டயானா கொலை?: வழக்கறிஞரின் தகவலால் பெரும் பரபரப்பு
இங்கிலாந்து இளவரசி டயானா திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக, வழக்கைப் புலனாய்வு செய்துவந்த வழக்கறிஞர் வெளியிட்டுள்ள தகவல் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டு வழக்கறிஞர் மைக்கேல் மேன்ஸ்பீல்ட், டயானா உயிரிழக்கக் காரணமான கார் விபத்து குறித்துப் புலன் விசாரணை செய்தவர். இந்நிலையில் பத்திரிகை நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில்,
“கொலை செய்யப்படலாம் என்பதை டயானா நன்றாக உணர்ந்து வைத்திருந்தார். இங்கிலாந்து ராஜ குடும்பத்தினர் தனது நடவடிக்கைகளைத் தொடர்ந்து உளவு பார்த்து வருவதாக, டயானா தனது நண்பர்களிடம் அடிக்கடி கூறி வந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. உலகையே உலுக்கிய டயானாவின் மரணத்துக்கு, எதிர்பாராத விபத்துதான் காரணம் என்று பாரிஸ் பொலிசார் உடனடியாக வழக்கு பதிவு செய்திருப்பது, இந்த விவகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
விபத்தின்போது டயானாவின் கார் சாரதியாக இருந்த போல் மீது வலுவான சந்தேகங்கள் எழுந்துள்ளன. விபத்து நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர், டயானாவின் சாரதி போல், தனது வங்கிக் கணக்கில் பல கோடி ரூபாவை முதலீடு செய்துள்ளார்.
இது பற்றி விசாரணை அறிக்கையில் ஒரு வரி கூட இடம் பெறாதது டயானா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதை உறுதிப்படுத்துகிறது” என்று வழக்கறிஞர் மைக்கேல் மேன்ஸ்பீல்ட் கூறியுள்ளார். இதனையடுத்து உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக