இன உறவுப் பாலமாகும் ஆடிவேல் உற்சவம்!
ஆடிவேல்!
கொழும்பில் தமிழர்களின் இருப்பையும், கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களையும் ஊரறியச் செய்யும் பக்திப் பெருவிழா! மத வழிபாட்டின் ஊடாக மனங்களை ஒன்றுபடுத்தி இன ஐக்கியத்தை வலுப்படுத்தும் தேசிய பெருவிழா! 1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர் எந்தவிதமான சந்தேகமும், அச்சமும் இல்லாத ஓர் அமைதிச் சூழலில் கொழும்பில் நேற்று மீண்டும் களைகட்டியது ஆடிவேல் ஆரம்ப நிகழ்வு. நாட்டுக் கோட்டை நகரத்தாரின் (செட்டியார்கள்) முயற்சியி னால் கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த ஆடி வேல் உற்சவத்தின் முக்கியமான நிகழ்வாக இடம்பெறுவது சுவாமி வீதி உலா செல்வதுதான்.
கொழும்பு முதலாம் குறுக்குத் தெருவிலுள்ள சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்திலிருந்தும், செட்டியார் தெரு ஸ்ரீ கதிரேசன் ஆலயத்திலிருந்தும் சுவாமி ரதம் பம் பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயத்திற்கு ஊர்வலமாகச் சென்று ஓரிரு நாட்களில் மீண்டும் அந்தந்த ஆலயங்களுக் குத் திரும்பி வருவதுதான் ஆடிவேலின் சிறப்பம்சம். புறக் கோட்டையிலிருந்து காவடி ரதமும், வெள்ளி ரதமும் வீதி உலா செல்லும்போது தமிழர்களைவிட பெளத்தர்கள் பக் திப் பரவசத்துடன் அதில் பங்கேற்பது குறிப்பிடத்தக்க அம் சமாகும். முருகக் கடவுளை ‘கதரகம தெவியோ’ என்று பெளத்தர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் வழிபடுகிறார்கள். இத னால், ஆடிவேல் விழாவில் இந்துகளான தமிழர்களும் பெளத்த சிங்களவர்களும் ஒன்றித்துப் போகிறார்கள். ஆனால், 1983 ஆடிவேல் விழாவுக்குப் பின்னர் இந்தப் பிணைப்பில் சற்றுப் பின்னடைவு ஏற்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். தற்போது அந்தச் சூழ்நிலையில் நல்ல தொரு மாற்றம் பிறந்திருக்கிறது. ஆடிக் கலவரத்திற்குப் பின்னர் ஓரிரு தடவை ஆடிவேல் உற்சவம் நிகழ்த்தப்பட் டாலும் அது இனங்களின் முழுமையான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாக அமைந்திருக்கவில்லை.
நேற்று ஆரம்பமான சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் காவடி ரத பவனி 30 ஆண்டுகளுக்கு முன்பி ருந்த முழுமையான ஆடிவேல் விழாவை ஞாபகப்படுத் தும்படியாக அமைந்திருக்கிறது. கடை உரிமையாளர்கள், பணியாளர்கள், தமிழ் கலாசாரப் பாரம்பரியங்களுடன் ஊர் வலத்தில் பங்கேற்க மேள தாளங்களும் கொழும்பு நகரை பரவசத்தில் ஆழ்த்துகின்றன. வீதியில் செல்லும் பாதசாரிக ளும், கடமையிலிருக்கும் பொலிஸார் மற்றும் நிறுவனங்க ளின் ஊழியர்களும் காவடி ரதத்தை நெருங்கி வழிபடுகிறா ர்கள். இன, மத, மொழி வேறுபாடின்றிக் காவடி ரதத்தைக் கண்கொள்ளாக் காட்சியாகப் பார்க்கின்றார்கள்.
இத்தனைக்கும் மகுடம் வைத்தாற்போல் அலரி மாளிகையில் ஜனாதிபதியும் பங்கேற்ற பூஜை நிகழ்வு அமைந்திருந்தது. ஆடிவேல் விழாவினை அமைதியாகவும் அனைத்து இன ங்களும் எதிர்பார்க்கும் மகிழ்ச்சியுடனும், மன நிறைவுட னும் நடத்துவதற்கு நாட்டுத் தலைவரின் ஆசி கிடைத் திருப்பதானது, கொழும்பில் இனி ஆடிவேல் உற்சவம் ஒரு தேசிய விழாவாகத் தொடரும் என்பதற்கான நம்பிக்கை யைத் தோற்றுவித்திருக்கிறது.
1874ஆம் ஆண்டிலிருந்து நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் ஏற்பாடு செய்து வந்த தேசிய நிகழ்வு 1983 இல் தடம் புரண்டபோது அதனைச் சீர்படுத்திச் செழுமைப்படுத்துவத ற்கு அப்போதைய நாட்டுத் தலைமைத்துவம் முன்வரவி ல்லை. சுவாமி வீதி உலாவினை இடையில் நிறுத்திக்கொ ள்ள ஏற்பட்ட நிர்ப்பந்த நிலையைத் தவிர்ப்பதற்கும் நடவ டிக்கை எடுக்கவில்லை.
இந்த வருடத்திலிருந்து முன்னைய மன நிறைவும், ஆத்ம திருப்தியும் அடைந்து, இனங்களுக்கிடையே நல்லுறவை வலுப்படுத்துவதற்கான ஒரு பாலமாக ஆடிவேல் விழா திகழப்போகிறதென்பது திண்ணம்.
தமிழர்களின் முருகக் கடவுளும் சிங்கள பெளத்தர்களின் ‘கத ரகம தெவியோ’வும் இனி நம்நாட்டில் நிரந்தர அமைதிக்கு உறுதுணைபுரிவதைப் போல், அரசியல் ரீதியான இணக் கப்பாடும் புரிந்துணர்வும் ஏற்பட அரசியல்வாதிகள் மனம்தெளிய வேண்டும்.
சனி, 24 ஜூலை, 2010
இலங்கை எம்.பி. க்களிடம் எகிறிய முதல்வர்,இந்த நாடு ஒரு தலைவரை
எனக்கு உணர்ச்சி இல்லையா?
இலங்கை எம்.பி. க்களிடம் எகிறிய முதல்வர்!
இந்த நாடு ஒரு தலைவரை இழந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இந்த நாட்டை ஆட்சி செய்கிறார்கள். அவர்களின் உணர்வில் நான் குறுக்கிட முடியாது!''
எதற்காக வருகிறார்கள்... என்ன செய்தியைக் கொண்டு செல்கிறார்கள்... ம்ஹ¨ம், தெரியவில்லை. ஆனால், மாதம்தோறும் ஏதாவது ஒரு நாள் திடீரென்று டெல்லியில் முகாமிடும் இலங்கைத் தமிழ் எம்.பி-க்கள்... பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர், வெளியுறவுத் துறை செயலாளர்கள் எனப் பேச்சுவார்த்தைகள் நடத்தத் தவறுவது இல்லை. பலன்?
டெல்லியில் இருந்து கொழும்புவில் இறங்கும்போது தமிழ் எம்.பி. ஒருவருக்கு மூக்கில் சின்னக் கொப்பளம். பேண்டேஜ் போட்டிருந்தார். விமான நிலையத்தில் அவரைச் சந்தித்த பிரமுகர் ஒருவர் ஏதோ கேட்க, 'இந்தியாவில் இருந்து மூக்குடைபட்டு வருகிறோம்' என்றாராம் அந்த எம்.பி. நிலைமை அப்படித்தான் இருக்கிறது! இந்நிலையில், சம்பந்தன் தலைமையில் மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன் ஆகிய ஐந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி-க்கள், கடந்த 20-ம் தேதி சென்னைக்கு வந்து முதல்வர் கருணாநிதியை சந்தித்தனர். ஒரு மாதத்துக்கு முன்பே நடந்திருக்க வேண்டிய நிகழ்வு இது.
முதல்வர் கொடுத்த தேநீர் இதமாக இருந்தாலும், இந்த சந்திப்பு சற்று சூடாகவே இருந்தது. ஈழத்தில் அரசியல் போராட்டம் முடிந்து ஆயுதப் போராட்டம் உச்சத்துக்குப் போய் மீண்டும் பூஜ்ஜியத்துக்கு வந்துள்ள நிலையில்... செல்வநாயகம், அமிர்தலிங்கம் காலத்து சங்கதிகளை நினைவுகூர்ந்து வழக்கமாகச் சொல்லும் கருணாநிதி, இந்த சந்திப்பில் கறார் குரலை எழுப்ப... கூட்டமைப்பினர் அதை எதிர்பார்க்கவில்லை!
'இனத் துரோகி' பட்டம் சூட்டும் எதிர்க்கட்சி அரசியலுக்கு இடையில், கோபாலபுரத்தில் வெளிப்பட்ட வார்த்தைகள் கடுமையாகவும் உறுதியாகவும் வந்து விழுந்திருக்கின்றன. ''நீங்கள் என்னைப்பற்றி என்ன நினைக்கிறீர்களோ... எனக்குத் தெரியாது. நான் இந்தியா வின் எதிர்க் கட்சித் தலைவர் இல்லை. இந்திய இறையாண்மைக்குக் கட்டுப்பட்ட, ஒரு மாநிலத்தின் முதலமைச்சர். நீங்கள் நினைப்பதை எல்லாம் நான் இங்கு பேச முடியாது. தமிழர்களுக்காக என்னால் என்ன செய்ய முடியுமோ... அதைத்தான் செய்ய முடியும். இந்த நாடு ஒரு தலைவரை இழந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இந்த நாட்டை ஆட்சி செய்கிறார்கள். அவர்களின் உணர்வில் நான் குறுக்கிட முடியாது!'' என்றபடி தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த் தைகளைக் கோத்ததுபோல இருந்திருக்கின்றன, தமிழக முதல்வரின் வார்த்தைகள்.
''இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, பார்த்தசாரதி நடுநிலையுள்ள பிரதிநிதியாக இலங்கைக்கு அனுப்பப் பட்டார். அதைப்போன்ற பிரதிநிதியாக ஒருவரை நான் அனுப்பிவைக்க பிரதமரைக் கேட்டுள்ளேன். அது நிச்சயம் நடக்கும். நீங்கள் சாணக்கியத்துடன், சாதுர்யத்துடன் அரசியல் பண்ணுங்கள்!'' என்றும் கூட்டமைப்பினரிடம் முதல்வர் கூறியிருக்கிறார்.
''புலிகள் இல்லை, போர் இல்லை. வேரோடு வீழ்ந்துகிடக்கும் வாழ்க்கையை மீட்க உலக சக்திகள் யாரோடும் உறவாட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருக்கிறது. இந்தியா எம்மாதிரியான நடவடிக்கை எடுத்தாலும் நாங்கள் ஏற்கத் தயாராக இருக்கிறோம்!'' என்று இவர்கள் சொல்லி இருக்கிறார்கள். ''அந்த நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள்!'' என்றாராம் முதல்வர்.
(விகடன்)

எந்த விதமான செக்ஸ் தொடர்பும் கிடையாது,நித்யானந்தா+ரஞ்சிதாவும
நித்யானந்தா. கடந்த மார்ச் மாதம் சில "டிவி' சேனல்களில், இவரும் நடிகை ரஞ்சிதாவும் படுக்கை அறையில் இருக்கும் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. தமிழகத்தில் இவர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின், இந்த வழக்கு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டு விட்டது.தலைமறைவாக இருந்த நித்யானந்தா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். தற்போது அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு, தனது ஆசிரமத்தில் பக்தர்கள் மத்தியில் சொற்பொழிவாற்றி வருகிறார்.
இதற்கிடையே, தலைமறைவாக இருந்த நடிகை ரஞ்சிதா, கர்நாடகா சி.ஐ.டி.,போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் குறிப்பிடுகையில்,"நித்யானந்தாவின் அறைக்கு ஓரிரு முறை சென்றுள்ளேன். அவருக்கும் எனக்கும் எந்த விதமான செக்ஸ் தொடர்பும் கிடையாது. "டிவி'யில் காட்டப் பட்டுள்ள காட்சிகள் கம்ப்யூட்டர் மூலம் சித்தரிக்கப்பட்டவை. "டிவி'யில் காட்டப்பட்ட பெண் நான் அல்ல. நித்யானந்தா எனக்கு எந்த செக்ஸ் தொல்லையும் கொடுக்கவில்லை' என்றார்.ரஞ்சிதாவின் வாக்குமூலத்தை சி.ஐ.டி., போலீசார் கர்நாடகா ஐகோர்ட்டில் நேற்று பதிவு செய்தனர். அமெரிக்க ஆசிரமத்தில் உள்ள நித்யானந்தரின் சீடர்கள் விமலானந்தாவையும், நித்ய கோபிகாவையும் கைது செய்து பெங்களூரு அழைத்து வர, அவர்கள் மத்திய அரசின் அனுமதியை கோரியுள்ளனர்.

Gnanavel - Melbourne,ஆஸ்திரேலியா
2010-07-24 12:27:37 IST
அது நீ இல்லையா ayiyaiyo இப்படி ayepochae. Pavam ஒரு பொண்ணோட maanatha இப்படி vangitaangala....
shreenivas - riyadh,செனகல்
2010-07-24 12:02:58 IST
இது அவர்களது சொந்த விஷயம் ரஞ்சிதா புகார் செய்தலா ? இஷ்டப்பட்ட இரண்டு பேரு இப்போ கஷ்ட படறாங்க அது அவங்க சொந்த விசஹ்யம் ரஞ்சிதா புருஷன் மேட்டர் இது . அவன் முடிவு பண்ணட்டும்...
ராஜ்குமார்.தி - doha,ரீயூனியன்
2010-07-24 11:30:03 IST
நித்தியானந்தா மீண்டும் சொற்பொழிவு செய்கிறார் அதில் மக்கள் மற்றும் சில நடிகைகள் கலந்து கொண்டார்கள் என்று தினமலர் செய்தியில் கடந்த வாரம் இருந்தது. இம் மாதிரி முட்டாள் மக்கள் இருக்கும் போது யாரு எதை வேணாலும் செய்யலாம் சொல்லலாம். அதையும் நம்ப நம்ம முட்டாள் மக்கள் இருக்கிறார்கள். அம்மா ரன்ஜீதாவே நீ ஒரு தெய்வமா!!!!! நீ இன்னும் என்ன வேனுமுனுலாம் செய்யலாம். உன்னை தேடி போலீஸ் வராது. வரவே வராது....
பாண்டி - Salem,இந்தியா
2010-07-24 11:27:03 IST
பொய்யை உரக்க சொல்வதால் அது மெய் ஆகிவிடாது!!!அவளும் பெண் தானே,,,,மக்களே வார்த்தைகளால் அவர்களை கொல்லாதீர்கள்!!! அவர்களும் மனிதர்கள் தானே!! உணர்வுகள் உண்டு தானே,,,,,,,,,,மறந்துவிட்டு நம்ம பிழைப்பை பார்ப்போம்,,,,,,,,,,,,,,,,...
வில்வநாதன் - coimbatore,இந்தியா
2010-07-24 11:18:58 IST
கமென்ட் எழுதறவங்க எல்லாம் உத்தம புருசனுக... வாய்ப்பு கிடைக்காதவரை நானும் ராமன் தான்.. தனிப்பட்ட ஒருத்தரோட பர்சனல் லைப்ல யாரும் தலையிட முடியாது. நிதயனன்தனை நம்பியது மக்கள் தப்பு. இன்னொருவன் கடவுலான்னு பார்ப்பதை விட்டுவிட்டு நாம மனுசனான்னு பாருங்க. அப்புறம் எல்லாம் நல்லதா நடக்கும். வில்வா இருகூர்....
pavulraj - singapore,ஸ்லேவாக்கியா
2010-07-24 10:42:07 IST
Ennamma thriumba bangalore varratha plan ethuvum irukka...
nandhini - chennai,இந்தியா
2010-07-24 10:36:11 IST
இத சொல்லவா இத்தனை நாளு........ நமபிடோம் நீ சொல்றத...
இரா .விஸ்வா மற்றும் இரா ஆனந்த் - alqouzDubai,யூ.எஸ்.ஏ
2010-07-24 08:58:25 IST
!!!!நான் அவளில்லை 1 !!!./ நான் அவளில்லை 2 !!!/ நான் அவளில்லை 3 !!!/ நான் அவளில்லை 4 !. என்னைய இது !!!!! நீ அவளில்லை என்றால் அது யாரு ????????????????????????/??????? "நான் அவளில்லை" இது மாதிரி நித்தியா சொல்ல சொன்னார் . முடியல ரஞ்சி உன் குசும்பு தங்களையே !!!!,,,,,,,...
சிவா பாலா - Singapore,ஸ்லேவாக்கியா
2010-07-24 08:17:13 IST
இரண்டு வயதுக்கு வந்தவர்கள் அவர்களின் தனிப்பட்ட வாழ்கையில் தலையிட யாருக்கும் வுரிமயில்லை. அவரின் சீடர்களுக்கும் அவருக்கும் வுள்ள தனிப்பட்ட பிரச்சினை இது. நாத்திகர்களுக்கோ (என்னை மாதிரி) , அவரின் சீடரல்லாத இந்துகளுக்கோ, பிற மதத்தினருக்கோ இதில் துளி கூட சம்பந்தமில்லாத விஷயமிது. பொது மக்களின் வரி பணத்தையோ போலிசோ இதில் நுழையக்கூடாது. வரி பணமும் போலிசும் இந்திய நாட்டின் நலிந்த மக்களுக்கு தேவை....
singam - namakkal,இந்தியா
2010-07-24 07:52:34 IST
இவளெல்லாம் ஒரு பொம்பிள்ளை என்று இவள் சொல்வதை பெரிதாக பேப்பரில் போடுகிறீர்கள் ...நாட்டில் எத்துனையோ விலை ................உள்ளனர்..அவர்கள் பேட்டி எல்லாம போடுகிறீர்களா ...பேசாமல் வேறு உருப்படியான செய்தி இருந்தால் போடுங்கள் ......
thirunavukkarasu - singapore,இந்தியா
2010-07-24 07:37:58 IST
ஆமாம் ஆமாம் அவன் கூட உனக்கு செக்ஸ் தொடர்பு இருக்குன்னு யார் சொன்னது. முட்டா பசங்க. நீ உண்மையான் பத்தினி தான். ஏன்னா நீ அந்த களவானி பய பொண்டாட்டிதனே....
அருண் - ramanathapuram,இந்தியா
2010-07-24 06:45:17 IST
இன்னும் கொஞ்ச நாளில் நிந்தியனந்தாவ அப்படி யாரு மா !என்றும் சொன்னாலும் சொல்லுவா இந்த நடிகை SO BETTER FOR US NO READ THIS KIND OF PERSON NEWS AGAIN...
அருண் - ramanathapuram,இந்தியா
2010-07-24 06:31:05 IST
என்ன இந்த பெண் சுத்த மானம் கேட்டவள இருப்பாளோ ! ..........அப்பறம் எதுக்கு இந்த அம்மணி தலைமறைவானார்கலாம் இவளும் ஒரு பெண்............நல்லவேளை பாரதியார் இங்கே இல்லை இருந்திருந்தால் அய்யகோ நெஞ்சம் பொறுக்கவில்லையே இந்த நிலை கேட்ட மனிதரை நினைத்து விட்டால் என்று கண்ணீர் விட்டிருப்பார்...
hariharan - bintulu,EastMalaysia,இந்தியா
2010-07-24 06:30:38 IST
இன்றைய மிகப்பெரிய ஜோக்...
bakruthin - muara,புருனே
2010-07-24 06:17:21 IST
இவா சொல்லுவா அதை மக்கள் நம்பனும். அதை ஏண்டி இத்தன மாசம் கழிச்சு சொல்லுற....
ramalingam - chennai,இந்தியா
2010-07-24 05:59:44 IST
அடடடா விட மாட்டிங்க போல இருக்கு. நாட்ல அவசியமான பிரச்னை இதுதான் போல. ஏனப்பா கண்டுபிடிக்கவேண்டியது விசயம் நிறைய இருக்கிறப்ப இதை கண்டு பிடிச்சி என்ன ஆவப்போவுது. காலத்தையும் காசையும் விரயம் பண்ணாம வேற கேச கவனிங்கப்பா....
kim - tn,இந்தியா
2010-07-24 05:38:51 IST
வாடிம்மா பத்தினி இவளவு நாள் ஓடி ஒழிசுட்டு இப்போ ஒரு புது கதையா ? !! படுக்கை அறை காட்சி தான் உலகமே பார்த்தது. நீ என்ன சொன்னாலும் யாரும் நம்பபோவது இல்லை !! மக்கள் இபொழுது திருமதி மாளவிகா விடியோக்காக வெய்டிங் !! எலேய் நித்திய மாளவிகா கேசட் இருந்தா சட்டுனு ரிலிஸ் பன்னுலே !!...
அண்ணாதுரை.Na - Singapore,ஸ்லேவாக்கியா
2010-07-24 05:28:23 IST
ஆமாமா நாங்க நம்பிட்டோம் நீ சொல்ற கதைய!!! இவ்வளவு பேசுற நீ ஏன் ஓடி ஒளிஞ்ச கொஞ்சம் சொல்லுமா!!! அன்பு அண்ணா சிங்கை...
தமிழ் selvan - chennai,இந்தியா
2010-07-24 05:18:13 IST
You should have got married with Nithi. Don't bluff around. O.K. Its all done. Keep silent. Nithi has already said he had sex with you, with your permission. He has done nothing wrong illegally, he keep on repeating the same sentence. That means clearly he had sex with you. It is O.K. Don't worry about it. No one ask you whether you had sex with you or not....
Joseph - London,இந்தியா
2010-07-24 04:57:44 IST
இது எல்லாம் ஒரு நியூஸ்....
sheriff - chennai,இந்தியா
2010-07-24 03:36:51 IST
அடியே ரஞ்சிதா காதுல பூ சுத்தலாம்னு நெனக்காதே...
sattiamourthy - virychattion,பிரான்ஸ்
2010-07-24 02:46:58 IST
local nithianantha, local rangitha and local indian people....
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-07-24 02:39:49 IST
அட போங்கடா டேய். சும்மா இப்போ ரோட்ல ரெண்டு நாயிங்க அசிங்கம் பண்ணிட்டு இழுத்துட்டு கிடந்தா அதை இவளோ ஆராய்ச்சி பண்றோமா? ஒரு வகை சிலந்தி இருக்காம். அதுல ஆண் சிலந்தி பெண் சிலந்தி கூட உடல் உறவு வெச்சு முடிஞ்ச உடனே செத்து போயிடுமாம். அது தெரிஞ்சும் கூட இந்த ஆண் சிலந்தி, இருக்கிற கேந்தில அதுக்கிட்ட போகுமாம். அதுக்கு இருக்கிற மயக்கத்தில மேட்டர முடிச்சிட்டு அங்கேயே விழுந்து செத்து போயிடுமாம். அது போலதாண்டா இதுவும். எல்லாமே தெரிஞ்சும் அந்த ஒம்போது மடில போய் விளுகிரவளுகளை என்ன செய்ய முடியும். அதுவும் இல்லாம இப்படி எல்லாம் ஒரு சொப்பை அரசாங்கத்தை வெச்சுக்கிட்டு நாம எல்லாம் சும்மா வயிறு எரிஞ்சு கத்தி கத்தி என்ன பிரயோஜனம்? சொல்லு. விடு போவட்டும். கடசில போய் எதாச்சும் சீ புடிச்ச சீக்கு எதையாச்சும் வாங்கிட்டு வரட்டும். அவளோதான்....
மீரான் - dubai,யூ.எஸ்.ஏ
2010-07-24 02:37:02 IST
நீ இல்லை நம்பி விட்டோம். சீக்கிரமா வந்து நம்ம கட்சியில் இணைந்து விடு...
ஸ்ரீராம் - Atlanta,உஸ்பெகிஸ்தான்
2010-07-24 02:29:21 IST
ஹாலிவுட் வரி விளம்பரம் ஹாலிவுட்டில் மிகபெரிய சினிமா நிறுவனத்திற்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் designer தேவை. தகுதியானவருக்கு கீழே கூறியுள்ள முன் அனுபவம் தேவை. நித்யானந்தாவின் வீடியோவில் உள்ள பெண்ணை எப்படி ரஞ்சிதாவாக கிராபிக்ஸ் செய்தார்களோ அப்பேற்பட்ட கிராபிக்ஸ் designer மட்டுமே தேவை. பின்குறிப்பு : ஹாலிவுட் சினிமா கம்பெனியால் அப்படிப்பட்ட கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் designer-ஐ உலகம் முழுவதும் தேடியும் கண்டே பிடிக்கமுடியவில்லை....
வcr - Iran,இந்தியா
2010-07-24 02:12:22 IST
நீங்க மாறி மாறி சொல்லிட்டா சரியாய் போச்சா...
சரவணன் - London,உருகுவே
2010-07-24 01:47:03 IST
கடவுள் என்ற ஒருவர் இருப்பது உண்மையானால் மக்களின் நம்பிக்யோடும் உணர்வுகளோடும் விளையாடும் இது போன்ற போலி சாமியார்கள் இறைவனால் தண்டிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை....
நாசர் cute boy - uae,இந்தியா
2010-07-24 00:53:02 IST
அதான் உலகமே பாத்துருச்சே. அப்புறம் ஏன் இல்லேன்குற. ஆமானு சொல்லிட்டு போடி...
யாழ்ப்பாணம் நெடுந்தீவுப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம்
| ||
|
காலி வீதியில் குப்பை கொட்டிய 52 பேர் கைது
சூழல் பாதுகாப்புப் பொலிஸ் பிரிவினர் நேற்றிரவு சிவில் உடையில் காலி வீதியில் குப்பை கொட்டிய 52 பேரை கைது செய்துள்ளனர்.
அச்சமயம் குப்பை பைகளுடன் மற்றும் காரில் வந்து காலி வீதியில் குப்பை வீசியோரை உடனே கைது செய்து அவர்களை கல்கிசைப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து அவர்களுக்கெதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். நேற்று இரவே இவர்கள் அனைவரும் 1000 ரூபாய் தண்டப் பணம் செலுத்தியபின் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்

இளையராஜா,படத்துல பாட்டுக்கு இடமில்லேன்று சொல்றியா...?'
இளையராஜா ஒரு படத்துக்கு இசையமைக்க ஒப்புக் கொள்வதே பெரிய விஷயமாகிவிட்ட இன்றைய சூழலில், அவர் அனுபவித்துப் பாடிக் கொடுத்த 3 பாடல்களை படத்தில் பயன்படுத்தாமல் விட்டிருக்கிறார் ஒரு இயக்குநர். அவர் மிஷ்கின்.
தனது நந்தலாலா படத்துக்கு ராஜா போட்டுக்கொடுத்த 5 அற்புதமான பாடல்களில் இரண்டை மட்டுமே பயன்படுத்த முடிந்ததாம்.
நந்தலாலா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அதற்கான காரணத்தைச் சொன்னார் மிஷ்கின்.
பொங்கல் திருநாளன்று சென்னை போர் பிரேம்ஸ் திரையரங்கில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் பேசியது:
சித்திரம் பேசுதடி படத்திற்கு பிறகு அடுத்த படமாக நந்தலாலாவைத்தான் எடுக்க வேண்டும் என்று திரைக்கதை எழுதி தயாராக வைத்திருந்தேன். ஆனால் கடைசியில் டீக்கு கூட காசில்லாத சூழலுக்கு வந்துவிட்டேன். அந்த வேகத்தில் எழுதிய திரைக்கதைதான் அஞ்சாதே.
அதுக்குப் பிறகு மீண்டும் இந்தக் கதையை எடுக்க முயன்றேன். ஆனால் கதையை கேட்டபிறகு ஒரு ஹீரோவும் நடிக்க முன்வரல. அப்புறம்தான் நானே நடிக்க முடிவு செய்தேன். இந்தக் கதையை எடுத்துக் கொண்டு ஐங்கரன் ஆபிசுக்கு போனேன். 'கேட்டு பார்க்கலாம்... ஒத்துக்கிட்டா பண்ணலாம்'னுதான் போனேன்.
நான் கதை சொல்ல முன்வந்த போதும், வேணாம்... உங்க மேல் நம்பிக்கை இருக்கு என்று சொல்லி இந்த படத்தை எடுக்க முன்வந்தாங்க கருணாமூர்த்தியும், அருண்பாண்டியனும்! இந்த ரெண்டு பேரையும் என்னுடைய தாயாக நினைக்கிறேன்.
நந்தலாலாவைத் தாங்கியிருப்பவர் இசைஞானி இளையராஜா. அவர் போட்டுக் கொடுத்த 5 பாடல்களில் இரண்டை மட்டும்தான் படத்தில் என்னால் வைக்க முடிஞ்சது. இதை எப்படி அந்த மனிதரிடம் சொல்வது என தயங்கினேன்.
வேறு வழியின்றி சொன்னபோது, அவர் என்னைப் பார்த்து, 'படத்துல பாட்டுக்கு இடமில்லேன்று சொல்றியா...?' என்றார்.
எனக்கு செருப்பால் அடித்தது போலிருந்தது. மிகுந்த குற்ற உணர்ச்சியுடன், 'இல்ல சார், ரெண்டு பாட்டுக்கு மேல வைக்கிறது இந்தக் கதையில தர்மமா படல...' என்றேன். இசைஞானியிடம் மன்னிப்பும் கேட்டேன்.
ஆனா அதுக்கப்புறம், இந்தப் படத்து க்ளைமாக்ஸூக்கு அவர் போட்டிருக்கிற இசை, இன்னொரு அதிசயம். ராஜா சாருடன் பணியாற்றியதில் என் திரை வாழ்க்கையே நிறைவு பெற்றது போன்ற ஒரு உணர்வு, என்றார் மிஷ்கின்.

நரபலியை செய்ததாக அப்துல் கபுர் வாக்குமூலம், உடலை ஏர்வாடி தர்ஹா அருகிலும்
மதுரை அருகே உள்ள எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் ஷிரின் பாத்திமா. இவரது கணவர் யூசப் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு விபத்தில் மரணம் அடைந்தார். இதனால் மன சோர்வுடன் இருந்த ஷிரின் பாத்திமா, தனது 1 1/2 வயது குழந்தை காதர் யூசுப்புடன், கடந்த 2ஆம் தேதி மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தர்ஹாவுக்கு சென்றுள்ளார்.
பிராத்தனையில் ஈடுபட்ட பாத்திமா இரவு தனது குழந்தையுடன் தங்கியுள்ளார். காலையில் எழுந்ததும் அருகில் குழந்தை இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பாத்திமா , இதுகுறித்து கோரிப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இவ்வழக்கை விசாரித்து வந்த கோரிப்பாளையம் இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன், காயல்பட்டினத்தைச் சேர்ந்த அப்துல் கபுர்(30) என்பவரை கைது செய்தார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குழந்தையை கொலை செய்து தலையை தூத்துக்குடியிலும், உடலை ஏர்வாடி தர்ஹா அருகிலும் புதைத்திருப்பதாக தெரிவித்தார். குழந்தையின் உடலை மீட்க குற்றவாளி அப்துல் கபுருடன் தாசில்தார், உயர் அதிகாரிகள், போலீசார் ஆகியோர் தூத்துக்குடி விரைந்துள்ளனர்.
தலைச்சம் பிள்ளையை நரபலி கொடுத்தால் தோஷம் நீங்கும் என்று சொன்னதால், இந்த நரபலியை செய்ததாக அப்துல் கபுர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
கருணாஸ் புகார், நாம் தமிழர் அமைப்பு மிரட்டுகிறது
நான் இலங்கை போகக் கூடாது என நாம் தமிழர் அமைப்பு மிரட்டி வருகிறது என்று சென்னை போலீஸ் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார் காமெடி நடிகர் கருணாஸ்.
இதுகுறித்து சென்னை ஆணையர் அலுவலகத்தில் அவர் ஒரு புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் சொந்த வேலையாகவே இலங்கை செல்கிறேன். குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்க இலங்கை செல்லவுள்ளேன். ஆனால் அதை ரத்து செய்யுமாறு நாம் தமிழர் அமைப்பு மிரட்டி வருகிறது.
இதுகுறித்து கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன். இந்த மிரட்டலுக்காக எனது இலங்கை பயணத்தை நான் ரத்து செய்யப் போவதில்லை என்றார் கருணாஸ்.

பதிவு செய்தவர்: அன்பு
பதிவு செய்தது: 24 Jul 2010 5:40 pm
துப்பு கெட்ட இயக்கம் நாம் தமிழர் இயக்கம்.. தில் இருந்தா இந்திய கிரிக்கெட் டீம் கிட்ட உங்க வேலைய காட்டுங்க..
வெள்ளைக் கொடிகளுடன் சரண் அடைய வந்த தமிழீழ விடுதலைப் புலிகளைப்
வெள்ளைக்கொடி வழக்கு குற்றப்பத்திரிகை 29ம் திகதி தாக்கல் செய்யப்படுகின்றது,
வெள்ளைக் கொடிகளுடன் யுத்தத்தின் இறுதி நாட்களில் அரச படையினரிடம் சரண் அடைய வந்த தமிழீழ விடுதலைப் புலிகளைப் படுகொலை செய்ய வேண்டும் என்று பாதுகாப்பமைச்சர் உத்தரவிட்டிருக்கின்றார் என்று சண்டே லீடர் பத்திரிகைக்கு முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா பேட்டியளித்திருக்கின்றார் என்று குற்றஞ்சாட்டி தாக்கல் செய்யப்பட்டிருக்கும் வழக்கு கொழும்பு மேல்நீதிமன்றத்தில் எதிர்வரும் 29 ஆம் திகதி அழைக்கப்பட உள்ளது.
அன்றைய தினம் இவர் மன்றுக்கு ஆஜராக வேண்டும் என்று இந்நீதிமன்றம் அறிவித்தல் வழங்கி இருக்கின்றது. சட்டமா அதிபரால் இந்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் குற்றப் பத்திரம் பொன்சேகாவுக்கு அன்றைய தினம் வாசித்துக் காட்டப்பட்டு குற்றத்தை ஒப்புக் கொள்கின்றாரா?இல்லையா? என்று வினவப்படும்.
ட்ரயல் அட் பார் முறையில் இடம்பெற இருக்கும் இவ்வழக்கை மேல்நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர தலைமையில் சக நீதிபதிகளான வி.வரவெவ,எஸ்.சற்.ரஸீம் ஆகியோர் விசாரிப்பார்கள்.
...............................

Written By ilankainet
அன்புமணி ராமதாஸ, கூட்டணி பற்றி யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை.
திருப்பத்தூர்: கூட்டணி பற்றி யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை. அதை தலைவர் ராமதாஸ் பார்த்துக் கொள்வார். பாமக இல்லாமல் யாரும் ஆட்சிக்கு யாரும் வரமுடியாது என்று அக் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறினார்.
பாட்டாளி மக்கள் கட்சி முதன்மை கட்சியாக வரவேண்டும் என பேசிக் கொண்டே இருந்தால் வராது. தொண்டர்கள் கடுமையாக உண்மையாக உழைக்க வேண்டும். கிராமந்தோறும் வீடு வீடாக சென்று மக்களின் குறைகளை கேட்டறிய வேண்டும்.
தமிழகத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளை தேர்வு செய்து கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஒவ்வொரு தொகுதியிலும் 5 நாட்கள் தங்கி கிராமம் கிராமமாக சென்று மக்களை உற்சாகப்படுத்த உள்ளோம்.
வெறிபிடித்த அடிமட்ட தொண்டர்கள் இருப்பது நமது கட்சியில் மட்டும் தான். நமது கட்சியை அழிப்பதற்கு யாரும் பிறக்கவில்லை. பிறக்கவும் முடியாது. அப்படி நினைத்தால் அவர்கள் தான் அழிந்து போவார்கள்.
பாமக 7 இடங்களில் தோற்றதும் அழிந்து விட்டது, ஒழிந்து விட்டது என்று பலர் கூறினர். பாமகவை யாராலும் அழிக்கவோ, ஒழிக்கவோ முடியாது.
கட்சி நிர்வாகிகள் பழைய ஆட்களை சென்று பார்க்க வேண்டும். அவர்களது குறைகளை கேட்டு மீண்டும் அவர்களை அழைத்து வரவேண்டும். வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள் நமது கட்சியில் சேர்வதற்கு தயாராக உள்ளனர். அவர்களை அணுகி நமது கட்சியில் புதியதாக சேர்க்க வேண்டும்.
இதற்கு முன்பு எப்படி இருந்ததோ தெரியாது. இனி இப்படி தான் இருக்க போகிறோம். கட்சிக்காக முழு நேரத்தை நான் செலவிட போகிறேன். எந்த பிரச்சனையாக இருந்தாலும் இனி அந்த இடத்திற்கு நான் வந்து நிற்பேன். நமது கட்சியில் கோஷ்டிகள் இருக்ககூடாது. நாம் அனைவரும் ராமதாஸ் கோஷ்டி தான்.
அடுத்தபடியாக பாலாறு பிரச்சனை. இதற்காக பலமுறை நமது கட்சி பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளது. இருப்பினும் ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்டி வருகிறது. எனது தலைமையில் பாலாற்றின் குறுக்கே கட்டப்படும் அணையை உடைக்கும் போராட்டம் விரைவில் நடைபெறும்.
கட்சிக்காக உழைப்பவர்களுக்கு உயர்ந்த பொறுப்புகள் வழங்கப்படும். பொறுப்பில் இருந்தும் செயல்படாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பென்னாகரம் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் நாம் தோற்கடிக்கப்பட்டோம். அது ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்ட தேர்தல். நாம் பணம் தராமல் இரண்டாவது இடம் பெற்றோம். இனி பென்னாகரம் தேர்தல் பார்முலாவை பயன்படுத்த உள்ளோம்.
கூட்டணி பற்றி யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை. அதை தலைவர் ராமதாஸ் பார்த்துக் கொள்வார். பாமக இல்லாமல் யாரும் ஆட்சிக்கு யாரும் வரமுடியாது.

பதிவு செய்தவர்: சொறிமணி
பதிவு செய்தது: 24 Jul 2010 8:03 am
வெறிபிடித்த அடிமட்ட தொண்டர்கள் (நாய்கள்) இருப்பது நமது கட்சியில் மட்டும் தான்.
பதிவு செய்தவர்: நெல்லை செந்தில்
பதிவு செய்தது: 24 Jul 2010 7:17 am
புகையிலைக்கு தடை போடுவானே என்று மிரட்டி சி டி சி உட்பட எல்லா கம்பெனி கிட்டயும் லஞ்சம் பெற்ற ஜாதி வெறியன், மருந்து கொள்முதலில் சுருட்டியவன் மருத்துவ கல்லூரி களில் கல்லா கட்டிய பொறம்போக்கு குடும்பத்திலே யாரும் அமைச்சர் பதவிக்கு வர மாட்டோம் என்று கூறியே கொல்லைவாசல் வழியே மந்திறியான் அயோக்கிய சிகாமணி நீயும் உன் கட்சியும் அழியும் காலம் வெகு தொலைவில் இல்லை அந்த ப்ராஜெக்ட் எங்க அண்ணன் அழகிரி இடம் உள்ளது பேசாமல் போத்திகிட்டு படுடா மரம்வெட்டி
மதராசபட்டினம், வெளிநாட்டு கதா நாயகியை வைத்து படம் எடுத்தால் ஓடுமா? என்று பலர்
ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதய நிதி ஸ்டாலின் தயாரித்த மதராசபட்டினம் சினிமா படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. இப்படத்தின் கதாநாயகன் ஆர்யா, கதாநாயகி லண்டன் அழகி எமி ஜாக்சன். படத்தை விஜய் இயக்கி உள்ளார். ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் கோவை கே.ஜி. மற்றும் அர்ச்சனா தியேட்டர்களில் திரையிடப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது.
படத்தின் கதாநாயகன் ஆர்யா, கதாநாயகி எமி ஜாக்சன் மற்றும் இயக்குனர் விஜய், இசை அமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் ஆகியோர் கே.ஜி. பிக் சினிமா தியேட்டரில் ரசிகர்கள் முன் வந்தனர். அவர்களை பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். கதாநாயகியை அருகில் சென்று பார்க்கும் ஆசையில் அருகில் நெருங்கினார்கள். படத்தின் கதாநாயகன் ஆர்யா கூறியதாவது:-
மதராசபட்டினம் படப்பிடிப்பு தொடங்கும் போதே வெளிநாட்டு கதா நாயகியை வைத்து படம் எடுத்தால் ஓடுமா? என்று பலர் பயமுறுத்தினார்கள். ஆனால் வித்தியாசமாக எடுத்தால் மக்கள் விரும்புவார்கள் என்ற நம்பிக்கையில் படம் எடுத்தோம். எங்களது ஒட்டு மொத்த படக்குழுவினரும் தன்னம்பிக்கையோடு வேலை செய்தனர். புதுமையை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். என்று இந்த படம் மூலம் தெரிகிறது. இவ்வாறு கூறினார்.
கதாநாயகி எமி.ஜாக்சன் கூறும் போது எனக்கு சென்னை ரொம்ப பிடித்து இருக்கிறது. தமிழில் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என்றார்.
தியேட்டருக்கு வந்த நடிகர் ஆர்யா, நடிகை எமி ஜாக்சனுக்கு கே.ஜி. பிக் சினிமா சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மதராசபட்டினம் வினியோகஸ்தர் கந்தசாமி, ஆர்ட் சென்டர் உரிமையாளர் ராஜமன்னார், மேலாளர் சிந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.

குறைந்த விலைக்கு லப்டாப்,1500 இந்திய ரூபாவாகும
by salasalappu்
இந்தியாவில் அறிமுகம்
இந்தியாவில் முதன்முறையாக மிகக்குறைந்த விலையிலான சிறிய ரக லப்டாப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது முற்றிலும் மாணவர்களுக்குப் பயன்படும்படி வடிவமைக்கப்பட்டுள்ளதாக இதனை தயாரித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த லப்டாபபின் அறிமுக விலை 1500 இந்திய ரூபாவாகும் என்றும் எதிர்காலத்தில் இதன் விலை மேலும் கணிசமாக குறையூம் என்றும் தொரிவிக்கப்படுகிறது.
இந்த சிறிய ரக லப்டாப்பை இந்திய மத்திய மனிதவள அமைச்சர் கபில் சிபல் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
2011ம் ஆண்டு முதல் இதனை சந்தைக்கு விட எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு மக்கள் இனி நம்ப மாட்டார்கள்,புலிகள் அந்த அளவு பேதி கொடுத்தார்கள்
இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் இந்திய அரசின் முக்கிய அமைச்சர்கள் பலரையும் சந்தித்த சம்பந்தன் ்குழு வடக்கு, கிழக்கை மீளவும் இணைப்பதற்கு இந்தியா நடவடிக்கை எடுக்கவேண்டும் வெளியிட்டிருக்கிறது
கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் பேசிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஸ், ‘வடக்கு, கிழக்கை இணைக்கக் கோரும் உரிமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடையாது என்றும் அவர்கள் அதுபற்றித் தம்முடன் பேசாமல் இந்தியாவுடன் பேசியது தவறு’ என்றும் கூறியிருந்தார்.
அத்துடன் வடக்கு, கிழக்கு இணைப்பை முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது’ என்றும் அவர் கூறியிருந்தார். வடக்கு, கிழக்கு இணைப்புத் தொடர்பாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அண்மைக்காலம் வரை வெளிப்படையாக எந்தவொரு எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.
இது தொடர்பாக நழுவல் போக்குள்ள கருத்தையே வெளியிட்டு வந்தது. ஆனால் இப்போது வடக்கு, கிழக்கு இணைப்பை ஏற்க முடியாது என்று கூறியிருக்கிறது. வடக்கையும் கிழக்கையும் ஒருபோதும் இணைக்கப் போவதில்லை என்பது இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு. இந்த இணைப்பு தமிழர்களின் விருப்பமாக இருந்தாலும் அது நடக்கக் கூடிய காரியமா என்பது சந்தேகம் தான்.
comments:
சம்பந்தன் சுரேஷ் மாவை போன்றோர் பல நடக்க முடியாத கோரிக்கைகளையும் எழுப்புவது வழக்கமான தமிழ் இனவாத அரசியல்வாதம். தங்களின் ஒரு மாத சம்பளத்தைத்தானும் அகதிகளுக்கு கொடுத்து உதவாத இந்த உதவாக்கரைகளை இன்னும் தமிழ் மக்களின் ஒரு பகுதியினர் நம்புவது துர்பாக்கியம்.
கிழக்கு மாகான தமிழ் மக்கள் இனி இணைந்த வட கிழக்கு மாகாண அரசாங்கத்தை அமைக்க ஆதரவு தருவார்கள் என்று எந்த அறிவாளியும் சத்தியமாக நம்ப மாட்டார்கள். அந்த அளவு புலிகள் கிழக்கு மாகாணத்திட்கு பேதி கொடுத்தார்கள். அங்கு மட்டும் 40000 விதைவைகள் உள்ளார்கள் . இனி போதும் வடக்காரே போதும்.
மகளிர் இன்ஸ்பெக்டர் மீது லஞ்சப் புகார் : வீடியோவில் பதிவு செய்தவர் கைது
திருப்பூரில் மகளிர் இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது. இதை வீடியோவில் பதிவு செய்த "வீடியோ' சுப்ரமணியம் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் தாராபுரம் ரோடு கரட்டாங்காடு பகுதியை சேர்ந்த நாச்சிமுத்து மகன் சுப்ரமணியம்; "வீடியோ' சுப்பிரமணியம் என்றால் திருப்பூரில் பரிச்சயம். லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை, அரசு அலுவலர்களை, லஞ்சம் வாங்கும்போது மறைந்திருந்து வீடியோவில் பதிவு செய்வது இவரது வழக்கம். வீரபாண்டியை அடுத் துள்ள அய்யம்பாளையத் தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் காப்பகம் நடத்தியவர் பிரபாவதி; குழந்தைகளை கடத்தி விற் றதாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு விசாரணையை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி மேற்கொண்டார். விசாரணை நடத்தும்போது, கரட்டாங்காடு பகுதியில் உள்ள லட்சுமி எலக்ட்ரிக் கல்ஸ் என்ற கடையில் இருந்து, காப்பகத்துக்கு மோட்டார் மற்றும் மின்வசதிகள் செய்து தரப்பட்டது தெரியவந்தது. அதற்கான பில் உள்ளிட்ட ஆவணங்கள், போலீசாரின் விசாரணையின் போது கிடைத்துள்ளது. கடை உரிமையாளர் சரவணன் என்கிற மாதேஸ்வரனை, இவ்வழக்கில் சாட்சியமாக போலீசார் சேர்த்துள்ளனர்.
இன்ஸ்பெக்டர் இந்திராணி நேற்று மதியம் கரட்டாங்காடு பகுதியில் உள்ள லட்சுமி எலக்ட்ரிக்கல் கடைக்கு சென்றுள்ளார்; அங்கிருந்த கடை உரிமையாளர் சரவணனிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாகவும், அதை "வீடியோ' சுப்ரமணியம் மற்றும் அவரது உதவியாளர் அத்துல் வீடியோவில் பதிவு செய்ததாகவும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார், நான்கு வாகனங்களில் சென்று "வீடியோ' சுப்ரமணியம், சரவணன், அத்துல் ஆகிய மூவரையும் பிடித்து தெற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். பின், சுப்ரமணியத்தை ரூரல் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்ற போலீசார், ஸ்டேஷனில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.
பரபரப்பு: "வீடியோ' சுப்பிரமணியம் கைது செய்யப்பட்ட சம்பவத்தால் நேற்று திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்டேஷனில் வைத்து சுப்ரமணியத்தை போலீசார் கடுமையாக தாக்குவதாகவும், அவர் காலை உடைத்து விட்டதாகவும் தகவல் பரவியதால், ரூரல் போலீஸ் ஸ்டேஷன் முன் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டனர். திருப்பூர் துணை மேயர் செந்தில் குமார், இந்து முன்னணி மாநில பொது செயலாளர் சுப்பிரமணியம், கோட்ட ஒருங்கிணைப்பாளர் கிஷோர்குமார் மற்றும் இதர கட்சிகள் சார்ந்த சிலர் ஸ்டேஷனுக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாலை 6.00 மணி வரை பரபரப்பு நீடித்த நிலையில், போலீசாரை பணிசெய்ய விடாமல் தடுத்தாக 332வது பிரிவின் கீழ் "வீடியோ' சுப்ரமணியம், அவரது உதவியாளர் அத்துல்; இதற்கு உடந்தையாக செயல்பட்ட கடை உரிமையாளர் சரவணன், கடை ஊழியர்கள் சண்முகம், மணி மற்றும் முருகேசன் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்; இவர் கள், திருப்பூர் ஜே.எம்., கோர்ட் எண் 2ல் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள் சிறைக்காவலில் வைக்கப் பட்டனர்.
லஞ்சம் வாங்கியது உண்மையா? இன்ஸ்பெக்டர் இந்திராணி 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக புகார் உள்ள நிலையில், போலீஸ் தரப்பில் அது முற்றிலுமாக மறுக்கப்பட்டுள்ளது; இச்சம்பவம் தொடர்பாக வீடியோவில் பதிவான காட்சிகளை போலீசார் வெளியிடவில்லை. அதேபோல், கைது செய்யப்பட்ட"வீடியோ' சுப்ரமணியத்தை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை. நிருபர்கள் மற்றும் புகைப்படக்காரர்களை ஸ்டேஷனுக்குள் போலீசார் செல்ல விடாமல் தடுத்தனர். தெற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் சம்பவம் நடந்த நிலையில், ரூரல் ஸ்டேஷனுக்கு சுப்ரமணியத்தை அழைத்துச் சென்று மறைவிடத்தில் வைத்து விசாரணை நடத்தியதால் மர்மம் நீடிக்கிறது.
லஞ்சம் வாங்கவில்லை; டி.எஸ்.பி., உறுதி: டி.எஸ்.பி., ராஜா நிருபர்களிடம் கூறியதாவது; பிரபாவதி வழக்கு விசாரணை தொடர்பாக, எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் சரவணன், இன்ஸ்பெக்டர் இந்திராணிக்கு பரிச்சயமாகி உள்ளார். அவர்களது கடையில் மொபைல் போன் சர்வீசும் இருந்ததால், தனது பழுதடைந்த மொபைல் போனை சரி செய்யவே, அவர் அக்கடைக்குச் சென்றுள்ளார். அங்கு மறைந்திருந்த சுப்ரமணியம், படம் பிடித்து லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டி மிரட்டியுள்ளார். பிரபாவதி வழக்கில் சாட்சியமாக சேர்க்கப்பட்ட சரவணனிடம் பணம் கேட்டு வற்புறுத்தவோ, கட்டாயப்படுத்தவோ போலீசாருக்கு வாய்ப்பு இல்லை. மருத்துவ விடுப்பில் மூன்று நாட்களாக உள்ள இன்ஸ்பெக்டர் இந்திராணி, பரிச்சயமானவர் என்ற முறையில் சரவணனின் கடைக்குச் சென்றபோது, வீடியோவில் படம் பிடித்து மிரட்டப்பட்டுள்ளார், என்றார்.
சுப்ரமணியம் "சமூக சேவை'யாளரா? கைது செய்யப்பட்ட "வீடியோ' சுப்ரமணியம், அரசு தரப்பிலும், அதிகாரிகள் தரப்பிலும் பல்வேறு குற்றவாளிகளை வீடியோவில் பதிவு செய்து மக்களுக்கு வெளிச்சப்படுத்தியவர். தன்னை சமூக சேவையாளராக மக்களுக்கு அடையாளம் காட்டிக் கொண்டவர். அதேநேரத்தில், இவரது வீடியோ வெளிச்சத்தில் விழுந்த சிலரை, ஊழல் ஆதாரத்தை வெளியிடாமல் மறைக்க, பல லட்சங்கள் கேட்டு அவர் பேரம் பேசியதாகவும் குற்றச்சாட்டு நிலவுகிறது. லஞ்சம் வாங்கியதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பதிவு செய்து சில மாதங்கள் கழிந்த நிலையில், இவர் வீடியோ ஆதாரங்களை வெளியிடுவதால், குறிப்பிட்ட காலம் வரை இவர் தன்னிடம் சிக்கிய ஊழல் பேர்வழியிடம் பேரம் பேசியதாகவும், பேரம் படியாதவர்களின் ஊழலை மட்டுமே அம்பலப்படுத்தியதாகவும் சந்தேகங்கள் உள்ளன. இந்நிலையில், அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

வாசகர் கருத்து (24)
singam - namakkal,இந்தியா
2010-07-24 07:41:56 IST
இந்த மாதிரி நடபதால் தான் எவனும் சாட்சி சொல்ல வருவதில்லை ,.....போலீஸ் உங்கள் நண்பன் என்பதன் அர்த்தம் இதுதானோ ?...
ஸ்ரீராம் - chennai,இந்தியா
2010-07-24 07:41:14 IST
நல்லதுக்கு காலம் இல்லை...
பாமரன் - chennai,இந்தியா
2010-07-24 07:37:34 IST
"மருத்துவ விடுப்பில் மூன்று நாட்களாக இன்ஸ்பெக்டர் இந்திராணி உள்ளார்" எனில் போலீசாரை பணிசெய்ய விடாமல் தடுத்தாக 332வது பிரிவின் கீழ் எவ்வாறு சுப்ரமணியத்தை arrest செய்ய முடியும்..?...
ஒருகடிதபுகழ்கொண்டான் - kadithavoor,இந்தியா
2010-07-24 07:34:42 IST
இக்கால ராபின் ஹூட்?...
தாஸ் - chennai,இந்தியா
2010-07-24 07:15:36 IST
** பேரம் படியாதவர்களின் ஊழலை மட்டுமே அம்பலப்படுத்தியதாகவும் சந்தேகங்கள் உள்ளன ** அப்போ ஊழல் செய்தவங்களை மட்டும்தான் படம் பிடிச்சிருக்கார்னு ஒத்துக்கரிங்க! முதலில், அவங்களை தண்டியுங்க. அப்புறமா மீதி இருக்கறவங்க வேற கேசுல மாட்டுவாங்க. நேர்மை இல்லாதவர் சொன்னா உண்மை இல்லைன்னு ஆயிடுமா? எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு!...
கே.ரமணி - chennai,இந்தியா
2010-07-24 07:03:44 IST
இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றதுதான். மக்களுக்குத் தெரியாதா நம்மூர் போலிசின் லட்சணம். வெட்கம்....
சூர்யா - Mangalore,இந்தியா
2010-07-24 06:40:13 IST
எந்த நல்லவனையும் விட்டுவைக்க மாட்டோம் ! நாங்க லஞ்சம் வாங்குறத படம்பிடிச்சு பிரச்னை பண்ணுற சுப்ரமணியத்தை உள்ள தள்ளி பாடம் கற்பிப்போம் ! இது வருவாய்த்துறை மற்றும் போலீஸ் கூட்டுத்திட்டம் !...
ramalingam - chennai,இந்தியா
2010-07-24 06:16:03 IST
இது போன்று வீடியோ எடுத்து மிரட்டுவது வர வர அதிகமாகி போச்சு. முதலில் குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் இருக்கு. நீதி கொடுக்க கோர்ட் இருக்கு. சாதாரண மக்கள் இது போல் வீடியோ எடுப்பதை முதலில் தடை செய்ய வேண்டும்.இவர்கள் சமூகத்துக்கு நல்லது செய்கிறார்களா அல்லது மிரட்டி பணம் பன்னுகிரர்களா என தெரிவதில்லை. கயவர்களை அடையலாம் காட்ட வீடியோ எடுத்தேன் என சம்மந்தப்பட்டவர் கூறினாலும் யார் நம்புவது. பெட்ரூமில் வீடியோ எடுத்து இரண்டு மாதம் கழித்து தொல்லைகட்சிகளில் போடுவது. எதை எல்லாம் கண்டிப்பாக அனுமதிப்பது கூடாது. காவல்துறை இது போன்று நடப்பவர்களை முதலில் தீர விசாரித்து பின்னர் நடவடிக்கை எடுக்கவேண்டும....
bakruthin - muara,புருனே
2010-07-24 06:12:32 IST
ஆஹா இல்லேனாலும் உங்க போலீஸ் துறைக்கு லஞ்சம் என்றால என்னன்னு தெரியாது பாரு ? சரி சரி இருக்குற கேச எல்லாம் அவரு மேல போடுங்க...
True Indian Abu dhabi - abudhabi,இந்தியா
2010-07-24 05:57:59 IST
இந்திராணி விஷயத்தில் எந்த அளவு உண்மை என்பது எனக்கு தெரியாது. வீடியோ சுப்ரமண்யம் போன்றவர்கள் லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களையும் அரசியல்வாதிகளையும் வெளிச்சத்துக்கு கொண்டுவருவது வரவேற்கத்தக்கது. அரசியல் செல்வாக்குள்ளவர்கள் இதனால் லஞ்சப்புகாரில் பிடிபட்டால் சுப்ரமணியனின் நிலை பரிதாபமாகிவிடும். உண்மை எப்போதும் உண்மைதான்.Jai Hind...
kim - seoul,இந்தியா
2010-07-24 05:41:43 IST
எது உண்மை ? !! போலிஸ் உண்மை பேசுவது மிக மிக அரிது !!...
ஜெயகுமார் - newcastle,இந்தியா
2010-07-24 05:00:58 IST
லஞ்சம் வாங்கவில்லை என்றால் ஏன் அவரை கைது செய்யவேண்டும்? அவர் பதிவு செய்த வீடியோ வை கொடுத்தால் போலீஸ் என்ன செய்யும் ? அவர் அவர் வழியில் சமூக சேவை செய்திருக்கலாம். அது போலீசுக்கு பொறுக்க வில்லை ......
ராஜ் - chennai,இந்தியா
2010-07-24 04:56:23 IST
This is a classic case of police abuse for you. Charge people who fight against corruption with false cases and intimidate until they give up. These abuses will go on until we the common citizenry wisen up....
ரங்கராஜ் - losanglesusa,இந்தியா
2010-07-24 04:06:55 IST
யாரைத்தான் நம்புவதோ? தனக்கு சாதகமாக வழக்கு என்று ஒவ்வொருவரும் கூறினால் என்னதான் உண்மை ? எப்படி கண்டுபிடிப்பது /?மனசாட்சிப்படி நடங்கள் .....
முஹம்மது பிலால் - Kualalumpu,மாலத்தீவு
2010-07-24 03:51:03 IST
பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்...
SHERIFF - CHENNAI,இந்தியா
2010-07-24 03:46:31 IST
SUBRAMANIKU IDU THEVAI ILLAADA VELA...
டைகர் - Trichy,இந்தியா
2010-07-24 03:08:51 IST
வீடியோ எடுத்த நபர் ஒன்னும் தேச விரோத செயலை செய்யவில்லை!! அதற்கு ஏன் போலீசார் அவரை மறைவு இடத்தில வைத்து விசாரிக்க வேண்டும்? ஏதோ உள்ளது.. அதோடு போலீசார் குற்றம் புரியவில்லை என்றால் எதற்கு பயப்படவேண்டும்? வீடியோ எடுக்கற நபர் உண்மையிலயே நாட்டு நல்லதுக்காக பண்ணியிருந்தால் நல்லது.. அவரும் பணம் சம்பாதிக்க வேணும்னு செஞ்சிருந்தா உள்ளே தள்ளியதில் தப்பு இல்ல !!...
அருளரசு - Chennai,இந்தியா
2010-07-24 02:38:02 IST
போலீஸ் செய்தது தவறு. லஞ்சம் வாங்கிய inspecter டிஸ்மிஸ் செய்யப்படணும்....
போலீஸ் - tamilnad,இந்தியா
2010-07-24 02:22:40 IST
நாங்க இந்த வேலைய தேர்ந்து எடுப்பதே அரசியவதிகளை ஓரம் கட்டி அதிகம் சம்பாதிக்கதான்,ஏனையா உங்களுக்கு காண்டு.வாழ்க வளமுடன்...
ஸ்ரீராம் - Atlanta,உஸ்பெகிஸ்தான்
2010-07-24 01:45:59 IST
இதில் யாரை குற்றம் சொல்வதென்றே தெரியவில்லை. ஒரு பக்கம் குற்றங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவருகிறேன் என்று சொல்லும் சமூக சேவை சுப்ரமணியம். அவரின் மறுபக்கமோ Black Mail செய்யும் மோசடி பேர்வழி என்று குற்றச்சாட்டு. இதில் எதை நம்புவது என்று புரியவில்லை. ஆனால் எல்லோருக்கும் ரஜினி படத்தில் வருவது போல் 5 நிமிஷ பாட்டுக்குள் பணக்காரனாகி விட ஆசை. இது அவர்களின் திறமை மற்றும் தன்னம்பிக்கை மேல் நம்பிக்கை இல்லாததையே காட்டுகிறது. பள்ளியில் Moral science பாடத்தை கட்டாயமாக்கி புதிய தலை முறையை உருவாக்கவேண்டிய கட்டாயத்தில் இப்போது இருக்கிறோம்....
தமிழன் - USA,உஸ்பெகிஸ்தான்
2010-07-24 01:28:46 IST
நல்ல அடிச்சு, கஞ்சா, அபின் பாக் தீவிரவாதி உடன் தொடர்பு, பிரபாகரன் கூட்டாளி நு சொலி 100 கேஸ் பூட்டு உள்ள தள்ளி பெண்டு எடுங்கடா. போலீஸ் பவர் என்னன்னு காமிங்கடா. இப்படி கேஸ் வீடியோ எடுக்க ஆரம்பிச்சா எல்லா போலீசையும் ஜெயில் ல தான் பாக்க முடியும். எங்க பொலப்பே லஞ்சத்தில தான் ஓடுது. அத வீடியோ எடுத்தா நாங்க சும்மா இருப்போமா? நாங்க வாழப்பழம் லஞ்சமா வாங்கிறது, சிகரெட் லஞ்சமா வாங்கிறது, Rs10 லஞ்சமா வாங்கிறது, பிச்சகாரன் தட்ல எடுக்குறது இத எல்லாம் நீங்க வீடியோ எடுப்பீங்க. நாங்க சும்மா இருப்போமா?...
மனம் நொந்தவன் - kovai,இந்தியா
2010-07-24 01:21:04 IST
தனி ஒரு மனிதனுக்கு இன்று இந்தியாவில் பாதுகாப்பும் உரிமையும் இல்லை. 332ஆவது பிரிவின் படி போலீஸ் லஞ்சம் வாங்குவதும் அவர்களுடைய அன்றாட வேலை போலும். நாட்டின் சரிவு வேகம் கூடிகொண்டே போகிறது...
கூலி - saakkadai,இந்தியா
2010-07-24 01:08:01 IST
நெருப்பு இருந்தாத்தான் புகையும்.. அதிகாரிகள் ஒன்றும் ஏஞ்சல் இல்லை.. அதையும் மீறி வீடியோ சுப்ரமண்யம் பழச மெயில் பண்ணினார் என்றால் திருடன் தேளை கொட்டிக்கொண்டதற்கு சமம் ...இதில் திருடனும் ஒஸ்தி இல்லை தேளும் ஒஸ்தி இல்லை ...பாவம் பொது ஜனம்! ..காசு கொடுத்து ஓட்டுப் போட்டதற்கு இதுவும் வேணும், இன்னமும் வரும்.....
காயமடைந்த இரு மயில்கள், விவசாயி வீட்டில் பராமரிக்கப்படுகிறது
அவிநாசி : காயமடைந்த இரு மயில்கள், கோதபாளையத்தில் விவசாயி வீட்டில் பராமரிக்கப்படுகிறது. அவிநாசி அருகே வஞ்சிபாளையத்தில் ஆண் மயில் ஒன்று பறக்க முடியாமல் அவதிப்பட்டதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள், திருப்பூரிலுள்ள வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் கொடுத் துள்ளனர். இருப்பினும் ஒருவரும் வரவில்லை.
இந்நிலையில், கோதபாளையம் - கரைத் தோட்டத்தை சேர்ந்த குருசாமி என்ற விவசாயி, மயிலின் நிலை குறித்து கால்நடை மருத்துவர் செந்தில்குமாரிடம் தெரிவித்தார். உடனடியாக அவர் சென்று, மயிலுக்கு சிகிச்சை அளித்தார். இதற்கிடையே, அதே பகுதியில் மற்றொரு ஆண் மயில் நோயுற்ற நிலையில் காணப் பட்டது. அதற்கும் சிகிச்சை அளிக்கப் பட்டது. இரு மயில்களின் நிலை குறித்து பல்லடம் வனச்சட்ட அமுலாக்கப்பிரிவு அலுவலகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.
வனக்காப்பாளர் வாசியப்பன், கோதபாளையம் சென்று மயில்களின் நிலை குறித்து ஆய்வு செய்தார். கால்நடை மருத்துவர் செந்தில்குமார்,""இரு நாட்கள் மயில்களை வைத்து உரிய மருந்து அளித்தால் மட்டுமே அவை குணமடையும்,'" என்றதால், வனத்துறை ஒப்புதலோடு, இரு மயில்களும் தற்போது குருசாமி வீட்டில் பராமரிக்கப்படுகின்றன.
பொதுமக்கள் கூறுகையில், "இப்பகுதியில் அடிக்கடி மயில்கள் காயமடையும் சம்பவம் நடக்கிறது. எனவே, இப்பகுதிக்கென்று தனியாக கால்நடை மருத்துவரை நியமிக்க வேண்டும்,' என்றனர்.கடந்த 18ம் தேதி கருவலூர் அருகே உப்பிலிபாளையத்தில் காயமடைந்த மயில் ஒன்றை, பொதுமக்கள் காப்பாற்றி, அவிநாசிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். இரு தினங்களுக்கு பின், மயில் காட்டில் விடப்பட்டது. அதற்குள் கோதபாளையத்தில் இரு மயில்கள் காயமடைந்துள்ளன.

சிவா மனசுல சக்தி என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வந்த அனுயா
நஞ்சுபுரம் படத்தில் நடிகை அனுயா ஆடியுள்ள குத்தாட்டம் டிவி விளம்பரங்களில் மட்டுமே ஒளிபரப்பப்படும். படத்தில் இருக்காதாம்.
சிவா மனசுல சக்தி என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வந்த மும்பை வரவான அனுயா, அடுத்த படமான மதுரை சம்பவத்தில் கலக்கலாக நடித்து தனது பலம் கவர்ச்சியில்தான் என்பதை வெளிப்படுத்தினார்.
அவரது கவர்ச்சித் திறனைப் பார்த்த கோலிவுட்டினர் இப்போது கவர்ச்சிகரமான வேடங்களுக்காக அவரை அணுகி வருகின்றனராம். அதேசமயம், சைடில் ஒரு குத்துப் பாட்டுக்கு நஞ்சுபுரம் படத்திற்கு ஆடினார் அனுயா. இதைப் பார்த்து, எங்க படத்திலும் ஒரு குத்து இருக்கே என்று வந்து அணுகியவண்ணம் உள்ளனராம். ஆனால் அத்தனையையும் நிராகரித்து விட்டாராம் அனுயா.
ஏன் என்று கேட்டால், நட்புக்காகத்தான் நஞ்சுபுரத்தில் ஆடினேன். மற்றபடி அது எனது இலக்கல்ல என்கிறார். மேலும் இந்த பாடல் படத்தில் வராதாம். டிவி விளம்பரங்களுக்கு மட்டுமே வருமாம். அதாவது பாப் பாடல் போல இதைப் படமாக்கியிருக்கிறார்களாம். படத்தின் ஹீரோவும், இசையமைப்பாளருமான ராகவ், அனுயாவின் தோழராம். அவர் கேட்டுக் கொண்டதால் ஆடிக் கொடுத்தாராம். மற்றபடி இது எனது முழு நேரத் தொழிலாகாது, அதேசமயம், எப்போதாவது ஆடுவேன் என்கிறார் அனுயா.
அனுயா இப்போது சுந்தர்.சியுடன் நகரம் மறுபக்கம் என்ற படத்தில் ஜோடி போட்டு நடித்து வருகிறாராம்.

தில்லாலங்கடி' படத்தில் சோனியா காந்தி குறித்து வசனம
'தில்லாலங்கடி' படத்தில் சோனியா காந்தி குறித்து வசனம் இடம் பெற்றுள்ளதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. உடனடியாக அந்த வசனத்தை நீக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.
ஜெயம் ரவி, தமன்னா ஜோடியாக நடித்த தில்லாலங்கடி படம் இன்று ரிலீசானது. இந்தப் படத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா ஆகியோர் பற்றிய வசனங்கள் இடம் பெற்றுள்ளன.
ஜெயம் ரவியிடம் தமன்னா, ''வாழ்க்கையில் போலீஸ் அதிகாரியாகவோ அல்லது சாப்ட்வேர் என்ஜினீயராகவோ ஆவதற்கு லட்சியம் வேண்டும்'' என்று கூறுகிறார். அதற்கு ஜெயம் ரவி பதில் அளிக்கையில், ''எனக்கும் நீ கட்சித் தலைவர் சோனியா காந்தியாகவோ, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவாகவோ ஆக வேண்டும் என ஆசை இருக்கு'' என்று பதிலளிப்பது போல வசனங்கள் உள்ளன.
இது சோனியாவையும் சானியாவையும் கிண்டல் அடிக்கும் தொனியில் இருப்பதால் காங்கிரசார் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'தில்லாலங்கடி' என்ற திரைப்படத்தின் விளம்பரம் தொலைக்காட்சிகளில் தற்போது ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த விளம்பரத்தில் தேவையற்ற முறையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைமையை ஏற்று மத்திய அரசை வழிநடத்திச் செல்லும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் பெயரை களங்கப்படுத்தும் வகையில் வார்த்தைகள் அடங்கிய வசனத்தோடு திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
நாகரீகமற்ற இந்தச் செயலை காங்கிரஸ் தொண்டர் எவரும் தாங்கிக் கொள்ள மாட்டார்கள்.
சோனியா காந்தியை களங்கப்படுத்தும் அந்த வசனத்திற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடனடியாக அந்தத் திரைப்படத்திலுள்ள அந்த வசனத்தை நீக்கிவிட்டு திரையிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
காங்கிரசார் போராட்டம்:
இந் நிலையில் தமிழக காங்கிரஸ் பிற்பட்டோர் பிரிவு தலைவர் தணிகைமணி தலைமையில் காங்கிரசார் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சத்திய மூர்த்தி பவனில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு அண்ணா சாலையில் தில்லாலங்கடி படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டருக்கு ஊர்வலமாக சென்றனர். தியேட்டர் எதிரில் நின்று கோஷம் எழுப்பினர். போஸ்டர்களையும் கிழித்தனர்.

பதிவு செய்தவர்: சோனியா
பதிவு செய்தது: 23 Jul 2010 11:49 pm
வாய மூடுடா போண்டா வாயா. தம்பி நல்ல விஷயந்தாண்டா சொல்லுது. நீ தண்ணிய போட்டுட்டு ஓலைரதடா.
ஆந்திர ,5 மாணவிகளை பள்ளி முதல்வர் கற்பழித்து வீடியோ படம்
ஆந்திர மாநிலம் ரெங்கா ரெட்டி மாவட்டம் விகாராபாத்தில் பார்க்வுட் சர்வதேச பள்ளி உள்ளது. இதன் முதல்வராக இருப்பவர் முகமது சலாவுதீன் அயூப் (50). இவர் குத்துச்சண்டையில் தீவிர ஆர்வம் உடையவர். பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு மாலை நேரத்தில் குத்துச்சண்டை பயிற்சி அளிப்பார். அப்போது சில்மிஷத்தில் ஈடுபடுவார். எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க மாட்டார்.
இந்நிலையில் பிளஸ்-1 மாணவி அஜிதாவை (பெயர் மாற்றம்) ஒரு ஆண்டுக்கு முன்பு குத்துச்சண்டை பயிற்சிக்கு தனியாக அழைத்துச் சென்றார்.
அப்போது அவர் அஜிதாவுக்கு மயக்க குளிர்பானம் கொடுத்து கற்பழித்தார். பின்னர் அதை தனது நவீன வீடியோ கேமராவில் பதிவு செய்தார்.
அஜிதா மயக்கம் தெளிந்ததும் கூச்சல் போட்டார். ஆனால் அவர் வீடியோ படத்தை காட்டி நீ இதுபற்றி வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என்று கூறியபடி துப்பாக்கியை எடுத்தார். இதில் மிரண்டு போன அஜிதா பணிந்தார்.
அதன் பிறகு அவளை பல தடவை தனது வீட்டுக்கு அழைத்து சென்றும் தனது ஆசையை தீர்த்துக் கொண்டார்.
இந்நிலையில் அஜிதா கர்ப்பமானார். அதன் பிறகும் சலாவுதீனின் சித்ரவதை தொடர்ந்ததால் மும்பையில் உள்ள பெற்றோரிடம் கூறினாள்.
இதையடுத்து பெற்றோர் விரைந்து வந்து சலாவுதீன் மீது போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சலாவுதீனை கைது செய்தனர். அவரது அலுவலகம் மற்றும் வீட்டில் நடத்திய சோதனையில் அஜிதா மற்றும் 4 மாணவிகளுடன் சலாவுதீன் உல்லாசமாக இருக்கும் வீடியோ சி.டி. கிடைத்தது.
இதைப் பார்த்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பள்ளி முதல்வரால் கற்பழிக்கப்பட்ட மற்ற 4 மாணவிகளும் புகார் செய்தனர். அவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
மாணவிகளை பள்ளி முதல்வர் கற்பழித்து வீடியோ படம் எடுத்த தகவல் விகாராபாத் நகரில் பரவியது. இதில் ஆத்திரமடைந்த பொது மக்கள் பள்ளியை அடித்து நொறுக்கினார்கள். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. பின்னர் அங்கு பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டனர்.
அஜிதாவின் பெற்றோர் தனது மகளை பள்ளி முதல்வர் சலாவுதீன் ஒரு ஆண்டு “செக்ஸ்” சித்ரவதை செய்ததாக மாநில மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி சுபாஷன் ரெட்டியிடம் புகார் செய்தனர்.
5 மாணவிகளை பள்ளி முதல்வர் கற்பழித்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 1
ஆடிவேல் திருவிழாவில் ஜனாதிபதி
லண்டனில், தமிழர் ஒருவர்விபத்தில உயிர் இழந்துள்ளார்
பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கிய இலங்கைத் தமிழர் ஒருவர் உயிர் இழந்துள்ளார். பத்திரிகை விநியோக ஊழியரான இராஜேந்திரன் இராமகிருஷ்ணன் (வயது 35 ) என்பவரே பத்திரிகைகளை விநியோகிப்பதற்காக அதிகாலை 6.20 மணியளவில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது கார் ஒன்றினால் இடிக்கப்பட்டார்.
தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான அவர் உடனடியாக லண்டன் றோயல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். ஆயினும் மாரடைப்பு ஏற்பட்டு வைத்தியசாலையில் இறந்து விட்டார்.
அவர் மீது காரைச் செலுத்தி இருந்த இளைஞனை லண்டன் பொலிஸார் கைது செய்துள்ளார்கள். இராஜேந்திரன் இராமகிருஷ்ணன் வீதி விபத்துக்கு முந்திய சில நிமிடங்களில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு இருந்திருக்கிறாரா? என்கிற கோணத்திலும் அவர்கள் புலனாய்வு விசாரணையை முடுக்கி விட்டுள்ளார்கள்.
இராமகிருஷ்ணனின் மனைவியும், இரு குழந்தைகளும் இலங்கையில் இருக்கின்றார்கள்.

வெள்ளி, 23 ஜூலை, 2010
மன்னார தாக்குதலுக்கு இலக்கானவர் சமாதான அமைப்பின் தலைவர் எனும் போர்வையில்
தலைமன்னார் வீதியில் இரண்டாம் கட்டைப் பகுதியில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் இனந்தெரியாதோரினால் நேற்று மாலை தாக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மன்னார் ‐ தலைமன்னார் வீதியில் மன்னார் பொது சேமக்காலையை அண்மித்த பகுதியில் இடம்பெறும் பெந்தகோஸ்தே சபையின் ஆலயம் ஒன்றின் நிர்மாண வேலைகளைப் பார்வையிட்டுவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த நபர் தாக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகின்றது.
தாக்குதலுக்கு இலக்கானவர் மேற்படி சபையினைச்சேர்ந்த பி.ஏ அந்தோனி மார்க் எனவும்;, மன்னார் கச்சேரியில் காணி அலுவலராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் இடம்பெற்றதாக சொல்லப்படும் தினத்தன்று இரவு 8.30 மணியளவில் குறித்த நபர் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது எதிரில் வந்த வெள்ளை வான் இரண்டு பேரை இவர் அருகில் இறக்கிவிட்டுச் சென்றதாகவும், வானில் வந்தவர்கள், இவருடன் பேச வேண்டும் என வீதியோரத்தில் உள்ள பற்றைக்குள் அழைத்துச் சென்று தாக்கியதாகவும், அப்போது வீதியில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் பஸ் வண்டிகள் இவரது சத்தத்தைக் கேட்டு குவிந்ததாகவும், அதனையடுத்து, அவரைத் தாக்கியவர்கள் தப்பியோடிவிட்டதாகவும் மன்னாரிலுள்ள செய்தியாளர் ஒருவர் இணையத்தளம் ஒன்றிற்கு தெரிவித்திருக்கின்றார்.
தாக்குதலுக்கு இலக்கானவர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற சம்பவம் குறித்து முறைப்பாடு செய்த பின் ஏறத்தாழ இரவு 10.16 மணியளவில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பபடுகின்றது.
தாக்குதலுக்கு இலக்கானவர் மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் எனும் போர்வையில் பல்வேறு அரசவிரோத செயற்பாடுகளில் நீண்ட காலங்கலாக ஈடுபட்டு வருகின்ற ஒருவர் எனவும் அரசாங்கத்திற்கு எதிரான கண்டன ஊர்வலங்கள், பேரணிகள், கூட்டங்களை ஒழுங்கு படுத்தி நடாத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருப்பதாக சொல்லப்படும் மன்னார் பொது சேமக்காலையை அன்மித்தப்பகுதியில் இராணுவத்தினர் 24 மணிநேர கடமையில் ஈடுபட்டிருக்கும் நிலையில் வெள்ளை வான் ஒன்றில் வந்தவர்கள் தாக்குதல் நடாத்தியிருப்பதாக முறைப்பாடு பதியப்பட்டிருக்கின்றமையானது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது இவ்வாரிருக்க மேற்படி பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத நிலையிலும், மன்னார் நகரிலிருந்து உள்ளுர் பேருந்து சேவைகள் இரவு 7.30 மணியுடன் நிறுத்தப்படும் நிலையிலும் குறித்த நபர் தாக்கப்பட்டபோது வீதியால் சென்ற பொதுமக்களும் பேருந்தும் அவ்விடத்தில் குவிந்ததாக அரசவிரோத போக்குடைய மன்னாரில் இருக்கும் செய்தியாளர் ஒருவர் வதந்திகளை பரப்பிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் தாக்குதலுக்கு இலக்கான பி.ஏ அந்தோனி மார்க் ஒருசில ஊடகத்துறையினருடன் இணைந்து நடந்து முடிந்த ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல் காலப்பகுதிகளில் அரசாங்கத்திற்கும் அரசசார்புடைய கட்சிகளுக்கும் எதிரான பிரச்சாரங்கள் மற்றும் அனாமதேய துண்டுப்பிரசுர விநியோகங்களில் ஈடுபட்டு வந்தவர் எனவும், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான பிரச்சாரங்கள் ஒன்றுகூடல்கள், ஊர்வலங்கள் என்பவற்றை அரசசார்பற்ற நிறுவனங்கள் சிலவற்றின் ஒத்துழைப்புடன் கடந்தகாலங்களில் நடாத்தியவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

வடிவேலு,நடிகர் சிங்கமுத்து மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
தெய்வீக சக்தி மூலம் நோய்களைக் குணப்படுத்துவதாகக் கூ
வெள்ளிக்கிழமை, 23 ஜூலை 2010 15:26
தனது பிள்ளையின் நோயைக் குணப்படுத்துவதற்காக குறித்த பெண்ணிடம் 23 இலட்சம் ரூபாவைக் கொடுத்த குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் இது தொடர்பாக பொhலிஸில் புகார் செய்ததையடுத்து அப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
நோயாளிகளைக் குணப்படுத்துவதற்கு மேற்படி பெண் 30 ஆயிரம் ரூபா முதல் 40 ஆயிரம் ரூபாவரை கட்டணம் அறவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது
கொடைக்கானல் :மாணவிகளின் பாலியல் தொந்தரவுஉட்பட பல்வேறு தொல்லை
கொடைக்கானல் : பாலியல் தொந்தரவு உட்பட பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகும் மாணவிகளின் அவஸ்தைக்கு முற்றுப்புள்ளி வைத்து, தரமான கல்வி வழங்க பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுரை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. கொடைக்கானல் பப்ளிக் பள்ளி தாளாளர் பிரைட், பூடான் நாட்டு மாணவி ஒருவரிடம் தவறாக நடந்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது.தற்போது வெளி மாநில மாணவர்கள் கொடைக்கானலில் தங்கி படிக்க பயந்து "டிசி' வாங்கும் நிலை நடந்து வருகிறது. இதனை தவிர்க்க பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. கொடைக்கானலில் உள்ள பள்ளி தாளாளர்கள் கூட்டம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் நடந்தது. கலெக்டர் வள்ளலார் கூறியதாவது: அரசு உத்தரவுப்படி சி.இ.ஓ., மூலம் பள்ளி நிர்வாகங்களுக்கு புது உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.பள்ளியின் நோக்கத்தை தவிர்த்து செயல்படுதல்,பாலியல் தொந்தரவு உட்பட பல்வேறு பிரச்சனையில் மாணவர்கள் பாதிக்கப்படும் செயல்களில் நிர்வாகங்கள் ஈடுபடக்கூடாது. மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.அனைத்து பள்ளி தாளாளர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கூட்டத்தில் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.
உயர் ஜாதி ஏழைகளுக்கும் இட ஒதுக்கீடு-மத்திய அரசு திட்டம்
டெல்லி: உயர் ஜாதியில் உள்ள ஏழைகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக பொருளாதார ரீதியிலான பிற்படுத்தப்பட்டவர்களுக்கான தேசியக் கமிஷனின் அறிக்கை மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில், பொருளாதாரரீதியிலான பிற்படுத்தப்பட்டவர்களை பிற்படுத்தவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும். அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
வருமான வரி செலுத்தாத உயர் ஜாதியினரை இந்தப் பட்டியலில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை விரைவில் மத்திய அரசு சட்டமாக்கும் என்று தெரிகிறது.
நக்ஸல் 'எபெக்ட்': ஓ.பி.சி. பட்டியலில் மேலும் சில சாதிகள்:
இதற்கிடையே நக்ஸலைட் பாதிப்பு அதிகம் உள்ள ஜார்க்கண்ட், சட்டீஸ்கர் மாநிலங்களைச் சேர்ந்த சில சாதியினரை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இவர்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை இந்தப் பட்டியலில் சேர்ப்பதன் மூலம் அவர்களுக்கு அரசு அளிக்கும் சலுகைகள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும்.
சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் நக்ஸல் பிரச்சனையை ஆயுதங்களை மட்டும் கொண்டு அடக்க முடியாது என்பதால் இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.
மேலும் சட்டீஸ்கர், ஹரியாணா, ஹிமாசலப் பிரதேசம், கர்நாடகம், ராஜஸ்தான் மற்றும் யூனியன் பிரதேசமான டாமன் மற்றும் டையூ பகுதிகளில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினங்கள் சிலவற்றையும் இந்தப் பட்டியலில் சேர்க்க முடிவாகியுள்ளது.
புதிய சாதிகள் அடங்கிய ஓ.பி.சி. பட்டியலை சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் விரைவில் வெளியிடும்.

பதிவு செய்தவர்: இ வி ராமசாமி நாயக்கன்
பதிவு செய்தது: 23 Jul 2010 6:16 pm
நான் மொதல்லே ஜாதி அடிப்படை ரிசெர்வசன் வேண்டும் என்று சொன்னேன்..ஆனால் அது தவறு என்று புரிந்து விட்டது..நான் இப்போ சொல்றேன் ...பொருளாதார அடிப்படையில் ரிசெர்வசன் கொண்டாங்கடா..
தோழர்கள் கொல்லப்பட்டபோது உருவாக்கப்பட்ட விதவைகள், எவருமே கதைக்கவில்லை.
போராட்டத்தை கைவிட்ட மாற்று இயக்க போராளிகளுக்கும் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும்- புளொட் சித்தார்த்தன்
போராட்டத்தைக் கைவிட்ட மாற்று இயக்க உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வளிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டுமென புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பில் புனர்வாழ்வு மற்றும் சிறைத்துறை அமைச்சர் டியூ குணசேகரவுடன் தான் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் புளொட் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கருத்து வெளியிடுகையில் போராட்டத்தில் பங்குபற்றிய அனைத்து இயக்கங்களையும் சேர்ந்த போராளிகளும் முற்றுமுழுதாக ஆயுதங்களைக் கைவிட்ட நிலையில் சாதாரண வாழ்க்கைக்கு திரும்புகின்றபோது அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான முயற்சிகளை எவருமே மேற்கொள்ளவில்லை.
அனைவருமே புலிகள் இயக்கப் போராளிகள் பற்றியும் அல்லது புலிகள் அமைப்பில் இருக்கக்கூடிய விதவைகள் பற்றியுமே பேசுகிறார்களே தவிர மாற்று இயக்கங்களில் இருந்து விடுபட்ட கடந்தகால போராளிகள் அல்லது அந்த இயக்கங்களில் இருந்து பிரிந்த தோழர்கள் கொல்லப்பட்டபோது உருவாக்கப்பட்ட விதவைகள் சம்பந்தமாக எவருமே கதைக்கவில்லை.
இது தொடர்பாக நான் அண்மையில் அமைச்சர் டியூ குணசேகர அவர்களுடன் கதைத்திருக்கின்றேன். வேறு பலருடனும் கதைத்து அவர்களுடைய புனர்வாழ்வையும் முன்னெடுக்க வேண்டுமென்று கேட்டிருக்கின்றேன். அல்லது இதுபெரிய சமூகப் பிரச்சினையாக உருவாகும் என்பதை அவர்களுக்கு மிகத் தெளிவாக விளங்கப்படுத்தியிருக்கிறேன். அவர்கள் இதற்கான முயற்சிகளை எடுப்பதாக திரு டியூ குணசேகர அவர்கள் எனக்கு உறுதியளித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

எல்ரிரிஈ வலையமைப்பை உடைக்க இலங்கைப் புலனாய்வுத்துறையினர் சர்வதேச பொலிசாருடன்
ஐரோப்பிய மற்றும் கிழக்காசிய நாடுகளைத் தளமாக கொன்டு எஞ்சியிருக்கும் எல்ரிரிஈயினர் மேற்கொன்டுவரும் ஆட்கடத்தல், ஆயுதக்கடத்தல், பணமோசடிகளில் ஈடுபட்டுவருவதற்கான முக்கிய ஆவனங்களை இராணுவப் புலனாய்வு துறையினர் விஸ்வமடுப் பகுதியில் இருந்து கன்டுபிடித்துள்ளனர்.
வெளிநாடுகளில் இயங்கிவரும் எல்ரிரிஈ வலையமைப்பு உடைக்கப்படாவிட்டால் இலங்கையிலும் தென்கிழக்காசிய நாடுகளிலிருந்தும் அவர்களின் செயற்பாட்டைக் கட்டுபடுத்தமுடியாது என்பதை இலங்கை அரசு உறுதியாக நம்புகின்றது. இதனால் வெளிநாடுகளிலிருந்து இயங்கிவரும் எல்ரிரிஈ வலையமைப்பை உடைக்க இலங்கைப் புலனாய்வுத்துறையினர் சர்வதேச பொலிசாருடன் இனைந்து பல நடவடிக்கைகளை முடுக்கியுள்ளது.
அச்சுதன் ,சுரேஸ் என அழைக்கப்ட்ட சிவராசா பிரூதரன், பவி எனஅழைக்கப்ட்ட பஹிரதன், நரேன் என அழைக்கப்படும் ரத்னசபாபதி, ரூபன் அன அழைக்கப்ட்ட கனேஸ்ரூபன், ராஜா, அய்யா என அழைக்கப்ட்ட ஆனந்தராஜா மற்றும் பல எல்ரிரிஈ உறுப்பினர்கள் வியாபாரிகள் போல் நடமாடி ஆயுதக் கடத்தல்களில் இடுபட்டுள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இவர்கள் மீது பாதுகாப்பு படையினரின் கவனம் திரும்பியுள்ளதாக அறிக்ககைள் தெரிவிக்கின்றன.
எல்ரிரிஈ இயக்கத்தின் சர்வதேச தொடர்பாளராக செயற்பட்ட கெஸ்ரோவின் மறைவிடத்திலிருந்து கன்டுபிடிக்கப்பட்ட ஆவனங்களில் மற்றும் நாளேடுகளிலிருந்து எல்ரிரிஈயினர் வெளிநாடுகளில் இருந்து மேற்கொள்ளும் செயற்படுகள் மற்றும் இயக்கத்துக்கு நிதிதிரட்டிய முகவர்கள் சம்பந்தமான விடயங்களும் கிடைத்துள்ளன. மேலும் எல்ரிரிஈயினரின் சில முதலீடுகள் மற்றும் கப்பல்கள் தொடர்பாக பண செலுத்திய ஆவனங்களும் கன்டெடுக்கப்பட்டுள்ளன.
புலனாய்வுத் தகவல்களின்படி ராஜா மற்றும் அய்யா என அழைக்கப்பட பொன்னய்யா ஆனந்தராஜா எல்ரிரிஈ இயக்கத்தின் சர்வதேச நடவடிக்ககைகளை இயங்கி வந்தவர். இவர் எல்ரிரிஈ நிதி மற்றும் கப்பல்கள் தொடர்பான விடங்களுக்கு தலைவராக 2002 - 03 இலிருந்து செயற்பட்டுவருகின்றார். இவர் கிழக்கு நாடுகளிலுள்ள பயங்கரவாதிகள் மற்றும் மாபியாக்களுடன் தொடர்புகளையும் ஏற்படுத்துவது இவரது கடமையாகவும் வழங்கப்பட்டிருந்தது. பிரதானமாக ஆயுதம் மற்றும் வெடிபொருட்கள் வழங்குனராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.
1949 ஆண்டு ஒக்டோமபர் 13ஆம் திகதி சங்கானையில் பிறந்த ஆனந்தராஜா அமரிக்க கடவுச்சீட்டுடயவர். பல நாடுகளிலிருந்தும் செயற்பட்டுள்ளார். 2010 இலிருந்து கனடாவில் வசித்துவருகின்றார். தற்போது கிடைக்கும் தகவல்களின் படி சலர்வதேச பொலிசாரால் பிடிவிராந்து பிறப்பிக்கப்ட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அச்சுனன் என அழைக்கப்படும் சிவராசா பிருந்தன் 1972 ஆம் ஆண்டு யாழ்பானத்தில் பிறந்தவர். பிரான்ஸ் நாட்டு கடவுச் சீட்டுடையவர். தற்போது கீழ்மட்ட வாழ்கையை நடத்திவருகின்றார். இவர் எல்ரிரிஈ சர்வதேச வலையமைப்பில் தொடர்புகளை நடத்திவந்தவர். தற்போது மத்தியகிழக்கு நாடு ஒன்றில் தனது இரு குழந்தைகளுடன் வசித்துவருகின்றார். இவர் விமான ஓட்டுனர் பயிற்ச்சியை பிரான்சில் பெற்றுள்ளதுடன் அடிக்கடி ஐரோப்பிய மற்றும் ஆபிரிக்க மற்றும் கிழக்கு நாடுகளுக்கும் பயனித்து வந்தவர்.
கிழக்கு நாடு ஒன்றில் இவர் சந்தேகத்கிடமாக ஒருமுறை பெருந் தொகைப் பணத்துடன் கைது செய்யப்பட்டார் ஆனால் வியாபார நடவடிக்கைகளைக் கான்பித்து சாதூரியமாக தப்பிக்கொன்டார்.
கிடைக்கப்பெற்றிருக்கும் இவரது ஆவனங்களின்படி இவர் எல்ரிரிஈயினரின் ஆகாயப்படை இயக்கத்தைச் சேர்ந்தவர் விமான ஓட்டுதல் பயிற்ச்சியைப் பெற்றுள்ளதுடன் தற்கொலைப்படை போராளியாகவும் பயிற்ச்சி பெற்றுள்ளார். இவரது சகேதரர்கள் கிழக்கு மற்றும் கனடாவிலும் வசித்துவருகின்றனர் இர்களுக்கும் எல்ரிரிஈயினருடன் தொடர்பு இருக்கின்றதா எனட்பதை அதிகாரிகள் விசாரனை செய்து வருகின்றனர்.
இதேவேளை, நடராஜன் ஐரோப்பாவில் செயற்பட்டுவருகின்றார். இவர் ரஸ்சிய பெண்ணைத் திருமனம் செய்துள்ளார். பஹிரதன் மற்றும் ரூபன் இருவரும் எல்ரிரிஈயின் முக்கிய தலைவர்கள் இவர்கள் இந்தனோசியாவில் செயற்பட்டு வருகின்றனர்.
கெஸ்ரொவின் மறைடத்திலிருந்து கன்டுபிடிக்கப்ட்ட ஆவனங்களில் எல்ரிரிஈயினர் பல மில்லியன் ரூபாக்களை நீதியாகவும் மற்றும் நீதிக்குப்புறம்மபான முறைகளில் முதலீடு செய்துள்ளதற்கான ஆவனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன இவற்றுக்கான விசாரனைகளை அதிகாரிகள் மேற்கொன்டுவருகின்றனர்.

பொலிஸ் தாக்குதலில் மாணவன் மரணம். றுகுணு பல்கலைக்கழகத்தின்
கடந்த ஜூன் மாதம் 18 ம் திகதி பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்த மாணவன் ஒருவர் பொலிஸாரினால் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்துள்ளார். றுகுணு பல்கலைக்கழகத்தின் மூன்றாம் வருட மாணவன் மீதான பொலிஸாரின் தாக்குதலைக் கண்டித்து றுகுணு பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து மாத்தறை பொலிஸ் வரையிலான ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
ஆனால் மாணவர்களின் பேரணியை பொலிஸார் மாத்தறை பிரதான பஸ் தரப்பிடம் அருகே முடக்கியுள்ளதுடன் அங்கு ஆயிரக்கணக்கான பொலிஸாரையும் இராணுவத்தினரையும் குவித்துள்ளதாக தெரியவருகின்றது.
ஊயிரிழந்த மாணவன் அருண பண்டார உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவருடைய தாயார் வயலட் மனதுங்க, தனது மகன் மீது பொலிஸார் தாக்கியது உண்iயாயினும் சக மாணவன் ஒருவன் தாக்கியதே பலத்த வலியை தந்ததாக தனது மகன் தெரிவித்தார் என அததெரணவிற்கு தெரிவித்துள்ளார். தான் நான்கு தடவைகள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று மிகுந்த சிரமப்பட்டு மகனை பல்கலைக்கழகம் அனுப்பியதாவும் , இவ்வாறானதோர் கொடுமை மேலுமோர் தாய்க்கு இந்நாட்டில் இடம்பெறக்கூடாது என அலறுகின்றார்.

டயானா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதை உறுதிப்படுத்துகிறது
டயானா கொலை?: வழக்கறிஞரின் தகவலால் பெரும் பரபரப்பு
இங்கிலாந்து இளவரசி டயானா திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக, வழக்கைப் புலனாய்வு செய்துவந்த வழக்கறிஞர் வெளியிட்டுள்ள தகவல் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டு வழக்கறிஞர் மைக்கேல் மேன்ஸ்பீல்ட், டயானா உயிரிழக்கக் காரணமான கார் விபத்து குறித்துப் புலன் விசாரணை செய்தவர். இந்நிலையில் பத்திரிகை நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில்,
“கொலை செய்யப்படலாம் என்பதை டயானா நன்றாக உணர்ந்து வைத்திருந்தார். இங்கிலாந்து ராஜ குடும்பத்தினர் தனது நடவடிக்கைகளைத் தொடர்ந்து உளவு பார்த்து வருவதாக, டயானா தனது நண்பர்களிடம் அடிக்கடி கூறி வந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. உலகையே உலுக்கிய டயானாவின் மரணத்துக்கு, எதிர்பாராத விபத்துதான் காரணம் என்று பாரிஸ் பொலிசார் உடனடியாக வழக்கு பதிவு செய்திருப்பது, இந்த விவகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
விபத்தின்போது டயானாவின் கார் சாரதியாக இருந்த போல் மீது வலுவான சந்தேகங்கள் எழுந்துள்ளன. விபத்து நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர், டயானாவின் சாரதி போல், தனது வங்கிக் கணக்கில் பல கோடி ரூபாவை முதலீடு செய்துள்ளார்.
இது பற்றி விசாரணை அறிக்கையில் ஒரு வரி கூட இடம் பெறாதது டயானா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதை உறுதிப்படுத்துகிறது” என்று வழக்கறிஞர் மைக்கேல் மேன்ஸ்பீல்ட் கூறியுள்ளார். இதனையடுத்து உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது