நக்கீரன் :
இந்தியைக் கற்பதில்
தவறேயில்லை. ஆனால் இந்தியைப் பேசாத
மக்களின் மேல் அதைத் திணிப்பதன் அரசியலே நம் கவனத்துக்குரியது. ஒருகாலத்தில் இந்தி எதிர்ப்பை முன்னெடுத்த திமுக முன்னணிக் குடும்பம் தம் குடும்ப உறுப்பினர்கள் இந்திக் கற்க அனுமதித்த அரசியலை வைத்து மட்டும் இதை மலிவாக எடைபோட்டிடக் கூடாது. இந்தித் திணிப்பு என்பது அந்தளவுக்கு அபாயகரமானது.
ஆயிரம் ஆண்டுக்காலமாக இருந்துவந்த உருது மொழியை எதிர்த்து உருவாக்கப்பட்ட ஒரு மொழியே இந்தி. உருது பிரிட்டிசார் காலத்திலும் அலுவல் மொழியாக இருந்தது. இந்து தேசிய கருத்தியலை உருவாக்கியவர்களால் உருதுமொழி ஒரு கட்டத்தில் இஸ்லாமிய மொழியாக அடையாளம் காணப்பட்டது. இதற்கு மாற்றாகப் பேச்சு வழக்கில் இல்லாத சமஸ்கிருத மொழியை இவர்களால் முன்னிறுத்த முடியவில்லை. எனவே சமஸ்கிருதத்தின் குழந்தையாக இந்தி பெற்றெடுக்கப்பட்டது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவில் மத அடிப்படையில் ஒரு மொழிப் போர் தொடங்கியது. இதற்கு வித்திட்டவர் ஒரு கவிஞரும் எழுத்தாளருமான பரத்தேந்து ஹரிஷ் சந்திரா என்பவர் ஆவார். மார்வாடி அகர்வால் இனத்தைச் சேர்ந்த இவரது தாய்மொழி உருதுதான். எனினும் ‘ஆஜ் சல் ரஹா ஹை ஹிந்தி பர் ஹிந்துஸ்தானி ஃபஸ்ஸா!’ (இந்தி இன்று இந்துஸ்தானின் வலையில் அகப்பட்டுள்ளது) என்ற அன்றைய இந்து எழுச்சிக் கருத்தியலுக்கு ஏற்ப இவர் மாறுகிறார். உருது என்பது இஸ்லாமியரின் மொழி, இந்திதான் இந்துக்களின் மொழி என்கிற இந்து அரசியல் நிலைப்பாட்டுக்கு ஏற்ப இவர் உருது மொழியை இழிவாகப் பேசி எழுதும் இந்திமொழி வெறியராக மாறிவிடுகிறார். தொடர்ந்து நவீன இந்தி மொழியின் தந்தையாக உருவெடுக்கிறார்.