செவ்வாய், 22 அக்டோபர், 2024

சினிமாஸ் குணரெத்தினமும் ஏவி மெய்யப்ப செட்டியாரும்- Cadillac.Sky blue with Navy blue top Automatic Left hand drive

May be an image of 2 people, car, hood ornament and text ராதா மனோகர் : சினிமாஸ் குணரெத்தினமும் ஏவி மெய்யப்ப செட்டியாரும்
ஏவிஎம் நிறுவனம் தயாரித்த மூன்றாவது திரைப்படம் வாழ்க்கை
22 December 1949 இல் இது வெளியானது
மிக பிரமாண்டமான வெற்றியை பெற்றது
பல திரையரங்குகளில் 25 வாரங்களை நிறைவு செய்தது.
இத்திரைப்படத்தை இலங்கையில் ஒரு தமிழ் இளைஞர் வாங்கி வெளியிட்டார்
அந்த இளைஞருக்கு பெரிய பின்னணி கிடையாது
சிலோன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி திரைப்படங்கள் பற்றிய அனுபவ அறிவு கொஞ்சம் இருந்தது
அந்த நிறுவனத்திற்காக திரைப்படங்கள் வாங்குவதற்கு சென்னை வந்து சில திரைப்பட தயாரிப்பாளர்களின் அறிமுகமும் கிடைத்திருந்தது



இந்நிலையில் ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்த வாழ்க்கை திரைப்படத்தை வாங்கி இலங்கையில் வெளியிட தீர்மானித்தார்
இந்த இளைஞரை ஏவி மெய்யப்ப செட்டியார் அவர்களுக்கு பிடித்து போனது
விளைவு பெரிதாக பண கொடுக்கல் வாங்கல்கள் இல்லாமலேயே வாழ்க்கை படத்தின் இலங்கை உரிமையை அந்த இளைஞருக்கு கொடுத்தார்
அந்த இளைஞர்தான் பிற்காலத்தில் சினிமாஸ் குணரத்தினம் என்று அறியப்பட்ட கனகசபை குணரத்தினம் ஆகும்
வாழ்க்கை திரைப்படம்  சினிமாஸ் குணரெத்தினத்திற்கு ஒரு மிகப்பெரிய வாழ்க்கையை கொடுத்தது
இலங்கையின்பட்டி தொட்டி எங்கும் சூப்பர் டூப்பர் வெற்றி!
இதனால் மிகவும் மகிழ்ந்த திரு சினிமாஸ் குணரத்தினம் அவர்கள் திரு ஏவி மெய்யப்ப செட்டியாருக்கு மேலதிக பணம் கொடுக்க  தீர்மானித்தார்.
 
ஆனால் திரு ஏவி மெய்யப்ப செட்டியார் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை
நீங்கள் ஏற்கனவே பணம் கொடுத்து படத்தை வாங்கி விட்டீர்கள்.
வேண்டும் என்றால் அடுத்த படத்தில் மேலதிக பணம் பற்றி பேசி முடிவு செய்யலாம் என்றார்.
இந்த பதிலில் திருப்தி அடையாத சினிமாஸ் குணரத்தினம் ஒரு மிக விலை உயர்ந்த காரை பரிசளிக்க விரும்பினார் .
அப்போது மிக பிரபலமாக இருந்த ரோல்ஸ் ராய்ஸ் அல்லது கேடிலாக் காரை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்வதாக கூறி அவரது விருப்பத்தை கேட்டார்
கேடிலாக் கார்தான் ஏவிஎம் அய்யாவின் விருப்பமாக இருந்தது
எனவே அமெரிக்காவில் இருந்து இளம் நீளமும் கடும் நீலமும் கலந்த அழகிய  Cadillac.காரை 1952 இல் இலங்கைக்கு இறகுகமதி செய்தார்  (Sky blue with Navy blue top was an Automatic Left hand drive.)

கொழும்பில் பதிவு செய்யப்பட அந்த காரில் சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் “எச்சரிக்கை இடது கை இயக்கி” என்ற அறிவிப்பு இருந்தது.
கொழும்பில் இருந்து தலைமன்னாருக்கு சாலை மார்க்கமாக காரை அனுப்பி அங்கிருந்து
தனுஷ்கோடிக்கு கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டது
பின்பு அங்கிருந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள திரு.மெய்யப்பன் இல்லத்திற்கு கொண்டு போய் கொடுத்தார்.

கொழும்பில் இருந்து திரு.குணரத்தினம் அனுப்பிய டிரைவர் அய்யப்பன். 6 மாதங்கள் சென்னையிலேயே தங்கி  இடது பக்க ஓட்ட பயிற்சி அளித்தார்!

சினிமா  குணரத்தினத்துடனான திரு.ஏ.வி.எம்-ன் நட்பு பல ஆண்டுகளாக வளர்ந்தது

இருவரும் இணைந்து "டாக்டர்" என்ற ஒரு சிங்களப் படத்தைத் தயாரித்தனர்.
 பின்னர் 1955 இல் ”திரு.குணரத்தினம் குடும்பமும் ஏவி மெய்யப்ப செட்டியார் குடும்பமும்  ஜப்பானுக்கு சுற்று பயணம் செய்தார்கள்   
இந்த இரு குடும்பங்களுக்கும் உள்ள நட்பு இன்றுவரை நீடிக்கிறது .

 27 August 1989 அன்று திரு சினிமாஸ் குணரத்தினம் அவர்கள்  பயங்கரவாதிகளால் கொழும்பில் வைத்து சுட்டு கொலை செய்யப்பட்டார்
கொலையாளிகள் அதற்கு கூறிய காரணம் அவர் அரவிந்த் மில்ஸ் என்ற இந்திய நிறுவனத்தோடு சேர்ந்து  கொழும்பில் ஒரு பெரிய  ஆடை தொழிற்சாலையை அமைத்தாகும்.
இந்த பயங்கரவாதிகள் அந்த காலத்தில் இந்திய விரோத அரசியலை முன்னெடுத்திருந்தது தெரிந்ததே.
இன்றுவரை இவரின் கொலையாளிகள் தண்டிக்கப்படவே இல்லை.

 சினிமாஸ் குணரத்தினத்தை கொலை செய்தது தமிழ் இயக்கங்கள் அல்ல!

 May be an image of loom and text

May be an image of 1 person and text


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக