்தராம்பாள் போன்ற நட்சத்திரங்களோடு மேலும் பல கலைஞர்கள் பங்கு கொள்கிறார்கள்
இதில் நடித்த என் எம் சுந்தராம்பாள் அவர்கள் சிறந்த பாடகி 1936 இல் வெளிவந்த நளாயினி திரைப்படத்தில் நடித்திருக்கிறார் அவரோடு கூட நடித்தவர் வைத்தியநாத அய்யர்
என் எம் சுந்தராம்பாளின் ஒரு புகைப்படம் கூட எங்கும் கிடையாது
கூகிளில் தேடி பார்த்தேன் ஆனால் அதிசயமாக இந்த விளம்பர போஸ்டரில் அவரின் படம் (நடுவே) ஓரளவு தெளிவாகவே இருக்கிறது
எம் கே தியாகராஜ பாகவதரின் படம் கூட மிகவும் இளமையான தோற்றத்தில் இருக்கிறது . இந்த படம் அவர் திரையில் தோன்றுவதற்கு முன்பே எடுக்கப்பட்டதாக இருக்கலாம்.
நரிக்குறவர், குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நரிக்குறவர், குருவிக்காரர் என அழைப்படுவோரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய மந்திரி அர்ஜூன் முண்டா கூறியுள்ளார்.
சத்தீஸ்கர், இமாச்சலப்பிரதேச மாநிலங்களிலும் பழங்குடியினர் பட்டியலில் இணைப்புகளுக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் நரிக்குறவர் - குருவிக்காரர் பிரிவினருக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாம்பு பிடி வீரரின் உடலை சுற்றிக்கொண்ட மலைப்பாம்பு.. உயிரிழப்பு . கிருஷ்ணகிரியில்
கலைஞர் செய்திகள் - Praveen : கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே மேல்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், இவர்கள் ஊரில் புகுந்த 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று ஆட்டுக்குட்டியை விழுங்கி பின்னர் சின்னசாமியின் விவசாய நிலையில் பதுங்கிக்கொண்டது.
தனது விவசாய நிலத்தில் மலைப்பாம்பு இருப்பதை கண்ட விவசாயி இது குறித்து பனகமுட்லு கிராமத்தைச் சேர்ந்த பாம்பு பிடிப்பவர் நடராஜன் (வயது 50) என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் படி நடராஜன் அங்கு வந்து பார்த்தபோது கிணற்றுக்கு அருகில் மலைப்பாம்பு சுருண்டு கிடந்துள்ளது.
ஸ்டாலின், கேசிஆர், மம்தா இல்லை.. சரத் பவார்தான் பாஜகவுக்கு எதிரான ஒரே முகமாம்
அடுத்த மக்களவை தேர்தல் 2024ஆம் ஆண்டில் தான் நடைபெற உள்ளது. இதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருந்தாலும் கூட இப்போதே அரசியல் பரபரப்பு பற்றிக் கொண்டது.
காங்கிரஸ் கட்சி ஒரு பக்கம் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றிணைக்கும் வகையில் ஒற்றுமை யாத்திரை செல்கிறது.
ராகுல் காந்தி தலைமையில் நடக்கும் இந்த பயணம் 150 நாட்கள் தொடர்ச்சியாக நடக்கிறது.
செவ்வாய், 13 செப்டம்பர், 2022
ரணில் விக்கிரமசிங்க புதிய திட்டம் : அரசாங்கம் ஜனாதிபதி மாகாணசபை இணைந்த அதிரடி ....
kuruvi.lk : விவசாயத்தை நவீனமயப்படுத்த பல அதிரடி திட்டங்கள் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு
இலங்கையில் உணவு மற்றும் போசாக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய திட்டமொன்று நடைமுறைப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கை உறுதிப்படுத்தும் கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுவூட்டுவதற்கான பல்துறை ஒருங்கிணைந்த பொறிமுறையொன்றை ஜனாதிபதி இன்று (13) ஸ்தாபித்தார்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விவசாயத்தை நவீனமயப்படுத்தி உற்பத்தி மற்றும் போட்டித்தன்மையை அதிகரிக்க முடியும் என்றும் இதன்மூலம் அந்நியச் செலாவணியை ஈட்டும் துறையாக விவசாயத்தை மாற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
திருவாரூர் முத்துகுமரன் குவைத்தில் சுட்டுக்கொலை- ஒட்டகம் மேய்க்க மறுத்ததால் கொடூரம்
தினத்தந்தி : தமிழகத்தை சேர்ந்த முத்துகுமரன் குவைத்தில் சுட்டுக்கொலை- ஒட்டகம் மேய்க்க மறுத்ததால் கொடூரம்
இவர் குவைத்துக்கு செல்வதற்காக ஒருவரிடம் முத்துகுமரன் 1.5 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார்.
கடந்த 3-ந் தேதி அவர் ஐதராபாத் நிறுவனம் மூலம் குவைத்துக்கு சென்றார்.
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா லட்சுமண்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்து குமரன். பி.பார்ம் படித்துள்ள இவருக்கு வித்யா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
சிக்கிய எஸ்.பி.வேலுமணி மகன் விகாஸ்- வெளிநாட்டு உல்லாச பயணம் குறித்து துருவி துருவி விசாரணை!
tamil.oneindia.com - Mathivanan Maran : கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மகன் விகாஸிடம் வெளிநாட்டு உல்லாச பயணம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் கிராமப்புறங்களில் எல்.இ.டி.பல்புகள் வாங்கியதில் ரூ500 கோடி ஊழல் முறைகேடு செய்தார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி என்பது புகார். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். எஸ்.பி.வேலுமணியின் இந்த ஊழல் முறைகேடு மூலம் ஒரு எல்இடி பல்புக்கு தமிழக அரசு கூடுதலாக ரூ3,500 கொடுத்து இழப்பை சந்தித்ததும் தெரியவந்தது.
ஸ்ரீமதி வழக்கில் புதிய சி சி டி வி - தாய் செல்வியோடு பள்ளி நிர்வாகம் பேசும் ஆதாரம்
அந்த வீடியோவில், ஸ்ரீமதி தரப்பில் அவரது தாய் செல்வி உட்பட 9 பேர் பேச்சுவார்த்தையில் இருந்துள்ளனர். ஸ்ரீமதி ஜூலை 13ஆம் தேதி உயிரிழந்த நிலையில் அன்றைய தினமே பேச்சுவார்த்தை நடந்த காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன.
பள்ளி நிர்வாகம் தங்களை அழைத்து பேசவில்லை என செல்வி குற்றச்சாட்டு முன்வைத்திருந்த நிலையில் தற்போது ஆதாரம் வெளியாகியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் 2வது முறையாக ஆலோசனை கூட்டம் துறைசார் செயலர்களுக்கு அழைப்பு
கடந்த ஆகஸ்ட் மாதம் கடைசி வாரம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆறுமுக சாமி ஆணைய அறிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
அதேபோல் தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை தொடர்பான அறிக்கையும் இந்த கூட்டத்தில் கொடுக்கப்பட்டது. விரைவில் இந்த அறிக்கைகள் தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உத்தர பிரதேச எம்பிக்கள் தொகை 80 இல் இருந்து 132 அதிகரிக்கிறது? குடும்ப கட்டுப்பாட்டை கடைப்பிடித்த தென்னிந்தியா வடக்கின் காலனி ஆகிறது
சென்னை : வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் தமிழகம் போன்ற மாநிலங்களுக்குப் பிரதிநிதித்துவம் குறைவாகவும், மக்கள் தொகை அதிகம் உள்ள வளர்ச்சியடையாத உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு இரு மடங்கு அதிகமாக மக்களவை தொகுதியை அதிகரிப்பதும் எந்த வகையில் நியாயம்? என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உயர்த்த மக்கள் தொகை வளர்ச்சியைக் குறைக்கும் வகையில், 1952 ஆம் ஆண்டு இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
திங்கள், 12 செப்டம்பர், 2022
"மனதை புண்படுத்தும் பக்கங்கள்" எந்த நேரத்திலும் கொள்கையை மீறி எழுதியது கிடையாது! ஷாலின் மரியா லாரன்ஸ்
Shalin Maria Lawrence : கடந்த வாரத்துடன் என்னுடைய "மனதை புண்படுத்தும் பக்கங்கள்" தொடர் குமுதத்தில் வெற்றிகரமாக முடிவடைகிறது .
"இது தற்காலிகமாக முடிகிறது என்று சொல்லுங்கள் ,இன்னும் நாம் பயணிக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது" என்று குமுதம் ஆசிரியர் சஞ்சீவி அவர்கள் சொன்னார் .ஆகவே தற்காலிக முடிவு தான் .வரும் காலத்தில் குமுதத்தில் பல் வேறு தலைப்புகளில் எழுதுவேன் . திரு சஞ்சீவி அவர்கள் கடந்த இரு மாதங்களாக எனக்கு நல்ல ஆதரவை கொடுத்தார் .அவருக்கு நெஞ்சின் ஆழத்தில் இருந்து நன்றி.
2017 இல் எனக்கு முதன் முதலில் பதிப்பு வாய்ப்பு கொடுத்தது குமுதம் . அதன் பிறகு எனது முதல் தொடரும் குமுதத்தில் தான் வந்து இருக்கிறது . மறைந்த ஆசிரியர் பிரியா கல்யாணராமன் அவர்களுக்கு நான் அதிகம் கடமை பட்டுள்ளேன் . எனக்கான அங்கீகாரம் கிடைத்ததில் மிக பெரிய பங்கு அவருக்கு இருக்கிறது . மேலும் 72 வாரங்கள் எந்த வித தடையுமில்லாமல் என்னுடைய தொடரை எழுதி இருக்கிறேன் . முதலில் மிக பயமாக இருந்தது .பின்பு பாபாசாஹெப் அம்பேத்கர் காட்டிய ஒலியில் பயணித்தேன் . கிட்ட தட்ட ஒன்றரை வருடங்கள் என்பது எனக்கே மலைப்பாக இருக்கிறது .
ரணிலின் மிகப்பெரிய தகுதியே ரணிலை பலருக்கும் பிடிக்காது என்பதுதான்! சமூகவலை தளங்களில் ரணில் ....
Annesley Ratnasingham : .ரணில் ஒரு மிக பெரிய புத்திசாலி.......
ரணில் கொஞ்சம் கொஞ்சமாக ராஜபக்ச குழுவை எதிர்க்க தொடங்குவார் .
இப்போது ஒரு MP கூட இல்லாதவர் Basil உடன் சேர்ந்து செல்வதை தவிர வேறு வழி இல்லை ....
புதிய நியமனங்களை வைத்து புரிந்து கொள்ளலாம் ...
ஆனால் சிறிது சிறிதாக ராஜபக்ஸாக்களுக்கு எதிராக அநேக MP களை திருப்புவார்...
.அதில் புதியதாக பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்ட MP களை 5 வருடத்துக்குள் பாராளுமன்றத்தை கலைக்கப்போவதாக மிரட்டுவார் ...( Pension இல்லாமல் போகும் என்பதால் )...
இவைகளின் ஒரு ஆரம்பம்தான் ....President says he will give Parliament 6 months to agree on electoral reforms ...
ரணில் மேற்கத்தைய துணையுடன் தேர்தலில் வென்று மிக பெரிய சக்தியாக மீண்டும் ஜனாதிபதியாவார் ...
Thiyagarasa Ramesh : ரணில் புத்திசாலிஎன்பதை நீங்கள் எப்போது புரிந்துகொண்டீர்கள்
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் - பாக்யராஜ் வெற்றி
வடபழநி மியூசிக் யூனியனில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் பாக்யராஜ், எஸ்.ஏ. சந்திரசேகர் தலைமையிலான 2 அணிகள் போட்டியிட்டன.
இந்த தேர்தலில் பாக்யராஜ் 192 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். எஸ்.ஏ.சந்திரசேகர் 152 ஓட்டுகள் பெற்றார். 40 வாக்குகள் வித்தியாசத்தில் கே.பாக்யராஜ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வெற்றி பெற்ற பின்னர் பாக்யராஜ் கூறுகையில், வெற்றியை அளித்தவர்களுக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என தெரிவித்தார்.
எழுத்தாளர் சங்க தேர்தல் 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மகாத்மா காந்தி 1927 இல் யாழ்ப்பாணம் சுன்னாகம் திராவிட வித்தியாசாலைக்கு அஸ்திவாரக்கல் நாட்டினார்.
இலங்கைக்கு மகாத்மா வந்து திரும்பிவிட்டார்
மகாத்மா காந்தியவர்கள் தமது மனைவியார் பரிவார சகிதமாக இலங்கைக்கு வந்து யாழ்ப்பாணம் நாலு நாள் தங்கி இந்தியா திரும்பி விட்டனர்.
இதுமாதிரி
இலங்கைக்கு இதுவரையும் வந்து போன .மற்றெவருக்காயினும் மகாத்மாவுக்கு
காட்டப்படும் மரியாதையும் அன்பும் உபசாரமும் காட்டப்பட்டதே இல்லையெனலாம் .
மாகாத்மாவிற்கு
இலங்கையில் வேண்டிய வசதிகள் யாவும் செய்து சந்தோஷமாக்கும்படி இந்திய பிரதி
காவலர் இலங்கை தேசாதிபதியை கேட்டுக்கொண்டபடி தேசாதிபதியவர்கள் தனது
மாளிகைக்கு அழைத்து விருந்திட்டு உபசரித்தார்.
மகாத்மா இலங்கைக்கு
சென்றவிடமெல்லாம் மக்கள் அவரை தரிசித்தற் பொருட்டும் அவரின் பிரசங்கத்தை
காதினாற் கேட்டற்கும் பதினாயிர கணக்கானோர் கூடி காந்திக்கு மனமுவந்து 60000
ரூபா வரையிற் கொடுத்திருக்கின்றனர்
ராகுல் காந்தி கேரளா எல்லையில்... நடை பயணத்தைத் தொடர்ந்தார்
தமிழகத்தில் நடைப் பயணத்தை நிறைவுச் செய்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., தற்போது கேரளாவில் நடைபயணத்தைத் தொடங்கியுள்ளார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைப் பயணத்தில் 53 கிலோ மீட்டர் தூரத்தை ராகுல் காந்தி எம்.பி. கடந்துள்ளார்.
நான்கு நாட்கள் தமிழகத்தில் நடைப் பயணம் மேற்கொண்ட அவர், தமிழகம்- கேரளா மாநிலங்களின் எல்லைப் பகுதியில் தமிழக பயணத்தை முடித்துக் கொண்டார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமைசிங்க அமெரிக்க உயர்மட்ட பிரதிநிதி சமந்தா பவர் பேச்சு வார்த்தை (முழு விபரம்)
aruvi.com : இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முழுமையான ஆதரவை வழங்க அமெரிக்கா அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்தின் நிர்வாகி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.
இரு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வந்துள்ள சமந்தா பவர், இன்று முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தபோதே அவர் இதனைக் கூறியுள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
2022 - ஆசிய கிரிக்கெட் ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கை அபார வெற்றி
hirunews.lk : இலங்கை வெற்றி - 2022ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கை வசம்!
2022ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 23 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறும் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது.
இதற்கமைய, அந்த அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக பானுக ராஜபக்ஷ 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரில் இவர் பெற்ற 03ஆவது அரைச்சதம் இதுவாகும்.
ஞாயிறு, 11 செப்டம்பர், 2022
ஸ்டாலின், பிடிஆர் தொடரும் பனிப்போர்... எங்கே போய் முடியுமோ? அவாள் பத்திரிகைகள் கவலை
நிதியமைச்சர் பொறுப்பு: திராவிட சித்தாந்தங்களோடு, தமது சுய சிந்தனையுடன்கூடிய ஆட்சி நிர்வாகத்தால் அடிதட்டு மக்களின் கல்வி, பொருளாதார நிலையில் மாற்றத்தை கொண்டு வந்துவிடலாம் என்ற அசாத்திய நம்பிக்கையுடன் மாநில அரசின் முக்கிய பொறுப்பான நிதியமைச்சர் பொறுப்பை ஏற்று கொண்டுள்ளவர் பிடிஆர்.
பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் கைது - விடுவிப்பு கள்ளக்குறிச்சி கட்டுரை விவகாரம்
பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் இன்று (செப்டம்பர் 11) தமிழக போலீஸாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அச்சுப் பத்திரிகைகளில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளரான சாவித்திரி கண்ணன் தற்போது அறம் ஆன் லைன் என்ற இணைய தளத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் செப்டம்பர் 9 ஆம் தேதி மாலை தனது இணைய இதழில் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார்.
”சென்னை உயர் நீதிமன்றம் கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவில் அந்த மாணவி எழுதியதாக ஒரு கடிதத்தையும் குறிப்பிட்டிருந்தார்கள். அந்த கடிதமே போலி” என்று தனது கட்டுரையில் குறிப்பிட்டு, ‘போர்ஜரி கடிதம் பொய்க்கு துணை போகிறதா அரசாங்கம்?’ என்ற தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தார்.
உக்கிரேன் முக்கிய நகரங்களை மீட்டது! ரஷ்யப் படைகள் பின்வாங்கின
ஹ்யூகோ பச்சேகா (கீயவ் நகரில் இருந்து) & மேட் மர்ஃபி (லண்டனில் இருந்து)
பிபிசி நியூஸ்
யுக்ரேனின் அதிவேக பதில் தாக்குதல்களுக்கு மேலும் பலன் கிடைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அந்நாட்டின் கிழக்குப் பகுதிகளில் உள்ள சில முக்கிய நகரங்களில் இருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கின.
இது குறித்துக் கூறிய யுக்ரேன் அதிகாரிகள், குபியான்ஸ்க் நகருக்குள் தங்கள் படையினர் சனிக்கிழமை நுழைந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். யுக்ரேனில் உள்ள ரஷ்ய படையினருக்கு பொருள்களை விநியோகம் செய்வதற்கான முக்கிய மையமாக இந்த நகரம் விளங்கி வந்துள்ளது.
கரூர் சமூக ஆர்வலர் லாரி ஏற்றி கொலை- சட்டவிரோதமாக இயங்கிய குவாரியை மூட போராடியவர்
மாலைமலர் : கரூர் மாவட்டத்தில் ஆயத்த ஆடை தயாரிப்பு, கொசுவலை உற்பத்தி, பஸ் பாடி கட்டும் தொழில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். அதற்கு இணையாக புறநகர் பகுதிகளில் ஏராளமான கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இதில் ஒரு சில குவாரிகள் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாகவும், இயங்கி வருவதாக புகார்கள் உள்ளன.
அந்த வகையில் கரூர் மாவட்டம் க.பரமத்தி பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் எம்.சாண்ட், ஜல்லிக்கற்கள் உள்ளிட்டவை உள்ளூர் தேவைகளுக்கு மட்டுமில்லாமல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
பாகிஸ்தான் வெள்ளம்; பசியால் 6 வயது சிறுமி உயிரிழப்பு: போராட்டம் வெடித்தது
பாகிஸ்தானில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டு கோடிக்கணக்கான மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. இதில், சிந்த் மாகாணமும் ஒன்று. அதன் சுக்கூர் நகரில் வசித்து வரும் பல குடும்பத்தினர் கனமழை மற்றும் வெள்ளத்தில் வீடுகளை இழந்து உள்ளனர்.
இதில், ஒரு பகுதியினர் பத்னி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தற்காலிக கூடாரத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், நிவாரண உதவிகள் கிடைக்காமல் முகாமில் தங்கியிருந்த 6 வயது சிறுமி உயிரிழந்து உள்ளார்.
பிள்ளையார் சிலை கரைப்பில் 20 பேர் உயிரிழப்பு .. மகாராஷ்டிராவில்
இந்நிலையில், மகாராஷ்டிராவின் பல்வேறு இடங்களில் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது 20 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதில், 14 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். ஊர்வலத்தின் போது சாலை விபத்தில் 4 பேரும், மரம் விழுந்து பெண் ஒருவர் என மொத்தம் 20 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் மூர்த்தி வீட்டு திருமணம் இரண்டு லட்சம் விருந்தினர்... மட்டன் பிரியாணி, சிக்கன் கறி சுதாகரன் திருமணத்தை மிஞ்சிய தடபுடல்
Karthikeyan Fastura : இரண்டு லட்சம் பேர்கள் கலந்துகொண்டு அத்தனை பேருக்கும் மட்டன் பிரியாணி, சிக்கன் கறி, அசைவத்தில் நாலு வகை பொரியல் என்று கணக்குப் பார்க்காமல் விருந்து உண்ட கல்யாண வைபோகத்தை நீங்கள் பார்த்ததுண்டா?
வந்திருந்த அத்தனை பேருக்கும் தாம்பூலம் பை, கரும்பு, ஸ்வீட் பீடா என்று பார்த்ததுண்டா?!
500 பேர் கலந்து கொள்ளும் கல்யாணத்தில் கூட இத்தனை துல்லியமான ஏற்பாடுகளை பார்க்க முடியாது. பல சொதப்பல்களை காண நேரிடும். ஆனால் லட்சக்கணக்கில் மக்கள் வந்து உணவு உண்டாலும் யாரும் காத்திருக்கவில்லை. அந்த அளவிற்கு மிக விரிவான ஏற்பாடு செய்யப்பட்டு பார்த்ததுண்டா?!