திங்கள், 29 ஜூலை, 2024

மத்திய பிரதேசம் -ஆபாச வீடியோ பார்த்து தங்கையை பலாத்காரம் செய்த சிறுவன்! கொடூரக் கொலை!

 tamil.asianetnews.com - SG Balan  :    ஏப்ரல் 24 அன்று இந்தக் கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. மகன் செய்த குற்றத்தை மூடி மறைக்க தாயும் இரண்டு மூத்த சகோதரிகளும் உடந்தையாக இருந்தனர் என்றும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ரேவாவில் ஒன்பது வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. டீன் ஏஜை கூடத் தாண்டாத சிறுமியின் அண்ணன் செல்போனில் ஆபாசப் படம் பார்த்துவிட்டு தங்கையை பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை நெறித்துக் கொன்றதாக போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.



ஏப்ரல் 24 அன்று இந்தக் கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. மகன் செய்த குற்றத்தை மூடி மறைக்க தாயும் இரண்டு மூத்த சகோதரிகளும் உடந்தையாக இருந்தனர் என்றும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஏப்ரல் 24 அன்று ஜாவா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒன்பது வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தை நெறித்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல் அவரது வீட்டின் முற்றத்திலேயே கண்டெடுக்கப்பட்டது.

சிறுமியின் அண்ணனான 13 வயது சிறுவன், 17, 18 வயதான இரண்டு மூத்த சகோதரிகள் மற்றும் அவர்களின் தாய் ஆகியோரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் மகன் செய்த குற்றத்தை மறைக்க முயன்றதாக ஒப்புக்கொண்டனர்.

ஆபாச வீடியோவைக் காட்டி பெண் டாக்டரிடம் 59 லட்சம் அபேஸ் செய்த சைபர் கிரைம் கும்பல்!

பாதிக்கப்பட்ட சிறுமி சம்பவம் நடந்த அன்று இரவு வீட்டு முற்றத்தில் தூங்கியிருக்கிறார். அவருக்கும் அருகில் சிறுவனும் தூங்கியுள்ளார். தனது கைப்பேசியில் ஆபாசப் படத்தைப் பார்த்த சிறுவன் அருகில் உறங்கிக்கொண்டிருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். சிறுமி தந்தையிடம் புகார் செய்யப்போவதாக மிரட்டியதால், சிறுவன் தங்கையின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றுள்ளார்.

பின்னர் தனது தாயை எழுப்பி நடந்த சம்பவத்தை தெரிவித்துவிட்டு வந்த சிறுவன், சிறுமி இன்னும் உயிருடன் இருப்பதைக் கண்டு, மீண்டும் கழுத்தை நெரித்துச் சாகடித்துள்ளார். அதற்குள் அவர்களின் இரண்டு சகோதரிகளும், படுக்கை இருந்த இடத்தை மாற்றி சம்பவத்தை மூடி மறைக்க முயன்றுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள சிறுவனும், அவனது குடும்பத்தினரும் கைது செய்து காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

விசாரணையை திசைதிருப்ப சிறுமியை விஷ பூச்சி கடித்ததாக கூறி நாடகமாடியுள்ளனர். சிறுமியின் உடலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சோதனை செய்தபோது, அவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தெரியவந்தது.

யாரும் வீட்டிற்குள் நுழைந்ததற்கான எந்த அறிகுறியையும் இல்லை என்றும் சத்தம் எதுவும் கேட்கவில்லை என்றும் குடும்பத்தினர்  மழுப்பலாகவே பதில் கூறியுள்ளனர். தொழில்நுட்ப உதவியுடன் ஆதாரங்களை சேகரித்து, 50 பேரிடம் விசாரணை நடத்தியதில், குடும்பத்தினர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டபோது அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் என போலீசார் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக