வியாழன், 6 ஜூன், 2019

குருமூர்தியின் அமைச்சு பிச்சை கார்ட்டூன் “கண்டவர்களும் களவாக” இரவில் வந்துபோய்....

LRJ : முன்பொருமுறை முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அதிமுக ரமா வாம்மா பேசிக்கலாம்” என அவரது அந்தப்புர விரிவாக்கத்தில் பிஸியாகிவிட்டதாலோ என்னவோ இதில் அதற்குப்பின் எந்த தொடர் வினையும் ஆற்றவில்லை.
தலைவர்கள் “ஆண்மையற்றவர்கள்”, என்றார். அதிமுக ஆட்சியிடமிருந்தோ, அந்த கட்சியில் இருந்தோ, அந்த கட்சியின் பத்திரிகையிலோ, அந்த கட்சியின் சார்பில் தொலைக்காட்சிகளின் மாலைநேர பேச்சுக்கச்சேரிகளில் கலந்துகொள்ளும் தேங்காய் மூடி பாகவதர்களிடம் இருந்தோ எந்த எதிர்வினையும் இல்லை. அதிமுகவில் “அறுபது வயது கடந்தபின்னும் ஆண்மையுள்ளவர்” (?!) என்று “செயலில் நிரூபித்திருக்கும்” ஒரே ஒரு அமைச்சர் மட்டும் கொஞ்சம் வாயை திறந்தார். ஆனால் அவரும் “ரோட்டோ
இப்போது அதிமுக என்பது பிச்சைக்காரர்கள் கட்சி என்று அந்த கட்சி மற்றும் ஆட்சியாளர்கள் முகத்தில் காறி
உமிழ்ந்திருக்கிறார். முன்பிருந்த லேசான முணுமுணுப்பு கூட இல்லை. முணுமுணுக்காதது மட்டுமல்ல தன் முகத்தில் காறி உமிழ்ந்தவரை வீடுதேடி சென்று சந்தித்து சேவித்துவிட்டு திரும்பியிருக்கிறார் அதிமுக ஆட்சியின் துணை முதல்வர் பொறுப்பில் இருக்கும் ஒரு ஜடம். அதுவும் தனியாகக்கூட அல்ல. தன் அருமந்த தனையனையும் கூடவே கூட்டிப்போய் குருமூர்த்தி காலில் விழுந்து சேவித்து திரும்பியிருக்கிறார்கள் அப்பனும் மகனுமாக.
“ஆண்ட பரம்பரை” பெருமை பேசும் அந்த அடுத்த தலைமுறை அரசியல் அராத்தும் எட்டி உதைக்கும் காலில் விழுந்து சேவித்து திரும்பியிருக்கிறது போல. இதெல்லாம் ஒரு கட்சி. இவர்கள் கைகளில் ஆட்சி. கெரகம்.
“கொண்டவன் சரியில்லேன்னா
கண்டவன் கால்ஜோடும்
வாசல்ல கெடக்கும்.”
என்பார் ஆதியம்மா.
அதன் அர்த்தம் புரிந்தவர்களுக்கு தமிழக அரசியலின் நிலையும் அந்த கதையாகிவிட்ட ஆனப்பெரிய கேவலம் உறைக்கும். தமிழக அரசியலில் “கொண்டவன்” கள் கோடிக்கணக்கான தமிழக வாக்காளர்கள். 2016 இல் இவர்கள் செய்த வரலாற்றுத்தவறு “கண்டவர்களும் களவாக” இரவில் வந்துபோய்க்கொண்டிருந்தார்கள். 2019 இலும் தங்களின் முந்தைய தவறை வாக்காளர்கள் திருத்த மறுத்ததன் விளைவு பகலிலேயே வர ஆரம்பித்திருக்கிறார்கள். அது “வந்துபோகிற”வர்கள் குற்றமல்ல. அவர்களுக்கு அந்த துணிச்சலை தந்திருக்கிற வக்கற்ற வாக்காளர்களின் குற்றம்.
உண்மையில் குருமூர்த்தி துப்பியிருப்பது அதிமுக ஆட்சியாளர்கள் மீது மட்டுமல்ல. அதுகளை ஆட்சியில் அமர்த்தியிருக்கும் வாக்காளர்கள் முகங்களிலும் தான். ஒரு அரசியல் தரகருக்கு இந்த அளவுக்கு அகங்காரம் உருவாக மூல காரணம் உண்மையில் அந்த வாக்காள வெ(மொ)ண்ணைகள் தானே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக