இந்த சம்ஸ்கிருத பல்கலைகழக மசோதாவில் நான் பங்கேற்கின்ற வாய்ப்பினை வழங்கியமைக்காக நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இந்த நாடாளுமன்றத்தில் நான் ஐந்து முறை தேர்ந்து எடுக்கப்பட்டு . மூன்று முறை அமைச்சராக பணியாற்றி இருந்தாலும் முதல் முறையாக என்னுடைய தாய் மொழியில் பேசுகின்ற வாய்ப்பை அவசியத்தை பெற்றிருக்கிறேன்.
முதலில் நான் பேரவை தலைவர் அவர்களை கேட்டு கொள்வது பொதுவாக மசோதாக்களை பேசும் நேரங்கள் ஒதுக்கும்போது அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அடிப்படையில் நேரம் ஒதுக்குவது வழக்கம்.
ஆனால் இந்த முறை நடைபெற்று கொண்டிருக்கின்ற விவாதம் சற்று வித்தியாசமான கோணத்திலே சென்று கொண்டிருக்கின்ற காரணத்தினால் எண்ணிக்கை அடிப்படையில் நேரத்தை ஒதுக்காமல் கருத்துக்கு கருத்து என்ற அடிப்படையில் சற்று அதிக நேரத்தை ஒதுக்குமாறு உங்களை பணிவன்போடு கேட்டுகொள்கிறேன்.
இந்த சட்டத்தின் நோக்கம் சமஸ்கிருதத்திலே மேற்படிப்பு முனைவர் படிப்பு ஆராய்ச்சி படிப்பு சாஸ்த்திர கலையை கற்பிப்பது என்ற நோக்கத்திலே கொண்டு வரப்பட்டிருக்கிறது .
நானோ நான் சார்ந்திருக்கும் திராவிட முன்னேற்ற கழகமோ எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல.
ஆனால் எந்த ஒரு மொழியும் இன்னொரு மொழியின் மீது ஆதிக்கம் செலுத்துமானால் ,
எந்த மொழியும் தான்தான் சிறந்த மொழி என்று சொல்லி கொண்டிருக்கும் காரணத்தினால் இன்னொரு மொழியை அழுத்த நேருமானால் ,
அதை ஒரு போதும் திராவிட முன்னேற்ற கழகம் ஒப்ப்புக்கொள்ளாது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறேன் .
சமஸ்கிருதத்தை வளர்க்கவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அரசு எடுத்து கொண்டிருக்கும் நடவடிக்கைகள் எங்களுக்கு ஒன்றும் விரோதமானது அல்ல..
ஆனால் அதே நேரத்தில் இந்த அவையிலே பேசப்படும் கருத்துக்கள் இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய பிழையை ஏற்படுத்துவதாக கூடாது.
இந்தியாவில் இரண்டு சிந்தனை மரபுகள் இருந்தன என்பதை ஒப்புகொண்டாக வேண்டும் . வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஒப்புகொண்டிருக்கிறார்கள்.
சி.பி.ராமசாமி அய்யர் . திருவாங்கூர் சமஸ்தானத்தில் திவானாக இருந்தவர் அதன் பின் பனராஸ் பல்கலை கழகத்தில் துணைவேந்தராக இருந்தவர் , எல்லா சமஸ்தானங்களையும் இணைப்பதற்கு அமைக்கப்பட்ட தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சிலின் தலைவராக இருந்தவர்.
அவர் ஒரு பாண்டித்தியம் பெற்றவர் .சமஸ்கிருதம் உட்பட . அவர் என்ன சொல்கிறார் என்றால் ,
The two greatest components of Indian cultures are based on sanskirt and dravidian languages
இந்த நாட்டினுடைய பண்பாடு சரித்திரம் எல்லாம் இரண்டு அடிப்படையை கொண்டவை .ஒன்று சமஸ்க்ருதத்தை அடிப்படையாக கொண்டவை இன்னொன்று திராவிடத்தை அடிப்படையாக கொண்டவை .இவை இரண்டும் வேறு வேறு .என்று சொன்னார்.
இதற்கு மூலம் எங்கே இருக்கிறது என்று சொல்வதற்கெல்லாம் நேரமில்லை .
நம்முடைய மாண்புமிகு அமைச்சர் சொன்னார் அதை நான் மறுக்கிறேன் . சமஸ்கிருதத்தில் இருந்துதான் தமிழ் வந்தது என்று ஒருபோதும் நாம் ஒப்புக்கொள்ளவே முடியாது.
நாடாளுமன்றத்தில் பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார் .நான் திராவிட சமுகதாயத்தை சேர்ந்தவன்.
அப்படி சொல்லுகின்ற காரணத்தினால் நான் ஒரு குஜராதிக்கோ மராட்டிக்கோ எதிரானவன் அல்ல .
நான் அப்படி சொல்லுவதற்கு என்ன காரணம் என்றால் இந்த உலகத்துக்கு வழங்குவதற்கு எங்களிடத்திலே திடமான வேறுபட்ட மிகப்பெரிய சொத்துக்கள் இருக்கின்றன அவற்றை நாங்கள் வழங்க முடியும் தனித்த அடையாளத்தோடு வழங்க முடியும் என்று சொன்னார்கள்.
எனவே இந்த அவைக்கு நான் முதலில் தெரிவித்து கொள்வது ,
இந்தியாவில் இரண்டு சிந்தனை மரபுகள் ..School of thought . ஒன்று சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட ஆரிய மரபு .
இன்னொன்று தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளத்தை உள்ளிட்ட திராவிட மொழிகளை அடிப்படையாக கொண்டிருக்கின்ற திராவிட பண்பாடு என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளவேண்டும்.
இன்னும் ஒன்றை மிகுந்த மரியாதையோடு சொல்லிகொள்ள விரும்புகிறேன்.
சமஸ்கிருதம்தான் தேவ பாசை என்று சொன்னால் . இந்த பாசை மட்டும்தான் கடவுளுக்கு தெரியும் என்று சொன்னால் .
மற்ற மொழிகள் எல்லாம் கடவுளுக்கு தெரியாது என்று சொன்னால் ,
இதைதான் எங்கள் தத்துவ பிதாமகனாக இருக்கின்ற தந்தை பெரியார் சொன்னார் இப்படி ஒரு கடவுள் இருக்குமானால் அந்த கடவுளை தூக்கி எறிவதற்கு நாங்கள் தயங்க மாட்டோம் என்று சொன்னார்.
எனவே எங்களை நாத்திகனாக ஆக்குவதோ ஆத்திகனாக ஆக்குவதோ எங்கள் கொள்கை அல்ல நீங்கள் எடுத்து வைக்கிற வாதத்தால் எங்களுக்கு அப்படி ஒரு நெருக்கடி ஏற்படுகிறது என்பதை நீங்கள் புரிந்து வைத்திருக்க வேண்டும் .
அதே போல இந்தோ ஐரோப்பிய குடும்பம் இந்த சம்ஸ்கிருத மொழி இந்தோ ஐரோப்பிய குடும்பத்தின் தலையாய மொழியாக இருக்கிறது .
அது போல தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகள் திராவிட குடும்பத்தின் மொழிகளாக இருக்கிறது.
இரண்டுக்குமே சிறப்பியல்புகள் உண்டு என்பதை நாம் மறுக்கவில்லை.
ஆனால் எதற்கு இருக்கிறது எதற்கு இல்லை என்பதை அருள்கூர்ந்து திறந்த மனதோடு எண்ணிப்பார்க்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.
சம்ஸ்கிருத மொழி ஒரு செம்மொழி classical language மறுப்பதற்கில்லை.
ஆனால் அந்த மொழிக்கு எது ஆதாரம்?
வேதங்கள் இருக்கிறது .உபநிடதங்கள் இருக்கிறது . ஆகமங்கள் இருக்கிறது . பகவத் கீதை இருக்கிறது .
புராணங்கள் என்று சொன்னால் மகாபாரதம் .ராமயாணம் இருக்கிறது .
இதற்கு என்ன வயது?
எவ்வளவு தாராளமான மனப்பான்மையோடு நடந்து கொண்டாலும் 2500 ஆண்டுகளுக்கு மேல் சொல்ல முடியவில்லை .. நானனல்ல வரலாற்று ஆசிரியர்கள்.
ஆனால் தமிழுக்கு வாருங்கள் .. திராவிடத்துக்கு வாருங்கள் 4500 ஆண்டுகளுக்கு முன்னால் முதல் சங்கம்
அதை அமைத்தவர் அன்றைய மன்னன் காய்சின வழுதி...
450 புலவர்கள் .. முதல் சங்கம் அதிலே முதுகாரை .முதுகுருகு என்ற இரண்டு நூல்களை தவிர எல்லாம் கடலில் போய்விட்டது
இது வரலாறு .. இன்றைக்கும் கல்வெட்டிலே இருக்கிறது .
நான் ஏதோ தேவ பாசை என்றோ அல்லது நம்பிக்கை அடிப்படையில் நான் பேசவில்லை ..
ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்
எப்போதெல்லாம் நம்பிக்கை இருக்கிறதோ .. அந்த நம்பிக்கை அடிபடையில் பேசுவது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழகல்ல
அதிலும் எதிரே இருக்கும் நாடளுமன்ற உறுப்பினர் சத்தியபால் அவர்கள் மெத்த படித்தவர் .. நம்பிக்கை என்பது வேறு
நான் சிறுவயதில் சிவன் தலையிலே நிலா இருக்கிறது என்று நம்பினேன் அது பகுத்தறிவு அல்ல அது நம்பிக்கை ஆனால்
1969 ஆம் ஆண்டு ஆம்ஸ்ட்ராங் நிலா மீது தனது இடது காலை எடுத்து வைத்தான் என்ற போது என்னால் அதை ஏற்றுகொள்ள முடியவில்லை .
எனவே அறிவியல் வரும் போது நம்பிக்கை என்பது நகர்ந்து வழிவிட்டால்தான் அது மனித பண்பு .
அப்படி விடாவிட்டால் அது மனித பண்பு அல்ல என்பதை இந்த அவையில் நான் பதிவு செய்துகொள்கிறேன்.
சமஸ்கிருத மொழிக்கு இந்த நூல்கள் இருக்கின்றர .
தமிழ் மொழிக்கு பார்த்தால் முதல் சங்கம் 4500 ஆண்டுகள்
3500 முன்னால் இரண்டாவது சங்கம் , அதை கண்டவர் வெண்டய செழியன் என்கின்ற அரசன் .அப்போது என்ன நூல் ? தொல்காப்பியம் கிடைத்தது இசைநூல் ..
அதற்கு பிறகு ஒன்று இரண்டு மூன்று நூற்றாண்டுகளில் எட்டுத்தொகை பத்துப்பாட்டு பன்னெண் கீழ்க்கணக்கு .
நான் பெருமையோடு சொல்கிறேன் நம்முடைய பிரதமர் வெளிநாடு சென்றால் சொல்லுகிறார்
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று நம்முடைய பிரதமர் சொல்லுகின்ற அந்த வாக்கியம் எதிலே வருகின்றது என்றால் இந்த எட்டுத்தொகை பத்து பாட்டிலே வருகின்றது என்பதை மறந்து விடக்கூடாது
நான் இன்னொருமொரு வேறுபாட்டை கூறுகிறேன்
சமஸ்கிருதம் சிறந்தது என்று சொல்லுகிறீர்கள் ,
சதுர்வர்ணம் மாயாசிருஷ்டம் .. இது சமஸ்கிருதம் சொல்லுகிறது நான்கு வர்ணங்களை நானே படித்தேன் இது சமஸ்கிருதம் .
ஆனால் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொல்லுவது எங்களுடைய திருக்குறள்
ஸ்ரீ ஜென்மா பாபகர்மா ..பெண்ணாக பிறப்பது பாபம்.. சொல்லுவது சமஸ்கிருதம் .
பெண்ணில் பிறந்தக்க யாதுள என்பது திருக்குறள்
எனவே இரண்டு விதமான school of thought
இந்திய சிந்தன மரபு ஏதோ சமஸ்கிருதத்துக்குதான் சொந்தம் ஒரு மறைமுகமான ஒரு ரகசியமான் கள்ளத்தனமான இந்த மசோதாவிலே நீங்கள் கொண்டுவருவதை எங்களால் ஏற்றுகொள்ள முடியாது.
ஏனென்றால் உங்கள் சட்ட திருந்ததின் ஐந்தாவது பிரிவிலே சமஸ்கிருதத்தின் மூலமாக அறிவியலை பரப்ப போகிறோம் என்று சொல்கிறீர்கள் .
எனக்கு விந்தையாக இருக்கிறது .
ஒரு மொழியை காப்பாற்றுங்கள் தவறில்லை. சமஸ்கிருதம் அழிவின் விழிம்பிலே இருக்கிறது
1961 இலே சென்செஸ் கணக்கெடுத்த போது அந்த மொழியை பேசியவர்கள் வெறும் 2 ஆயிரம் பேர்கள்.
பிரிவு ஐந்தின் படி இந்த சட்டத்தின் நோக்கம் சமஸ்கிருதத்தின் மூலமாக அறிவை பரப்ப வேண்டும் .
மானுட அறிவை பெருக்கவேண்டும்
ஒழுக்கத்தை பெருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்கிறார்கள் .
ஆனால் நான் கேட்கிறேன் உண்மையிலேயே இந்த மொழி தேவ பாசையாக இருக்குமானால் . உண்மையிலேயே இந்த மொழி இந்தியாவுக்கு சொந்தமாக இருக்குமானால்
அருமை நண்பர் கேட்ட கேள்வியாய் மீண்டும் கேட்கிறேன்
ஒரு இஸ்லாமிய தோழர் பனராஸ் யுனிவெர்சிட்டியிலே சமஸ்கிருதத்திலே இருபது ஆண்டுகள் பணியாற்றிய பிறகு பேராசிரியராக வந்ததற்கு பிறகு ஏன் நீங்கள் மறுத்தீர்கள் ?
என்ன காரணம் ?
அப்படி என்றால் நீங்கள் சமஸ்கிருதம் என்பது இந்த்துத்துவத்துக்கு சொந்தமென்று சொல்ல வருகிறீகள் ?
அப்படி சொல்வதாக இருந்தால் இந்த மொழியை ஒரு காலமும் எங்களால் ஏற்று கொள்ள முடியாது என்பதை நான் திட்ட வட்டமாக இந்த அவைக்கு தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.
நாம் இப்போது எங்கே நின்று கொண்டிருக்கிறோம் என்றால் இந்த மொழி இருக்கிறது இறந்து விட்டதா என்று ஆராய்ச்சியாயாளர்கள் .. ஒரு பட்டிமன்றமே நடந்து கொண்டிருக்கிறது .
சென்டன் போல்லார்ஸ். ஜான் சுவேல்லிங் என்ற இரண்டு மொழியியல் ஆராய்ச்சியாளர்கள் இந்த மொழி அருகி கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்கள்
நான் உண்மையிலேயே மனம் திறந்து சொல்கிறேன் . ஒரு அருகி கொண்டிருக்கிற மொழிக்கு உதவிட வேண்டும் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்ற ஞாயமான எண்ணம் உங்களுக்கு இருக்குமானால் அதில் எனக்கு உடன்பாடுதான் ஆனால் ஒரு மொழியை உயர்த்த வேண்டும் என்பதற்காக் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ?
150 கோடி ரூபாய் 2012 இல் .. . நான் படிக்க நேரமில்லை
ஆனால் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஒரியா எல்லாவற்றிக்கும் சேர்த்து வெறும் 12 கோடி
2012 இல் 70 ஆயிரம் மாணவர்களை அவர்கள் படித்து கொண்டிருந்த ஜெர்மன் மொழியில் இருந்து திட்டமிட்டு சதியாக அவர்களை சம்ஸ்கிருதம் கட்டாயமாக படிக்க வைத்திருக்கிறீர்கள் .
49 பல்கலை கழங்கள் ஆறு மொழி பல்கலை கழகங்கள இருக்கின்றன.
அவற்றில் மூன்று சமஸ்கிருதம் ஒன்று ஆங்கிலம் ஒன்று உருது ஒன்று இந்தி ஆனால் ஒன்றுகூட தமிழுக்கு இல்லை .
( ஒரே சத்தம் ஒன்று சரியாக கேட்கவில்லை கூச்சல்)
இந்த அரசு தெரிந்தே தவறு செய்கிறது
நான் தெரிந்தே குற்றம் சாட்டுகிறேன்
பிரதமர் என்ன சொல்கிறார் மரபியல் அறுவை சிகிச்சை எல்லாம் வேத காலத்திலேயே இருந்ததாக் சொல்லுகிறார் .. யார் நம்புவார்கள்?
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் .. ( கூச்சல்)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக