சனி, 2 ஜூலை, 2022
சரவணா ஸ்டோர் ரூ.234.75 கோடி சொத்துக்கள் முடக்கம்
சென்னை: சென்னை சரவணா ஸ்டோரின் தங்கமாளிகை கோல்டு பேலஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.235 கோடி சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸிக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது
காவல் நிலை உயிரிழப்பு தொடர்பாக 80 வழக்குகள் பதிவு- டி.ஜி.பி. தகவல்
மதுரை: தமிழக காவல் நிலையங்களில் கைதி மரணங்களை தடுப்பது தொடர்பாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு மாவட்டம் தோறும் விழிப்புணர்வை கருத்தரங்குகளை நடத்தி வருகிறார்.
மதுரை தெப்பக்குளம் தனியார் கல்லூரியில் போலீஸ் நிலைய மரணம் தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று காலை நடந்தது.
இதில் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க், மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
உதய்பூர் கொலையாளிகள் பாஜகவுடன் தொடர்பில் இருந்தவர்கள் அதிர்ச்சி பின்னணி ..
etvbharat.com/ : டெல்லி: ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தைச்சேர்ந்த டெய்லர் கன்ஹைய லால் என்பவர் கடந்த ஜூன் 28ஆம் தேதி இரண்டு நபர்களால் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்கருத்து தெரிவித்த பாஜக முன்னாள் செய்தித்தொடர்பாளர் நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கன்ஹைய லால் கருத்துப்பதிவு செய்ததால், அவர் கொலை செய்யப்பட்டதாகத் தெரியவந்தது.
கொலையாளிகள் ரியாஸ் அக்தாரி, கௌஸ் முகமது வெளியிட்ட வீடியோவில், கொலையை ஒப்புக் கொண்டும், பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்தும் பேசியிருந்தனர். பின்னர் சில மணி நேரங்களிலேயே ரியாஸ், முகமது கைது செய்யப்பட்டனர்.
கூட்டுறவுத் துறையில் ரூ.780 கோடி ஊழல்: ஐ.பெரியசாமி
மின்னம்பலம் : கூட்டுறவுத் துறையில் கடந்த 10 ஆண்டுகளில் 750 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்களை மாணவர்களுக்கு நேற்று (ஜூலை 1) அமைச்சர் பெரியசாமி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இதுவரை இல்லாத அளவுக்குக் கூட்டுறவுத் துறைக்குக் கல்லூரி ஒதுக்கப்பட்டுள்ளது. திமுகவின் இந்த ஓராண்டுக் கால ஆட்சியில் 33 அரசு கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.
வெள்ளி, 1 ஜூலை, 2022
அயோத்தி சரயு நதியில் முத்தமிட்ட தம்பதிகளை தாக்கிய இந்து குண்டர்கள்
சிவம் குப்தா சௌமியா குப்தா கணவன் மனைவி சிறந்த ராம பக்தர்கள் சில ஆண்டுகளாக குழந்தை இல்லை கோயில் அர்ச்சகரை பார்த்து ஆலோசனை செய்த போது சரயு நதிக்கரையில் உடல் உறவு கொண்டால் குழந்தை பிறக்கும் என்று அர்ச்சகர் சொல்லியிருக்கிறார்.
சரயூ நதிக்கரையில் குளிக்கும் போது இவரது நிலையை அறிந்த ராம பக்தர்கள் உதைத்து துறத்தினர். எங்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் நாங்கள் இஸ்லாம் மதத்துக்கு மாறி விடுவோம் என்று குப்தா தம்பதியினர் தெரிவித்தனர் இவ்வளவும் யாரால் வருகிறது.
அர்ச்சகர்கள் எனும் முட்டாள்களால்தான் வருகிறது எவ்வளவு விஞ்ஞானம் வளர்ந்தாலும் வட இந்தியர்கள் திருந்தவே மாட்டார்கள்..
இதை முழுவதும் எழுத வேண்டும் என்றால் அசிங்கமா இருக்கும் அதனால் சுருக்கமாக எழுதி இருக்கிறேன்.
ரேபிஸ் நோய் தாக்கி மாணவி உயிரிழப்பு .. நாய் கடித்தால் செய்ய வேண்டியது இதுதான்! - மருத்துவர்கள் சொல்வது என்ன?
கலைஞர் செய்திகள் -KL Reshma : நாய் கடித்து 18 வயதான கல்லூரி மாணவி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிவகங்கை பொதுநல மருத்துவர் விழிப்புணர்வு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கேரளாவை சேர்ந்த ஸ்ரீலட்சுமி (18) என்ற கல்லூரி மாணவி, நாய் கடி ஏற்பட்டு 1 மாதத்திற்கு பிறகு 'ரேபிஸ்' நோய் தாக்கி நேற்று உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்று விலங்குகள் கடித்து சாதாரணமாக விட்டு பிறகு உயிரிழப்பவர்கள் ஏராளம்.
இந்நிலையில் விலங்கு கடி மூலம் பரவும் 'ரேபிஸ்' நோய் குறித்து சிவகங்கை மாவட்ட பொது நல மருத்துவர் Dr. அ.ப.ஃபரூக் அப்துல்லா விழுப்புணர்வு பதிவு ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் புதிய அமைச்சர் தம்மிக்க பெரேரா! இலங்கையின் புதிய நம்பிக்கை நட்சத்திரம்?
Shobitha Rajasooriar : 2019 ம் ஆண்டு நடுப் பகுதி. திகதி ஞாபகமில்லை ஒரு மதிய வேளை சந்திப்பு ஒன்றில் திரு டம்மிக்க பெரெராவை காண ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.
ஏறத்தாள 2:30 மணி நேரமாக எங்களுக்கும் அவருக்கும் இடையேயான கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டது நானும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், திரு. டம்மிக்க பெரெராவும் தான். அவருடைய பிரத்தியேக காரியதரிசியும் அங்கு இருந்தார்.
இந்த இந்த இரண்டரை மணித்தியால கலந்துரையாடல் எனக்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது. ஏனென்றால் அங்கே திரு.டம்மிக்க பெரேராவினால் சமர்ப்பிக்கப்பட்ட எத்தனையோ சுபீட்சம் மிக்க எதிர்கால இலங்கைக்கான அபிவிருத்தி திட்டங்களில் இருந்து,
பல வகையான அதாவது அன்றாடப் பிரச்சினைகள் விஷேடமாக பொது மக்கள் எதிர்நோக்கும் அன்றாட பிரச்சினைகள் எவ்விதம் தீர்ப்பது அவற்றுக்கான வழிமுறைகள் என்பனவற்றுக்கான பலவிதமான கருத்துக்களும் தீர்வைகளும் அவரிடம் கைவசம் இருந்தது தான்.
திமுக ஒரு சாதாரண அரசியல் கட்சியல்ல .. இந்திய ஒன்றியத்தின் நன்னம்பிக்கை முனை
ராதா மனோகர் : இந்தியா முழுமைக்கும் அரசியல் போக்கை
தீர்மானிக்கும் திராவிட முன்னேற்ற கழகம் (TREND SETTER)
திராவிட முன்னேற்ற கழகம், ஏனைய அரசியல் கட்சிகளை போல வெறும் ஒரு அரசியல் கட்சி கிடையாது.
அது ஒரு வெறும் மாநில கட்சி போல் தோன்றினாலும்,
அதையும் தாண்டிய ஒரு கோட்பாட்டின் அடிப்படையிலேயே அது உருவாகி உள்ளது..
சுயமரியாதை, சமுக நீதி, பகுத்தறிவு, மாநில சுயாட்சி என்ற நான்கு
தூண்களும் கொண்டு நிமிர்ந்ததுதான் திராவிட முன்னேற்ற கழகம்!
இந்த நான்கு அடிப்படை கோட்பாடுகளும் ஆரிய பார்ப்பனீய காலனி தத்துவத்துக்குநேர் எதிரான கோட்பாடுகளாகும் .
அதன் ஒவ்வொரு படிநிலையிலும் அந்த கருத்தியலில் மிகவும் உறுதியாக முன்னேறி கொண்டே வந்திருக்கிறது.
இதன் அடிப்படை கொள்கைகள் சராசரி மக்களின் புரிந்துணர்வை தாண்டிய வீச்சு கொண்டதாகும்.
இந்த உண்மையை இன்றைய தலைமுறையினர் பெரிதாக அறிந்திருக்கவில்லை.
இதை புரிந்து கொள்வது சற்று சிரமமாக இருக்கலாம்.
திறந்த மனதோடு அணுகினால் மட்டுமே இந்த கருத்தின் ஆழத்தை புரிந்து கொள்ளமுடியும்.
வியாழன், 30 ஜூன், 2022
மகாராஷ்ட்ரா புதிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே.. தொடர்ந்து சறுக்கிய உத்தவ் தாக்கரே
மகாராஷ்டிராவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நிகழ்ந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. ஆனால், உத்தவ் தாக்கரே விரும்பியது போல இந்த பஞ்சாயத்து முடியவில்லை.
கடந்த ஒரு வாரக் காலமாகவே ஷிண்டே ஆதரவு எம்எல்ஏக்கள் சூரத், கவுகாத்தி, கோவா என ஒவ்வொரு ஊராகச் சுற்றியே வந்தனர்.
இந்தச் சூழலில் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டார்.
வாயில் சாராயம் ஊற்றி நர்ஸை புதரில் வைத்து நாசம் செய்த கொடூரன்கள்.. தாயிடம் சொல்லி கதறிய மகள்..! சென்னை..
tamil.asianetnews.com - வினோத் குமார் : வலுக்கட்டாயமாக மதுபானம் ஊற்றி 20 வயது நர்ஸ் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள இரண்டு பேரை தேடி வருகின்றனர்.
வலுக்கட்டாயமாக மதுபானம் ஊற்றி 20 வயது நர்ஸ் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள இரண்டு பேரை தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர் வேறு இடத்தில் பணி செய்ய விரும்பியதை அடுத்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இன்டர்வியூக்காக கடந்த 25ம் தேதி செங்கல்பட்டு-காஞ்சிபுரம் பைபாஸ் சாலை பேருந்து நிறுத்தத்தில், வேலூர் செல்ல அரசு பேருந்துக்கு காத்திருந்ததாக கூறப்படுகிறது.
திமுகவிடம் உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?
மின்னம்பலம் : தமிழ்நாடு அரசியலில் தற்போது பேசுபொருளாக இருப்பது அதிமுகவும் அதன் இரட்டை தலைமையான ஓ.பி.எஸ்.சும், மற்றும் ஈ.பி.எஸ்.சும் தான் . ஒற்றை தலைமையை நோக்கி எடப்பாடி பழனிசாமி அடியெடுத்து வைக்க, கடுமையாக எதிர்த்தார் ஓ.பி.எஸ்.
பொதுக்குழுவில் தீர்மானம் போட்டு பொதுச்செயலாளராக மாறலாம் என நினைத்தவருக்கு எதிராக நீதிமன்றம் மூலம் செக் வைத்தார் ஓ.பி.எஸ்.
இது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் சில தெரியாத விஷயங்களும் தற்போது வெளிவர ஆரம்பித்திருக்கின்றன.
குறிப்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சி.வி. சண்முகம் “ஓ.பி.எஸ். பின்னால் இருந்து திமுகதான் அவரை இயக்குகிறது” என குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் திமுகவுக்கு இதனால் கிடைக்கும் லாபம் என்ன என்று பல்வேறு தரப்பிலும் இது பேசப்பட்டது.
ஆனால், நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழு நடப்பதற்கு சில நாள்கள் முன்பு, திமுகவிடம் ஆதரவு கேட்டு ஓபிஎஸ் அணி முதல்வர் ஸ்டாலினை அணுகியிருந்தது தற்போது தெரிய வந்துள்ளது.
குடியரசு தேர்தல் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா முதல்வர் ஸ்டாலினிடம் நேரில் ஆதரவு கோரினர்
வரும் ஜூலை 18ம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்.
ரஷியா அச்சுறுத்தலால் ஐரோப்பியாவில் அமெரிக்க படை அதிகரிப்பு- ஜோபைடன் அறிவிப்பு
நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் முயற்சி செய்ததால் அந்நாடு மீது ரஷியா போரை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
30 நாடுகளை கொண்ட நேட்டோ அமைப்பின் மாநாடு ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடந்து வருகிறது. இம்மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். இம்மாநாட்டில் நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு ரஷியா நேரடி அச்சுறுத்தலாக திகழ்கிறது என்று பிரகடனப் படுத்தப்பட்டது.
வீட்டில் புதையல்.. 9 பேரை காவு வாங்கிய மாந்திரீகம்..மகாராஷ்டிராவில் கொடூரம்
கலைஞர் செய்திகள் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரும் வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள திடுக்கிடும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி என்ற மாவட்டத்தில் வசித்து வருபவர் மாணிக் மற்றும் போபட் யல்லபா வான்மோர். நெருங்கிய சகோதரர்களாக இருக்கும் இவர்கள், சுமார் 1.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வீடுகளில் வசித்து வந்தனர். மூத்த சகோதரனான மாணிக் ஒரு கால்நடை மருத்துவர்.
இந்த நிலையில், கடந்த 20 ஆம் தேதி இவர்கள் இருவரின் வீடுகளும் திறக்காமல் பூட்டப்பட்டிருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் கதவை தட்டியுள்ளனர். இருப்பினும் கதவு திறக்கப்படாததால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாங்லி மாவட்ட காவல்துறையினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
புதன், 29 ஜூன், 2022
1 வயது குழந்தையைத் துப்பாக்கியால் சுட்டு கொன்ற 8 வயது சிறுவன் : கள்ள துப்பாக்கி வைத்திருந்த தந்தை கைது!
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள விடுதி ஒன்றில் ரோடரிக் ராண்டால் என்பவர் தனது மகன் மற்றும் பெண் தோழியின் மூன்று கை குழந்தைகளுடன் தங்கியுள்ளார். அப்போது, ராண்டால் தனது துப்பாக்கியை விடுதி அறையில் உள்ள அலமாரியில் வைத்து விட்டு வெளியே சென்றுள்ளார். இதைப்பார்த்த அவரது 8 வயது மகன் துப்பாக்கியை எடுத்து விளையாடியுள்ளார்.
மம்தா : உதய்பூர் டெய்லர் கொலை: வன்முறையும், பயங்கரவாதமும் ஏற்றுக்கொள்ள முடியாதது
சட்டம் நடவடிக்கை எடுப்பதால், அனைவரையும் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று மம்தா தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல் கடை நடத்தி வந்த கண்கையா லால் கடைக்கு வந்த இரண்டு பேர் அவரிடம் ஆடை தைக்க வேண்டும் என்று பேசியபடி வலுக்கட்டாயமாக அவரை இழுத்துச்சென்று, தலையை துண்டித்தனர்.
சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க. முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவிற்கு ஆதரவாக கண்கையா லால் கருத்து தெரிவித்ததால் படுகொலை செய்ததாகவும் அவர்கள் தெரிவிருந்தனர்.
நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை! பாணி பூரியால் காலரா பரவுகிறது
இந்த நிலையில் நேபாள நாட்டின் காத்மாண்டுவில் காலரா நோய் பரவி வருவதால் பானிபூரி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் தற்போது காலரா நோய் பரவல் அதிகரித்து வருகிறது. அங்கு இதுவரை 12 பேருக்கு இந்த காலரா நோய் பதிவாகியுள்ளது.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் சுகவீனம் காரணமாக காலமானார் ..
tamil.news18.com : நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்துள்ளார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பெங்களூருவை சேர்ந்த மென் பொறியாளர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.
மீனா தன்னுடைய கணவருடன் பெங்களூருவில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு மீனா மற்றும் அவரது கணவர் வித்யாசாகர் கொரொனாவில் பாதிப்படைந்தனர்.
இலங்கைக்கு அமெரிக்க உதவி ...சிறார்கள், கர்ப்பிணிப் பெண்களை நோக்காகக்கொண்டு 20 மில்லியன் டொலர்.. அதிபர் பைடன் அறிவிப்பு
BBC : இலங்கையில் உணவுப் பாதுகாப்பினை பலப்படுத்துவதற்காக மேலதிக உதவியாக இலங்கைக்கு 20 மில்லியன் டொலர்களை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்றைய ஜி7 உச்சிமாநாட்டில் அறிவித்தார்.
அமெரிக்கா மேற்கொண்ட ஏனைய சமீபத்திய நிதியளிப்பு அறிவிப்புகளின் தொடராக மேற்கொள்ளப்படும் இந்த புதிய உதவிக்கான அறிவிப்பானது தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது மிகவும் தேவையுடைய இலங்கையர்களுக்கு வழங்கப்படும்.
இந்த நிதியளிப்பானது எதிர்வரும் 15 மாத காலப்பகுதியில் 800,000 இற்கும் மேற்பட்ட இலங்கைச் சிறார்களுக்கு உணவளிக்கும் ஒரு பாடசாலை ஊட்டச்சத்து நிகழ்ச்சித்திட்டத்திற்கு உதவிசெய்வதையும் மற்றும் 27,000 இற்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு உணவு வவுச்சர்களை வழங்குவதையும் நோக்காகக் கொண்டுள்ளது.
அமெரிக்காவில் லாரியில் 46 அகதிகள் சடலமாக மீட்பு; 16 பேர் கவலைக்கிடம்
தினமலர் : வாஷிங்டன்: அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் அகதிகள் 46 பேர் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சான் ஆன்டோனியோ பகுதியில் ரயில் பாதைக்கு அருகே கண்டெய்னர் லாரி ஒன்றில் சடலங்கள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து வந்த போலீசார் லாரியை சோதனை செய்தனர். அதில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் சடலமாக கிடப்பது தெரியவந்துள்ளது. 16 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் சிறுவர்கள் ஆவார்கள்.
செவ்வாய், 28 ஜூன், 2022
AIADMK : முடங்கிய இரட்டை இலை சின்னம்.. கதறும் ர.ரக்கள் - உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக சோகம்
உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூலை 9-ம் தேதி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாவட்ட கவுன்சிலர், 20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி தலைவர்கள், 436 கிராம ஊராட்சி உறுப்பினர், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாநகராட்சி கவுன்சிலர், 2 நகராட்சி கவுன்சிலர், 8 பேரூராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 510 பதவிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
முகேஷ் அம்பானி பதவி விலகல்! ரிலையன்ஸ் பொறுப்பு மகன் ஆகாஷ் அம்பானிக்கு சென்றது
நக்கீரன் செய்திப்பிரிவு : இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரும், முக்கிய பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானி 'ரிலையன்ஸ் ஜியோ' நிறுவனத்தின் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
முகேஷ் அம்பானி 'ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம்' நிறுவனத்தின் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில்,
அந்த பொறுப்பை அவரது மகனான ஆகாஷ் அம்பானி ஏற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ஆகாஷ் அம்பானி மற்றும் முகேஷ் அம்பானியின் மகள் ஆகிய இருவரும் 'ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம்' நிறுவனத்தின் தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்களைக் கவனித்து வந்தார்கள்.
சாண்ட்விச்சில் மயோனிஸ் அதிகமாம் .. ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்.. அமரிக்க துப்பாக்கி கலாச்சாரம்
வெளிநாடுகளில் அதிகம் விரும்பப்படும் உணவுகள் என்றால் அது பர்கர், சாண்ட்விச்,பீசா போன்ற உணவுகள்தான். அதுவும் மேற்கத்திய நாடுகளில் பெரும்பாலான வேளைகளில் பொதுமக்கள் உணவகங்களுக்கு சென்று அங்கு பர்கர், சாண்ட்விச்,பீசா போன்றவற்றை சாப்பிடுவதையே விரும்புவார்கள்.
இந்த நிலையில் அதேபோன்று உணவகத்துக்கு சென்று சாண்ட்விச் வாங்கிய ஒருவர், அதில் மாயோனிஸ் அதிகம் சேர்த்ததாக கூறி உணவு ஊழியரை சுட்டுக்கொன்ற சம்பவம் நடந்துள்ளார்.
முடங்கியது இலங்கை- 2 வாரத்துக்கு பெட்ரோல், டீசல் வாங்க அதிரடி தடை
Mathivanan Maran - Oneindia Tamil : கொழும்பு: இலங்கையில் தனிநபர்களுக்கு 2 வாரங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை திங்கள்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களை வாங்க முடியாத அவலநிலை உள்ளது. இலங்கையின் எரிபொருட்கள் தேவைக்கு இந்தியா உதவி வருகிறது.
இலங்கை: தமிழக அரசின் 2-வது நிவாரண உதவி கப்பல் கொழும்பு சென்றடைந்தது! இலங்கை: தமிழக அரசின் 2-வது நிவாரண உதவி கப்பல் கொழும்பு சென்றடைந்தது!
படகு மூலம் தனுஷ்கோடி சென்ற மன்னாரைச் சேர்ந்த வயோதிப தம்பதிகளின் நிலை கவலைக்கிடம்
virakesari.lk : இலங்கையில் இருந்து படகு மூலம் இன்று திங்கட்கிழமை (27) அதிகாலை தனுஷ்கோடி சென்ற வயதான தம்பதியர் கடற்கரையில் மயங்கிக் கிடந்த நிலையில் மீட்கப்பட்டு இராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எனினும் குறித்த இருவரின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிய வருகிறது.
மன்னார் முருங்கன் பிட்டி பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி மற்றும் சிவன், ஆகிய வயோதிப தம்பதிகளான இருவருமே இலங்கையிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்கு சென்றனர்.
இந்த நிலையில் குறித்த இருவரும் மயக்க நிலையில் கடற்கரையில் மீட்கப்பட்ட நிலையில் இராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திங்கள், 27 ஜூன், 2022
தமிழர்களின் கிரானைட் தொழிலை பறித்து மார்வாடிகளிடம் கொடுத்த சகாயம் ஐ ஏ எஸ்! ஜெயலலிதாவின் உத்தரவுகளை நிறைவேற்றினார்!
சகாயம் ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியாக இருந்தவர் .ஆனால் தமிழகத்தை பற்றி எந்த விடயமும் தெரியாத ஒருவர் பேசியது போல இருந்தது .
பேசிய பலரும் வெறும் அப்பாவிகளாக அல்லது வேண்டுமென்றே ஒன்றும் தெரியாதவர்கள் போல நடிப்பவர்களாகவே தெரிந்தனர்.
ஊழல் என்ற ஒற்றை மந்திரமே போதும் தங்களை கரைசேர்த்து விடும் என்று கருதுவதாக தெரிகிறது.
தமிழ்நாட்டின் கல்வி களவு போகிறதே அதை பற்றி ஒரு வார்த்தை ம்ம்ம்ம்ம்
தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புக்கள் களவாடாப்படுகிறதே அதை பற்றி ம்ம்ம்ம்
தமிழ்நாட்டின் வியாபாரங்கள் திட்டமிட்டு மார்வாடிகள் கைக்களுக்கு போகிறதே அதை பற்றி ம்ம்ம்
தனுஷ்கோடியில் இலங்கை வயோதிப தம்பதிகள் மயங்கிய நிலையில் மீட்பு
tamil.adaderana.lk : இலங்கையில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடி சென்ற வயதான தம்பதியர் கடற்கரையில் மயங்கிக் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரையிலும் 85-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தமிழகதிற்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்நிலையில் திருகோணமலையில் இருந்து படகு மூலம் வயதான தம்பதியர் 2 பேர் இன்று (27) அதிகாலை ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடற்கரையில் வந்து இறங்கினர்.
இவர்கள் இருவரும் மயக்க நிலையில் கடற்கரையில் விழுந்து இருந்த நிலையில் அங்கு வந்த கடலோர பொலிஸார், அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை இடமபெற்றுவரும் நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைகோர்க்கும் ஓபிஎஸ் - சசிகலா? தேனியில் முக்கிய முடிவு
அதிமுகவில் தலைமைப் பொறுப்புக்கான மோதல் உட்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பொதுச்செயலாளராக ஆக வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, கடந்த சில மாதங்களாக திட்டமிட்டு தனது காய்களை நகர்த்திக் கொண்டு வந்தார். கிளை கழகம் முதல் மாவட்ட செயலாளர்கள் வரை பெரும்பான்மையோரை சிறப்பாக கவனித்து தன் வழிக்கு கொண்டு வந்துவிட்டார். இது ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வத்துக்கும் தெரிந்திருந்தாலும், வழக்கம்போல் அமைதியாக இருந்துவிட்டார்.
ஜூலையில் மாணவிகளுக்கு ரூ.1000: அமைச்சர் பொன்முடி
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, "இந்த ஆண்டு முதல் டிப்ளமோ முடித்த மாணவர்கள் நேரடியாக அண்ணா பல்கலைக் கழகத்தில் இரண்டாம் ஆண்டில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். வொகேசனல் கோர்ஸ் எனப்படும் தொழிற்கல்வி படித்த மாணவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டியது கட்டாயமாகும். அதற்காக இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு முதல் அரசு பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் என அனைத்திலும் இரண்டு சதவிகித இட ஒதுக்கீடு கொடுத்து அனைத்து இடங்களிலும் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
விவாகரத்து கொடு; இல்லை நிர்வாண ஊர்வலம் செல்வேன்… மனைவி அதிரடி ...சவுதியில்
வீரகேசரி : சவுதி அரேபியாவில் விவாகரத்து விகிதங்கள் அதிகரித்து ஒரு மணிநேரத்திற்கு 7 வழக்குகள் பதிவாகின்றன.
ரியாத், சவுதி அரேபியாவில் பெண் ஒருவர் தனது கணவரிடம் விவாகரத்து கேட்டு உள்ளார். இல்லையென்றால், வெளியே நிர்வாண ஊர்வலம் செல்வேன் என்று அதிரடியாக மிரட்டி உள்ளார். வேறு வழி இல்லாத நிலையில், கணவன் ஷரியா கோர்ட்டை நாடியுள்ளார்.
இந்த விவாகரத்து முடிவு தனது விருப்பத்திற்கு எதிரானது என்றும் அதனால் அதனை ரத்து செய்யும்படியும் கேட்டு கொண்டார்.
எனினும், அவரது வழக்கை எடுத்து கொள்ள கோர்ட்டு மறுத்து விட்டது. ஷரியா சட்டத்தின்படி விவாகரத்திற்கான காரணம் அமைந்து விட்டது என அவரிடம் தெரிவித்து அதனை உறுதிப்படுத்தி உள்ளது. சவுதி அரேபியாவில் விவாகரத்து விகிதங்கள் அதிகரித்து விட்டன.
சீமான் தடுமாற்றம் ! இ பி எஸ் அல்லது ஓ பி எஸ் .. சமூகவலையில் துவம்சம்
சீமான் சிந்தனை |
Kumarandas Kumarandas : என்ன சீமான் உங்க அரசியல் இவ்வளவு கேவலமாக இருக்கு?
நாங்கள் பழைய கட்டிடத்திற்கு பெயிண்ட் அடிக்க வந்தவர்கள் இல்லை! அதை இடிச்சுப்புட்டு புதுசா கட்ட வந்த புரட்சிக்காரர்கள் என்று சொன்ன சீமான் இப்ப ஈபிஎஸ்சும் ஓபிஎஸ்சும் எங்க ஆளுக! அதாவது எங்க இனத்தானுக!
அவர்கள் தங்களுக்குள் பேசி பிரச்சினை யை தீர்த்துக்கொள்ள வேண்டும். ஒற்றுமையாக இருக்கனும்! என்று பேட்டி கொடுக்கிறார்.
அதிமுக நல்லா பலமா இருக்கனும் என்று சொல்வதில் என்னடா புரட்சிப் புடலங்காய் இருக்கு?
இதை தேர்தலில் போட்டியிடாத மணியரசன் மாதிரியான இனவெறியர் சொன்னால் கூட ஒரு லாஜிக் இருக்கும்!
ஞாயிறு, 26 ஜூன், 2022
சரோஜாதேவியின் நடையழகும் சுசீலாவின் குரலழகும் .. வள்ளியம்மை
வள்ளியம்மை ·: 1938 ஜனவரி 7ஆம் தேதி பிறந்தவர் சரோஜாதேவி 2022 ஜனவரி ஆறாம் தேதியுடன் 84ஆண்டுகள் ஆகிறது
தென் இந்தியாவில் பிரபல ஹீரோயின்கள் எல்லாரும் சரோவுடன் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
ஓஹோவென்று ஓடிய அவரது எந்தப் படத்திலும் மற்றொரு நாயகியின் பங்களிப்பால், சரோஜாதேவி அவரது தனித்துவத்தையோ, நன்மதிப்பையோ, இழந்தது கிடையாது. அதுவே சரோவின் மிகப் பெரிய பலம்!
அநேகம் பேர் சரோவுடன் தங்கள் நடிப்பு தொடங்கி புகழ் பெற்றிருக்கிறார்கள். சரோவுடன் சங்கமித்தவர்கள்-
1.விஜயகுமாரி (கல்யாணப்பரிசு, பெண் என்றால் பெண்) 2. சவுகார் ஜானகி (பாலும் பழமும், புதிய பறவை, கண் மலர்) 3.வைஜெயந்திமாலா (இரும்புத்திரை, பைகாம் இந்தி)
4.சாவித்ரி (பார்த்தால் பசி தீரும்) 5. தேவிகா (ஆடிப்பெருக்கு, குலமகள் ராதை) 6. ஷீலா - அறிமுகம் (பாசம்)
காவல் நிலையத்திற்கு சென்ற இளைஞர் மர்ம மரணம்! காவல்துறையினர் மீது குற்றம் சுமத்தும் பெற்றோர்.. கன்னியாகுமரி மாவட்டம்
பிரபுராவ் ஆனந்தன் - பிபிசி தமிழுக்காக : கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே காவல் நிலையத்தில் கையெழுத்திட சென்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். காவல் நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்து கொலை செய்ததாக உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனை அருகே முல்லைசேரிவிளை சேர்ந்தவர் சசிகுமார். அவரது மகன் அஜித் (22). அஜித் தொழில் கல்வி முடித்துவிட்டு சரக்கு வாகன ஓட்டுனராக வேலை செய்து வருகிறார்.
கடந்த ஏப்ரல் மாதம் அதே பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவரிடம் அஜித் மது போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக குலசேகரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தமிழக ரயில்வே பணியில் வட மாநிலத்தவரை சேர்க்க முயற்சி! சதியை முறியடித்த மதுரை எம்பி சு வெங்கடேசன்
கலைஞர் செய்திகள் : Su Venkatesan MP @SuVe4Madurai ஆர் ஆர் பி; கோரக்பூர் தேர்வர்கள் நியமனம் முழுமையாக
முறியடிப்பு.
சென்னை தேர்வர்கள் அனைவருக்கும் பணிநியமன உத்தரவு.
எமது போராட்டத்துக்கு முழு வெற்றி.
சம்பந்தப்பட்ட ரயில்வேயை விட்டுவிட்டு வேறு ரயில்வே தேர்வர்களை நியமிக்கும் முறையை முற்றிலும் ஒழிக்க இந்த வெற்றி ஒரு மைல்கல் தமிழக ரயில்வே பணியில் வட மாநிலத்தவரை சேர்க்க நடைபெற்ற முயற்சி தமிழக எம்பிக்கள் எதிர்ப்பு காரணமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே உள்ளிட்ட ஒன்றிய அரசு பணிகளில் வட மாநிலத்தவர்களை சேர்க்கும் நிகழ்வுகள் தற்போது அதிகரித்துள்ளது. அதை பல முறை கண்டித்தும் இது போன்ற செயல்கள் தொடர் கதையாகி வருகின்றன.
முகக்கவசம் கட்டாயம் - மீறினால் அபராதம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மாலைமலர் : தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காமல் இருப்பதால் தொற்று அதிகரித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காமல் கவனக்குறைவாக இருப்பதால் தொற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நோர்வேயில் பயங்கரவாதிகள் தாக்குதல்! LGBTQIA+ 'வானவில் நடைபயண ஒருங்கிணைவு' நடைபெற இருந்த நிலையில்..
Rishvin Ismath : நேற்றைய தினம் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் LGBTQIA+ 'வானவில் நடைபயண ஒருங்கிணைவு' நடைபெற இருந்த நிலையில், ஒஸ்லோவில் உள்ள தற்பாலீர்ப்பாளர்களுக்கான மகிழ்பானச்சாலைக்கு அருகில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப் பட்டது.
பயங்கரவாதத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர், 20 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக வானவில் நடைபயண ஒருங்கிணைவு ஒத்திவைக்கப் பட்டது.
.பயங்கரவாதத் தாக்குதல் என்றதும் 'அமைதி மார்க்கம்'தான் பொதுவாகவே ஞாபகத்திற்கு வரும்.
நோர்வேத் தாக்குதல் விடயத்திலும் கூட தாக்குதலை நடத்தியவர்கள் 'Mr.20% - அழகிய முன்மாதிரியை'ப் பின்பற்றும் ',அமைதி மார்க்கத்தை'ச் சேர்ந்த 'அல்லாஹு அக்பர்' ஜிஹாதிய பயங்கரவாதிகள் என்பது தற்பொழுது ஊர்ஜிதம் செய்யப்பட்டு விட்டது.
கணினி வழி வாடகை வசூல் மட்டும் ரூ.200 கோடி! -இந்து சமய அறநிலையத்துறை சாதனை!
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் கணினி வழியாக வாடகை வசூல் முறையில் இதுவரை ரூ.200 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி, கணினி வழியாக கோவில்களின் வாடகைதாரர்களிடம் இருந்து வாடகை தொகையினை செலுத்தும் வசதி தொடங்கி வைக்கப்பட்டது.