மின்னம்பலம் - Kavi : விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் முதல்வர் ஸ்டாலினை இன்று (அக்டோபர் 26) ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதன்பிறகு திமுக கூட்டணி தலைவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
சனி, 26 அக்டோபர், 2024
முதல்வர் ஸ்டாலினை சந்தித்த திமுக கூட்டணி தலைவர்கள் : ஏன்?
வெள்ளி, 25 அக்டோபர், 2024
சென்னை திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயுக்கசிவு? மாணவர்கள் மயக்கம்
தினமலர் : சென்னை: சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள பள்ளியில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
திருவொற்றியூர் கிராம தெரு பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்படுகிறது.
இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
மாலை திடீரென வாயுநெடி ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கிருந்த மாணவர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். இருப்பினும் 3 பேர் மயக்கமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை - போதை பயணியால் பறிபோன கண்டக்டர் உயிர்! ஓடும் பஸ்சுக்குள் என்ன நடந்தது?
tamil.oneindia.com - Mani Singh S : சென்னை: சென்னை அண்ணா ஆர்ச் அருகே சென்று கொண்டுருந்த மாநகர பஸ்சில் பயணி ஒருவர் மதுபோதையில் தகராறு செய்ததால்,
அந்த பயணிக்கும் கண்டக்டருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் அந்த பயணி தள்ளிவிட்டதில் கண்டக்டர் கீழே விழுந்து உயிரிழந்தார்.
பயணிக்கும் கண்டக்டருக்கும் எப்படி பிரச்சனை ஏற்பட்டது?
என்ன நடந்தது என்பதை இங்கே பார்க்கலாம்.
சென்னை மாநகர பேருந்தில் பயணிக்கும் - நடத்துநனருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
வியாழன், 24 அக்டோபர், 2024
இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்: கனடா புதிய ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை
hindutamil.in : ஒட்டாவா: இந்தியா மீது பொருளாதாரத் தடையை கனடா அரசு விதிக்க வேண்டும் என்று, கனடாவிலுள்ள புதிய ஜனநாயகக் கட்சியின் (என்டிபி) எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கனடாவில் வசித்து வந்த சீக்கிய பிரிவினைவாத காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.
இதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது. இந்நிலையில், நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தமுடிவு செய்துள்ளதாகவும் கனடா தெரிவித்தது.
இதையடுத்து இந்தியதூதரை திரும்ப பெற இந்தியா முடிவு செய்தது. மேலும் டெல்லியில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் 6 பேரை வெளியேற உத்தரவிட்டது.
இலங்கையில் இஸ்ரேலிய பயணிகள் மீதான தாக்குதல் திட்டம்
Letchuman Shanmuganathan : இஸ்ரேலிய பிரஜைகள் மீதான தாக்குதல் திட்டம் – இருவர் கைது.. அம்பாறை மாவட்டத்தின் பொத்துவிலுக்கு அருகில் அமைந்துள்ள அருகம்பே, சர்ப் வீரர்கள் அடிக்கடி வந்து செல்லும் உலகின் மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இஸ்ரேலியர்கள் அதிகம் கூடும் இடமாகும்.
இவ்வாறானதொரு பின்னணியில் அருகம்பே பிரதேசத்தில் தங்கியுள்ள இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் இருப்பதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் அந்நாட்டு பாதுகாப்பு படையினருக்கு அறிவித்துள்ளன.
இலங்கையைச் சேர்ந்த இருவர் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாகவும் அவர்களில் ஒருவர் ஈராக்கைச் சேர்ந்தவர் என்றும் புலனாய்வுப் பிரிவினருக்குத் தெரிவிக்கப்பட்டது.
விஜய் 70 அடி உயரத்தில் த.வெ.க மாநாடு கட் - அவுட்.. பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் நடுவில் விஜய்!
tamil.filmibeat.com -Mohanraj Thangavel : விக்கிரவாண்டி: தமிழ் சினிமாவின் முக்கிய அங்கமாக இருப்பவர் நடிகர் விஜய். மிகப்பெரிய ஓப்பனிங் கொண்ட கதாநாயகன்,
அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகன் என விஜய்யின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் ரொம்பவும் பெருசு. இப்படியான நிலையில் அவர் தொடங்கியுள்ள அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், மாநாட்டுத் திடலில் அரசியல் தலைவர்களின் கட் - அவுட்டுகளுக்கு மத்தியில் விஜய்க்கும் கட் - அவுட் வைக்கப்பட்டுள்ளது.
அம்பாறையில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் திட்டம் அம்பலம் இந்தியாவே தகவல் வழங்கியது - தாக்குதலுக்காக 50 இலட்சம் ரூபா
அததெரண அறுகம்பே தாக்குதல் திட்டம் குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகளால் இலங்கை பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் வழங்கப்பட்டதாக இன்று (23) தெரியவந்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் பொத்துவிலுக்கு அருகில் அமைந்துள்ள அறுகம்பே பகுதியானது,
அலைச்சறுக்கு (Surfing) செய்பவர்கள் அடிக்கடி வந்து செல்லும், உலகின் மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.
அந்தப் பகுதி இஸ்ரேலியர்கள் அதிகம் கூடும் பகுதியாகவும் காணப்படுகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில் அறுகம்பே பகுதியில் தங்கியுள்ள இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் இருப்பதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் அந்நாட்டு பாதுகாப்புப் படையினருக்கு அறிவித்துள்ளன.
உங்களவா கண்டு பிடிச்ச மிகப்பெரிய மோசடி சொல்தான் பக்திங்கிறது.
ராதா மனோகர் : கீரன் : பக்தி அப்படீனா என்ன.?
சங்கரன் : பக்தின்னா அன்பு..!
கீரன் : அன்புன்னா அன்புன்னு சொல்ல வேண்டியதுதானே? அதென்ன பக்தி ...யுக்தி?
சங்கரன் : சாதாரண மனிதர்களுக்கு இடையே இருப்பது அன்பு .கடவுளிடம் நமக்கு இருப்பது பக்தி!
கீரன் : ஓஹோ .. இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
சங்கரன் : கடவுள் நம்மைவிட ரொம்ப உசத்தி!
வெறும் அன்புன்னு சொன்னா?
அது மதிப்பில்லை அதனாலேதான் பக்திங்கிறோம்..!
கீரன் : அதாவது கொஞ்சம் பயம் கலந்த அன்புன்னு வச்சுக்காமா..?
சங்கரன் : அதே அதே .. அதான் பக்திங்கிறது !
கீரன் : பயம் இருக்கும் இடத்தில் வெறுப்புதானே இருக்கும்? அன்பு எப்படி வரும்கிறேன்.?
சங்கரன் : இது விதண்டாவாதம் .. அது வேற இது வேற ... அது அன்பு இது பக்தி!
புதன், 23 அக்டோபர், 2024
வடநாட்டு கலைஞர் திரு லாலு பிரசாத் யாதவ்
Vijay Karthick : மொகலாய ஆட்சியிலும், பிரித்தானிய ஆட்சியிலும் வங்காளத்தோடு இணைந்திருந்த பீகார் பிரிக்கப்பட்ட பின்பும் ஏன் வங்காளம் வளர்ந்த அளவு கூட வளரவில்லை ?
மேலும் இந்திய ஒன்றிய வரலாற்றில் "பீகார் பீகாரிகளுக்கே" என்ற தனிக்குரல்தான் [1909] முதலில் ஒலித்தது.இதை நான் தலைவரின் மனசாட்சியான மாறனின் மாநில சுயாட்சி புத்தகத்தில்-கு.ச.ஆனந்தனின் மாநில சுயாட்சி நூலிலும்-சாதிக் பாட்சாவின் மாநில சுயாட்சி நூலிலும் படித்திருக்கிறேன்.
1917ல் தான் திராவிடநாடு திராவிடர்களுக்கே என்றார் புரட்சியாளர் டி.எம்.நாயர்.
ஹிஸ்புல்லாவின் பதுங்கு குழிகளில் 15,000 கோடி ரொக்கம்., இஸ்ரேல் வெளியிட்ட ஆதாரம்
லங்காஸ்ரீ : ஹிஸ்புல்லாவின் ரகசிய பதுங்கு குழிகளில் 15,000 கோடி ரொக்கம்., இஸ்ரேல் வெளியிட்ட ஆதாரம்
ஹிஸ்புல்லாவின் ரகசிய பதுங்கு குழிகளை இஸ்ரேல் இலக்காக்கியுள்ளது.
லெபனான் மருத்துவமனை ஒன்றின் கீழ் உள்ள பதுங்கு குழியில் தங்கம் மற்றும் பணத்தாள்களை குவியல் குவியலாக இருப்பதை உறுதிப்படுத்தும் காணொளியை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் தலைவர் யஹ்வா சின்வார் கொல்லப்பட்டதை அடுத்து இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதல் நடத்தப்போவதாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா சமீபத்தில் மிரட்டல் விடுத்திருந்தது.
செவ்வாய், 22 அக்டோபர், 2024
தென் மாநில மக்கள் தொகை குறைவது குறித்து முதல்வர்கள் கவலை
முரளிதரன் காசிவிஸ்வநாதன் : தென் மாநிலங்களில் மக்கள் தொகை குறைந்துவருவது மீண்டும் விவாதப் பொருளாகியிருக்கிறது.
ஆந்திரப் பிரதேச மக்கள் கூடுதல் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு ஞாயிற்றுக்கிழமையன்று கூறியிருந்தது விவாதங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் அதேபோன்ற ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.
ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு ஞாயிற்றுக்கிழமையன்று, அமராவதி நகரில் கட்டுமானப் பணிகளைத் துவக்கிவைத்துப் பேசும்போது ஆந்திர மக்கள் கூடுதல் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அப்படி பெற்றுக்கொள்வோருக்கு சலுகைகள் அளிக்கப்படுமென்றும் குறிப்பிட்டார்.
சினிமாஸ் குணரெத்தினமும் ஏவி மெய்யப்ப செட்டியாரும்- Cadillac.Sky blue with Navy blue top Automatic Left hand drive
ராதா மனோகர் : சினிமாஸ் குணரெத்தினமும் ஏவி மெய்யப்ப செட்டியாரும்
ஏவிஎம் நிறுவனம் தயாரித்த மூன்றாவது திரைப்படம் வாழ்க்கை
22 December 1949 இல் இது வெளியானது
மிக பிரமாண்டமான வெற்றியை பெற்றது
பல திரையரங்குகளில் 25 வாரங்களை நிறைவு செய்தது.
இத்திரைப்படத்தை இலங்கையில் ஒரு தமிழ் இளைஞர் வாங்கி வெளியிட்டார்
அந்த இளைஞருக்கு பெரிய பின்னணி கிடையாது
சிலோன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி திரைப்படங்கள் பற்றிய அனுபவ அறிவு கொஞ்சம் இருந்தது
அந்த நிறுவனத்திற்காக திரைப்படங்கள் வாங்குவதற்கு சென்னை வந்து சில திரைப்பட தயாரிப்பாளர்களின் அறிமுகமும் கிடைத்திருந்தது
திங்கள், 21 அக்டோபர், 2024
அந்தரங்கங்களை கூறுபோட்டு விற்கும் யூ டியூபர்கள் .. இர்பான் வகையறாக்கள்
LR Jagadheesan : ஒருபக்கம் உங்கள் அந்தரங்கத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் நீங்களே கூவிக்கூவி கூறுபோட்டு விற்று காசாக்குகிறீர்கள்.
மறுபக்கம் என் தனிப்பட்ட வாழ்வு பற்றி கருத்துசொல்லவோ விமர்சிக்கவோ அடுத்தவருக்கு உரிமை இல்லை என்கிறீர்கள். அது எப்படி எடுபடும்?
பொதுச்சந்தையில் உங்களை நீங்களே அதிக விலைக்கு விற்கத்தானே உங்கள் வாழ்வின் அந்தரங்கமான ஒவ்வொன்றையும் தினம் தினம் காட்சிப்படுத்துகிறீர்கள்?
உங்கள் வாழ்வை காட்சிச்சந்தையின் கடைச்சரக்காக்கி விற்றபின் அதன்மீது கருத்துசொல்லும்/விமர்சிக்கும் உரிமை உங்களுக்கேது?
அதை காட்சிச்சந்தையில் தம் கண்களால் வாங்கிய பார்வையாளர்கள் தானே அதன் உரிமையாளர்கள்? அவர்களை எப்படி நீங்கள் தடுக்கமுடியும்?
குவைத்தில் பாதிக்கும் மேல் திருமணம் ஆகாத இளம் பெண்கள்... தொடரும் விவாகரத்துகள்
tamil.samayam.com - மகேஷ் பாபு : சர்வதேச அளவில் பண மதிப்பில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது? என்றால் குவைத் என்று தான் பதில் கிடைக்கும்.
எண்ணெய் வளங்களால் செல்வம் கொழித்து காணப்படுகிறது.
உலகின் பல்வேறு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்து பெரிய அளவில் பொருள் ஈட்டி வருகிறது.
இந்நாட்டில் பிறப்புரிமை பெற்றிருந்தால் கல்வி, வேலை, திருமணம் உள்ளிட்டவற்றுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும்.
குவைத் நாட்டில் பெண்கள்
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வெளிப்படுத்திய உதய கம்மன்பில!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கைகைளை வெளியிடும் இன்றைய விசேட ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
Canada நிஜ்ஜார் கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: இந்திய தூதர் சஞ்சய் வர்மா
இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். இதனால் இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டது.
இதுதொடர்பாக, இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்போவதாக கனடா தெரிவித்தது. இதனால் கனடாவுக்கான இந்திய தூதரை திரும்பப்பெற மத்திய அரசு முடிவு செய்தது.
மேலும் இந்தியாவில் கனடா அதிகாரிகள் 6 பேரை வெளியேற உத்தரவிட்டது.
வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா Vs சத்யன் மோக்கேரி Vs நவ்யா.
மின்னம்பலம் -Selvam : வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் வேட்பாளராக இன்று (அக்டோபர் 19) அறிவிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் தற்போதைய மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி போட்டியிட்டார். மேலும், அவர் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டார்.
ஞாயிறு, 20 அக்டோபர், 2024
உ.பி.யில் ரூ.500 ரூபாய் லஞ்சம் கொடுக்காததால் பாஸ்போர்ட்டை கிழித்த தபால்காரர்-வீடியோ
மாலைமலர் : “உத்தரபிரதேசத்தில் ரூ.500 லஞ்சம் கொடுக்க மறுத்ததால், ஒருவரின் பாஸ்போர்ட்டின் முக்கிய பக்கத்தை தபால்காரர் கிழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஒருவருக்கு பாஸ்போர்ட் தபாலில் வந்துள்ளது. ஆனால் பாஸ்போர்ட் கொடுப்பதற்கு தபால்காரர் ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளார்.
இதனால் தபால்காரருக்கும் சம்பந்தப்பட்ட நபருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தபால்காரர் பாஸ்போர்ட்டின் முக்கிய பக்கத்தை கிழித்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுநராக வி.கே.சிங் பெயர் தீவிரமாக பரிசீலனையில்
மின்னம்பலம் - Selvam : தஞ்சை தமிழ் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு தமிழ்த் தாய் வாழ்த்து பாடிய வீடியோ இன்பாக்சில் வந்து விழுந்தது.
அதைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“அக்டோபர் 18 ஆம் தேதி (நேற்று) சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில் இந்தி மொழி விழாவில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டபோது திராவிட நல் திருநாடு என்ற வரி தவிர்க்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்ட விழாவில் இவ்வாறு நடந்ததால், கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார் ஆளுநர்.’
ஈஷா அறக்கட்டளையில் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை.. முன்னாள் ஊழியர்கள் அதிர்ச்சி குற்றச்சாட்டு!
tamil.oneindia.com - Shyamsundar : கோவை: ஈஷா மீதான ஆட்கொணர்வு மனு வழக்குகள் நேற்று முடித்து வைக்கப்பட்டன. அதன்படி ஈஷா மீது உள்ள மற்ற வழக்குகளை விசாரிக்க தடையில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
ஈஷா யோகா மையம் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் மீது விசாரணை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை.
இரு பெண்களும் தங்கள் சுய விருப்பத்தின்பேரில் ஈஷா மையத்தில் தங்கி இருப்பதால் அவர்களை மீட்டுத் தர சென்னை உயர்நீதிமன்றத்தில் தந்தை தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை முடித்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.
இந்த வழக்கின் பரபரப்பு அடங்கும் முன்பே.. ஈஷா யோகா மையம் அடுத்த சர்ச்சையில் சிக்கி உள்ளது.
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு
மாலை மலர் : ராஞ்சி ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் நவம்பர் 13 மற்றும் 20 தேதிகளில் இரு கட்டமாக நடைபெற உள்ளது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஓரணியாக தேர்தலைச் சந்திக்கின்றன. மறுபுறம் பா.ஜ.க, ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் (ஏ.ஜே.எஸ்.யூ.) ஐ.ஜ.த., லோக் ஜனசக்தி (எல்.ஜே.பி.,) ஆகியன ஓரணியாக உள்ளன.
தொகுதி பங்கீடு குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில், பா.ஜ.க. 68 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஏ.ஜே.எஸ்.யூ.10 தொகுதிகளிலும், ஐ.ஜ.த. 2 தொகுதிகளிலும், எல்.ஜே.பி. ஒரு தொகுதியிலும் போட்டியிடுவது என முடிவானது.