minnambalm : ஜம்மு
காஷ்மீர் தொடர்பான பிரச்சினையானது இந்தியா - பாகிஸ்தான் இடையேயான
இருதரப்புப் பிரச்சினை எனவும் அதை அவர்கள்தான் பேசித் தீர்க்க வேண்டும்
எனவும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்படுவதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து காஷ்மீர் பிரச்சினையில் அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன என்று அந்நாட்டின் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஆர்டகஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு, காஷ்மீர் தொடர்பான அமெரிக்க அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் இல்லை என்று பதிலளித்தார். காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபரின் மத்தியஸ்தம் இல்லாமல் இந்தியாவும் பாகிஸ்தானும் அமர்ந்து பேசி தீர்வு காணவேண்டும் என்பதே தங்கள் நிலைப்பாடு என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், “காஷ்மீர் குறித்த இந்திய பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்காவின் ஆதரவு இருக்கும். இரு நாடுகளும் அமைதியைக் கடைபிடிக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம். இந்த விவகாரத்தில் இரு நாடுகளுடனும் நாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் (ஜூலை 21 - 23) இங்கு வந்து சென்றார். அது காஷ்மீர் பிரச்சினைக்காக அல்ல. ஜம்மு காஷ்மீர் பிரச்சினையை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். இதுபோன்ற அழுத்தங்கள் நிறைந்த எந்தவொரு நாட்டுக்கும் அமெரிக்கா தரப்பிலிருந்து அமைதி காக்கவும், விதிமுறைகளைக் கடைபிடிக்கவும், மனித உரிமைகளை மதிக்கவும் வலியுறுத்துவோம்” என்று கூறியவர், 370 சட்டப்பிரிவு நீக்கம் குறித்து அமெரிக்காவிடம் ஆலோசிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக