சனி, 5 ஜூலை, 2025

தமிழ்நாட்டின் சாவி குருமூர்த்தி மூலம் குஜராத்திகளின் கைகளில்தான் இருக்கிறது

May be an image of 2 people and text that says 'BREAKING NEWS புதிய தலைமுறை தலை ராமதாஸை சந்திக்க குருமூர்த்தி வருகை விழுப்புரம்: தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை சந்திக்க ஆடிட்டர் குருமூர்த்தி வருகை ஆடிட்டர் குருமூர்த்தி, அதிமுக முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் ராமதாஸூடன் சந்திப்பு; ராமதாஸ் உடனான சந்திப்பு நிறைவுபெற்ற நிலையில் அன்புமணி புறப்பட்டார் 05/06|2025 10:00 05/06|2025-10:00AM AM www.puthiyathalaimurail.c'

சூர்யா சேவியர் :   குருமூர்த்தி எனும் வெப்பன் சப்ளையர்
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி கட்சிகள் தவிர்த்த பலரையும் ED மூலம் மிரட்டல் விடுத்து ஒருங்கிணைக்கப்பவர். 
திமுக ஆட்சிக்கும், அமைச்சர்களுக்கும் நீதிமன்றம், வருவாய்துறை, அமலாக்கத்துறை மூலம் தொடர்ந்து  நெருக்கடிகளை ஏற்படுத்துபவர். 
சுருங்கச் சொன்னால் ஆர்.எஸ்.எஸ் சின் தமிழ்நாடு வெப்பன் சப்ளையர்.
அமித்ஷா கடந்தமுறை வந்த போது குருமூர்த்தியின் இல்லம் சென்று திட்டத்தை இறுதிப்படுத்தினார். அதன்படியே அண்ணாமலை அகற்றப்பட்டு நயினார் நாகேந்திரன் தலைவரானார்.


ஜெயலலிதா காலத்தில் அதிமுகவிற்கு பெரும்பான்மை வாக்கு வங்கியாக இருந்த தேவர் சமூக வாக்குகளை பாஜகவிற்கு மாற்றுவது என்பதன் முயற்சியே நயினார் தலைவராக்கப்பட்டதன் நோக்கம்.
ஓபிஎஸ் மற்றும் தினகரனை வைத்து நாடாளுமன்றத் தேர்தலில் ஓரளவே தேவர் சமூக வாக்குகளைப் பெற முடிந்தது. 
அதிமுக கட்சியை உள்ளே இழுத்து பிறகு முழுமையாக உறிஞ்சி காலி செய்வது என்பது இப்போதைய இலக்கு. பாஜக-அதிமுக கள்ளக்கூட்டணி என்ற முதல்வரின் விமர்சனம் உண்மையாக வெளிப்பட்டது.
தேவர்களை உள்ளே கொண்டுவர வேண்டுமென்றால் தேவேந்திரர்களை வெளியேற்ற வேண்டும் என்ற பார்முலா தான், 
பாஜக விசுவாசத்தின் வேராக முதலிலிருந்து செயல்பட்ட டாக்டர்.கிருஷ்ணசாமியை 2021-2024 தேர்தல்களில் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற்றியது. 
இது குருமூர்த்தி நடத்தும் தேவர்-தேவேந்திரர் விளையாட்டு.
நரேந்திரர்-தேவேந்திரர் என்ற முழக்கத்தின் மூலம் தேவேந்திரர் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 
தேவேந்திரகுல வேளாளர்களில் பொருளாதார ரீதியாக முன்னேறியவர்களை வருமானவரித்துறை மூலம் நெருக்கடி கொடுத்து பாஜகவிற்கு இழுக்கப்பட்ட செய்திகளும் உண்டு.
தேவேந்திரருக்கு நரேந்திரர், ஜான்பாண்டியன், தேவருக்கு தினகரன்,ஓபிஎஸ்,நயினார் வகையறாக்கள், கவுண்டருக்கு வானதி, அண்ணாமலை வகையறாக்கள், நாடாருக்கு தமிழிசை,பொன்னர், இரவு ரெண்டு மணி சரத்குமார் உள்ளிட்ட சகபாடிகள், தெலுங்குக்கு பிரேமலதா, முதலியாருக்கு ஏசி.சண்முகம். கோனாருக்கு தேவநாதன், பார்கவகுல பாரிவேந்தர், பட்லர்பாய் இபுராஹிம், மற்றும் கொலை, கொள்ளை, பிட்பாக்கெட்,பாலியல் வன்மம்,கஞ்சா,அபின், போதை மருந்து கடத்தல் பேர்வழிகள் உள்ளிட்ட பாம் பக்கிரிகள் பலரும் கூட்டணியில் உண்டு. இவர்கள் அனைவருக்கும் லோககுருவே குருமூர்த்தி தான். குருமூர்த்திக்கு லோககுரு பெரியவா. 
இவ்வளவு இருந்தும் வன்னியர்கள் இல்லாத அன்னியர்களாக இருந்ததை அன்புமணியின் மருத்துவக் கல்லூரி முறைகேடு வழக்கை வைத்து மிரட்டி, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பேரம்பேச முடியாத கூட்டணியில் இணைத்தனர்.
மகனை அப்பாவும்,அப்பாவை மகனும் நீக்காமல்
மற்ற எல்லோரையும. மாறி மாறி ஒருவாரமாக நீக்கிக்கொண்டிருந்தார்கள். தந்தை-மகன் சண்டையின் உள்ளடக்கம் பேரம் சார்ந்த பாமகவின் கொள்கையை நடைமுறைப்படுத்துவதை தவிர வேறில்லை.
தந்தை-மகன் சண்டையால் பலரையும் போல் பதறிப்போன லோககுரு, தனது ராஜதந்திரம் கடந்தகாலத்தைப் போல் சோலி முடிஞ்சிருமோ என்று கதறியபடியே அன்புமணி முன்னே, லோக்குரு பின்னே தைலாபுரம் சென்று சேர்ந்தனர். அறையிலேயே அமர்ந்து அடிமைகளை ஆட்டிப்படைக்கும் லோக்கருவையே அலற விட்ட வகையில் ராமதாஸ் சாணக்கியர் தான். பேரம் படியும். தீயசக்தி திமுகவை வீழ்த்துவோம் என்ற ராமதாஸ் அறிக்கையும் தயாராகும்.
சிவந்தி ஆதித்தன் வீட்டு ஒப்பந்தப்படி நாம்தமிழர் கட்சி பெயர் வாங்கி கொடுத்த தினத்தந்தி ஆடிட்டரான குருமூர்த்தி, அல்ரெடி அல்சேசன் மூலம் பெரியார் ஒரு பேரழிவு என்ற பார்முலாவை மட்டும் பேச உத்தரவு. 
பாண்டிச்சேரி பாஜக நமச்சிவாயத்தின் மூலம் அமித்ஷாவின் ஆதரவோடு செயல்படும் புஜ்ஜி குட்டியும்,மோடியால் இழுத்தவரப்பட்டு சந்தித்த விஜயும், குருமூர்த்தி வசனங்களுக்கு மட்டும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். விஜயை முழுமையாக வெளியே விட்டால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆபத்து என்பதால், அவ்வப்பொழுது திமுக எதிர்ப்பு வசனங்கள் வெளியேறி வருகிறது. விஜய் மற்றும் புஜ்ஜியைக் கண்காணிக்க பாஜகவுக்கு பலநூறு கோடி நன்கொடை கொடுத்த லாட்டரி மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜூனா. விஜயின் அரசியல் எதுவென்றால், நாய் குரைப்பது அதன் கழுத்தில் கட்டியிருக்கும் கயிற்றின் நீள அளவைப் பொறுத்த்தைப் போன்றது மட்டுமே.
மொத்தத்தில் பார்ப்பனியத்திற்கு விஞ்சி நிற்கும் அடிமை யார் என்பதில் தான் அதிமுக-பாமக-தவெக-நாதக இடையே போட்டி. இதன் முழுமையான விபரங்களை அறிய துக்ளக் ஆண்டுவிழா வரை பொறுத்திருங்கள்.
2026 சட்டமன்றத் தேர்தலில் பெரியார் ஆட்சியை வீழ்த்தி, பெரியவா ஆட்சியை கொண்டுவரத்துடிக்கும் குருமூர்த்தியின் குறுக்குத்திட்டம் குசுவானாமாக போய்விடுமோ என்ற பதட்டம் பாஜக தேசியத்தலைமைக்கு உண்டு. ஒரு பக்கம் ரஜினி படம்,மறுபக்கம் மோடி படம் என்றால் தமிழ் நாட்டின் ஷூல்நிலையே மாறும் என்ற மூர்த்தியின் முழக்கம் முக்கிக்கொண்டு போனது ஞாபகம் வரத்தானே செய்யும்?
2026 தமிழ்நாடு யார் பக்கம்?
சமூகநீதியா? மனுநீதியா?
மதச்சார்பின்மையா? மதவெறியா?
அனைவருக்குமான வளர்ச்சியா? அதானி அம்பானிக்கான வளர்ச்சியா?
பெண் விடுதலையா? பெண்ண்டிமைத்தனமா?
தமிழ்நாட்டின் சாவி குருமூர்த்தி மூலம் குஜராத்திகளின் கைகளுக்கா?
சூர்யா சேவியர்
05-06-25

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக