சனி, 24 ஜூலை, 2010

மதராசபட்டினம், வெளிநாட்டு கதா நாயகியை வைத்து படம் எடுத்தால் ஓடுமா? என்று பலர்

ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதய நிதி ஸ்டாலின் தயாரித்த மதராசபட்டினம் சினிமா படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. இப்படத்தின் கதாநாயகன் ஆர்யா, கதாநாயகி லண்டன் அழகி எமி ஜாக்சன். படத்தை விஜய் இயக்கி உள்ளார். ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் கோவை கே.ஜி. மற்றும் அர்ச்சனா தியேட்டர்களில் திரையிடப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது.
படத்தின் கதாநாயகன் ஆர்யா, கதாநாயகி எமி ஜாக்சன் மற்றும் இயக்குனர் விஜய், இசை அமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் ஆகியோர் கே.ஜி. பிக் சினிமா தியேட்டரில் ரசிகர்கள் முன் வந்தனர். அவர்களை பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். கதாநாயகியை அருகில் சென்று பார்க்கும் ஆசையில் அருகில் நெருங்கினார்கள். படத்தின் கதாநாயகன் ஆர்யா கூறியதாவது:-

மதராசபட்டினம் படப்பிடிப்பு தொடங்கும் போதே வெளிநாட்டு கதா நாயகியை வைத்து படம் எடுத்தால் ஓடுமா? என்று பலர் பயமுறுத்தினார்கள். ஆனால் வித்தியாசமாக எடுத்தால் மக்கள் விரும்புவார்கள் என்ற நம்பிக்கையில் படம் எடுத்தோம். எங்களது ஒட்டு மொத்த படக்குழுவினரும் தன்னம்பிக்கையோடு வேலை செய்தனர். புதுமையை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். என்று இந்த படம் மூலம் தெரிகிறது. இவ்வாறு கூறினார்.
கதாநாயகி எமி.ஜாக்சன் கூறும் போது எனக்கு சென்னை ரொம்ப பிடித்து இருக்கிறது. தமிழில் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என்றார்.
தியேட்டருக்கு வந்த நடிகர் ஆர்யா, நடிகை எமி ஜாக்சனுக்கு கே.ஜி. பிக் சினிமா சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மதராசபட்டினம் வினியோகஸ்தர் கந்தசாமி, ஆர்ட் சென்டர் உரிமையாளர் ராஜமன்னார், மேலாளர் சிந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக