Shobitha Rajasooriar : 2019 ம் ஆண்டு நடுப் பகுதி. திகதி ஞாபகமில்லை ஒரு மதிய வேளை சந்திப்பு ஒன்றில் திரு டம்மிக்க பெரெராவை காண ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.
ஏறத்தாள 2:30 மணி நேரமாக எங்களுக்கும் அவருக்கும் இடையேயான கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டது நானும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், திரு. டம்மிக்க பெரெராவும் தான். அவருடைய பிரத்தியேக காரியதரிசியும் அங்கு இருந்தார்.
இந்த இந்த இரண்டரை மணித்தியால கலந்துரையாடல் எனக்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது. ஏனென்றால் அங்கே திரு.டம்மிக்க பெரேராவினால் சமர்ப்பிக்கப்பட்ட எத்தனையோ சுபீட்சம் மிக்க எதிர்கால இலங்கைக்கான அபிவிருத்தி திட்டங்களில் இருந்து,
பல வகையான அதாவது அன்றாடப் பிரச்சினைகள் விஷேடமாக பொது மக்கள் எதிர்நோக்கும் அன்றாட பிரச்சினைகள் எவ்விதம் தீர்ப்பது அவற்றுக்கான வழிமுறைகள் என்பனவற்றுக்கான பலவிதமான கருத்துக்களும் தீர்வைகளும் அவரிடம் கைவசம் இருந்தது தான்.
கால தாமதம், நேர விரயம், அசமந்த போக்கு இவை திணைக்களங்களின் சாபக்கேடு. அதில் இருந்து நீங்குவது ஒரு அமைப்பு மாற்றமாகும், அந்த மாற்றத்தின் திறவுகோலாக அவரின் சிந்தனையில் சில அழுத்தமான கருத்துக்களைஅவர்
அங்கே பதிவிட்டத்தையும் நான் கவனிக்க தவறவில்லை. மேற்குலக நாடுகளின் தராதரதிற்கு இணையாக இருந்தாலும் இலங்கையின் நடைமுறைக்கு சாத்தியமான தீர்வு திட்டங்களாகவே இருந்தது.
அவரிடம் நான் கண்ட விடயம் ஒரு அதீத நேர்மறை சக்தி.
அப்பொழுது இலங்கையின் பொருளாதாரம் பெரும் சரிவை நோக்கி சென்று கொண்டு இருந்தது திறைசேரி காலி என்பது உள்ளங்கையில் நெல்லிக்கனி.
ஒரு வெற்றிகரமான ஒரு தொழில் முனைவராக , தொழில் அதிபராக வருவதற்கு முன் அவர் கடந்து வந்த பாதையில் நிறைய கல்லும் முள்ளும் இருந்திருக்கும் என்பது அவரோடு நான் பேசிக் கொண்டிருந்த வேளையில் என்னால் யூகிக்க முடிந்த விடயம்.
என்னை வியக்கவைத்தது , திரு. டம்மிக்க எல்லா துறைகளிலும் நிறைய ஆய்வுகளை செய்து வைத்திருந்தார். சிறந்த தொழில் நுட்பத்தின் அனுகூலத்தை பயன்படுத்தி எங்களுக்கு ஒரு பெரும் தொலைக்காட்சி திரையில் தனது நாளைய இலங்கையின் திட்டங்களை 📈📊வரைவுகளோடும், தகவுகளோடும் வெகு நுட்பமாக தெளிவான விளக்கவுரையாக பல காணொளிகள் மூலம் ஒரு பெரும் விரிவுரையாகவே வழங்கினார்.
அவர் எங்களுக்கு வழங்கிய மதிய உணவு விருந்துபசாரத்தில் கூட அவர் எங்களோடு அளவளாவியது சமகால நெருக்கடிகளைப் பற்றியதுதான்.
அவர் ஒரு சிறந்த வியாபாரியும் கூட, தன் கடின உழைப்பின் ஊடாக ஈட்டிய தன் பணத்தை அவர் எந்தக் காரணமும் கொண்டு இழக்க மாட்டார் என்பதும் நான் அங்கே கற்றுக்கொண்ட ஒரு பாடமாகும். எனக்கும் அது ஒரு பள்ளிப் பாடம் தானே.
பலருக்கும் தெரிந்திருக்க நியாமில்லை திரு. டம்மிக்க ஒரு நல்ல பரோபகாரி, அவரின் நன்கொடை திட்டங்களும் அதனால் மக்கள் அடைந்த பயன்களும் பல, அதை அவர் விளம்பரபடுத்த விரும்பாதது அவரின் நற்குணம்.
அன்று திரு. டம்மிக்கவின் காரியாலயத்தில் நடந்த அந்த கலந்துரையாடல் நல்ல ஒரு பொருளியலாளரை கண்ட திருப்தியை கொடுத்தது. ( அன்று எனக்கும் என்னைபோன்றவர்களுக்கும் தெரிந்த விடயம் திறைசேரிக்கு ஒரு பொருத்தமான நபர் உடனடியாக கட்டயமாக தேவை என்பது).
முன்னர் அவர் நேரிடையான அரசியல்வாதி இல்லை. இன்று அவருக்கு ஒரு சந்தர்ப்பம் அமைந்துள்ளது, அவரது நிதர்சனமானதுமான, நடைமுறை சாத்தியமுள்ள கனவுகள் நனவாக என் மனபூர்வமான வாழ்த்துக்கள்
.முதற்படி பள்ளதாக்கில் இருந்து வெளி வருவோம்.
இலங்கையின் ஒரு பிரஜை
Shobitha Rajasooriar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக