சனி, 24 ஜூலை, 2010

ஆடிவேல்,தமிழர்களைவிட பெளத்தர்கள் பக் திப் பரவசத்துடன் அதில் பங்கேற்பது

இன உறவுப் பாலமாகும் ஆடிவேல் உற்சவம்!
ஆடிவேல்!
கொழும்பில் தமிழர்களின் இருப்பையும், கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களையும் ஊரறியச் செய்யும் பக்திப் பெருவிழா! மத வழிபாட்டின் ஊடாக மனங்களை ஒன்றுபடுத்தி இன ஐக்கியத்தை வலுப்படுத்தும் தேசிய பெருவிழா! 1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர் எந்தவிதமான சந்தேகமும், அச்சமும் இல்லாத ஓர் அமைதிச் சூழலில் கொழும்பில் நேற்று மீண்டும் களைகட்டியது ஆடிவேல் ஆரம்ப நிகழ்வு. நாட்டுக் கோட்டை நகரத்தாரின் (செட்டியார்கள்) முயற்சியி னால் கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த ஆடி வேல் உற்சவத்தின் முக்கியமான நிகழ்வாக இடம்பெறுவது சுவாமி வீதி உலா செல்வதுதான்.
கொழும்பு முதலாம் குறுக்குத் தெருவிலுள்ள சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்திலிருந்தும், செட்டியார் தெரு ஸ்ரீ கதிரேசன் ஆலயத்திலிருந்தும் சுவாமி ரதம் பம் பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயத்திற்கு ஊர்வலமாகச் சென்று ஓரிரு நாட்களில் மீண்டும் அந்தந்த ஆலயங்களுக் குத் திரும்பி வருவதுதான் ஆடிவேலின் சிறப்பம்சம். புறக் கோட்டையிலிருந்து காவடி ரதமும், வெள்ளி ரதமும் வீதி உலா செல்லும்போது தமிழர்களைவிட பெளத்தர்கள் பக் திப் பரவசத்துடன் அதில் பங்கேற்பது குறிப்பிடத்தக்க அம் சமாகும். முருகக் கடவுளை ‘கதரகம தெவியோ’ என்று பெளத்தர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் வழிபடுகிறார்கள். இத னால், ஆடிவேல் விழாவில் இந்துகளான தமிழர்களும் பெளத்த சிங்களவர்களும் ஒன்றித்துப் போகிறார்கள். ஆனால், 1983 ஆடிவேல் விழாவுக்குப் பின்னர் இந்தப் பிணைப்பில் சற்றுப் பின்னடைவு ஏற்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். தற்போது அந்தச் சூழ்நிலையில் நல்ல தொரு மாற்றம் பிறந்திருக்கிறது. ஆடிக் கலவரத்திற்குப் பின்னர் ஓரிரு தடவை ஆடிவேல் உற்சவம் நிகழ்த்தப்பட் டாலும் அது இனங்களின் முழுமையான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாக அமைந்திருக்கவில்லை.
நேற்று ஆரம்பமான சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் காவடி ரத பவனி 30 ஆண்டுகளுக்கு முன்பி ருந்த முழுமையான ஆடிவேல் விழாவை ஞாபகப்படுத் தும்படியாக அமைந்திருக்கிறது. கடை உரிமையாளர்கள், பணியாளர்கள், தமிழ் கலாசாரப் பாரம்பரியங்களுடன் ஊர் வலத்தில் பங்கேற்க மேள தாளங்களும் கொழும்பு நகரை பரவசத்தில் ஆழ்த்துகின்றன. வீதியில் செல்லும் பாதசாரிக ளும், கடமையிலிருக்கும் பொலிஸார் மற்றும் நிறுவனங்க ளின் ஊழியர்களும் காவடி ரதத்தை நெருங்கி வழிபடுகிறா ர்கள். இன, மத, மொழி வேறுபாடின்றிக் காவடி ரதத்தைக் கண்கொள்ளாக் காட்சியாகப் பார்க்கின்றார்கள்.
இத்தனைக்கும் மகுடம் வைத்தாற்போல் அலரி மாளிகையில் ஜனாதிபதியும் பங்கேற்ற பூஜை நிகழ்வு அமைந்திருந்தது. ஆடிவேல் விழாவினை அமைதியாகவும் அனைத்து இன ங்களும் எதிர்பார்க்கும் மகிழ்ச்சியுடனும், மன நிறைவுட னும் நடத்துவதற்கு நாட்டுத் தலைவரின் ஆசி கிடைத் திருப்பதானது, கொழும்பில் இனி ஆடிவேல் உற்சவம் ஒரு தேசிய விழாவாகத் தொடரும் என்பதற்கான நம்பிக்கை யைத் தோற்றுவித்திருக்கிறது.
1874ஆம் ஆண்டிலிருந்து நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் ஏற்பாடு செய்து வந்த தேசிய நிகழ்வு 1983 இல் தடம் புரண்டபோது அதனைச் சீர்படுத்திச் செழுமைப்படுத்துவத ற்கு அப்போதைய நாட்டுத் தலைமைத்துவம் முன்வரவி ல்லை. சுவாமி வீதி உலாவினை இடையில் நிறுத்திக்கொ ள்ள ஏற்பட்ட நிர்ப்பந்த நிலையைத் தவிர்ப்பதற்கும் நடவ டிக்கை எடுக்கவில்லை.
இந்த வருடத்திலிருந்து முன்னைய மன நிறைவும், ஆத்ம திருப்தியும் அடைந்து, இனங்களுக்கிடையே நல்லுறவை வலுப்படுத்துவதற்கான ஒரு பாலமாக ஆடிவேல் விழா திகழப்போகிறதென்பது திண்ணம்.
தமிழர்களின் முருகக் கடவுளும் சிங்கள பெளத்தர்களின் ‘கத ரகம தெவியோ’வும் இனி நம்நாட்டில் நிரந்தர அமைதிக்கு உறுதுணைபுரிவதைப் போல், அரசியல் ரீதியான இணக் கப்பாடும் புரிந்துணர்வும் ஏற்பட அரசியல்வாதிகள் மனம்தெளிய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக