Raja Rajendran Tamilnadu ; இந்தப் பெருசுக பண்ண ராவடி இருக்கே ? என்னா உற்சாகம், என்னா நெகிழ்ச்சி, என்னா உருக்கம், என்னா பெருமிதம் ?
வாழ்க்கையில் முழுமையாக வென்றபின்னரும் இன்றும் போட்டியில் ட்ராக்கில் நிற்கும் இந்த 70 ப்ளஸ்களைத்தான் இளைஞர்கள் உள்வாங்க வேண்டும்.
இந்த நால்வருமே மிகக் கடுமையான உழைப்பாளிகள். கீழிருந்து படிப்படியாக மேலே உயர்ந்தவர்கள். தன் துறையில் உச்சம் தொட்டவர்கள்.
தொட்ட பின்னரும் சரியாது இன்னும் மேலே ஏற முயல்பவர்கள் !
அதனால்தான் துளியும் வயதின் தன்மை புலப்படாமல், சோர்ந்து விடாமல், துவண்டு போகாமல், உற்சாகமாக நேற்றைய ராஜாவின் பொன்விழாவைச் சிறப்பித்தனர்.
அரசு விழா எங்கனா இப்படி இருக்குமா சார் ?
ஜெயலலிதா கூட எம் எஸ் விக்கெல்லாம் பொற்கிழி கொடுக்க விழா எடுத்திருக்காங்க, எப்படி தெரியுமா இருக்கும் ?
அம்மாவுக்கு இரண்டு பக்கமும் சேருக்கு நடுவுல நாலடி அகலத்துக்கு அகழி இருக்கும்.
தூரத்தில இருக்கிற அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை 45 டிகிரிக்கு முதுகை வளைத்து, வாயைப் பொத்தி அமர்ந்திருப்பார்கள்.
கைதட்டி ஆர்ப்பரிக்க கூட இராணுவ ஒழுங்கு இருக்கும்.
அரசுக்கு வேண்டப்பட்ட சேனலில் செய்தியா மட்டும் சொல்லுவாங்க.
என்னிக்காவது சில மாதங்கள் கழித்து அதை நாலுபாகமா பிரிச்சி ஒளிபரப்புவாங்க.
இங்க என்னடான்னா பத்துக்கும் மேற்பட்டச் சேனல்களில் நேரலை.
அத்தனை பாட்டுக்களும் ஓடுது.
விழாநாயகனே சி எம் பக்கத்துலேயே மைக்க கைல வச்சிக்கிட்டு பாடுறார்.
கோரஸ் பாட பக்கத்திலிருப்பவரை அழைக்கிறார்.
எந்த ஒத்திகையும் இல்லாததால அவர் திணறினாலும் அன்புக்கு கட்டுப்பட்டு தமிழே அழகே எனதுயிரேன்னு பாடுறார்.
மைக்க பிடுங்கி அவையைப் பார்த்து கைதட்டுங்க பாடுனவருக்கு மொழி தெரியாதுன்னு அறிவிப்பாளராகிறார்.
நேற்று விழாவில் கலந்து கொண்ட அனைவரும் பேறு பெற்றவர்கள். சிம்பொனியைக் கேட்க யாருக்கு வாய்க்கும் ? கமல் நேற்று நெகிழ்வாகவே காணப்பட்டார். அதனால்தான் அந்த சிம்பனிக்காக கைகுட்டை நனைய அழுதிருக்கிறார் !
மாறாக ரஜினி இன்னும் திடமாக மாறியுள்ளார்.
கெட்ட பய சார் இந்தக் காளி, கிசுகிசுல்லாம் இழுத்து போடுறான் என்று ராஜா புலம்புமளவு அவர் மலரும் நினைவுகளைச் சொன்னது உவப்பாக இருந்தது.
ராஜா, அமர்ல்லாம் ப்ளேபாய்கள்தான்.
ராஜா குமுதத்தில் எழுதிய தொடரை வாசித்தவன் என்கிற முறையில், ரஜினி சொல்லும் முன்னரே எங்களில் பலருக்கு அது தெரியும்.
போதும்யா நீ தொடர்ந்து எழுதினா ரசாபாசமாகிடும் போல, நிப்பாட்டிடு என பலரும் கெஞ்ச, யெப்பா சாமி ஆள விடுடா என குமுதமே ஏற்றுக்கொண்டது !
ஜலக்கிரீடைன்னு ஒரு சிறப்பு இணைப்பா குமுதம் ஒரு வாரம் வெளியிட்டிருந்தது.
அதைப்பற்றி பள்ளியின் கடைசி பெஞ்சில் ஒரே கிசுகிசுப்பு. நைஸா அதைத் தெரிஞ்சிக்கிட்டு முதன் முதலா குமுதம் வாங்கி ரகசியமா படிச்சி பரண்ல அதை ஒளிச்சி வச்சேன்.
இதெல்லாம் இல்லாம இளமை ருசிக்குமா ? வாலிப வயசுன்னா யாகாவராயினும், அது இளையாராஜாவானாலும் இருக்கணும், இருக்கத்தான் செய்யும். அதை எந்தச் சபையிலும் நினைவு கூறலாம், பிழையில்லை !
இந்த விழாவில் நான் பெருங்குறையாகப் பார்த்தது வைரமுத்து இல்லாதது.
ஸ்டாலின் நினைத்திருந்தால் அதையும் சாதித்திருக்கலாம். ஆனால் அனைவரும் இவ்வளவு உற்சாகமாக இருந்ததைப் போல இல்லாமற் போய்விட்டால் ?
ஆனால் உஷாராக வைரமுத்துவிடம் ஒரு கோரிக்கை வைத்ததைப் போலவே ராஜாவிடமும் ஒரு முக்கியமான கோரிக்கையை வைத்துவிட்டார்.
வைரமுத்துவுக்கு கலைஞர் காவியக் கோரிக்கை.
ராஜாவுக்கு சங்கத்தமிழுக்கு இசையமைக்க கோரிக்கை.
ராஜாவுக்கு பாரத்ரத்னா 100% கிட்டும்.
அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் அதைவிட உயரிய விருது ராஜா பெயரால் தரப்படவிருக்கும் இசை விருது. அதைப் பெறுபவர்கள்தான் பெரும்பேறு பெற்றவர்கள் !
இளையராஜா இவ்வளவு குழைந்திருந்து நேற்றுதான் பார்த்தேன்.
இத்துணை சிறப்பானதொரு பொன்விழா தனக்கு அமையுமென்பதை, அதுவும் அரசு சார்பாக நடக்குமென்பதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லையோ என்னமோ ?
மணி பத்தரையைக் கடந்தும் யாருக்கும் விழாவை முடிக்க விருப்பமில்லை.
இதே அரங்கில் 2011 ராஜாவின் இசை நிகழ்ச்சியின் போதும் எனக்கு அதுவே நேர்ந்தது.
நள்ளிரவு மணி 12 ஐ நெருங்கிவிட்ட பின்னும் ராஜாவுக்கு கச்சேரியை முடிக்க மனமில்லை. கேட்டவர்களுக்கும்.
ஜேசுதாஸ், எஸ்பிபி, பாலமுரளிகிருஷ்ணா, சித்ரா, உமா ரமணன், தீபன் சக்கரவர்த்தி என பல பேராளுமைகள் நிறைந்திருந்த கச்சேரி அது.
அந்த அர்ப்பணிப்பு நிச்சயம் வேறாரிடத்திலும் காண முடியாத ஒன்று !
இந்த அற்புத விழாவுக்காக ஒத்துழைத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. முதலமைச்சர் & விழாநாயகர் நீடூழி வாழ்க !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக