tamil.oneindia.com - hemavandhana :
திண்டுக்கல்:
சாக போகிறோம் என்று தெரிந்துதான் 2 குழந்தைகளும் பெற்றோருடன் ரயில்முன்
விழுந்துள்ளன... தற்கொலைக்கு முன்பு ஓட்டலுக்கு போய் வயிறார சாப்பிட்டு
வந்து 4 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மகன் கையை அப்பா பிடித்து
கொள்ள... மகள் கையை அம்மா பிடித்து கொள்ள.. 4 பேருமே ரயில் முன் போய்
விழுந்தனர்.
நேற்று ஒரே நாளில் 2 சம்பவம் தமிழக மக்களை உலுக்கியது..
விழுப்புரத்தில் 3 சீட்டு லாட்டரி வாங்கி கடன் கழுத்தை நெறிக்க.. ஒரு
குடும்பமே தற்கொலை செய்து கொண்டது.. சாக போகிறோம் என்று தெரியாமலேயே அந்த 3
பிஞ்சுகள் சயனைடு கொடுக்கப்பட்டு இறந்தன.
ஆனால், கொடைக்கானலில் 2 பிள்ளைகளும் தெரிந்தேதான் தற்கொலைக்கு துணிந்துள்ளனர். உறையூரை சேர்ந்த உத்தராபதி - சங்கீதா தம்பதி. இவர்களுக்கு 18 வயதில் அபினயஶ்ரீ என்ற மகளும், 13 வயதில் ஆகாஷ் என்ற மகனும் இருந்தனர்.
இவர்களுக்கும் கடன் பிரச்சனைதான்.. வாழ முடியாத அளவுக்கு கடன் விரட்டி கொண்டு வந்துள்ளது.. தற்கொலை முடிவுக்கு எல்லோருமே வந்துவிட்டனர். ஆனால், அதற்கு முன்பாக சாமி கும்பிட்டு விட்டு சாகலாம் என்று முடிவெடுத்தனர்.