வெள்ளி, 7 ஜூன், 2019

ஆந்திராவில் CBI தடையை நீக்கினார் ஜெகன் மோகன் ரெட்டி பாஜகவுக்கு ஆதரவு?

LRJ : தேவையில்லாதவங்களுக்கு தேவையில்லாத நேரத்துல சில்லறைய சிதற விடறதுல திராவிட திம்மிகளை அடிச்சிக்க ஈ ஈரேழு லோகத்திலும் ஆட்களே கிடையாது.
ஜாதிக்கொரு துணைமுதல்வர்ங்கிற, இருப்பதிலேயே பிற்போக்குத்தனமான ஜாதிப்பஞ்சாயத்தார் கூட்டமைப்பை உருவாக்கறதை சமூகநீதிங்கிற பேர்ல கொண்டாடறாங்க. கெரகம்.
ஆந்திர அரசியல் என்பது அடிப்படையில் ரெட்டி Vs கம்மா என்கிற இரண்டு ஆண்டபரம்பரை மோதல் தான். இதில் ஆந்திராவின் அரசியல் சரித்திரத்தில் ஓரளவேனும் சமூகநீதியை கொண்டுவந்தவர் என்டிஆர் "காரு". அவர் தான் அந்த ஊரின் சமூகநீதிக்கும் ஆந்திரர்களின் சுயமரியாதைக்குமான (ஆத்ம கௌரவம் என்பது அவர் பயன்படுத்திய மிகவும் பிரபலமான வார்த்தை) முதல் அரசியல் சின்னம். அதன் நீர்த்துப்போன/சீரழிந்த வடிவமே இன்றைய தெலுகு தேசம்.
ஜகன்மோகன் ரெட்டி அடிப்படையில் கொஞ்சம் மூப்பனாரும் கொஞ்சம் விஜயகாந்தும் கலந்த விசித்திர கலவை. அவர் என்னவாக உருவெடுப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஆனால் ஆந்திர அரசியலில் காலம் காலமாக
கம்மாக்களைவிட ரெட்டிகளே உண்மையான ஆண்ட பரம்பரைகள். நில உடைமை முதல் அரசியல் அதிகாரம் வரை ரெட்டிகள் தான் அந்த ஊர் உண்மையான "ஆண்ட பரம்பரை". எனவே ஒருவகையில் ஜகனின் அரசியல் எழுச்சி என்பது உண்மையில் ஆந்திர அரசியலில் ஆண்டபரம்பரையின் மீள் எழுச்சி தான். அதனால் ஓவராக பொங்காமல் கொஞ்சம் பொறுங்கள்.
இப்போது அவர் அறிவித்துள்ள இந்த ஐந்து துணை முதல்வர் பதவிகள் என்பவை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவர் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்தவர்களின் கொலு பொம்மைகள் மாதிரியான அலங்கார பதவிகள். அதற்கு மேல் வேறு எந்த “சமூகநீதியும்” இதில் சாத்தியமே இல்லை என்பதற்கு சந்திரபாபுநாயுடு ஆட்சியின் இரு துணை முதல்வர்களே சாட்சி.
மேலும் சந்திரபாபு நாயுடு மத்திய அரசின் சிபியை ஆந்திரத்தில் நுழைய விதித்திருந்த தடையை இவர் அவசர அவசரமாக நீக்கியிருக்கிறார். அதுவும் இந்திய அரசின் சிபியையை மத்தியில் ஆளும் பாஜக தனது ஏவல்படையாக எந்த வரைமுறையும் இன்றி பயன்படுத்தும் காலகட்டத்தில் அந்த சிபிஐக்கு ஆந்திராவில் பட்டுக்கம்பளம் விரித்திருக்கும் ஜகனின் செயல் பலவித சந்தேகங்களை எழுப்பும் செயல். நாயுடு மீதான ஊழலை ஆந்திர காவல்துறையை கொண்டே விசாரிக்காமல் மத்திய அரசின் சிபிஐயை இழுப்பது மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசுக்கு தாரை வார்க்கும் செயல்.
https://m.economictimes.com/…/jaga…/articleshow/69677753.cms
ஜெகனின் இந்த சிறுபிள்ளைத்தனம் மத்திய ஆட்சியாளர்களுக்கான அவரது மறைமுக ஏவலாள் வேலையாகவே விமர்சிக்கப்படுகிறது. அந்த விமர்சனம் சரியா என்பதை காலம் தான் சொல்லவேண்டும்.
ஆந்திர அரசியலில் ஜெகனின் எழுச்சியால் விளைந்திருக்கும் ஒரே உருப்படியான நன்மை என்பது தமிழக அரசியல் எப்படி திமுக Vs அதிமுக என்கிற இருமுனை போட்டியாக கடந்த 47 ஆண்டுகளாக இருந்து வருகிறதோ அதே போல ஆந்திர மாநில அரசியல் என்பதும் இனிமேல் தெலுகு தேசம் Vs ஒய் எஸ்ஆர்கட்சி என்பதாக உருவெடுக்கும் சூழல் தோன்றியிருக்கிறது.
அப்படி நடந்தால் ஆந்திரத்துக்கு அது நல்லது. தமிழ்நாட்டளவில் so called தேசிய கட்சிகள் எப்படி காலூன்ற முடியவில்லையோ அதேபோல் ஆந்திரத்திலும் அவைகள் ஓரம் கட்டப்படும். மாநில கட்சிகள் வலுப்பெற வலுப்பெற இந்திய ஜனநாயகம் என்பது ஒற்றையாட்சி ஏகாதிபத்தியமாக மாறாமல் தடுக்கப்படும். அந்தவகையில் ஜகன்மோகனின் வெற்றி நல்லது தான். அவரது அவசரகுடுக்கைத்தனம் அபத்த அரசியலையும் தாண்டி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக