வெள்ளி, 13 டிசம்பர், 2019

பாஸ்போர்ட்டில் தாமரை; மத்திய அரசு விளக்கம்

Passport,lotus,Indian_Passport,lotus_symbol,kerala,Raveesh_Kumar,Spokesperson,MinistryofExternalAffairs,பாஸ்போர்ட்,தாமரை,மத்தியஅரசு,விளக்கம்மாலைமலர் : புதுடில்லி: பாதுகாப்பு காரணங்களுக்காகவும், தாமரை, நம் நாட்டின் தேசிய மலர் என்பதாலும், புதிய பாஸ்போர்ட்டுகளில், அதன் படம் அச்சிடப்பட்டுள்ளதாக, வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
கேரள மாநிலத்தில், புதிதாக வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டுகளில், தாமரை படம் அச்சிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்து, லோக்சபாவில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். 'தாமரை, பா.ஜ.,வின் தேர்தல் சின்னம் என்பதால், பாஸ்போர்ட்டில், அதன் படம் அச்சிடப்பட்டுள்ளது' என, எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

இந்நிலையில், வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார், இது குறித்து நேற்று கூறியதாவது: போலி பாஸ்போர்ட்டுகள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதை தடுப்பதற்காக, பாதுகாப்பு காரணங்களுக்காக, புதிய பாஸ்போர்ட்டுகளில், தாமரை அச்சிடப்பட்டது. மேலும், தாமரை, நம் நாட்டின் தேசிய மலர் என்பதாலும், அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டின் தேசிய சின்னங்கள் அனைத்தையும் சுழற்சி முறையில் பாஸ்போர்ட்டுகளில் அச்சிட திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக