சனி, 20 செப்டம்பர், 2025

ரணில் விக்கிரமசிங்கா : நான் 22 பில்லியன் அமெரிக்க டாலர்களை விட்டுச் சென்றேன் -

 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா :
நான் 22 பில்லியன் அமெரிக்க டாலர்களை விட்டுச் சென்றேன் - ரணில்
நான் 2022 ஆம் ஆண்டு நாட்டை பொறுப்பேற்றபோது, இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 76.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. நான் அதை அனுரகுமாரவிடம் ஒப்படைத்த நேரத்தில், அது 98.9 பில்லியன் டாலர்களாக உயர்ந்திருந்தது. நான் 22 பில்லியன் அமெரிக்க டாலர்களை விட்டுச் சென்றேன். இந்த விஷயங்களில் இருந்து எனக்கு எந்தப் பலனும் இல்லை.

“நான் கியூபாவின் ஹவானாவில் நடந்த G77 கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றேன், அங்கு பல உலகத் தலைவர்களுடன் கலந்துரையாடினேன்.

ரோபோ சங்கரின் இறுதி நிமிடங்கள்.. கலங்கடிக்கும் காட்சி |

 தினகரன் : ரோபோ சங்கர் உடலுக்கு கமல்ஹாசன் அஞ்சலி,
“நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 46. ரோபோ சங்கரின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரோபோ சங்கரின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகரும் எம்பியுமான கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும் ரோபோ சங்கரின் மறைவு செய்தி அறிந்து அவரது உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இலங்கை தமிழர்களை விட சிங்கள மக்களின் மரபணு தமிழ்நாடு தமிழர்களோடு அதிக அளவில் பொருந்தி உள்ளது

இலங்கை தமிழர்களின் மரபணு சிங்கள மக்களின் மரபணுவோடு 55.20% +/- 9.47 வீதம் பொருந்தி உள்ளது
இலங்கையில் உள்ள சிங்கள மக்களின் மரபணு 69.86% +/- 0.61 தென்னிந்திய தமிழர்களிடம் பொருந்தி உள்ளது
இலங்கையில் உள்ள தமிழர்களின் மரபணு 16.63% +/- 8.73 வீதம் தென்னிந்திய தமிழர்களோடு பொருந்தி உள்ளது
ஆச்சரியமான ஒரு விடயம் இலங்கை தமிழர்களை விட சிங்கள மக்களின் மரபணு தமிழ்நாடு தமிழர்களோடு அதிக அளவில் பொருந்தி உள்ளது
மேலும் சிங்கள மக்களின் மரபணு 25.41% +/- 0.51 வீதம் வங்காள மக்களோடு பொருந்தி உள்ளது
இலங்கையில் உள்ள சிங்கள மக்களும் தமிழ் மக்களும் 55%. மரபணு பொருந்தி உள்ளது
The Sinhalese had the greatest contribution from South Indian Tamils (69.86% +/- 0.61),
Sri Lankan Tamils to have a greater contribution from the Sinhalese of Sri Lanka (55.20% +/- 9.47)  raara

வியாழன், 18 செப்டம்பர், 2025

ராகுல் : வாக்கு திருட்டில் ஈடுபடுபவர்கள தேர்தல் ஆணையர் பாதுகாக்கிறார் !

 மின்னம்பலம் - Kavi  : ‘வாக்கு திருட்டு’ தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
பீகாரில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கும், SIRக்கும் எதிராக வாக்குரிமை யாத்திரை நடத்தினார். இதில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார். யாத்திரையின் முடிவில் அடுத்ததாக வாக்கு திருட்டு என்ற அணுகுண்டுக்குப் பிறகு, ஹைட்ரஜன் குண்டு வரப்போகிறது என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில் வாக்கு திருட்டு தொடர்பாக இன்று (செப்டம்பர் 18) டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசி வருகிறார். இதில் தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீதும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சஜித் கட்சியில் இணைந்த உறுப்பினர்களின் மீதான தடையை நீக்க ஐ.தே.க தீர்மானம்.

 hirunews.lk  : ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த தங்களது கட்சி உறுப்பினர்களின் மீது விதிக்கப்பபட்ட அனைத்து கட்சி தடைகளையும் நீக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்ததால் தங்களது கட்சி உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டு, அவர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டதால், கட்சியில் இணைந்து பணியாற்ற அவர்களுக்கு கட்சியினால் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நேற்று (16) மாலை கூடிய ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு குறித்த தடையை நீக்குவதற்கும் உறுப்புரிமை நீக்கத்தை ரத்து செய்யவும் தீர்மானித்துள்ளது.

பாஜக அணி’க்கு 40 சீட்- அமித்ஷாவிடம் இபிஎஸ் உறுதி! திமுக ‘தலைகளுக்கு’ம் குறி வைத்த ரிப்போர்ட்!

 மின்னம்பலம் : பொறுமய்யா.. முதலில் இருந்து வருகிறேன்.. சென்னையில் இருந்து நேற்று காலை 9.30 மணிக்கு டெல்லி ஏர்போர்ட் ரீச் ஆனார் எடப்பாடி. திண்டுக்கல் சீனிவாசன், கேபி முனுசாமி, எஸ்பி வேலுமணியும் டெல்லியில் லேண்ட் ஆனார்கள்.
டெல்லி ஏர்போர்ட்டில் தம்பிதுரை, சிவி சண்முகம், இன்பதுரை, தனபால் ஆகியோர்தான் எடப்பாடி டீமை வரவேற்றாங்க..
அதுக்கு பிறகு இந்த முறையும் கார்களை மாற்றிப் போனாரா?
முந்திரிக்கொட்டை மாதிரி பேசப்படாது.. இந்த முறை அரசு வாகனத்தில்தான் டெல்லி வீதிகளில் வலம் வந்தார் இபிஎஸ்.. DL1C AH5420 என்ற, தமிழக அரசின் எதிர்க்கட்சித் தலைவருக்கான வாகனம்தான் எடப்பாடி பயன்படுத்தியது.

செவ்வாய், 16 செப்டம்பர், 2025

பொன்முடி மீதான சர்ச்சை பேச்சு.. வழக்கை முடித்து வைத்த சென்னை உயர் நீதிமன்றம்

 tamil.oneindia.com  - Mani Singh S  : சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கினை முடித்து வைப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பொன்முடிக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பதாகவும், பொறுப்பான பதவியில் இருக்கும் பொன்முடி இதுபோன்ற பேச்சுக்களை தவிர்த்து இருக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. 
மேலும் பொன்முடிக்கு எதிராக தனிநபர் புகார் தெரிவிக்கலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குஷ்பு : இளையராஜாவுக்கு பாராட்டு விழா... பெண்களை அழைக்காதது ஏன்?

 மின்னம்பலம் -Kavi  :  இசையமைப்பாளர் இளை​ய​ராஜா​வின் இசைப் பயணத்​தின் பொன்​விழா ஆண்டை முன்​னிட்​டு, கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினர்.
இந்தநிலையில் இளையராஜா பாராட்டு விழாவுக்கு பெண்களை ஏன் அழைக்கவில்லை என்று நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

மல்லை சத்யா தனிக் கட்சி தொடங்கினார்- கொடி அறிமுகம்!

 மின்னம்பலம் -Mathi : மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, தமது ஆதரவாளர்களுடன் இணைந்து தனிக்கட்சி தொடங்கி உள்ளார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார் மல்லை சத்யா.
மதிமுக துணைப் பொதுச்செயலாளராக பதவி வகித்தவர் மல்லை சத்யா. மதிமுகவின் முதன்மை செயலாளரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகனுமான துரை வைகோவுக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. மதிமுக கட்சி கூட்டங்களிலேயே இந்த மோதல் வெடித்திருந்தது. வைகோ தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்து வைத்தார்.

கொழும்பிலிருந்து வெளியேற முன் பிரபாகரனை நினைவுகூர்ந்த மஹிந்த

 வீரகேசரி :ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்கும் சட்டமூலம் கடந்த புதன்கிழமை திருத்தங்களின்றி பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
சட்டம் நிறைவேற்றப்பட்ட தகவல்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு கிடைத்ததும் உடனடியாகவே அவர் தங்கியிருந்த கொழும்பு விஜேராம இல்லத்திலிருந்து வெளியேறுதற்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டிருந்தார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் அங்கு வருகை தந்திருந்த பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம், ஜோன்சன் பெர்னாண்டோ, ரோஹித்த அபேகுணவர்த்தன உள்ளிட்டவர்கள் உடனடியாகவே நாமல் ராஜபக் ஷவுக்கு அழைப்பெடுத்து விடயத்தினை தெரிவித்தனர்.

திங்கள், 15 செப்டம்பர், 2025

லண்டனில் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான பேரணி : இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை | Virakesari.lk

 வீரகேசரி :இங்கிலாந்தில் வெளிநாட்டிலிருந்து குடியேறுபவர்களுக்கு எதிராக, தீவிர வலதுசாரி ஆர்வலர் டாமி ரொபின்சன் தலைமையில் லண்டனில் ஒரு பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
பேரணியின் போது, போராட்டக்காரர்களுக்கும், பொலிசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 26 பொலிஸார் காயமடைந்தனர். போராட்டக்காரர்கள் அமைதியாகப் பேரணியை நடத்தாமல் வன்முறையில் ஈடுபட்டதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், போராட்டக்காரர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திராவிட மண்ணின் அசல் அரசியலை பேசியவர் பேரறிஞர் அண்ணா!

ராதா மனோகர் :  மிக சாதாரண மக்களுக்கும் புரிய கூடிய விதத்தில் தமிழ் மண்ணின் அசல் அரசியலை பேசியவர் பேரறிஞர்  அண்ணா!
மிக சிக்கலான  நூற்றாண்டு பிரச்சனைகளை எல்லாம் மக்கள் அன்றாடம் பேசும் தமிழில் பேசி எழுதி அவர்களுக்கு புரியவைத்து மாபெரும் மக்கள் புரட்சியை நடத்தி காட்டிய திராவிட நாயகன் பேரறிஞர் அண்ணா!
1967 இல் திராவிட முன்னேற்ற கழகத்தை ஆட்சி பீடமேற்றிய சாதனையை பற்றி இன்றும் கூட பலரால் ஜீரணிக்க முடியாமல் இருக்கிறது.
எப்படி கற்பனை பண்ணி பார்த்தாலும் நடக்க நடக்காது என்றுதான் ஒட்டு மொத்த இந்தியாவும் அன்று கருதியது.
அத்தனை அரசியல்  பண்டிதர்களின் கணக்கு பாடங்களுக்கும் முடிவுரை எழுதினார் அண்ணா!

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டம் இன்று தொடக்கம்

hindutamil.in : சென்னை: பெற்​றோரை இழந்த குழந்​தைகளை அரவணைத்து தொடர்ந்து பாது​காக்​கும் வகை​யில், 18 வயது வரையி​லான பள்​ளிப் படிப்பு முடி​யும் வரை இடைநிற்​றல் இன்றி கல்​வியை தொடர அவர்​களுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்​கும் ‘அன்​புக்​ கரங்​கள்’ திட்​டத்தை முதல்​வர் ஸ்டா​லின் இன்று சென்​னை​யில் தொடங்கி வைக்​கிறார்.
இதுதொடர்​பாக தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: 
ஏற்​றமிகு தமிழகத்தை உரு​வாக்க, குழந்​தைகளின் கல்வி மற்​றும் அவர்​களது சீரான வளர்ச்​சிக்கு தமிழக அரசு பல்​வேறு திட்​டங்​களை சிறப்​பான முறை​யில் செயல்​படுத்தி வரு​கிறது. 
மிக​வும் வறுமை​யில் உள்ள குடும்​பங்​களை அடை​யாளம் கண்​டு, அவர்​களது வாழ்க்​கைத் தரத்தை மேம்​படுத்த ‘தா​யு​மானவர்’ திட்​டத்தை தமிழக அரசு அறி​முகம் செய்​துள்​ளது. 

அதிமுகவின் அடுத்த புள்ளிக்கு..தூண்டில் போட்ட திமுக..கொத்தாக சிக்கும் பெரிய மீன்..எடப்பாடிக்கு செக்?

 tamil.oneindia.com -  Shyamsundar :  சென்னை: அதிமுகவில் இருந்து முக்கிய பிரமுகர்கள் திமுகவில் இணைவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. விரைவில் இன்னொரு முக்கிய புள்ளி திமுகவில் இணையலாம் என்று கூறப்படுகிறது.
அதிமுகவின் முக்கிய முகங்களான அன்வர் ராஜா மற்றும் மைத்ரேயன் ஆகியோர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் சமீபத்தில் இணைந்தனர். 
அன்வர் ராஜா அடிமட்ட தொண்டராக இருந்து உயர்ந்தவர் என்றால், மைத்ரேயன் ஆரம்பம் முதலே திமுகவின் அரசியல் எதிரியாக அறியப்பட்டவர். 
இந்த இருவரின் விலகலும் அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

யாழ்ப்பாணம் ரீச்சாவில் என்ன நடக்கிறது? ஒரு தந்தையின் வேதனை

 Gabriel Jo Jovan :  இப்பதிவை மீள்பதிவாக்குவதன் முக்கிய காரணம் :
இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஒரு கண்டனப்பதிவை முகநூலில் இட்டு இருந்தார்.. கூடவே வக்காலத்துக்கு நிராஜ் டேவிட் என்பவரும் திசை தெரியாமல் நன்றாக ஊதியும் இருந்தார்.
விடயத்துக்கு வருவோம்..
ஒருவருடைய சொந்த உழைப்பை புலம்பெயர் தேசங்களில் இருந்து பல கோடிகளை கொண்டு வந்ததாக பீத்துவோரின் பின்னணிகளை பார்த்தால் இவைகள் இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்துவிடும் என ஏற்கனவே கணக்கிட்டு மிகுதிப்பணங்களை சுருட்டியவர்கள் தான் இவர்கள் என்பது கண்கூடு.. 
காரணம் ஒருவர் ஐரொப்பாவில் 2-3 வேலைகள் செய்து இருந்தாலும் இப்படி பெருந்தொகையை சேமிக்க முடியாது என்பதை நன்கு நினைவில் கொள்ளுங்கள். 

இளையராஜாவுக்கு தமிழக அரசு எடுத்த விழா! திருப்பு முனை தந்த திருவிழா

 Raja Rajendran Tamilnadu  ;  இந்தப் பெருசுக பண்ண ராவடி இருக்கே ?  என்னா உற்சாகம், என்னா நெகிழ்ச்சி, என்னா உருக்கம், என்னா பெருமிதம் ?
வாழ்க்கையில் முழுமையாக வென்றபின்னரும் இன்றும் போட்டியில் ட்ராக்கில் நிற்கும் இந்த 70 ப்ளஸ்களைத்தான் இளைஞர்கள் உள்வாங்க வேண்டும்.  
இந்த நால்வருமே மிகக் கடுமையான உழைப்பாளிகள். கீழிருந்து படிப்படியாக மேலே உயர்ந்தவர்கள்.  தன் துறையில் உச்சம் தொட்டவர்கள்.  
தொட்ட பின்னரும் சரியாது இன்னும் மேலே ஏற முயல்பவர்கள் !
அதனால்தான் துளியும் வயதின் தன்மை புலப்படாமல், சோர்ந்து விடாமல், துவண்டு போகாமல், உற்சாகமாக நேற்றைய ராஜாவின் பொன்விழாவைச் சிறப்பித்தனர்.
அரசு விழா எங்கனா இப்படி இருக்குமா சார் ?
ஜெயலலிதா கூட எம் எஸ் விக்கெல்லாம் பொற்கிழி கொடுக்க விழா எடுத்திருக்காங்க, எப்படி தெரியுமா இருக்கும் ?

ஐ நாவில் சுதந்திர பாலத்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்த இந்தியா!

BBC tamil :  சுதந்திர பாலத்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்த இந்தியா – ஐக்கிய நாடுகள் அவையில் இஸ்ரேல் கூறியது என்ன?
தனி மற்றும் சுதந்திரமான பாலத்தீன தேசத்தை நிறுவும் முன்மொழிவுக்கு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் வெள்ளிக்கிழமை வாக்கெடுப்பு நடைபெற்றது.
மொத்தம் 193 உறுப்பு நாடுகளில் 142 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. 10 நாடுகள் மட்டுமே இதற்கு எதிராக வாக்களித்தன, 12 நாடுகள் வாக்களிப்பதில் இருந்து விலகின.
இந்தியா, சீனா, ரஷ்யா, சவுதி அரேபியா, கத்தார், யுக்ரேன், பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் ‘நியூயார்க் பிரகடனம்’ எனப்படும் இந்த முன்மொழிவை ஆதரித்தன.