சனி, 10 ஆகஸ்ட், 2019

இதுதான் திமுகவின் பெரிய மைனஸ்.. இல்லையென்றால் வேலூரில் கெத்து வெற்றிதான்

tamil.oneindia.com - hemavandhana : Vellore Election : வேலூரில் தடுமாறிய திமுக... திமுகவின் பெரிய மைனஸ்- வீடியோ சென்னை: இப்படி ஒரு இழுபறி வெற்றி திமுகவுக்கு கொஞ்சம் இழுக்குதான்.. இதற்கு காரணம் பிரச்சாரத்தில் கோட்டை விட்டதுதான்!
மாற்று கட்சி கனிமொழி நெருக்கம் போன ஏப்ரல் மாத தேர்தலில் பக்கா பிளானுடன் இறங்கியது திமுக. வியூகம் அமைத்து செயல்பட்டது. அதனால்தான் லட்சக்கணக்கான ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிக்க முடிந்தது.
அதிருப்தி இந்த தெம்புதான் வேலூர் தேர்தலிலும் திமுகவுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எப்படியும் 4 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்து விடலாம் என்றுதான் கணக்கு போட்டார்கள். ஆனால், ஓட்டு எண்ண ஆரம்பித்த முதல் 3 மணி நேரம் திமுகவுக்கு அல்லு கிளம்பி விட்டது.
திமுகவுக்கு தண்ணி காட்டிய "இரட்டை இலை".. இன்னமும் மவுசு குறையாத மாஸ்! நெருக்கடியான வெற்றியை, அதாவது கவுரவமான வெற்றியை திமுக பெறவே இல்லை. ஓட்டு வித்தியாசம் மிக குறைந்த அளவுதான் உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் கட்சி தலைவர் ஸ்டாலின்தான் என்று சொல்லப்படுகிறது. பொதுத்தேர்தலின்போதுகூட்டணி கட்சிகளிடம் ஸ்டாலின் காட்டிய நெருக்கம், இப்போது அவர்களிடம் காட்டவில்லை என்பதே உண்மை.







மாற்று கட்சி

எல்லா கட்சிக்காரர்களும் களத்துக்கு வந்து பிரச்சாரம் செய்தனர். இதற்கு சிறந்த உதாரணம், ஜோதிமணியை சொல்லலாம். மாற்று கட்சி என்றெல்லாம் பார்க்காமல், கூட்டணி வெற்றிக்காக கரூர் முழுக்க ஓடி, ஓடி பிரச்சாரம் செய்து ஆச்சரியத்தை கிளப்பினார்.






பிரச்சாரம்

ஆனால் இந்த முறை அப்படிஇல்லை. ஒரே ஒரு தொகுதிதான் என்பதாலோ என்னவோ, அல்லது ஏற்கனவே மாஸ் வெற்றி கிடைத்துவிட்டது, இந்த முறையும் தமக்கு தான் வெற்றி கிடைக்கும் என்று லேசாக கணக்கு போட்டுவிட்டதாலோ என்னவோ, கூட்டணி கட்சி தலைவர்கள் பிரச்சாரத்துக்கு அழைக்கப்படவில்லை இந்த தொகுதியை முஸ்லிம் லீக் கேட்டு பார்த்தார்கள், திமுக தரவில்லை என்பதால் அவர்களுக்கு அதிருப்தி. அதேபோல விசிகவை பிரச்சாரத்துக்கு வர தடை போட்டுவிட்டதாக சொல்லப்படவே அவர்களும் அதிருப்தி. மற்ற எம்பிக்கள் அவையை காரணம் காட்டிவர முடியாவிட்டாலும், கனிமொழியாவது வந்திருக்க வேண்டும் என்பதே பொதுவான பேச்சாக உள்ளது.

ஏனென்றால், கனிமொழி எம்பி மட்டுமில்லை, திமுகவின் மகளிர் அணி செயலாளரும்கூட. இவரையாவது அழைத்திருக்கலாம் என்பதுதான் முக்கிய சலசலப்பே. பெயரளவுக்கு சில தலைவர்கள் வந்தாலும், முக்கிய புள்ளிகள் யாருமே வராமல் உதயநிதி மட்டும் போதும் என்ற முடிவுக்கு திமுக வந்தது பெரிய மைனசாக உள்ளது. அதனால் கடந்த ஏப்ரலைவிட இந்த முறை திமுக வாக்கு வங்கி ஏன் குறைந்தது, 37 தொகுதிகளை அள்ளிய திமுகவால் ஏன்ஒரே ஒரு தொகுதியில் மாஸ் வெற்றியைபெற முடியவில்லை என்பதை இனியாவது அலசி ஆராய வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக