சனி, 5 ஜூலை, 2025

தமிழ்நாட்டின் சாவி குருமூர்த்தி மூலம் குஜராத்திகளின் கைகளில்தான் இருக்கிறது

May be an image of 2 people and text that says 'BREAKING NEWS புதிய தலைமுறை தலை ராமதாஸை சந்திக்க குருமூர்த்தி வருகை விழுப்புரம்: தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை சந்திக்க ஆடிட்டர் குருமூர்த்தி வருகை ஆடிட்டர் குருமூர்த்தி, அதிமுக முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் ராமதாஸூடன் சந்திப்பு; ராமதாஸ் உடனான சந்திப்பு நிறைவுபெற்ற நிலையில் அன்புமணி புறப்பட்டார் 05/06|2025 10:00 05/06|2025-10:00AM AM www.puthiyathalaimurail.c'

சூர்யா சேவியர் :   குருமூர்த்தி எனும் வெப்பன் சப்ளையர்
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி கட்சிகள் தவிர்த்த பலரையும் ED மூலம் மிரட்டல் விடுத்து ஒருங்கிணைக்கப்பவர். 
திமுக ஆட்சிக்கும், அமைச்சர்களுக்கும் நீதிமன்றம், வருவாய்துறை, அமலாக்கத்துறை மூலம் தொடர்ந்து  நெருக்கடிகளை ஏற்படுத்துபவர். 
சுருங்கச் சொன்னால் ஆர்.எஸ்.எஸ் சின் தமிழ்நாடு வெப்பன் சப்ளையர்.
அமித்ஷா கடந்தமுறை வந்த போது குருமூர்த்தியின் இல்லம் சென்று திட்டத்தை இறுதிப்படுத்தினார். அதன்படியே அண்ணாமலை அகற்றப்பட்டு நயினார் நாகேந்திரன் தலைவரானார்.

உலக புகழ் இலங்கையின் முத்து குளிப்பில் தென்னிந்திய தொழிலாளர்கள்

May be an image of 4 people
May be an image of 5 people

 ராதா மனோகர் : யாழ்ப்பாணத்திற்கும் தமிழ்நாட்டுக்கும் மட்டுமல்ல  கேரளம் ஆந்திரம் கர்நாடகம் ஒடிஷா போன்ற மாநிலங்களுக்கும் நெருங்கிய தொடர்பு  உண்டு . 
உதாரணமாக இலங்கையின் கரையோர பகுதிகள் முத்து குளிப்பில் உலக புகழ் பெற்ற இடங்களாக இருந்திருக்கிறது  
வடமேற்கு பகுதியில் உள்ள  மன்னார் கற்பிட்டி நீர்கொழும்பு போன்ற பகுதிகளும் கிழக்கு மாகாண மட்டக்களப்பு போன்ற பகுதிகளிலும் முத்து குளிப்பு பெரிய அளவில் நடந்திருக்கிறது.
சுமார் 1960 ஆம் ஆண்டுவரை இத்தொழில் நடந்திருக்கிறது.
அரபு நாடுகளில் இருந்து முத்துக்களை வாங்குவதற்கும் முத்து குளிக்கவும் கூட ஏராளமானோர் வந்திருக்கிறார்கள் 
இவர்களின் வழித்தோன்றல்கள் கூட கணிசமான அளவில் இலங்கையில் தங்கி விட்டார்கள்.
அதிக அளவிலான முத்து குளிப்பவர்கள் தமிழகம் மாத்திரம் இல்லாமல் ஆந்திராவில்  இருந்தும் வந்திருக்கிறார்கள்.
இவர்களில் பெரும்பாலும் முத்து குளிக்கும் காலம் முடிந்த பின்பு திரும்பி போய்விடுவர்கள் 

வெள்ளி, 4 ஜூலை, 2025

ஈரான் தோண்டும் சுரங்கம்… எச்சரிக்கும் அமெரிக்க உளவுத்துறை… இந்தியாவுக்கு என்ன பாதிப்பு? us sources say iran

  Minnambalam Desk  : கடந்த மாதம் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் 12 நாள் யுத்தம் நடைபெற்றது.
இந்த யுத்தத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கி ஈரானின் முக்கிய அணு நிலையங்களின் மீது தாக்குதல் நடத்தியது.
இதனால் கோபமடைந்த ஈரான் ஜூன் 22 அன்று ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கும் முன்மொழிவைத் அறிவித்துள்ளது.
ஆனால், இது கட்டாயமான தீர்மானம் அல்ல. இறுதியான முடிவை ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில்தான் எடுக்க வேண்டியதாகியுள்ளது.
இதற்கிடையில், பாரசீக வளைகுடாவில் ஈரானிய இராணுவ கடற்படை கண்ணிவெடிகளை கப்பல்களில் ஏற்றி மிகப்பெரிய கடற்படை சுரங்கங்கள் தோண்டுவதாகவும், மேலும் ஹார்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட ஈரான் தயாராகி வருவதாகவும் அமெரிக்காவின் இரண்டு முக்கிய அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

திமுகவோடு தொடர்பு… எனக்கு எதிராக லாபி… வெளியே போங்க… மல்லை சத்யாவை எச்சரித்த வைகோ

Link with DMK Vaiko warns Mallai Sathya

 மின்னம்பலம் : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ புதன்கிழமை (ஜூலை 2) திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்துக்கு சென்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். Link with DMK Vaiko warns Mallai Sathya
இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “முதலமைச்சர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்தேன். இந்த அரசுக்கு எதிராக எந்த கட்டத்திலும் ஒரு வார்த்தை ஒரு விமர்சனம் நான் வைத்ததில்லை, வைக்கவும் மாட்டேன்.
வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுக அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இல்லாமலேயே திமுக ஆட்சி அமைக்கும். நாங்கள் திமுக கூட்டணியில் நீடிப்போம்” என்று அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டார்.

வியாழன், 3 ஜூலை, 2025

பலரை ஏமாற்றிய ஒரு நாள் மனைவி நிகிதாவின் தலைமை செயலக செல்வாக்கு

May be an image of 1 person and smiling
May be an image of 1 person and text
May be an image of 4 people and text that says 'சிவகங்கை தந்தி NTHIT'

 Vigash Billa  : திருபுவனம் அஜித் குமார் கொலை வழக்கில் திருடன் கையிலேயே சாவி கொடுக்க பட்டுள்ளதா? வழக்கில் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் யார் என தமிழகம் தேடிவரும் நிலையில்,
 அது சிவகங்கை மாவட்ட முன்னாள் ஆட்சியரும் தற்போதைய மத்திய அரசின் IAS அதிகாரி G.லதா என்பதாக கூறப்படுகிறது 
சம்பவம் நடந்த அன்று சட்டம் சட்டம் ஒழுங்குADGP டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் 
மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜி பணம் சுமார் 200 கோடி காணாமல் போன வழக்கை விசாரணை செய்ய மதுரையில் இருந்ததாகவும்,
 புகார் அளித்த பெண்ணின் தந்தை ஒரு துணை ஆட்சியராக பணிபுறிந்தவர் IAS அதிகாரி லதாவும் அவரும் ஒன்றாக பணிபுரிந்தவர்கள் 

அஜித் - போலீஸ் கொலை வீடியோ எடுத்த சக்திஸ்வரன் : சாட்சிகள் பயத்தில் இருக்கிறோம்; நீதிமன்றத்தை நாடுவோம்!

 நக்கீரன் :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர் நகை திருட்டு வழக்கில் போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 01.07.2025 அன்று நடைபெற்ற விசாரணையில் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிமன்றம், பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்திருந்தது.  இந்த வழக்கில், 'மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் பால் சுரேஷ் நீதி விசாரணை நடத்த வேண்டும். இதற்காகத் திருப்புவனம் காவல் ஆய்வாளர், சப் இன்ஸ்பெக்டர், மாவட்ட எஸ்.பி. உள்ளிட்டவர்கள் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை மதுரை மாவட்ட நீதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும்' எனத் தெரிவித்து இந்த வழக்கை வரும் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

புதன், 2 ஜூலை, 2025

ஒரு அதிகாரிக்கு 10 கார் தந்தால் இப்படிதனதான் நடக்கும்! அரசு பணம் மக்கள் பணம் அல்லவா ?

 Kulitalai Mano :  ஒரு குற்றசெயலை செய்ய புறப்பட்ட  ஒரு கட்டப்பஞ்சாயத்து கும்பலுக்கு 
அரசு கார் அரசு டிரைவரை ஒரு ஏடிஜிபி அனுப்புகிறார் என்றால்  யாருக்கும் பயப்பட வேண்டி அவசிய நிலையில் அவர் இல்லை  என்ற நினைப்பில்தானே அனுப்பினார் ?
தவறு ஏடிஜிபி மேல் அல்ல  அத்தகைய சூழலில்  அதிகார வர்க்கத்தை வைத்திருக்கும் ஆட்சியாளர்களைத்தான் குறை சொல்ல வேண்டும்
யார் ஆட்சி செய்தாலும் நேற்று இன்று நாளையும் நடக்கும்
வேற்று மாநில ஐபிஎஸ் யாராவது குடும்பத்துடன் இங்கே சுற்றுலா வந்தாலும் அரசு காரை வள்ளலாக அனுப்புகிறார்கள் 
ஒரு அதிகாரிக்கு 10கார் தந்தால் இப்படிதனதான் நடக்கும் அரசு பணம் மக்கள் பணம் அல்லவா ?
பதவி காலத்தில்  மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் தலைவர்கள் கூட மக்களுக்கு பயப்படுகின்றனர் 
ஆனால்  இந்த அதிகாரிகள்  ஒரு அரசனின் சுகபோக வாழ்க்கையை வாழ்கிறார்கள் 

இந்தியாவுக்கு 500 சதவிகிதம் வரி - ட்ரம்ப் அறிவிப்பு! ரஷ்யாவோடு வர்த்தக உடன்படிக்கை வைத்துள்ள நாடுகளுக்கு

 மின்னம்பலம் - Selvam  : இந்தியா, சீனா உள்ளிட்ட ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 500 சதவீதம் வரி விதிக்கக்கூடிய மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்திருப்பதாக குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக லிண்ட்சே கிரஹாம் ஏபிசி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில்,
“நீங்கள் ரஷ்யாவிலிருந்து பொருட்களை வாங்குகிறீர்கள் என்றால் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் உங்கள் பொருட்களுக்கு 500 சதவீதம் வரி விதிக்கப்படும். இந்த மசோதா ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ரஷ்யாவில் இருந்து இந்தியாவும் சீனாவும் 70 சதவிகிதம் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

விஸ்வரூபமான அஜித்குமார் லாக்கப் மரணம்-யார் அந்த எஸ்.பி ‘சார்’?

Lockup Death SP

 மின்னம்பலம் : திருப்புவனம் அஜித்குமார் மரணத்தின் பின்னணி என்ன?
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில். இந்த கோவிலுக்கு ஜூன் 27-ந் தேதியன்று மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த மூதாட்டி 76 வயது சிவகாமி, மகள் மருத்துவர் நிகிதாவுடன் சாமி தரிசனம் செய்ய காரில் வந்திருந்தார். சிவகாமியால் நடக்க முடியாத நிலையில் கோவில் காவலாளி அஜித்குமார், வீல் சேர் கொண்டு வந்து கொடுத்துள்ளார். அப்போது காரை பார்க் செய்ய அஜித்குமாரிடம் சாவி கொடுக்கப்பட்டுள்ளது. அஜித்குமார் தமக்கு கார் ஓட்ட தெரியாது என்பதால் வேறொருவர் உதவியுடன் காரை பார்க்கிங் செய்துள்ளார்.

செவ்வாய், 1 ஜூலை, 2025

திராவிட கட்டிட அமைப்பாக உருவான யாழ்ப்பாண நூலகம்! மேயர் அல்பிரட் துரையப்பாவின் உரை 11 -10 -1959

May be an image of temple
May be an image of 1 person

 ராதா மனோகர் : யாழ்ப்பாண பொது நூலகத்தை திறந்து வைத்த மேயர் திரு அல்பிரட் துரையப்பா அவர்கள் ஆற்றிய உரை மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
அன்றய இலங்கை தமிழ் பத்திரிகைகள் கடுமையாக இருட்டடிப்பு செய்த செய்தி இது.
யாழ்ப்பாண தொகுதியில் மட்டுமல்லாமல் முழு வட இலங்கையிலும் அரசியல் ரீதியாக வேகமான வளர்ச்சியை கொண்டிருந்தார்  திரு அல்பிரட் துரையப்பா!

May be an image of text that says 'DECLARES JAFFNA PUBLIC LIBRARY cast The Tamil Service Radio Ceylon broad- Saturda 17-1059 from 7-30-7-45 lnterview they bad with Muttusamypillai Crown Advoente. President Jatina Saira Paripalana Sabhai. SCHEME TO SERVE THE ENTIRE PENINSULA idea of Jaffna Public Library on modern foating ago. It took practical step early 1952. For yBT Mayor after after Mayor worked untiringly for the successful completion of was nowever left. Mr. T. Duraiappah, the present Mavor the program. Thus became possible for the Library be openon Vijayathasami day. LANDS FOR SALE farist piece by 10 of Kovalam declared Scbool, A. Ims. of occupied Engliah M'

அவரை  அரசியல் அரங்கில் இருந்து நீக்கி விட வேண்டும் என்ற நோக்கத்தை ஈழநாடு சுதந்திரன் போன்ற பத்திரிகைகளின் இது போன்ற இருட்டடிப்புகள் தெளிவாக காட்டுகிறது   
யாழ்ப்பாண பொது நூலகத்தை பற்றிய செய்திகளே இந்த பத்திரிகைகளில் பெரிதாக இடம் பெறவில்லை.
இவர்களின் இந்த இருட்டடிப்பையும் மீறிய அதிசயமாக ஹிந்து ஆர்கன்  (Hindu Organ  10 - 11 1959 ) என்ற ஆங்கில பத்திரிகையில் மட்டும் இது வெளியாகி இருந்தது.

அஜித்தை காவல்துறையினர் தாக்கும் அதிர்ச்சி வீடியோ

 மாலைமலர் :  : தமிழ்நாட்டில்போலீஸ் விசாரணையின்போது மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவலர்களால் தாக்கப்பட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார்.
ஜூன் 27-ம் தேதி கோயிலுக்கு வந்த பெண் பக்தர் ஒருவரது காரில் 10 பவுன் நகை திருடுபோனது குறித்து அஜித்குமாரை அழைத்துச் சென்று மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் விசாரித்தனர். அப்போது அஜித்குமார் உயிரிழந்தார்.

திங்கள், 30 ஜூன், 2025

கோயில் காவலாளி அஜித் குமார் மரணம் - காவல்துறை விசாரணையில் என்ன நடந்தது? சகோதரர் அளித்த முழு விவரம்

 பீபீ சி - பிரபுராவ் ஆனந்தன்  : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நகை திருட்டு புகாரின் பேரில் தனிப்​படை போலீ​சாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்தார். .
சனிக்கிழமை இரவு அஜித்குமார் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினரிடம் போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசார் கடுமையாக தாக்கியதே அஜித்குமார் உயிரிழக்கக் காரணம் என்று குற்றம்சாட்டி அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மடப்புரம் கிராம மக்கள் காவல் நிலைய முற்றுகையிலும் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக 6 தனிப்படை காவலர்கள் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

சிவகங்கை அஜித்குமார் மரணம்.. காட்டுமிராண்டித்தன நடவடிக்கை.. போலீசாரை கைது செய்க.. சண்முகம் ஆவேசம்!

 tamil.oneindia.com   -Yogeshwaran Moorthi  : சென்னை: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளி கோயிலுக்கு வந்த பெண் பக்தர் கொடுத்த புகாரின் பேரில் கோயிலில் தற்காலிக காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார் என்ற இளைஞரை சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்து சென்ற திருபுவனம் காவல்துறையினர், அந்த இளைஞரை அடித்தே கொன்றுள்ளனர். 
காவல்துறையினர் இந்த காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளி கோயிலுக்கு நேற்று முன்தினம் சிவகாமி என்பவர் தனது மகளுடன் கோயிலுக்கு காரில் வந்துள்ளார்.

ஞாயிறு, 29 ஜூன், 2025

கொல்கொத்தா பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட மாணவியை சந்திக்க கொல்கத்தா மகளிர் ஆணைய உறுப்பினருக்கு அனுமதி மறுப்பு

hindutamil.in  : பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட மாணவியை சந்திக்க கொல்கத்தா மகளிர் ஆணைய உறுப்பினருக்கு அனுமதி மறுப்பு
கொல்கத்தா: கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் அர்ச்சனா மஜும்தார், குற்றம் நடந்த கல்லூரிக்கு வருகை தந்தார்.
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் அர்ச்சனா மஜும்தார் இன்று தெற்கு கொல்கத்தா சட்டக்கல்லூரிக்குச் சென்றார். அங்கு வழக்கின் விசாரணை விவரங்கள் குறித்து ​​பொறுப்பதிகாரியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

தமிழர்களின் ஆங்கில மேலாண்மை குறிவைக்கிறார் அமித் ஷா

 ராதா மனோகர் : தமிழர்களின் ஆங்கில மேலாண்மை குறிவைக்கப்படுகிறது! 
நாம் ஆங்கிலத்தில் பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருப்பது வெறும் உளறல் அல்ல. நயவஞ்சகம்!
குறிப்பாக தமிழகத்தின் ஆங்கில மேலாண்மையை அழித்து ஒழிப்பதற்கான  முதல் படிதான் இந்த நயவஞ்சக பேச்சு.
கல்வி பொருளாதாரம் மருத்துவம் மட்டுமல்லாமல் தமிழர்கள் கடல் கடந்தும்  அகல கால் வைப்பதற்கும், தமிழகத்தின்  இரு மொழி கொள்கையும்  அதன் காரணமாக பெற்ற ஆங்கில மேலாண்மையும் முக்கிய காரணமாகும்.
தமிழர்களின் ஆங்கில மேலாண்மையை ஒழித்து விட்டால் மட்டுமே தமிழர்களை இனி அடிமை படுத்த முடியும் என்ற முடிவுக்கு வடநாட்டு சங்கிகள் வந்துவிட்டார்கள்.
இந்த நிமிடம் வரை அந்த இலக்கை நோக்க்கி பயணிக்க முயற்சி செய்கிறார்கள்.