சனி, 10 ஆகஸ்ட், 2019

சோனியாகாந்தி மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு

nakkheeran.in -santhosh : டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, 1998- 2017 வரை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். இவர் தலைவராக பதவி வகித்த போது, 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி 2017- ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இருப்பினும் ராகுல் காந்தி தலைவராக இருந்த போது தான் மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது என்பது நினைவுக் கூறத்தக்கது

கே.எஸ்.அழகிரி : மு.க.ஸ்டாலின் திறமை இப்போதா தான் தெரியுது...எப்படி சமளிக்குறாருனு தெரியல .. கலகல பேச்சு..!!

namadhutv.com :  சென்னை :மாநிலங்களவையில் காங்கிரஸ் குறித்து பேசிய வைகோவின் பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் ஒரே கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் மதிமுக இடையே பிளவு ஏற்பட்டுள்ளது.
இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டி வரும் நிலையில், சென்னை விமான நிலையத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்,
வைகோ மீது எனக்கு எந்த வன்மமும் கிடையாது. அவருடைய பேச்சின் மீதும் எனக்கு எப்போதுமே பிரியம் உண்டு. வைகோ தமிழரே இல்லை என சீமான் கூறியபோது தடுத்தவன் நான் என்றார்.
வைகோவை எம்பி ஆக்கினால் 8 பேரும் ஆதரவளிக்க மாட்டோம் என நாங்கள் கூறியிருந்தால் வைகோவை ஸ்டாலின் எம்பியாக்கி இருப்பாரா? என்று கேள்வி எழுப்பிய அவர், எங்களின் மறைமுக வாக்கால் தான் வைகோ எம்பி ஆனார் என்றார்.
காஷ்மீர் மசோதா மீதான விவாதத்தில் காஷ்மீர் பற்றி பேசாமல் காங்கிரஸ் குறித்து வைகோ பேசியது ஏன் எனவும் அழகிரி கேள்வி எழுப்பினார்.

சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராக மீண்டும் பதவி ஏற்கிறார் .. பிந்திய செய்தி விஈடியோ


விகடன் : காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்ததையடுத்து, புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நடந்துவருகிறது. காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக நேரு குடும்பத்தைச் சேர்ந்த ராஜீவ் காந்திக்குப் பிறகு, ஒரு இடைவேளைக்குப் பின்னர் சோனியா காந்தி அந்தப் பதவியில் இருந்தார். சமீபத்தில் அவரின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து, அடுத்த தலைவராக அதே குடும்பத்தைச் சேர்ந்த ராகுல் காந்தி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், காங்கிரஸின் புதிய தலைவராக ராகுல் காந்தி பதவியேற்றார்.
அவர் பதவியேற்ற பிறகு, காங்கிரஸ் சந்தித்த முதல் நாடாளுமன்றத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது . கட்சியின் தோல்விக்குப் பொறுப்பேற்று, தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் அறிவித்தார். ஆனால், அவரின் ராஜினாமாவை காங்கிரஸ் காரிய கமிட்டி ஏற்க மறுத்துவிட்டது. இருந்தும் தன் நிலைப்பாட்டிலிருந்து சற்றும் விலகாமலிருந்தார். அவரை சமாதானப்படுத்த பல முயற்சிகள் நடந்தன.

BBC : காஷ்மீர் ஸ்ரீநகரில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம்


ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படதை எதிர்த்து ஸ்ரீநகரில் வெள்ளிக்கிழமை மாலை போராட்டம் வெடித்தது. இந்திய அரசின் முடிவுக்கு எதிராக மக்கள் வீதிகளில் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது அவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியதில் பலர் காயடைந்தனர்.
இந்தப் போராட்டத்தில் எத்தனை பேர் உயிரிழந்தனர் மற்றும் காயமடைந்தனர் என்ற விவரம் இன்னும் தெரியவரவில்லை. < பொதுவாக, இந்திய அரசும், சில இந்திய ஊடகங்களும் காஷ்மீரில் அமைதி நிலவுவதாகக் கூறிவருகின்றன.
ஆனால், அது முற்றிலும் உண்மையல்ல என்பதை இந்தக் காணொளி உணர்த்துகிறது.
"இந்திய அரசமைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை.இனியும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்" என்று போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர்.
"நாங்கள் காஷ்மீரிகள் அனைவரும் வீதிகளில் திரண்டிருக்கிறோம். எங்களுக்கு இந்திய அரசாங்கத்திடம் இருந்து விடுதலை வேண்டும்" என போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில் சர்வதேச ஊடகங்கள் காஷ்மீரில் போராட்டம் வெடித்ததாக கூறும் செய்திகள் பொய் என்றும் அவை ஜோடிக்கப்பட்டவை என்றும் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகர் மற்றும் பாராமுல்லா பகுதிகளில் சிறயளவிலேயே போராட்டங்கள் நடைபெற்றதாகவும், 20 பேருக்கு மேல் மக்கள் யாரும் கூடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கேரளாவில் ஒரு கி.மீ. தூரம் நிலச்சரிவு: 50 பேர் சிக்கி உள்ளதாக தகவல்


 தினத்தந்தி : கேரளாவில் கவலப்பாரா என்னும் இடத்தில் ஒரு கி.மீ. தூரம் ஏற்பட்ட நிலச்சரிவில் 50க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருவனந்தபுரம், தென்மேற்கு பருவ  மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கேரளாவில் கனமழை பெய்து வருகிறது.  மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பெய்து வரும் கனமழையால்  தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. தேயிலை தோட்டங்கள் வழியே காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. வயநாட்டில் மேப்பாடி, புதுமலை பகுதிகளில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் ரெயில் தண்டவாளங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

இதுதான் திமுகவின் பெரிய மைனஸ்.. இல்லையென்றால் வேலூரில் கெத்து வெற்றிதான்

tamil.oneindia.com - hemavandhana : Vellore Election : வேலூரில் தடுமாறிய திமுக... திமுகவின் பெரிய மைனஸ்- வீடியோ சென்னை: இப்படி ஒரு இழுபறி வெற்றி திமுகவுக்கு கொஞ்சம் இழுக்குதான்.. இதற்கு காரணம் பிரச்சாரத்தில் கோட்டை விட்டதுதான்!
மாற்று கட்சி கனிமொழி நெருக்கம் போன ஏப்ரல் மாத தேர்தலில் பக்கா பிளானுடன் இறங்கியது திமுக. வியூகம் அமைத்து செயல்பட்டது. அதனால்தான் லட்சக்கணக்கான ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிக்க முடிந்தது.
அதிருப்தி இந்த தெம்புதான் வேலூர் தேர்தலிலும் திமுகவுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எப்படியும் 4 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்து விடலாம் என்றுதான் கணக்கு போட்டார்கள். ஆனால், ஓட்டு எண்ண ஆரம்பித்த முதல் 3 மணி நேரம் திமுகவுக்கு அல்லு கிளம்பி விட்டது.
திமுகவுக்கு தண்ணி காட்டிய "இரட்டை இலை".. இன்னமும் மவுசு குறையாத மாஸ்! நெருக்கடியான வெற்றியை, அதாவது கவுரவமான வெற்றியை திமுக பெறவே இல்லை. ஓட்டு வித்தியாசம் மிக குறைந்த அளவுதான் உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் கட்சி தலைவர் ஸ்டாலின்தான் என்று சொல்லப்படுகிறது. பொதுத்தேர்தலின்போதுகூட்டணி கட்சிகளிடம் ஸ்டாலின் காட்டிய நெருக்கம், இப்போது அவர்களிடம் காட்டவில்லை என்பதே உண்மை.

இனி காஷ்மீர் பெண்களை திருமணம் செய்யலாம்: முதல்வர்!.. ரொம்ப அலையறாங்க...

இனி காஷ்மீர் பெண்களை திருமணம் செய்யலாம்: முதல்வர்!மின்னம்பலம் : ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதால், இனி காஷ்மீர் பெண்களை திருமணம் செய்ய அழைத்து வரலாம் என ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியலமைப்பின் 370 வது பிரிவை மத்திய அரசு விலக்கியதிலிருந்து, காஷ்மீர் பெண்களை திருமணம் செய்வது குறித்து பலர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். ஹரியானா மாநில பா.ஜ.க முதல்வர் மனோகர் லால் கட்டார், ஹரியானாவின் மோசமான பாலின விகிதம் குறித்து நேற்று (ஆக.9) ஃபதேஹாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார்.
பேட்டி பச்சோ பேட்டி பாடாவோ(பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்) போன்ற பல திட்டங்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். மோசமான பாலின விகிதம், பெண் கருக்கொலை ஆகியவற்றைக் கொண்ட மாநிலம் ஹரியானா. ஆனால் எங்களது திட்டத்தால் பாலின விகிதத்தை 850 முதல் 933 வரை உயர்த்தியுள்ளோம். இது ஒரு சமூக மாற்றத்திற்கான பெரிய வேலை” எனக் கூறியுள்ளார். மேலும், அவர் இத்திட்டத்தின் வெற்றி குறித்தும் பேசினார்.

வேலூர் ... மத்திய மாநில ஆட்சிகள் , ஏசி சண்முகத்தின் கஜானா பலம் ... எல்லாவற்றையும் மீறிய வெற்றி

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நக்கல்-துரைமுருகன் அப்செட்!மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. ஃபேஸ்புக் லொக்கேஷன் அண்ணா அறிவாலயம் காட்டியது. தயாராக இருந்த ஸ்டேட்டஸ்க்குப்
போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக்.
வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மொத்தம் 4,85,340 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4,77,199 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். ஏ.சி.சண்முகத்தை விட 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
நேற்று இரவோடு இரவாக துரைமுருகனும், கதிர் ஆனந்தும் சென்னைக்கு கிளம்பினார்கள். நள்ளிரவு இருவரும் கோட்டூர்புரம் வீட்டுக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்ட சமயத்தில் அப்செட்டில் இருந்த துரைமுருகன் பெரும்பாலும் கோட்டூர்புரம் வீட்டில் தங்காமல்தான் இருந்தார். முடிந்தவரை வேலூரில் இருக்கும்படி பார்த்துக் கொண்டார். அதன் பிறகு இப்போதுதான் ரிலாக்ஸாக கோட்டூர்புரத்துக்கு வந்திருக்கிறார்.

கேரள நிலச்சரிவு; 150 பேர் கதி என்ன? : நாடு முழுவதும் கொட்டித்தீர்க்குது கனமழை

தினமலர் : புதுடில்லி: இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கனமழை கொட்டித்தீர்க்கிறது. கேரளாவில் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலச்சரிவில் 150க்கும் மேற்பட்டோர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கேரளாவில் வயநாடு, மலப்புரம், கண்ணுார், இடுக்கி உட்பட ஒன்பது மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. கொச்சி விமான நிலையத்தில் நாளை வரை அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பள்ளி கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறுவதாக இருந்த கேரள அரசுப் பணியாளர் தேர்வு மற்றும் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. மீட்பு நடவடிக்கைகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 13 குழுக்கள் 180 ராணுவ வீரர்கள் கேரளா விரைந்துள்ளனர்.
பாலக்காடு மாவட்டம் ஆலத்துாரில் அதிகபட்சமாக 39.8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. கொச்சி விமான நிலையத்தில் 21.2 செ.மீ. மழையும், இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறில் 20.5 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

நேர்கொண்ட பார்வை .. படம் அல்ல பாடம் ..

சாவித்திரி கண்ணன் : ரொம்ப அபூர்வமாகத் தான் எந்த ஒரு திரைப்படம்
பற்றியும் பொது வெளியில் பேச வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டாகும்! அப்படியான படம் தான் நேர்கொண்ட பார்வை!
பத்திரிகையாளராக தன் பயணத்தை தொடங்கிய வினோத் முதல் படமான சதுரங்க வேட்டையிலேயே தமிழ் சமூகத்தை அதிர சிந்திக்க வைத்தார்.
இந்தியில் வெற்றி பெற்ற பிங்க் படம் தான் என்றாலும் தமிழ் ரசிகர்கள் இந்த பெண்கள் குறித்த புதுமை பார்வையை ஏற்றுக் கொள்வார்களா? என்று யாராயிருந்தாலும் பயப்படவே செய்வார்கள். அந்த வகையில் இந்த முயற்சிக்கே தலை வணங்குகிறேன்.
பெண்கள் குறித்த ஆணாதிக்க சிந்தனையிலிருந்து இன்னும் கூட நவீன இளைஞர்கள் மாற முடியாத, அல்லது தங்கள் செளகரியத்திற்காக மாற்றிக் கொள்ள விரும்பாத போலித் தனத்தை போட்டு உடைக்கிறது இத் திரைப்படம்!
பெண்கள் நெருங்கி பழகும் அளவுக்கு,
தனி இடத்தில் தங்களோடு நம்பி உறவாடும் அளவுக்கு பெரும்பாலான ஆண்கள் இன்னும் தங்களை தகுதிபடுத்திக் கொள்ளவில்லை என்பது தான் இந்த படம் உணர்த்தும் செய்தியாகும்...!
இந்த செய்தியை அஜித் குமாரைக் கொண்டு சொன்னது தான் மிகவும் சிறப்பாகும்.

காஷ்மீர் ... திமுக குரல் கொடுப்பதுவும் .. அதிமுக மத்திய அரசை ஆதரிப்பதும்... ஏன்?

Rajan Kurai Krishnan : காஷ்மீர் உரிமைகளுக்காக தி.மு.க குரல் கொடுப்பதும்,
அ.இ.அ.தி.மு.க மைய அரசினை ஆதரித்து நிற்பதும் தற்செயலானது அல்ல.
தி.மு.க, ஆ.இ.அ.தி.மு.க இரண்டு கட்சிகளையும் வரலாற்று முரண்களின் வெளிப்பாடுகளாகக் கணித்து ஆய்வு செய்ய விரும்புபவர்களுக்கு முக்கியமான கருதுகோள் ஒன்றை பரிந்துரைக்க விரும்புகிறேன்.
இதை ஏற்கனவே ஆங்கிலத்தில் Double Articulation of Sovereignty என்ற பெயரில் Dravidianism என்ற தலைப்பில் நானும், நண்பர் Ravindran Sriramachandran உம் தொகுத்த ஆகஸ்ட் 2018 செமினார் இதழில் எழுதியுள்ளேன்.
அந்த கருதுகோள் இதுதான்:
தி.மு.க இந்திய ஐக்கியத்தினுள் மாநில அடையாளத்தை, சுயாட்சியை வலியுறுத்திய வரலாற்றுப் போக்கின் வடிவம்.
அ.இ.அ.தி.மு.க மாநில அடையாளத்திலிருந்து, இந்திய ஐக்கியத்தை வலியுறுத்திய எதிர்திசை வரலாற்றுப் போக்கின் வடிவம்.
இதையொட்டித்தான் பல்வேறு அம்சங்களிலும், ஆட்சியின் தன்மை, கட்சியின் தன்மை, கலாசார முன்னெடுப்புகள் போன்றவற்றிலும் முரண்பட்ட வெளிப்பாடுகள் நிகழ்கின்றன என்பதை அவதானிக்க முடியும்.
சிந்தனையாளர்கள், சுதந்திரவாதிகள், பல இடதுசாரி அறிவுஜீவிகள் எல்லாம் கருணாநிதி, எம்.ஜி.ஆர் போன்ற மனிதர்களெல்லாம் வரலாற்றின் வெளிப்பாடா என்று மேட்டிமைப் பார்வை கொள்வதால் தமிழக வரலாற்றின் அகில இந்திய முக்கியத்துவம் உணரப்படாமலேயே போகிறது.
அவர்களை தனிநபர்களாக கணித்து கிசுகிசு எழுதும் விருப்பத்தைத் தாண்டி அறிவுலகம் பயணிக்க நினைப்பதில்லை.
பூனைகள் கண்களை மூடுவதால் உலகம் இருளுவதில்லை.

காஷ்மீர் ... தேசிய மாநாட்டுக் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு


டெல்லி: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய மாநாட்டுக் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காஷ்மீர் .. திமுக அனைத்துக்கட்சி கூட்ட தீர்மானங்கள் : மறுசீரமைப்பு சட்டத்தை நிறுத்தி வைக்கவேண்டும் ....

காஷ்மீருக்கான புதிய சட்டத்தை நிறுத்தி வைக்கவேண்டும் - திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்மாலைமலர் : காஷ்மீர் மறு சீரமைப்பு சட்டத்தை
நிறுத்தி வைக்க வேண்டும் என சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இன்று மாலை நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை: காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து தரும் 370-வது பிரிவை மத்திய அரசு நீக்கியது. அத்துடன், அம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் ஆக பிரித்தது. காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதால், காஷ்மீர் மாநிலம் விரைவில் பிரிக்கப்பட உள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
 இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இன்று மாலை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க 12 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள், தி.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை, ஐ.ஜே.கே. உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. அக்கட்சிகளின் சார்பில் கி.வீரமணி, வைகோ, தங்கபாலு, ரவி பச்சமுத்து, திருமாவளவன் உள்பட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் காஷ்மீர் மறு சீரமைப்பு சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாடு முழுதும் ஒரே குடும்ப அட்டை: வேறு மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளிலும் பொருள்களை பெறும் வசதி தொடக்கம்

ramvilasbaswanதினமணி :  ரேஷன் பொருள்களை வேறு மாநிலத்தில் உள்ள கடைகளிலும் பெறும் வசதி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இந்த வசதியை தில்லியில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தொடங்கி வைத்தார். நாட்டின் எந்த மூலையில் வசித்தாலும், அங்குள்ள ரேஷன் கடைகளில் பொருள்களை வாங்கும் வகையில், ஒரே தேசம், ஒரே குடும்ப அட்டை திட்டத்தை அடுத்த ஆண்டு ஜூன் 1-ஆம் தேதிக்குள் நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக, 4 மாநிலங்களில் இத்திட்டம் சோதனை முறையில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. அதன்படி, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், இவற்றில் ஏதேனும் ஒரு மாநிலத்தில் உள்ள ரேஷன் கடையில் தங்களுடைய ரேஷன் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம். இதேபோல், மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், இவற்றில் ஏதேனும் ஒரு மாநிலத்தில் தங்கள் ரேஷன் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தை மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், தில்லியில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:

வேலூரில் 2530 வாக்குகள் பெற்ற மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்க நிர்வாகி பேட்டி

hindutamil.in - மு.அப்துல் முத்தலீ :; வேலூரில் சுவாரஸ்யம்: ஏசி சண்முகம் தோல்விக்கு நாங்களும் காரணம்: 2530 வாக்குகள் பெற்ற மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்க நிர்வாகி பேட்டி "> வேலூர் மக்களவைத் தேர்தலில் கடுமையான போட்டியில் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோல்வியை தழுவியது. இந்த தேர்தலில் மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் 2530 வாக்குகள் பெற்றுள்ளது. தாங்கள் அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தும் கேட்கவில்லை அதிமுகவின் தோல்விக்கு தாங்களும் ஒரு காரணம் என்று அதன் நிர்வாகி பேட்டி அளித்தார்.
மக்களவைத் தேர்தலில் தேர்தல் ரத்து செய்யப்பட்ட தொகுதியான வேலூர் தொகுதியின் இடைத்தேர்தல் ஆக.5 அன்று நடந்தது. திமுக, அதிமுகவில் மீண்டும் அதே வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் 7 ரவுண்டு வரை முன்னணியில் இருந்த அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பின்னர் பின் தங்கினார். பின்னர் இழுபறி நீடித்து வந்த நிலையில் நீண்ட போரட்டத்திற்குப்பின் 8141 என்கிற சொற்ப வாக்கு வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் வென்றார். நாம் தமிழர் கட்சி 26995 வாக்குகள் பெற்றது, நோட்டாவுக்கு 9417 வாக்குகள் கிடைத்தது. இதில் சுவாரஸ்யமான விஷயமாக மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் 2530 வாக்குகள் பெற்றுள்ளது.

பிரணாப்புக்கு விருது: புறக்கணித்த சோனியா

தினமலர்: புதுடில்லி: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு நேற்று (ஆக.,08) பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட விழாவில் கலந்து கொள்ளாமல் காங்., தலைவர்களான சோனியாவும், ராகுலும் புறக்கணித்துள்ளனர்.
 ஜனாதிபதி மாளிகையில் நேற்று மாலை நடந்த விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தார். இதில் கலந்து கொள்ளாமல் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாவும், காங்., எம்.பி.,யுமான ராகுலும் புறக்கணித்தது பல காங்., தலைவர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. 2018 ம் ஆண்டு ஆர்எஸ்எஸ்.,ன் அழைப்பை ஏற்று அவர்கள் தலைமையகத்தில் நடந்த ஆண்டு விழாவில் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். இதனால் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரணாப் முகர்ஜியின் விருது வழங்கும் விழாவை சோனியாவும் ராகுலும் புறக்கணித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

NDTV என் டி டிவி அதிபர் பிரணாய் ராய் ராதிகா ராய் தம்பதிகள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்


 webdunia :  என்.டி.டி.வி அதிபர் மீது பணமோசடி புகார் ஒன்று இருக்கும் நிலையில் அவர் மனைவியுடன் விமான வெளிநாடு செல்ல முயன்ற போது விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
;என்.டி.டி.வி டிவி சேனல் உரிமையாளர் பிரனாய்ராய் தனது மனைவி ராதிகா ராய் அவர்களுடன் வெளிநாடு செல்வதற்காக மும்பை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அவர் விமான நிலையத்திற்கு வந்திருப்பதை அறிந்த அதிகாரிகள் விமான நிலைய அதிகாரிகளிடம் அவர்களை தடுத்து நிறுத்துமாறு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனை அடுத்து பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவியை விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர்
இது குறித்து என்டிடிவி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது: இது போன்ற நடவடிக்கை ஊடகச் சுதந்திரத்திற்கு எதிரானது. ஊடகங்களை மிரட்டும் நோக்கில் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியபோது 'பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ராய்இருவரும் வெளிநாடு செல்வதற்காக மும்பை விமான நிலையம் வந்திருந்தனர்.

வேலூர் தேர்தல்…. ஏ.சி.எஸ். திட்டம் வெற்றி… துரைமுருகன் திட்டம் தோல்வி

acs - duraimurugan.nakkheeran.in  - /raja  : ஆறு சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் 14 லட்சத்து 25 ஆயிரம் வாக்குகள் உள்ளன. இந்த தொகுதியில் இஸ்லாமியர்கள், முதலியார், வன்னியர், தாழ்த்தப்பட்ட மக்கள், கிருத்துவர்கள், நாயுடு, பிற சமூகத்தினர் வாக்குகள் என உள்ளன. இதில் பெரும்பாண்மை பலத்தோடு உள்ள சமூகமாக இஸ்லாமியர்கள், முதலியார்கள், வன்னியர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் என உள்ளனர்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் கதிர் ஆனந்த் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அதிமுக கூட்டணி வேட்பாளராக புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். திமுக வேட்பாளரான கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணி வேட்பாளரான ஏ.சி.சண்முகம் 4,77,199 வாக்குகள் பெற்றார்.

ஏ.சி.சண்முகம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 2014ல் இதே வேலூர் தொகுதியில் பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டார். அப்போது அதிமுக சார்பில் செங்கூட்டுவன், திமுக கூட்டணி வேட்பாளராக இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியைச் சேர்ந்த அப்துல்ரகுமான் ஆகியோர் போட்டியிட்டனர். அந்த தேர்தலில் அதிமுகவின் செங்கூட்டுவன் வெற்றி பெற்றார். ஏ.சி.சண்முகம் 3,25,000 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். திமுக கூட்டணி வேட்பாளரான அப்துல் ரகுமான் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

காஷ்மீரில் முதலீடு: தொழில் துறை ஆதரவு!

காஷ்மீரில் முதலீடு: தொழில் துறை ஆதரவு!மின்னம்பலம் : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முதலீடு செய்வதில் இந்திய தொழில் துறைக் கூட்டமைப்பு ஆதரவு வழங்குவதாக மத்திய அரசிடம் உறுதியளித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டு, லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் சுரங்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடுகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீரின் தொழில் துறை வளர்ச்சி மேம்படுத்தப்படும் எனவும் அரசு உறுதியளித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் முதலீடு செய்வது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இந்திய தொழில் துறைக் கூட்டமைப்பினர் ஆகஸ்ட் 9ஆம் தேதி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

விஜய் பட ஷூட்டிங் விபத்தில் சிக்கியவர் மரணம்!

விஜய் பட ஷூட்டிங்: விபத்தில் சிக்கியவர் மரணம்!மின்னம்பலம் : விஜய்யின் பிகில் பட படப்பிடிப்பின் போது நிகழ்ந்த விபத்தில் சிக்கிய செல்வராஜ்(52) என்பவர் நேற்று மாலை மரணமடைந்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பிகில் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. கால்பந்தாட்டத்தை மையமாகக் கொண்ட படமென்பதால் பூந்தமல்லியை அடுத்துள்ள செம்பரம்பாக்கத்தில் ஈ.வி.பி பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான அரங்கு அமைக்கும் இரவு-பகல் பாராமல் நடைபெற்று வந்துள்ளது. ஏப்ரல் 24ஆம் தேதியன்றும் இரவில் பணிகள் நடைபெற்று வந்துள்ளன. இந்த பணியில் சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த எலக்ட்ரீசியன் செல்வராஜ்(வயது 52) என்பவரும் ஈடுபட்டு வந்துள்ளார்.

காஷ்மீரில் இந்திய ராணுவ அடக்குமுறை .. வெறியாட்டம் ...தொடர்புகள் துண்டிப்பு .. உண்மை நிலவரம் .. வீடியோ



காஷ்மீர் விவகாரம்: அமெரிக்காவின் நிலை? minnambalm :  ஜம்மு காஷ்மீர் தொடர்பான பிரச்சினையானது இந்தியா - பாகிஸ்தான் இடையேயான இருதரப்புப் பிரச்சினை எனவும் அதை அவர்கள்தான் பேசித் தீர்க்க வேண்டும் எனவும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்படுவதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து காஷ்மீர் பிரச்சினையில் அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன என்று அந்நாட்டின் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஆர்டகஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு, காஷ்மீர் தொடர்பான அமெரிக்க அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் இல்லை என்று பதிலளித்தார். காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபரின் மத்தியஸ்தம் இல்லாமல் இந்தியாவும் பாகிஸ்தானும் அமர்ந்து பேசி தீர்வு காணவேண்டும் என்பதே தங்கள் நிலைப்பாடு என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலங்களவை கொறடா பாஜகவில் இணைந்தார்

 Shri Bhubaneswar Kalitanakkheeran.in - santhosh : ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370- ஐ மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்தது. மேலும் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்படும் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்தது. இதற்கு திமுக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலங்களவை காங்கிரஸ் கொறடா பதவியில் இருந்து விலகிய மூத்த தலைவர் புவனேஸ்வர் காலிட்டா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

வைகோ .. அமித்ஷாவின் கண்ணசைவில் பேசுவதற்கு அதிக நேரம் பெற்றார் ...?


Adv Manoj Liyonzon : அரசியல் தரகு என்பது யாதெனில்
பிரிவு 370ஐ ரத்து செய்வதற்கு தோதுவாக ஜம்மு காஷ்மீர் அரசு ஜூன் 2018ல் பாஜகவால் கலைக்கப்பட்டதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த பிடிபி கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்தியையும் பாஜகவையும் குற்றம் சாட்டுவதை விட்டுவிட்டு, ஏற்கமுடியாத சில தவறுகளை செய்தாலும், ஆட்சியிருக்கும்வரை காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை பாதுகாத்த காங்கிரசை, அதன் கடந்தகால தவறுகளுக்காக CULPRIT என்று வைகோ குற்றம் சாட்டுகிறாரே
மதச்சார்பற்ற இந்தியாவில் 1998ல் மதவாத பாஜக ஆட்சியை அமைத்த வாஜ்பாயை மனிதப் புனிதராக நம்மிடையே அறிமுகம் செய்த வைகோ தானே CULPRIT
அப்போது பாஜவுடன் கூட்டணி வைத்து அவர்களுக்காக வாக்கு கேட்டு வந்த வைகோ தானே பெரிய CULPRIT

வெற்றிக்கு திமுக திணறியது ஏன்?

டிஜிட்டல் திண்ணை: வெற்றிக்கு திமுக திணறியது ஏன்?மின்னம்பலம் :
மொபைல் டேட்டா ஆன் செய்ததும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது. லொக்கேஷன் வேலூர் காட்டியது. வாட்ஸ் அப்பில் இருந்து முதலில் இரு தொகுதி தேர்தலுக்கான முடிவுகள் வந்தன.
“திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை 6 லட்சத்து 61 ஆயிரத்து 719. அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி 3 லட்சத்து 60 ஆயிரத்து 256. திமுகவின் வெற்றி வித்தியாசம் சுமார் 3 லட்சம் வாக்குகள். அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 6 லட்சத்து 64 ஆயிரத்து 20. அதிமுக அணியின் பாமக
வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி 3 லட்சத்து 40 ஆயிரத்து 574. வெற்றி வித்தியாசம் 3 லட்சத்து 23 ஆயிரத்து 446.” என்றது வாட்ஸ் அப்பின் முதல் செய்தி.
“வேலூர் தொகுதிக்கான மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் பக்கத்து தொகுதிகளான அரக்கோணம், திருவண்ணாமலை தொகுதிகளின் நிலவரம் பற்றி செய்தி அனுப்பியிருக்கிறதே?” என்று யோசித்துக் கொண்டிருப்பதற்குள் வாட்ஸ் அப்பின் அடுத்த செய்தி வந்தது.

தேசிய விருது பட்டியல்... தமிழ் படங்கள் புறக்கணிப்பு

பரியேறும் பெருமாள், வடசென்னைதேசிய விருது பட்டியல் - புறக்கணிக்கப்பட்ட தமிழில் படங்கள்  மாலைமலர்:  66வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் தமிழ் படங்கள் இடம் பெறாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 66-வது தேசிய திரைப்பட விருதுக்கான பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் ‘பாரம்’ என்ற தமிழ்ப்படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது. தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘மகாநடி’ படத்திற்கு கிடைத்துள்ளது.
கேஜிஎப் படத்திற்கு சிறந்த ஆக்‌ஷன் மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்டிற்கும் கிடைத்துள்ளது. சிறந்த நடிகைக்காக மகாநடி படத்திற்காக கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார் தமிழில் பாரம் படத்திற்கு மட்டுமே விருது கிடைத்துள்ளது. மற்ற பிரிவுகளில் தமிழ் படங்கள் இடம் பெறாதது சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த வருடம், பரியேறும் பெருமாள், சர்வம் தாளமயம், இரும்புத்திரை, ராட்சசன், 96, 2.0, சீதக்காதி, கனா, சூப்பர் டீலக்ஸ், வட சென்னை ஆகிய படங்கள் தமிழ் ரசிகர்களை அதிக கவர்ந்த படங்கள். மேலும் பல திரைப்பட விழாக்களில் இப்படங்கள் கலந்துக் கொண்டு விருதுகள் பெற்றுள்ளது.  ஆனால், இந்தப்படங்கள் தேசிய விருது பட்டியலில் இடம் பெறாதது ரசிகர்கள் மட்டுமல்லாது திரைப்படத் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கடைசி நேரத்தில் திடீரென தாமதமான தேர்தல் முடிவு.. .. சந்தேகம் அளித்த தாமதம்

Vellore Lok Sabha election results getting late tamil.oneindia.com - veerakumaran. : சென்னை: வேலூர்
லோக்சபா தொகுதியில் வாக்கு எண்ணிக்கை 3 மணிக்கே ஏறத்தாழ
முடிவடைந்துவிட்ட நிலையிலும், தேர்தல் முடிவு அறிவிப்பு என்பது 3.45 மணியளவில்தான் வெளியானது.
3 மணியளவில், திமுக மற்றும் அதிமுக ஆகிய வேட்பாளர்களின் நடுவேயான வாக்கு வித்தியாசம் 7585 என்ற அளவில்தான் இருந்தது. தேர்தல் முடிவுகள் எப்போது வேண்டுமானாலும் வெளியாகிவிடும், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென முடிவுகள் அறிவிப்பதில் இழுபறி ஏற்பட்டது.
மாலை 4.30 மணிக்குதான் தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் என்று ஒலிபெருக்கி மூலம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து வேலூர் மாவட்ட கலெக்டர் அறிவித்தார்.

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

சீமானின் அரசியல் கேள்விகுறி? தமிழகத்தில் திமுகவும் அதிமுகவும்தான் பெரிய கட்சிகள் .. மீண்டும் நீருபித்த வேலூர் ...


A Sivakumar : நோட்டாவை வென்ற சீமானை வாழ்த்துவோம்!.
நாம் தமிழர் - 26995
நோட்டா - 9417
வித்தியாசம் - 17578
தும்பிகளுக்கு ஒரே ஒரு செய்தி தான்.
பதிவான 10 லட்சம் வாக்குகளில் திமுகவும், அதிமுகவும் பெற்றது 9.62 லட்சம் வாக்குகள்.
சுமார் 96 சதவிகித வாக்குகளை திராவிட கட்சிகள் பெற்று இருக்கிறது. அதாவது கூட்டணி கட்சியான பாஜகவை தேர்தல் பிரச்சாரத்துக்கு அழைக்க கூட தைரியமில்லை அதிமுகவுக்கும், ஏ.சி.சண்முகத்துக்கும்.
அப்படியான நிலையில் நீங்க சும்மா மைக்கை பிடிச்சிக்கிட்டு தொண்டை தண்ணி வத்தும் அளவுக்கு திராவிடத்தை எதிர்ப்பதால் பயனில்லை.
தமிழ்நாடு ஒரு சமத்துவமான மாநிலம், அமைதியும் சகோதரத்துவமும் நிறைந்த மாநிலம். இங்க நீங்க தமிழர்களுக்குள் பிரிவினைவாதம் பேசினால் காலத்துக்கும் இந்த ஒற்றை இலக்க சதவிகிதம் தான். மக்கள் உங்களை ஏற்கவே மாட்டார்கள்.
நீங்க வளரும் என்றால் எங்களை விட அதிகமாக, தீவிரமாக, மக்களின் நம்பிக்கையை பெரும் வகையில் ஆரியத்தை, அதன் ஆத்திகத்தை எதிர்க்கனும்.

கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு .. மொத்தமாக அள்ளிய வாணியம்பாடி ..

திமுகவை முந்தித் தள்ளிய முஸ்லீம்கள்: வேலூர் நிலவரம்!
வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. வேலூர் தொகுதியில் வெற்றிபெற்றதற்கான சான்றிதழை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்திடம் இருந்து பெற்றுக்கொண்டார் திமுகவின் கதிர் ஆனந்த். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் வேலூர் தொகுதியில் நான் பெற்ற வெற்றி, ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. எனது வெற்றியை ஸ்டாலினுக்கு காணிக்கையாக வழங்குகிறேன் என கூறினார்.

ஜோதிட மேதாவிகளின் புரட்டு
மின்னம்பலம் : வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த 5ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதிமுக சார்பில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகமும், திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தும் பிரதான போட்டியாளர்களாக இருந்தனர்.
ஏ.சி.சண்முகம் மத்திய அரசின் திட்டங்களை பிரதானப்படுத்தியே தனது பிரச்சார வியூகத்தை வடிவமைத்தார். “37 எம்.பி.க்களை 38 ஆக்க வாக்களிக்க வேண்டாம். மத்திய அரசைச் சார்ந்த ஒரு வேட்பாளர் வெற்றிபெறும்போதுதான் வேலூர் தொகுதி வளர்ச்சியடையும். மத்திய, மாநில அரசின் திட்டங்களும் தொகுதிக்குள் வரும்” என்று தனது பிரச்சாரத்தில் கூறினார்.
இருப்பினும் வேலூர் தொகுதிக்கு தமிழிசை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் யாரும் பிரச்சாரத்திற்கு செல்லவில்லை. பாஜக பிரச்சாரம் செய்தால் வேலூரில் கணிசமாக உள்ள இஸ்லாமியர் வாக்குகள் கிடைக்காது என்பதால் அவர்கள் பிரச்சாரத்திற்கு செல்லவில்லை என்றும் கூறப்பட்டது. முத்தலாக் விவகாரத்தை மக்களவையில் ஆதரித்ததும் அதிமுகவுக்கு பின்னடைவாகவே பார்க்கப்பட்டது. ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சாரத்தில், அதிமுக என்றைக்கும் சிறுபான்மையினருக்கு ஆதரவான கட்சி என்றே தெரிவித்துவந்தார்.

அதிமுகவை இறுதி வரை நம்பவைத்த வேலூர்... கோட்டையைக் கைப்பற்றிய திமுக!

வேலூர்: கோட்டையைக் கைப்பற்றிய திமுக!மின்னம்பலம் : வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை வீழ்த்தி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார்.
வேலூர் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஆகஸ்ட் 9) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற ஆரம்பித்தது. முதலில் எண்ணப்பட்ட தபால் வாக்குகளில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகித்தார். அதன்பிறகு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பித்தது. காலை 11.30 வரை ஏ.சி.சண்முகமே முன்னிலை வகித்துவந்தார். அதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடிய அக்கட்சியின் தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். ஆனால் அதிமுகவினரின் மகிழ்ச்சியானது சிறிதுநேரம் கூட நீடிக்கவில்லை.
வாணியம்பாடி தொகுதி வாக்குகளை எண்ண ஆரம்பித்ததும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை வகிக்கத் தொடங்கினார். அந்தத் தொகுதியில் மட்டும் திமுகவுக்கு கூடுதலாக சுமார் 20 ஆயிரம் வாக்குகள் கிடைத்தன. அடுத்தடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கையின்போதும் கதிர் ஆனந்தே முன்னிலை பெற்றார். பிற்பகல் 3.10 மணியளவில் ஏ.சி.சண்முகத்தை விட கதிர் ஆனந்த் 7,585 வாக்குகள் முன்னிலையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

வெற்றி பெறுவதற்கு முன்பே கொண்டாடிய அதிமுக! காத்திருந்த அதிர்ச்சி செய்தி!

நக்கீரன் : வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு admkதொடங்கியது.  வேலூர் மக்களவை தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர்
போட்டியிட்டனர். ஆகஸ்ட் 5ஆம் தேதி  பதிவான வாக்குகள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சிறிது நேரத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை விட அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 15ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.

வேலூர் திமுக கதிர் ஆனந்த் வெற்றி ! 8141 வாக்குகள் வித்தியாசம் .!

ஏ.சி.சண்முகம்திமுக - கதிர் ஆனந்த் : 4 85340 வாக்குகள் - 
அதிமுக ஏசி சண்முகம் - 477199 - 
நா தா கா -   26996<26995 dir="ltr" div="" style="text-align: left;" trbidi="on"> கதிர் ஆனந்த் 

விகடன் : தேர்தல் முடிவுகளால் ஏ.சி.சண்முகம் மிகவும் வருத்தப்பட்டார். ஏற்கெனவே, அவருக்கு ரத்த அழுத்தமும் சர்க்கரைக் குறைபாடும் இருக்கிறது. தோல்வியை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில், தி.மு.க வேட்பாளரான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வெற்றிபெற்றுள்ளார். அ.தி.மு.க கூட்டணியில் களமிறங்கிய புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், சுமார் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்திடம் தோற்றுவிட்டார். இந்த வெற்றியைத் தி.மு.க-வினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடிவருகிறார்கள். வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வெளியே இருக்கும் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில், இன்று ஓட்டு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 7 மணிக்கே வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்துவிட்டார் கதிர் ஆனந்த். ஒவ்வொரு சுற்று முடிவிலும் வாக்கு நிலவரம் அறிவிக்கப்பட்டபோது, நாற்காலியில் பவ்வியமாக அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார். வாக்கு எண்ணும் மையத்துக்குள் கடைசி வரை ஏ.சி.சண்முகம் வரவே இல்லை. 

வைகோ : ‘என் கட்சியையும் உயிரையும் காப்பாற்றினார் சோனியா!’ flashback

Posted 27 Dec 2006 ஜூனியர் விகடன் : வைகோ விவரிக்கும் ‘கிடுகிடு’ ஆபரேஷன்
‘‘என் கட்சியையும் உயிரையும் காப்பாற்றினார் சோனியா!’
வைகோவை தடா வில் கைது செய்த போதுகூட இவ்வளவு பரபரப்பாக இருந்த தில்லை, ம.தி.மு.க&வின் தலைமை அலுவலக மான தாயகம். கட்சிக்குள் போர்க்கொடி தூக்கிய எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் 25&ம் தேதியன்று தாயகத்தைக் கைப்பற்றப் போவதாக செய்திகள் பரவ, அன்றைய தினமே அனைத்துக் குழு கூட் டத்தையும் கூட்டினார் வைகோ. இதனால் தகித்துக்கொண்டிருந்தது தாயகம்.
சரியாக மாலை ஐந்து மணிக்குக் கட்சி அலுவலகத்திலிருந்து வெளியே வந்த வைகோவால் தனது காருக்குள் ஏறமுடியாத அளவுக்குத் தொண்டர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். ‘முக்கியமான காரியமா ஏர்போர்ட்டுக்குப் போறேன். கட்சி ஆபீஸை யாரும் கைப்பத்த முடியாது. நீங்க இருக்கற வரைக்கும் எனக்கும் ஒண்ணும் ஆகாது’ என்று அனைவரையும் ஆறுதல் படுத்திவிட்டு காருக்குள் ஏறிய வைகோ, பிரத் யேகப் பேட்டிக்காக நம்மையும் உடன் ஏற்றிக் கொண்டார். போக்குவரத்து நெருக்கடி யில் கார் நீந்திச் செல்ல ஆரம்பிக்க, ‘‘கலிங்கப் பட்டியில இருக்கற தலித் கிறிஸ்தவர்கள் புதுசா ஒரு சர்ச் கட்டியிருக்காங்க. அதைத் திறக்க என்னைக் கேட்டுக்கிட்டாங்க. இக்கட்டான சூழ்நிலையில வருவாரோ மாட்டாரோனு நினைச்சுக்கிட்டிருப்பாங்க. அதான் அவங்களோட அழைப்பை ஏற்று இதோ ஊருக்குப் போயிக்கிட்டிருக்கேன்’’ என்று தன் தொண்டையைச் சரிசெய்தவராக நம் கேள்விகளை எதிர்கொள்ளத் துவங்கினார் வைகோ.

தமிழ் ராக்கர்ஸில் நேர்கொண்ட பார்வை.. Ner Konda Paarvai In Tamilrockers:.. too bad

Ner Konda Paarvai Full Movie Download TamilRockers, நேர்கொண்ட பார்வை, தமிழ் ராக்கர்ஸ், Ajith Ner Konda Paarvaitamil.indianexpress.com: அஜீத்தின் நேர்கொண்ட பார்வை படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் ஆன்
லைனில் வெளியிட்டது. இதனால் படக் குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். தமிழ் ராக்கர்ஸ் இது போல தொடர்ந்து புதுப்படங்களை வெளியிட்டு திரையுலகினரை நோகடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
நேர்கொண்ட பார்வை படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று ரிலீஸ் ஆனது. மறைந்த நடிகை ஸ்ரீதேவி முன்னமே கூறியபடி, அவரது கணவர் போனிகபூர் நிறுவனத்திற்கு இந்தப் படத்தை நடித்துக் கொடுத்தார் அஜீத். இந்தப் படத்தின் பிரிவியூ, சில தினங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் வெளியிடப்பட்டது. படத்தின் சில பகுதிகள் எப்படியோ கசிந்து தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியானது. அதையும் தாண்டி இன்று (ஆகஸ்ட் 8) தியேட்டர்களில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்திற்கு ரசிகர்கள் அமோக ஆதரவு கொடுத்தனர்.
 நேர்கொண்ட பார்வை விமர்சனம்
திரையுலக பிரபலங்கள் பலரும், இந்தப் படத்தின் கதையை பெரிதும் பாராட்டி வருகிறார்கள். பாலியல் புகார், அதைத் தொடர்ந்து அவதூறுகளுக்கு ஆளான பெண்களுக்காக அஜீத் போராடும் கதாபாத்திரத்தில் வருகிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் விஸ்வாசம் படத்தை பிளாக் பஸ்டர் ஹிட்டாக கொடுத்த அஜீத், இந்தப் படத்தையும் மெஹா ஹிட்டாக கொடுத்திருப்பதாக விமர்சனங்கள் வந்திருக்கின்றன.

காஷ்மீருக்குப் புதிய விடியல்: பிரதமர் உரை!


மின்னம்பலம் : ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிவந்த சட்டப்பிரிவு 370ஐ நீக்கியும், சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் செயல்படும் என்றும், சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் செயல்படும் என்றும் மத்திய அரசு அறிவித்தது. இதுதொடர்பான மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்தச் சூழலில் நேற்று (ஆகஸ்ட் 8) மாலை 8 மணிக்கு தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களிடம் தோன்றிய பிரதமர் நரேந்திர மோடி, காஷ்மீர் விவகாரம் குறித்து உரை நிகழ்த்தினார்.

வேலூர் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது ... முன்னணி விபரம் 10 மணிக்கு ....

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரம் 10 மணி முதல் வெளியாக வாய்ப்பு தினத்தந்தி : வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரம் 10 மணி முதல் வெளியாக வாய்ப்பு வேலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 
வேலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முன்னணி நிலவரங்கள் காலை 10 மணி முதல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் வெற்றி வாகை சூடுவது யார்? என்பது இரவில் தெரியவரும். 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு< வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் இவர்கள் உள்பட 28 பேர் போட்டியிட்டனர். தேர்தலன்று பதிவான வாக்குகள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் இன்று (வெள்ளிக்கிழமை) எண்ணப்படுகிறது. இதனையொட்டி அங்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.