புதன், 2 ஜூலை, 2025

இந்தியாவுக்கு 500 சதவிகிதம் வரி - ட்ரம்ப் அறிவிப்பு! ரஷ்யாவோடு வர்த்தக உடன்படிக்கை வைத்துள்ள நாடுகளுக்கு

 மின்னம்பலம் - Selvam  : இந்தியா, சீனா உள்ளிட்ட ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 500 சதவீதம் வரி விதிக்கக்கூடிய மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்திருப்பதாக குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக லிண்ட்சே கிரஹாம் ஏபிசி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில்,
“நீங்கள் ரஷ்யாவிலிருந்து பொருட்களை வாங்குகிறீர்கள் என்றால் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் உங்கள் பொருட்களுக்கு 500 சதவீதம் வரி விதிக்கப்படும். இந்த மசோதா ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ரஷ்யாவில் இருந்து இந்தியாவும் சீனாவும் 70 சதவிகிதம் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறார்கள்” என்று தெரிவித்தார்.



கடந்த 2024–25-ஆம் நிதியாண்டில் இந்தியா – ரஷ்யா இருதரப்பு வர்த்தகம் இதுவரை இல்லாத அளவுக்கு 68.7 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது. இந்திய பொருட்களை அதிகளவில் ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்தது மற்றும் கச்சா எண்ணெய் உள்ளிட்ட பிற முக்கிய பொருட்களை ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்தது இந்த வர்த்தக ஏற்றத்திற்கு வழிவகுத்தது

இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் வலுவடைந்து வருவதால், 2030 ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தில் 100 பில்லியன் டாலர்களை எட்ட வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளன.

இந்தசூழலில், ரஷ்யாவிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்தால் இந்தியாவுக்கு 500 சதவிகிதம் வரி விதிப்போம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது உலக நாடுகள் மத்தியில் மிக முக்கியமான் விவாதமாக மாறியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக