புதன், 29 ஜூன், 2022

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை! பாணி பூரியால் காலரா பரவுகிறது

மின்னம்பலம் : நேபாள நாட்டின் காத்மாண்டுவில் பானிபூரி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளில் பிரபலமான தின்பண்டம் பானிபூரி. இது பூரியில் சுவை நீரை ஊற்றி, மொறுமொறுப்பான சுவையிலான மசாலாவுடன் உருளைக்கிழங்கை கலந்து புளி, மிளகாய்ப்பொடி, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து பரிமாறப்படும் பிரபலமான உணவு வகை.
இந்த நிலையில் நேபாள நாட்டின் காத்மாண்டுவில் காலரா நோய் பரவி வருவதால் பானிபூரி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் தற்போது காலரா நோய் பரவல் அதிகரித்து வருகிறது. அங்கு இதுவரை 12 பேருக்கு இந்த காலரா நோய் பதிவாகியுள்ளது.  ...  மேலும் வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் வேறு ஏதேனும் காலரா நோய் அறிகுறிகள் யாருக்காவது தென்பட்டால் உடனே அருகில் இருக்கும் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று நேபாள சுகாதாரத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

காலரா நோய் பரவலைத் தடுக்க காத்மாண்டுவில் உள்ள உணவகங்களில் உணவு மற்றும் தண்ணீர் சுத்தமாக இருக்கிறதா என்பது குறித்து அந்த மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்தது. அப்போது லலித்பூர் மாநகராட்சி பகுதியில், பானிபூரி விற்பனை செய்யும் இடங்களில் பரிமாறப்படும் தண்ணீரில் காலரா பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் பானிபூரி விற்பனைக்கு அந்த நாடு தடை விதித்துள்ளது.

இந்த காலரா நோய் மேலும் பரவாமல் இருக்க, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நேபாள சுகாதாரத் துறை ஆலோசனை நடத்தி வருகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக