புதன், 23 அக்டோபர், 2024

வடநாட்டு கலைஞர் திரு லாலு பிரசாத் யாதவ்

May be an image of 1 person

Vijay Karthick :   மொகலாய ஆட்சியிலும், பிரித்தானிய ஆட்சியிலும் வங்காளத்தோடு இணைந்திருந்த பீகார் பிரிக்கப்பட்ட பின்பும் ஏன் வங்காளம் வளர்ந்த அளவு கூட வளரவில்லை ?
மேலும் இந்திய ஒன்றிய வரலாற்றில் "பீகார் பீகாரிகளுக்கே" என்ற தனிக்குரல்தான் [1909] முதலில் ஒலித்தது.இதை நான் தலைவரின் மனசாட்சியான மாறனின் மாநில சுயாட்சி புத்தகத்தில்-கு.ச.ஆனந்தனின் மாநில சுயாட்சி நூலிலும்-சாதிக் பாட்சாவின் மாநில சுயாட்சி நூலிலும் படித்திருக்கிறேன்.
1917ல் தான் திராவிடநாடு திராவிடர்களுக்கே என்றார் புரட்சியாளர் டி.எம்.நாயர்.


1938ல் தமிழ்நாடு தமிழர்களுக்கே என்றார் தந்தை பெரியார்.
1939ல் பாகிஸ்தானம் -பின்புதான் சீக்கிஸ்தானம் போன்ற கோரிக்கைகள்.
சரி,
ஏன் இந்த பீகார் ஒடுக்கப்பட்டது.
நாளாந்தா பல்கலைக்கழகம் தொடங்கி பௌத்தம் கோலோச்சிய மண் என்ற காரணமே அது.
வர்ணசிரமத்தால் ஒடுக்கப்பட்ட பீகாரை நான் மாற்ற முயற்சிக்கிறேன்.ஆனால் பிராமணர்களும் அவர்களின் பத்திரிகைகளும் என்னை ஒரு சாதி அரசியல்வாதியாக ஆக்கி என்னை தனிமைப்படுத்த  தொடர்ந்து முயற்சிக்கிறார்கள்.
ஆனால் என்னை இருபது,இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பீகார் அரசியலில் இருந்து  எவனாலும் அசைக்க இயலாது.
இவர்களால் ஒதுக்கப்பட்ட மக்களோடு மக்களாக நான்  இருக்கிறேன் என்று 1990களின் இறுதியில் சொன்னார்.
அப்போது பாஜக சொன்ன ஒரு விவரம் என்ன தெரியுமா?
உலகில் எங்களால் எதை வேண்டுமானால் சகித்துக் கொள்ளமுடியும். "லாலு பிரசாத்தை தவிர" என்றார்கள்.
அத்தனை வலுவாக அன்றே பாஜகவை எதிர்த்த மாவீரன் லாலு.
இப்போதும் கூட அவரின் மகன் தேஜஸ்வி அதிகாரத்தாலேயே தோற்கப்பட்டிருந்தாலும் தனிப்பெரும் தலைவனாக உருவெடுத்திருக்கிறார்.
பீகார் மக்கள் லாலுவுக்கு கொடுத்த பெயர் என்ன தெரியுமா?
"இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த சந்திரகுப்தன் மெளரியன்."
நான் சொல்கிறேன் லாலு ஒரு வடநாட்டு கலைஞர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக