tamil.oneindia.com - Vishnupriya R : லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் காங்கிரஸ் எம்பியும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தைத்த காலணிகளை ரூ 10 லட்சம் கொடுப்பதாக கூறியும் அதை கொடுக்க அந்த தொழிலாளி மறுத்துவிட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் ஒரு அவதூறு வழக்கில் ஆஜராக ராகுல் காந்தி கடந்த ஜூலை 26 ஆம் தேதி சென்றிருந்தார். அப்போது சாலையோரத்தில் ராம்சேட் என்ற ஒரு காலணிகளை தைக்கும் பணியை செய்து கொண்டிருந்தார். மிகவும் சேதமடைந்த ஒரு சிறிய கொட்டகைக்குள் உட்கார்ந்தபடி அவர் செருப்பு தைத்துக் கொண்டிருந்தார்.
வியாழன், 1 ஆகஸ்ட், 2024
10 லட்சம் இல்லை! கோடி ரூபாய் கொடுத்தாலும் ராகுல் தைத்த ஷூவை தரமாட்டேன்! காலணி தைக்கும் தொழிலாளி
அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீடு செல்லும்! உச்சநீதிமன்றம் தீர்ப்பு! திமுகவின் சமூகநீதி கொள்கைக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி
மாலை மலர் : சென்னை தமிழ்நாட்டில் அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளதும்
மேலும், பட்டியல், பழங்குடியினர் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, பஞ்சாப் அரியானா மாநிலங்களில் உள் ஒதுக்கீடு வழங்கியது தொடர்பான வழக்கில் 7 நீதிபதிகள் அமர்வில் 6 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பு வழங்கி உள்ளனர்.
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்று தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் நமது திராவிட மாடல் பயணத்துக்கான மற்றுமோர் அங்கீகாரமாக இன்றைய உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது!
புதுடெல்லி பீகார் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் என்ஜினில் இருந்து பெட்டிகள் பிளவுபட்டது.
Vasu Sumathi : சமஸ்திபூர், பீகார்: நேற்று தர்பங்காவில் இருந்து புதுடெல்லி நோக்கி பயணித்த பீகார் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் என்ஜினில் இருந்து பெட்டிகள் ஓடிக்கொண்டிருக்கும் போதே,
இரண்டு பகுதிகளாக பிளவுபட்டது. நல்ல வேலை அந்த நேரத்தில் வேறு ரயில்கள் வராததால் ஒரு பெரிய ரயில் விபத்து மயிரிழையில் தவிர்க்கப்பட்டது.
குழப்பத்திலுள்ள ரயில்வே பாதுகாப்பு: மீண்டும் மீண்டும் ரயில் விபத்துக்கள் பயணிகளின் பாதுகாப்பு குறித்து ஆபத்தான பல கேள்விகளை எழுப்புகின்றன. இந்த விபத்துகளுக்கு யார் பொறுப்பேற்பது?
இதற்கு முழு காரணம் நாட்டில் இவ்வளவு பேர் பயணிக்கும் இவ்வளவு பெரிய ரயில் நெட்ஒர்க்கிற்கு அளிக்கப்படும் பராமரிப்பு நிதிஒதுக்கீடு போதவில்லை மற்றும் சம்மந்தமே இல்லாத அளவிற்கு பணியாளர் எண்ணிக்கை குறைப்புமே.
புதன், 31 ஜூலை, 2024
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் கொலை! முழு விபரம்
- BBC News தமிழ் : இஸ்மாயில் ஹனியே 62 வயதான ஹனியே 1980களின் பிற்பகுதியில் இருந்து ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய உறுப்பினராக இருந்து வந்திருக்கிறார்.
ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே இரானில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
ஹமாஸ் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹனியே கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளது.
சவுக்கு சங்கர் : என் கைதுக்கு அமைச்சர் உதயநிதிதான் காரணம் !
மாலை மலர் : பெண் போலீசாரைப் பற்றி அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த நிலையில் நீலகிரி போலீசாரும் அவர் மீது வழக்கு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை நேற்று முன்தினம் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்த போலீஸ் காவலுக்கு அனுமதி கேட்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் ஒருநாள் காவல் எடுத்து விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி அளித்தனர். அதன்படி சவுக்கு சங்கரிடம் விசாரணை நடத்திய போலீசார் நேற்று மாலை மீண்டும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை சென்னை சிறையில் அடைக்க போலீசார் அழைத்து வந்தனர்.
வயநாடு வெள்ளம் -நிலச்சரிவு – உயிரிழப்பு 250 ஐ தாண்டியது!
தேசம் நெட் : வயநாடு வெள்ளம் -நிலச்சரிவு – உயிரிழப்பு 250 ஐ தாண்டியது!
கேரளா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 251-ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கேரளாவில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மேப்பாடி, முந்தக்கை டவுன் மற்றும் சூறல் மாலாவில் பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
இது மாநிலத்தை தாக்கிய மிகப்பெரிய இயற்கை பேரழிவாகும்.
சமீபத்திய பேரழிவுகளை தொடர்ந்து கேரள அரசு இரு நாள் துக்கத்தை அறிவித்துள்ளது.
பிரிட்டன் கத்திக் குத்து தாக்குதல்: 3 சிறுமிகள் உயிரிழப்பு- கொலையாளி இஸ்லாமிய பின்புலம்?
தினமணி “லண்டன்:இங்கிலாந்தின் சவுத்போர்ட் நகரில் உள்ள நடனப் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான சிறுவர்களும், சிறுமிகளும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில், நடன பள்ளியில் பயிற்சி எடுத்துக் கொண்டு இருந்த சிறுவர்களை 17-வயது சிறுவன் திடீரென கத்தியால் குத்தி தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலில் 3சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தாக்குதலை தடுக்க முயன்ற 9 பேருக்கு கத்திக் குத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தனர்.
ரத்த காயத்துடன் சிறுவர்கள் சிலர் நடனப்பள்ளியில் இருந்து வெளியே சாலையில் ஓடியுள்ளனர். இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவுக்கு வரும் தேர்தலில் பெருகி ஆதரவு! எதிர்க்கட்சி எம்பிக்களும் ஆதரவு!
மீண்டும் அராஜகமற்ற, வரிசை யுகம் இல்லாத சமூக, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார அபிவிருத்தியுடன் கூடிய நாட்டைக் கட்டியெழுப்ப கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே என்றும் அதனால் தனிப்பட்ட அரசியல் நோக்கங்களை விடுத்து நாட்டுக்காக தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இலங்கைக்கு கடத்தப்பட்ட திரைப்பட காப்பிகள்! - இயக்கங்களின் முன்னோடிகளான கடத்தல் பேர்வழிகள்!
ராதா மனோகர் : இலங்கையில் 1970 ஆம் ஆண்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பதவிக்கு வந்த ஸ்ரீ மாவோ அம்மையாரின் பதவிக்கு வந்தார்
இவரது ஆட்சியில் இலங்கை திரைப்பட வளர்ச்சிக்கு என சில புதிய நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டன .
அதில் முக்கியமான விடயம் தமிழக திரைப்படங்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தியமை ஆகும்
ஏழெட்டு பிரதி முதல் சுமார் பதினைந்து பிரதிகள் வரை அப்போது இறக்குமதி ஆகிக்கொண்டிருந்த திரைப்பட பிரதிகளை வெறும் மூன்று பிரதிகளாக கட்டுப்படுத்தினார்
இதன் மூலம் உள்ளூர் திரைப்படங்களின் வெளியீடுகளுக்கு போதிய திரை அரங்குகள் கிடைத்தன.
அந்நிய செலாவணியை மீதப்படுத்துதல் போன்ற பல நோக்கங்களை கொண்டு இந்த கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது.
எந்த கட்டுப்பாட்டையும் உடைத்தெறியும் சட்டவிரோதிகள் சும்மா இருப்பார்களா?
இந்த பின்னணியில் எனது பழைய பதிவு ஒன்றை இங்கு மீள் பதிவு செய்கிறேன்.
யாழ்ப்பாண அகராதி - 1842 - 58,500 சொற்கள் - புதுக்கோட்டை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி!
தினமணியில் கலா ரசிகன் (வைத்தியநாதன்) எழுதிய பதிவு.
28.7.2024 ·
யாழ்ப்பாண அகராதி
திருக்கோவலூர்ப் பண்பாட்டுக் கழகத்தால்,
ஆவணக் காவலர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டு இருக்கின்ற புதுக்கோட்டை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி,
நமக்குப் பாதுகாத்து வழங்கி இருக்கின்ற அருட்கொடைகளுள் ஒன்று யாழ்ப்பாண அகராதி.
அவரது சேகரிப்பில் இருந்த இந்தப் புத்தகத்தை, மீள்பதிப்பு செய்து,
காலத்தின் ஓட்டத்தில் அது கரைந்து மறைந்து விடாது காப்பாற்றிய பெருமை,
என் நண்பர் தமிழ் மண் பதிப்பக உரிமையாளளர் மறைந்த இளவழகனாரைச் சாரும்.
வீரமா முனிவர் 1732 ஆம் ஆண்டு, சதுர் அகராதி ஆக்கினார் என்றாலும்,
அது 1824 இல்தான் முழுமையாக அச்சுப் பதிக்கப் பெற்றது.
செவ்வாய், 30 ஜூலை, 2024
வயநாடு மழை வெள்ளம் நிலச்சரிவு: பலியானோர் எண்ணிக்கை 67-ஆக உயர்வு!
தினமணி : கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை கடந்த சில நாள்களாக தீவிரமடைந்துள்ளத. இதன் காரணமாக கனமழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் கனமழையின் காரணத்தால் வயநாடு மாவட்டம், மேப்பாடி அருகே இன்று அதிகாலை 3.00 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவுகளால் வைத்திரி, வெள்ளேரிமலை, மேம்பாடி உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 66ஆக உயர்ந்துள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மினிமம் பேலன்ஸ் இல்லையென ரூ.8500 கோடி அபராதம் வசூலித்த வங்கிகள் - ராகுல்காந்தி கண்டனம்
மாலை மலர் : 2024 நிதியாண்டில் தனி நபர் வங்கிக் கணக்குகளில் மாதாந்திர குறைந்த பட்ச வைப்புத் தொகை [மினிமம் பேலன்ஸ்] இல்லாததால் வசூலிக்கப்பட்ட அபராதம் மட்டுமே ரூ. 2331 கோடி என்று மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்திரி மக்களவையில் தெரிவித்துள்ளார்.
இது கடந்த நிதியாண்டில் வசூலிக்கப்பட்ட அபராதத்தை விட 25 சதவீதம் அதிகமாகும்.
அதிகபட்சமாக பஞ்சாப் தேசிய வங்கிக் பயனர்களிடமிருந்து மொத்தமாக ரூ.633 கோடியும், பேங் ஆப் பரோடா பயர்களிடமிருந்து மொத்தமாக ரூ.386 கொடியும் வங்கிக் கணக்கில் மாதாந்திரமாக மினிமம் பேலன்ஸ் இல்லாத காரணத்தால் வசூலிக்கப்பட்டுள்ளது. மினிமம் பேலன்ஸ் தொகையானது வங்கிக்கு வங்கி, இடங்களை பொறுத்து மாறுபடும். மொத்தமாக கடந்த 5 ஆண்டுகளில் ரூ.8,500 கோடிவரை வசூலிக்கப்பட்டுள்ளது.
திங்கள், 29 ஜூலை, 2024
கப்பலூர் சுங்கச்சாவடியில் இனி கட்டணம் செலுத்த வேண்டாம்" : அமைச்சர் மூர்த்தி
மின்னம்பலம் -christopher : கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் மக்களுக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும், ஆதார் அட்டையை காண்பித்து கட்டணமின்றி பயணிக்கலாம் என்றும் அமைச்சர் மூர்த்தி இன்று (ஜூலை 29) அறிவித்துள்ளார்.
திண்டுக்கல் – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி கடந்த 2012ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது. அப்போது முதல் உள்ளூர் மக்களிடம் கட்டணம் வசூலிப்பதாக பிரச்னை எழுந்து வருகிறது.
இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று வந்தது. எனினும் இந்த விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு வரும் வரை உள்ளூர் மற்றும் சிட்கோ தொழிற்பேட்டை வாகனங்களுக்கு விலக்கு அளிக்கும் நடைமுறையைப் பின்பற்றுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.
மத்திய பிரதேசம் -ஆபாச வீடியோ பார்த்து தங்கையை பலாத்காரம் செய்த சிறுவன்! கொடூரக் கொலை!
tamil.asianetnews.com - SG Balan : ஏப்ரல் 24 அன்று இந்தக் கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. மகன் செய்த குற்றத்தை மூடி மறைக்க தாயும் இரண்டு மூத்த சகோதரிகளும் உடந்தையாக இருந்தனர் என்றும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ரேவாவில் ஒன்பது வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. டீன் ஏஜை கூடத் தாண்டாத சிறுமியின் அண்ணன் செல்போனில் ஆபாசப் படம் பார்த்துவிட்டு தங்கையை பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை நெறித்துக் கொன்றதாக போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
ஆசியக் கிண்ணத்தை வென்றது இலங்கை மகளிர் அணி! முதல் முறையாக
Ada derana : 9-வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிப் போட்டி இன்று நடந்தது. இதில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்தது.
சிறப்பாக ஆடிய ஸ்மிரிதி மந்தனா 60 ரன்கள் குவித்து அவுட்டானார். ரிச்சா கோஷ் 30 ரன்னும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 29 ரன்னும் எடுத்தனர்.
இலங்கை அணி தரப்பில் கவிஷா தில்ஹாரி 2 விக்கெட் வீழ்த்தினார்.இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது.
ஞாயிறு, 28 ஜூலை, 2024
செவிலியர் லோகநாயகி அவர்களை பணி நீக்கம் செய்து உத்தரவு
Vel Mohandas : கோவை மாவட்டத்தில் செவிலியர் உரிமைகளை மீட்க தொடர்ந்து குரல் கொடுத்து வந்த அடிப்படையில் செவிலியரும்... இடைநிலை சுகாதார பணியாளருமான(MLHP NURSE)
செவிலியர் லோகநாயகி அவர்களை பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளது வருந்தத்தக்கது....
மேலும் செவிலியர்கள் உரிமைகளை மீட்டெடுக்க போராடுபவர்களுக்கு இது தான் முடிவு என்றால் *செவிலியர்கள் உண்மையில் அடிமைகள்* தான் என்று இந்த அதிகாரிகள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.....
அவரின் பணிநீக்கத்தை எம் ஆர் பி செவிலியர்கள் நலச் சங்கத்தின் சார்பில் *வன்மையாக கண்டிக்கிறோம்*...
பணி நீக்க ஆணையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்....
சமூக நீதியை நிலைநாட்டவும் , பெண் செவிலியர்கள் உரிமைகளை பேசி மீட்டெடுக்கவும் இந்த அரசு துணை நிற்கும் என்று நம்புகிறோம்!
சென்னை - -14 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 8 பேர் கைது-
மாலை மலர் : சென்னையில் 14 வயது சிறுமியை ஓராண்டாக சிறை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 4 வீடுகளில் சிறுமியை பூட்டி வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். பரபரப்பான இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூர் அருகே உள்ள படுவஞ்சேரியில் தங்களது ஒரே மகளை அனாதையாக விட்டு விட்டு தாய்-தந்தை இருவரும் தனித்தனியாக பிரிந்து சென்று விட்டனர். இதனால் அதே பகுதியை சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணின் அரவணைப்பில் 14 வயது சிறுமி இருந்து வந்துள்ளார்.