Poppu Purushothaman : அது அப்படி ஒன்றும் சொல்லிக் கூடியதில்லை என்று தெரிந்தாலும் எழுத ஒரு நியாயம் வேண்டும் என்பதற்காகவே மனசை எடுத்து நீதி தேவதையின் தராசில் வைத்து விட்டுப் பார்த்தேன்.
கேஜிஎப், RRR பார்த்து நாமென்ன சொம்பைகளாடா என்று கொதித்துக் கொண்டிருந்த தமிழ் நெஞ்சங்களுக்கு கொண்டாடக் கிடைத்த குப்பையே விக்ரம்.
இதுக்கு முன்னாடி கமல் செய்ததெல்லாம் எதிரிகளின் கண்ணில் மண்ணைத் தூவதற்காக நடத்திய நாடகமாம்.
இப்போத்தான் கிளர்ந்தெழுந்து வருகிறாராம்.
கலர்க்கலரா கைக்கிக் கிடைக்கிற காய்ஞ்ச புல்லை வைச்சிக் கூட மாலை கட்றாய்ங்கப்பா.
சனி, 18 ஜூன், 2022
தமிழ் நெஞ்சங்களுக்கு கொண்டாடக் கிடைத்த குப்பையே விக்ரம்.
ராஜீவ் கொலை --- நளினி, ரவிச்சந்திரன் விடுதலை மனு நிராகரிப்பு! சென்னை உயர் நீதிமன்றம்
ராஜீவ் கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்த 7 பேரையும் அரசமைப்புச் சட்டத்தின் 161வது பிரிவின் கீழ் விடுதலை செய்வது என 2018ம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு அமைச்சரவை முடிவு செய்து அந்த முடிவை ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பியது.
இரண்டரை ஆண்டுகாலம் அந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்காமல் வைத்திருந்த ஆளுநர் பிறகு அதை குடியரசுத் தலைவர் பரிசீலனைக்கு அனுப்பிவைத்தார்.
இதை தமிழ்நாடு அரசு ஆட்சேபித்தது.
மருத்துவ மனையில் ஜோதிமணி ...கைது செய்து ஆடையை கிழித்த போலீசார் - புகார்
tamil.news18.com : காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர காய்ச்சல் மற்றும் உடல் வலியால் ஜோதிமணி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் மக்களவைத் தலைவரான அதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஜோதிமணியை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
முன்னதாக ராகுல் காந்தி மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டத்தில் ஜோதிமணி பலமாகத் தாக்கப்பட்டதாக புகார் தெரிவித்திருந்தார். கடந்த புதன் கிழமை அன்று நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, டெல்லி காவல்துறை தன்னை கிரிமினல் போல கைது செய்து ஆடை கிழித்துள்ளதாக புகார் அளித்துள்ளார்.
ஒற்றைத் தலைமை என்றால், இரட்டை இலை முடக்கம்: பன்னீர் தரப்பின் பகீர் கடிதம்!
அது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம். அதனால் கட்சிக்கு நல்லதல்ல” என்று பகிரங்கமாக எச்சரித்தார். ஆனால் ஒற்றைத் தலைமை என்று தன்னை அறிவித்துக் கொள்ள தீவிரமாக காய் நகர்த்தி வரும் எடப்பாடி பழனிசாமி,
மூன்று நாட்களாகியும் பன்னீரின் கருத்து குறித்து பதில் அளிக்கவில்லை. மாறாக அவரது ஆதரவாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை உறுதிப்படுத்தும் எல்லா முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் பொதுக்குழு கூட்டத்துக்கு நான்கைந்து நாட்களே இருக்கும் நிலையில், ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் இருந்து திட்டவட்டமாக தயார் செய்யப்பட்ட ஒரு கடிதம் அதிமுகவின் அனைத்து மாசெக்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
அக்னிபாத் திட்டத்தால் 2 இளைஞர்கள் தற்கொலை!
கலைஞர் செய்திகள் : ஒன்றிய அரசு கொண்டு வந்த அக்னிபாத் திட்டத்தால் ராணுவத்தில் சேர தயாராகி வந்த 2 இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து நாடுமுழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பீகாரில் தொடங்கிய இந்த போராட்டம், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்கள் முழுவதும் தீவிரமடைந்துள்ளது.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் மீது போலிஸார் தடியடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இருப்பினும் இளைஞர்கள் தங்களின் போராட்டங்களைக் கைவிடாமல் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். குறிப்பாக ராணுவத்திற்குத் தயாராகி வரும் இளைஞர்களே இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தருமபுரி தனியார் பள்ளியில் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம்; விளக்கம் கேட்டு கடிதம்
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பயிற்சி முகாம் நடத்தப்படுவதாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குணசேகரனுக்கு புகார் வந்தது.
அதன்பேரில், வியாழக்கிழமை (ஜூன் 16), சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அங்கு ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக, விளக்கம் கேட்டு பள்ளி நிர்வாகத்திற்கு முதன்மைக் கல்வி அலுவலர் கடிஹம் அனுப்பி உள்ளார்.
மோடி ஆட்சியில் ஸ்விஸ் வங்கியில் ரூ.30,500 கோடி முதலீடு செய்த இந்தியர்கள் .. 50% உயர்ந்த கருப்பு பணம்..
கலைஞர் செய்திகள் : கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் சேமித்து வைத்திருக்கும் பணம் 50 சதவிகிதம் உயர்ந்து 3.83 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நரேந்திர மோடி, பிரதமராகும் முன் இந்தியர்கள் ஸ்விஸ் வங்கியில் வைத்திருக்கும் கருப்பு பணத்தை மீட்டு எப்படியாவது அதை இந்தியாவுக்கு கொண்டுவந்து வந்து சேர்ப்பேன் என பிரச்சாரம் செய்திருந்தார்.
பா.ஜ.க. ஆதரவாளர்களும் இதை முன்வைத்து அப்போது ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பெரும் பிரச்சாரங்களை செய்து வந்தனர். இந்த நிலையில் மோடி பிரதமராகி 7 வருடங்கள் ஆகும் நிலையில், ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்கள், இந்திய நிறுவனங்கள், இந்தியாவில் உள்ள கிளை நிறுவனங்கள், மற்ற நிதி நிறுவனங்கள் ஆகியவை சேமித்து வைத்திருக்கும் பணம் பலமடங்கு அதிகரித்துள்ளது.
அதிமுக பொதுக்குழு வழக்கு அப்டேட்!
மின்னம்பலம் : அதிமுக பொதுக்குழுவுக்குத் தடைவிதிக்கக் கோரிய வழக்கை வரும் திங்கள்கிழமை சென்னை உரிமையியல் நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க கேட்டு திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள அவிலிபட்டியை சேர்ந்த சூரியமூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கைக் கடந்த 16ஆம் தேதி விசாரித்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் ஜூலை 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதன் மூலம் வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கு எந்த தடையும் இல்லை.
வெள்ளி, 17 ஜூன், 2022
மத்திய மாநில கவுன்சில் கூட்டங்கள் ஆண்டுக்கு 3 முறை நடத்தவேண்டும்! முதல்வர் ஸ்டாலினை வழிமொழிந்த ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்
Vignesh Selvaraj - Oneindia Tamil : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கருத்துடன் நான் முழுமையாக உடன்படுகிறேன் என ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.
மத்திய - மாநில கவுன்சில் கூட்டங்களை ஆண்டுக்கு 3 முறை நடத்த வேண்டும் எனக் கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று கடிதம் எழுதினார்.
இந்தக் கடிதம் நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க ஆளாத மாநில முதலமைச்சர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலினின் கருத்தை ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வழிமொழிந்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஒரு அவசர கடிதத்தை எழுதினார். அவர் எழுதிய கடிதத்தில், மாநிலங்களுக்கிடையேயும் மற்றும் மத்திய - மாநிலங்களுக்கிடையேயும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து, அவற்றிற்கிடையே எழும் ஒத்துழைப்பையும், கூட்டாட்சி உறவுகளையும் வலுப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள கவுன்சிலின் கூட்டங்களை ஆண்டுக்கு 3 முறை நடத்திட வேண்டும் என வலியுறுத்தினார்.
பீகார் 200க்கும் மேற்பட்ட ரெயில்கள் சேதம் வடக்கில் தீவிரமடையும் அக்னிபாத் போராட்டம் 35 ரெயில்கள் நிறுத்தம்
மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி, பீகார், உத்தரப் பிரதேசம், அரியானா உள்பட பல்வேறு மாநிலங்களிலும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, பீகார், உ.பி மாநிலங்களில் ரெயில்களில் தீ வைத்து எரித்ததால் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.
பீகார் மாநிலம் தன்பூர் ரயில் நிலையத்தில் 1500க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அங்கிருந்து பொருட்களை சேதப்படுத்தினர். ரெயில்களுக்கு தீ வைப்பு சம்பங்களும் அரங்கேறின.
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்: கோபால கிருஷ்ண காந்தியை பரிந்துரைத்த தி.மு.க.,
தினமலர் : : ஜனாதிபதி தேர்தலில் காந்தி பேரன் கோபால கிருஷ்ண காந்தியின் பெயரை, தி.மு.க., பரிந்துரைத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சிகளின் சார்பில்,பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக ஆலோசிக்க, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில், நேற்று முன்தினம் டில்லியில் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தை, ஆம்ஆத்மி, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, அகாலி தளம், தெலுங்கு தேசம், பிஜு ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன.
தி.மு.க., சார்பில், அக்கட்சியின் பார்லிமென்ட் குழு தலைவர் டி.ஆர்.பாலு பங்கேற்றார். காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட, பா.ஜ., எதிர்ப்பு கட்சிகளும் பங்கேற்றன. இந்த கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகள் அனைத்தும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பெயரை பரிந்துரைத்தனர். ஆனால், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட, அவர் மறுத்து விட்டார்.
போட்டா போட்டியை ஆரம்பித்த உச்ச நடிகர்.. திடீரென அந்த படத்தை இப்படி கொண்டாட இதுதான் காரணமா?
tamil.filmibeat.com : சென்னை: சில மாதங்களுகு முன் உச்ச நடிகரின் ஆல் டைம் பிளாக்பஸ்டர் படம் பல ஆண்டுகளை கடந்ததை கூட அப்படி கொண்டாடாத நிலையில், தற்போது திடீரென இப்படி கொண்டாட அந்த போட்டி மனப்பான்மை தான் காரணம் என பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.
ஒரு பக்கம் பாஸ் நடிகர் பல வருடங்கள் கழித்து தனக்கு கிடைத்த வெற்றியை பெரியளவில் கொண்டாடி அடுத்தடுத்த படங்களுக்கான முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார்.
படப்பிடிப்பு ஆரம்பிக்கவும் இயக்குநர் லேட் செய்து வரும் நிலையில், கிடைத்ததை வைத்து மீண்டும் டிரெண்டிங்கில் இடம் பிடிக்க தேவையான வேலைகளை உச்ச நட்சத்திரம் செய்துள்ளதாக கூறுகின்றனர்.
ஓ பன்னீர்செல்வம் : ''ஜெயக்குமார்தான் இதற்கு காரணம்.... என்னை ஓரங்கட்டவோ, பிரிக்கவோ முடியாது'
நக்கீரன் -கலைமோகன் : அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ள நிலையில் 23-ஆம் தேதி நடைபெற இருக்கும் பொதுக்குழுக் கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியது. தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆதரவாளர்கள் தனித்தனியாக தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை பசுமை வழி சாலையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் இதுதொடர்பாக பேசுகையில், ''இது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். எம்ஜிஆர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டபோது அப்போதிருந்த 19 மாவட்ட கழகச் செயலாளர்கள், 90க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை வைத்து எம்ஜிஆரை கட்சியிலிருந்து நீக்கினார்கள். 1972ஆம் ஆண்டு அதிமுக என்னும் மாபெரும் தொண்டர்கள் இயக்கத்தை எம்ஜிஆர் ஆரம்பித்த பொழுது இது தொண்டர்களுக்கான இயக்கம் என்றுதான் எம்ஜிஆர் ஆரம்பித்தார்.
1 பவுனுக்கு மொத்த லாபம் 11,288? தங்கம் பற்றி விழிப்புணர்வு
Issak Khan · ஆண்டுக்கு ஒரு கடை எப்படி?*
தங்கம் பற்றி விழிப்புணர்வு இல்லை மக்களுக்கு...! சில விளம்பரங்கள் சேதாரம் இத்தனை % என்றும், செய்கூலி இல்லை என்று கூறுகின்றது. உண்மை என்ன ?*
💫 ஒரு பவுன் தங்கசெயினுக்கு
1.5 கிராம் செம்பு சேர்த்தால் மட்டும் நகை செய்ய முடியும்...!
💫 இது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால்
8 தங்கத்தில் 1.5 கிராம் கழித்தது போக
6.5 கிராம் நகை செய்யப்படுகின்றது...!
💫 ஆனால் சாமானியன் நகை வாங்கும்போது 6.5 தங்கம் + 1.5 செம்பு இரண்டும் சேர்ந்து 8 கிராம் தங்கமாக பில்லில் போடுகின்றார்கள். அதுமட்டுமின்றி அதற்கு மேலாக சேதாரம் என்று கூறி மேலும் 1.5 கிராம் செம்பை தங்கம் சேர்க்கப்பட்டதாக கூறி செம்பை தங்க விலைக்கு விற்கின்றார்கள்...!
அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு: பீகாரில் இளைஞர்கள் ரெயிலுக்கு தீவைப்பு
அக்னிபாத் திட்டத்தின் கீழ் 46 ஆயிரம் வீரர்கள் நடப்பாண்டில் தேர்வு செய்யப்படுவர்.
17 வயது முடிந்து 6 மாதம் ஆனவர்கள் முதல் 21 வயதுக்குட்பட்ட வர்கள் முப்படைகளில் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுக்கு சேர்க்கப்படுவார்கள்.
வியாழன், 16 ஜூன், 2022
இலங்கை தமிழர்களின் முதல் அரசியல் தளம் திராவிட அரசியலே! - 1927
வெறும் சைவ கிறிஸ்தவ அரசியல் என்றிருந்த காலத்தில் முதல் தடவையாக சமூக நலன் சார்ந்த அரசியல் இயக்கமாக திராவிட இயக்கமே இருந்திருக்கிறது
சைவ வித்தியாபிவிருத்தி சங்கமென்றும் பின்பு இந்து போர்ட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டும் இயங்கிய அமைப்பு சைவத்தை ஒரு அரசியல் இயக்கமாகவே முன்னெடுத்தது
அதன் தலைவராக இருந்த இந்தப்போர்ட் ராஜரத்தினம் c4 July 1884 – 12 March 1970)
Subramaniam Rajaratnam was elected to the Legislative Council of Ceylon as the member for the Northern Province Central at the 1924 election. As its chairman, Rajaratnam played a key role in the foundation and growth of the Hindu Board which, at one time, managed more than 150 schools .
முழுக்க முழுக்க சைவ வாழ்வியலே ஒரு அரசியல் தத்துவமாக கொண்டிருந்தார் .
அன்றைய ஆங்கில ஆட்சியாளர்களின் உதவியோடு .சுமார் 150 பள்ளிக்கூடங்களை நிறுவினார்
குடியரசு தலைவர் தேர்தல்.. சரத் பவார் மறுப்பு ! மம்தா கூட்டத்தில் திடீர் சலசலப்பு! நடந்தது என்ன
Vigneshkumar - Oneindia Tamil News : டெல்லி: குடியரசு தலைவர் தேர்தல் அடுத்த வாரம் நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளர் குறித்து தீவிர ஆலோசனையில் உள்ளது.
நாட்டின் குடியரசுத் தலைவராக இப்போது ராம்நாத் கோவிந்த் உள்ளார். அவரது பதவிக்காலம் விரைவில் முடியும் நிலையில், ஜூலை 18ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெறத் தேவையான வாக்குகள் கிட்டதட்ட உறுதியாகி உள்ளது. இதற்கிடையே அனைத்து எதிர்க்கட்சிகளும் பொதுவான வேட்பாளரை நிறுத்துவது குறித்தும் ஆலோசனையில் இறங்கி உள்ளது
வெறுப்பு பேச்சு... திமுக நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்குங்கள்- முதல்வருக்கு பார்ப்பனர் சங்கம் கோரிக்கை
மாலை மலர் : ஆர்.எஸ்.பாரதி வாய்ப்பு கிடைக்கின்ற பொழுதெல்லாம் பிராமண சமூகத்தினை சாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
பார்ப்பன வெறுப்பு பேச்சுக்களை தமிழ்நாடு பார்ப்பன சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
சென்னை: தமிழ்நாடு பார்ப்பனர் சங்கத் தலைவர் என்.நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சமீபகாலமாக திமுகவினைச் சார்ந்த ஒருசில நிர்வாகிகள் பார்ப்பன சமூகத்தினை தாக்கிப் பேசுவதும், சம்மந்தமில்லாமல் சாடுவதும் அதிகரித்து வருகிறது.
திமுகவின் பேச்சாளர் ராஜிவ் காந்தி, சமீபத்தில் பார்ப்பனர்களை இனப்படுகொலை செய்திருக்க வேண்டும் என்று அநாகரீகமாகவும், சட்டத்திற்கு புறம்பாகவும் பேசி உள்ளதை தமிழ்நாடு பார்ப்பனர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
தமிழை மலையாளமாக்கிய கேரளா பார்ப்பனர்கள் .. Marshall நேசமணியின் பிறந்தநாள் 12 juin
ம. கி. எட்வின் பிரபாகரன் : "1810 வரை தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட, சேரர் மன்னராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த கன்னியாகுமரி மாவட்டம், அதன் பிறகு, சனாதன தர்மத்தை கொள்கையாகக் கொண்ட சமஸ்கிருத மலையாள மன்னராட்சியின் கட்டுப்பாட்டுக்கு சென்றது.
ஏறத்தாழ 146 ஆண்டுகள் இந்நிலப்பரப்பு அடிமைப்பட்டுக் கிடந்தது. தீண்டாமை, காணாமை, தோள் சீலை அணியும் உரிமை மறுப்பு, கோவிலுக்குள் நுழையத் தடை, தலைப்பாகை அணியக்கூடாது, நல்ல பெயர்களை சூட்டக் கூடாது, வரிச்சுமை.. இன்னும் பற்பல அடக்குமுறைகள் தமிழ் குலத்தினர் மீது ஏவப்பட்டது!!
மகனுக்காக ஊர் பஞ்சாயத்து காலில் விழுந்த தந்தை மரணம்... நெஞ்சுவலி... திருவாரூர் மாவட்டம்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பிச்சன் கோட்டகம் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சுகண்ணு மகன் கலைச்செல்வம் என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த நாகூர்மீரான் உள்ளிட்ட இருவருக்கும் கடந்த 10 ஆம் தேதி ஊர் கோவில் திருவிழாவில் சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த நபர்கள் ஊர் பஞ்சாயத்தில் முறையிட்டுள்ளனர்.
இதனையடுத்து ஊர் பஞ்சாயத்தில் அஞ்சுக்கண்ணு மகன் கலைச்செல்வத்திற்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை கட்ட முடியாது என கலைச்செல்வம் கூறியதால் அபராத ரூபாய் 10,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
புதன், 15 ஜூன், 2022
கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்க ஏற்பாடுகள் தயார்- அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு
சென்னையில் அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- 1 முதல் 5-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் விரைவில் தொடங்கி வைப்பார்.
மாணவியருக்கு உயர்கல்வி உறுதித்தொகை ரூ.1,000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்ட உடன், ரூ.1,000 உறுதித்தொகை நேரடியாக மாணவியரின் வங்கிக்கணக்குக்கு செலுத்தப்படும்.
ராணுவத்தில் இளைஞர்களை சேர்க்கும் அக்னிபத் திட்டம்-
மாலை மலர் : இந்த ஆண்டு 46,000 பேர் பணியில் சேர்க்கப்படுவார்கள். முதலாம் ஆண்டில் மாதாந்திர ஊதியமாக ரூ,30,000 நிர்ணயிக்கப்படும் ஆயுதப்படைகளில் இளைஞர்களை பணியமர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.
அக்னிபத் என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்தின்கீழ் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள்.
தேசபக்தியுடன், துடிப்புமிக்க இளைஞர்கள் ராணுவத்தில் நான்கு ஆண்டு காலத்திற்கு பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த ஆண்டு 46,000 பேர் பணியில் சேர்க்கப்படுவார்கள்.
இதற்கான வயது வரம்பு 17 வயது முதல் 21 வயதாகும். தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மருத்துவ தகுதி பெற்றிருக்க வேண்டும்.
ராகுல் காந்தியிடம் சுமார் 10 மணி நேரம் விசாரணை.... இரவு வரை காவலில் வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் எம்.பி.க்கள்
நக்கீரன் செய்திப்பிரிவு : காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை நேற்று (13/06/2022) 10 மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில், அவர் இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.
நேஷ்னல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகளை வாங்கியதில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேரணியாக சென்று, நேற்று (13/06/2022) காலை 11.00 மணியளவில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
உணவு இடைவேளை அளிக்கப்பட்ட பின், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்தனர்.
செவ்வாய், 14 ஜூன், 2022
சர்க்காரியா கமிஷனில் கலைஞருக்காக ஆஜாரகிய திரு ஜி ஜி பொன்னம்பலம் .. சில விளக்கங்கள்
திரு திரு ஜி ஜி அவர்கள் தமிழகம் வந்த வரலாறு பற்றி சில சுவாரசியமான செய்திகள் உள்ளன.
திரு சா . கணேசன் |
திரு ஜி ஜி பொன்னம்பலம் பற்றி ஏற்கனவே அறிந்திருந்த கலைஞர் அவர்கள் முன்னாள் சென்னை மேயர் திரு சா கணேசனை திரு மணவை தம்பி அவர்களிடம் இது பற்றி பேசுமாறு அனுப்பினார்
திரு மணவை தம்பியின் வீட்டிற்கு வந்த சா . கணேசன் இது பற்றி பேசினார்
திரு மணவை தம்பி |
கலைஞரின் இந்த செய்தியை எடுத்துக்கொண்டு கொழும்புக்கு பறந்தார் திரு மணவை தம்பி அவர்கள்
அங்கு அவரது நண்பரான திரு ஆனந்த சங்கரியின் எம் பி அவர்களின் துணையோடு திரு ஜி ஜி பொன்னம்பலத்தை அணுகி சர்க்காரியா கமிஷன் வழக்கு பற்றி கூறி அழைப்பு விடுத்தார்
ஏற்கனவே கலைஞர் அவர்கள் இந்த வழக்கில் திரு ஜி ஜி ஆஜராக வேண்டும் என்று விரும்பி ஒரு தமிழரசு கட்சி பிரமுகர் மூலமாக செய்தியை அனுப்பி இருந்தார்
அந்த தமிழரசு கட்சி பிரமுகரோ அந்த செய்தியை ஜி ஜி பொன்னம்பலத்திடம் தெரிவிக்காமல் கமுக்கமாக அமுக்கி விட்டார்
இந்த வழக்கில் திரு ஜி ஜி ஆஜரானால் அவருக்கு புகழ் வந்துவிடுமே என்ற அரசியல் காழ்புணர்ச்சிதான் காரணம்.
மேலும் ஜி ஜி பொன்னம்பலம் தான் ஆஜரான பல பெரிய வழக்குகளை எல்லாம் பொடிபொடியாக்கிய வரலாற்று பெருமை உடையவர் ..
குடியரசுத் தலைவர் வேட்பாளராக கிறிஸ்துவர்: திருமாவளவன்
மின்னம்பலம் : எதிர்வரும் ஜூலை 18ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கிறிஸ்துவர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்திருக்கிறார்.
ஜூலை 18 ஆம் தேதி நடக்க இருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் பற்றிய ஆலோசனைகள் டெல்லியில் நடந்துகொண்டிருக்கும் நிலையில் இன்று (ஜுன் 15) திருமாவளவன் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில்,
“இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் இதுவரை கிறித்தவ சமூகத்தைச் சார்ந்த எவரும் குடியரசுத் தலைவராக இருந்ததில்லை . இந்திய மக்கள் தொகையில் மூன்றாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட கிறித்தவ சமூகத்துக்கு சட்டமன்றங்களிலும் நாடாளுமன்ற அவைகளிலும் போதுமான பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவதில்லை.
தற்போதைய மோடி அமைச்சரவையில் கிறித்தவர் எவரும் இடம்பெறாத நிலை இருந்தது. அதைப் பலரும் சுட்டிக் காட்டிய பிறகு அண்மையில் நடைபெற்ற விரிவாக்கத்தின் போது தான் கிறித்துவ சமூகத்தைச் சார்ந்த ஒருவர் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
ஜனாதிபதி வேட்பாளர் - மம்தா பானர்ஜி கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்பு
புதுடெல்லி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது.
இதனை தொடர்ந்து வரும் ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15 வது ஜனாதிபதி தேர்தல் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த 9 ஆம் தேதி அறிவித்தது.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை தொடர்ந்து ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான முயற்சியில் பாஜக களம் இறங்கி உள்ளது.
3 மாத குழந்தை மீது ஸ்பீக்கர் பாக்ஸ் விழுந்து உயிரிழப்பு : தாய் கண்முன்னே நடந்த கொடூரம் .. திருவண்ணாமலையில்
கலைஞர் செய்திகள் : திருவண்ணாமலையில், ஸ்பீக்கர் பாக்ஸ் விழுந்ததில் 3 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், பிச்சனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி பரணி. இந்த தம்பதிக்கு 3 வயதில் சிறுவனும், பிறந்து 3 மாதமே ஆன சுபஸ்ரீ என்ற குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் பரணி, குழந்தை சுபஸ்ரீயை வீட்டின் ஹாலில் படுக்கவைத்து விட்டு தனது முதல் மகனுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டின் அலமாரியில் வைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கர் பாக்ஸ் சுபாஸ்ரீ மீது விழுந்துள்ளது.
கிரிப்டோ கரன்சி - பிட் காயின் 18 மாதங்களாக கடும் வீழ்ச்சி!
மின்னம்பலம் : கிரிப்டோகரன்சி என்று அழைக்கப்படுகிற மெய்நிகர் நாணயம் உலகமேங்கும் பிரபலம் அடைந்துள்ள வர்த்தகம் முறையாகும். இது முழுவதும் இணையத்தில் இருக்கும். எந்த சட்டவிதிகளும் இல்லாமல் இதன் மூலம் வர்த்தகம் செய்யப்படுகிறது. கடந்த 2018ஆம் ஆண்டில், கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளை ஆதரிக்கும் விஷயத்தில், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ஆர்பிஐ தடை விதித்து உத்தரவிட்டது. ஆனால், 2020 மார்ச் மாதத்தில் ரிசர்வ் வங்கியின் தடைக்கு எதிராக இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதில் உலகம் அறிந்த கிரிப்டோகரன்சியாக பிட்காயின் மிகப் பிரபலமாக உள்ளது. உலக அளவில் தற்போது பிட்காயின் மூலம் பல வர்த்தனைகள் நடைபெறுகின்றன. மேலும் பிட்காயின் மீது உலகில் உள்ள பல மக்கள் முதலீட்டில் ஆர்வம்காட்டி வருகின்றனர்.
சரத் பவார் எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர்?
மின்னம்பலம் : ஜூலை 18 ஆம் தேதி குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளுங்கட்சிக் கூட்டணி, எதிர்க்கட்சிக் கூட்டணி இரண்டிலும் சந்திப்புகள், ஆலோசனைகள் வேகமெடுத்துள்ளன.
இன்று (ஜூன் 15) மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லி அரசியலமைப்பு கிளப்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடு குறித்து ஆலோசிக்க அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் அழைத்து ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருக்கிறார்.
இந்த நிலையில்... எதிர்க்கட்சித் தலைவர்களின் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பொது வேட்பாளராக மூத்த அரசியல்வாதியும், தேசிய வாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான சரத் பவார் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் கசிகின்றன.
கும்பகோணம் காதல் தம்பதியை வெட்டிக் கொன்ற உறவினர்கள் – திருமணமான ஐந்து நாளில் இரட்டை ஆணவ கொலை
மாலைமலர் : கும்பகோணம் அருகே சோழபுரத்தில் காதல் திருமணம் முடித்த ஐந்து நாட்களில் இளம் தம்பதி, கொடூரமாக ஓட, ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண்ணின் சகோதரர் மற்றஉம் உறவினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கும்பகோணம் அருகே சோழபுரம் துலுக்வேலியை சேர்ந்தவர்கள் சேகர் மற்றும் தேன்மொழி தம்பதி (பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள்). இவர்களுக்கு சக்திவேல், சதீஷ் மற்றும் சரவணன் ஆகிய மூன்று மகன்களும், சரண்யா (23) என்ற மகளும் உள்ளார்.
தந்தை சேகர், மூத்த மகன் சக்திவேல் ஆகியோர் கொத்தனார் பணி செய்கின்றனர். மற்ற இரு மகன்கள் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். மூன்று மகன்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது.
திங்கள், 13 ஜூன், 2022
ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு.. டெல்லி பேரணியில் போலீசார் தாக்கியதில் ...
மாலைமலர் : புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்ட விரோத பணபரிவர்த்தனை தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே, ராகுல் காந்திக்கு ஆதரவாக, மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்திற்கு இடது விலா எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற பேரணியில் காவலர் தாக்கியதில் எலும்பு முறிவு ஏற்பட்டது என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.
தருமபுரி - காளியம்மன் கோயில் தேர் அச்சு முறிந்து, கவிழ்ந்து 2 பேர் உயிரிழப்பு ... பலர் காயம்
தினமலர் : தருமபுரி - காளியம்மன் கோயில் தேர் அச்சு முறிந்து, கவிழ்ந்தது. இதில், 2 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மாதேஹள்ளி காளியம்மன் கோயில் தேர்த்திருவிழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில், சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் காளியம்மன் கோயில் தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர்.
தேர் நிலையடியைச் சேர்வதற்கு சற்று முன்பு, எதிர்பாராத விதமாக அச்சு முறிந்து முன்பக்கமாக கவிழ்ந்தது.
இதில், பாப்பாரப்பட்டி சுப்பிரமணிய சிவா காலனியை சேர்ந்த மனோகரன், சரவணன், அப்பு முதலி காலனி சேர்ந்த முருகன், மாதலி கிராமத்தை சேர்ந்த மாதேஸ் ஆகியோர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இலங்கைக்கு எப்போது ஒளிமயமான எதிர்காலம்? கண்ணுக்கெட்டிய தூரத்தில் ... .
Freddy Abraham : இலங்கைக்கு நிதியுதவி வழங்குவது தொடர்பில் மாலைதீவைச் சேர்ந்த மொஹமட் நஷீட், சவுதியின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மானை தொடர்புகொண்டபோது தற்பொழுதைய நெருக்கடியிலிருந்து மீண்டெழ இலங்கை உறுதியான திட்டங்கள் வகுக்கும் வரை அது தொடர்பில் பேசவேண்டாம் என்று கூறியுள்ளார்.
இலங்கையிடம் உள்ள விற்கக்கூடிய விடயங்கள் தொடர்பில் ஒரு பட்டியலை அனுப்பினால் அதனைப் பரிசீலனை செய்வதாக ஐக்கிய அரபு எமிரேட்சின் ஆட்சியாளர் ஷேய்க் மொஹமட் பின் அவர்கள் கூறியுள்ளார்.
மில்லியன் கணக்கான டொலர்களை உதவியாக வழங்கிய பின்னரும் இலங்கை மீண்டும் மீண்டும் மேலதிக உதவிகளைக் கோருவது ஏன் என்று இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது.
சீனா 1.5 பில்லியன் டொலர் பெறுமதியான கடன் உதவியை இலங்கைக்கு வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
ஜப்பான் இலங்கையுடன் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு வெளிப்படையாக மறுப்புத் தெரிவித்துள்ளது.
திராவிட இயக்கம் இல்லாவிட்டால் ஆதினம் இல்லை.. - ஆசிரியர் கி.வீரமணி
நக்கீரன் -மகேஷ் : திராவிடர் கழகம் சார்பில் திருச்சி பெரியார் மாளிகையில் மாநில அளவிலான மகளிர் அணி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், திராவிடர் கழகம் இயக்கத்தின் தலைவர் வீரமணி கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், தி.க.வில் மகளிர் அணியின் பங்களிப்பு மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்துப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கி.வீரமணி, “திராவிட மாடல் ஆட்சி என்பது சுயமரியாதை,சமூக நல்லிணக்கம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகும். இருப்பினும் மனித குலத்தின் சரிபகுதியாக இருக்கும் பெண்களின் உரிமையை அடைய வேண்டும் என தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தை துவங்கினார்.
ரணில் விக்கிரமசிங்க : இன்றைய பொருளாதார அவலங்களுக்கு – முன்னைய அரசாங்கமும் அரசியல்வாதிகளும்தான் காரணம்
வீரகேசரி : இலங்கை தற்போது எதிர்கொள்வது மனிதனால் உருவாக்கப்பட்ட நெருக்கடி என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்திய ஊடகமொன்றிற்கான பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இலங்கை தற்போது மிகமோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது சுதந்திரம் கிடைத்த பின்னர் இலங்கை சந்தித்துள்ள மோசமான பொருளாதார நெருக்கடியிது முன்னைய ஆட்சியாளர்களினதும் அரசாங்கத்தினதும் தவறே இதற்கு காரணம் என ரணில் அறிவிப்பு .
இன் முகாமைத்துவ ஆசிரியர் பல்கி சர்மாவிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது மனிதனால் உருவாக்கப்பட்ட நெருக்கடி என இலங்கை நெருக்கடியை விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
'படிக்காமலே சாதிக்கலாம்' என்று யாராவது சொன்னால்.. அது வெறும் ஆசை வார்த்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .. Whatsapp universityக்கு பதிலடி
கலைஞர் செய்திகள் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (13.6.2022) எண்ணும் எழுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்து விழாவில் சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழகம் முழுவதும் இந்தப் பள்ளியைத் திறந்து வைத்திருக்கக்கூடிய மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் முதலில் என்னுடைய நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
'எண்ணும் எழுத்தும்' இயக்கம் என்கிற நிலையில் இந்த நிகழ்ச்சியை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். எண்ணும் எழுத்தும்' திட்டத்தைத் தொடங்கி வைக்க, புழலுக்கு அருகே இருக்கக்கூடிய அழிஞ்சிவாக்கத்திற்கு நான் வந்திருப்பது உள்ளபடியே எனக்கு மகிழ்ச்சியை, பெருமையைத் தந்து கொண்டிருக்கிறது. இந்தப் பகுதிக்கு எத்தனையோ சிறப்புகள் இருந்தாலும், நம்முடைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் சொன்னது போல, சென்னையில் குடிநீர்த் தேவைக்கு முக்கிய ஆதாரங்களுள் ஒன்றாகத் திகழ்வது புழல் ஏரி என்பது அனைவருக்கும் தெரியும்.
ராகுல் காந்தி அமலாக்கத்துறை விசாரணைக்கு வருகை
மாலைமலர் : புதுடெல்லி: நாட்டின் முதல் பிரதமர் நேருவால் சுதந்திரத்திற்கு முன்பு நிறுவப்பட்ட பத்திரிகை நேஷனல் ஹெரால்டு ஆகும்.
இந்த பத்திரிகையை மேம்படுத்த காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி வட்டியில்லா கடன் வழங்கியது.
அந்த கடனை திருப்பி செலுத்த முடியாததால் அதன் பதிப்பு நிறுவனமான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் இயக்குனர்களாக கொண்ட 'யங் இந்தியா' நிறுவனம் கையகப்படுத்தியது.
இதன் மூலம் அசோசியேட்டட் நிறுவனத்தின் ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை யங் இந்தியா அபகரித்து விட்டதாக சுப்பிரமணிய சாமி வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பான சட்ட விரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
லக்ஷ்மன் கதிர்காமர் கொலை: புலிகள் இயக்க உறுப்பினர் ஜேர்மனியில் கைது... flashback
globaltamilnews.ne : புலிகள் அமைப்பை சேர்ந்தவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக ஜேர்மன் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைவர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவரைக் கைது செய்யுதுள்ளதாக அதிகாரிகள் ஜேர்மன் காவற்துறைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
தென்மேற்கு ஜேர்மன் பகுதியில் வசித்து வந்த 39 வயதுடைய நவநீதன் என்பவரின் வீட்டில் மேற்கள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் பின் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த நபர் தொடர்பான விபரங்களை, தமது தனியுரிமை சட்டங்கள் காரணமாக வெளியிடாத அந்நாட்டு அதிகாரிகள், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு ஒன்றின் அங்கத்தவர் என்றும் கொலை மற்றும் கொலை எத்தனிப்பு சம்பவங்களுடனும் அவர் தொடர்புடையவர் எனவும் தெரிவித்துள்ளனர். kadirgamar-assassination-suspect-arrested-in-germany/
மதுரை ஆதீனம் எல்லை மீறுகிறார், பொறுமைக்கும் எல்லை உண்டு - முரசொலி
தமிழக அரசு தொடர்பாக மதுரை ஆதினம் பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகிறார். அறநிலையத்துறை மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதோடு அதனை கலைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில், மதுரை ஆதினத்தை விமர்சித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
‘அத்துமீறும் மதுரை ஆதினம் அறிவதற்கு’ என தலைப்பிடப்பட்டுள்ள அந்த கட்டுரையில், அது என்ன சாபக்கேடோ தெரியவில்லை, சமீப காலங்களாக பெருமை மிகு மதுரை ஆதினத்துக்கு கர்த்தர்களாக வருபவர்கள் வரம்பு மீறி, வாய்துடுக்காய் பேசி அந்த ஆதினத்தின் சிறப்பை சீரழித்து வருகின்றனர்.
கொடுங்கையூரில் விசாரணைக் கைதி மரணம்.. மீண்டும் லாக்கப் மரணமா? - சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்?
சென்னையில் சமீபத்தில் விக்னேஷ் என்பவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், போலீஸ் தாக்குதலால் பலியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையை ஒட்டிய திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே உள்ள அலமாதி பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரை நேற்று இரவு திருவள்ளூரில் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அப்பு என்ற ராஜசேகர் மீது கொள்ளை, வழிப்பறி என 23 வழக்குகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிதம்பரம் கோயில் நலனில் அக்கறை உள்ள பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்” : அறநிலையத்துறை அதிரடி அறிவிப்பு!
கலைஞர் செய்திகள் : கடலூர் மாவட்டம், சிதம்பரம் திருக்கோயில் நலனில் அக்கறை உள்ள நபர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் திருக்கோயில் நலனில் அக்கறை உள்ள நபர்கள் தங்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை வரும் 20, 21ம் தேதிகளில் விசாரணைக்குழுவிடம் தெரிவிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, நாளிதழ்களில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், “கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருள்மிகு சபாநாயகர் திருக்கோயில் குறித்து விசாரணை மேற்கொள்ள தமிழ்நாடு இந்து சமய அறநிலைய அறக்கொடைகள் சட்டத்தின் சட்டப்பிரிவு 23 மற்றும் 33- ன் படி ஆணையரால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவிடம்,
ஞாயிறு, 12 ஜூன், 2022
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இடமாற்றம் சென்னை
வணிகவரித்துறை முதன்மைச் செயலாளராக தீரஜ்குமர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, சுகாதாரத்துறை செயலாளர் பதவியில் இருந்து ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்றை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதனால், தமிழக சுகாதாரத் துறையின் புதிய செயலாளராக செந்தில்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், உள்துறை செயலாளராக இருந்த எஸ்.கே.பிரபாகர் மாற்றப்பட்டு பணீந்திர ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
மன்னார் காற்றாலை அதானி கைப்பற்றினார்! இலங்கைக்கு அழுத்தம் கொடுத்த மோடி?
BBC Tamil : அதானிக்காக கோட்டாபயவுக்கு நரேந்திர மோதி அழுத்தம் கொடுத்தாரா? இலங்கை மின் திட்ட சர்ச்சை மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம், விலை மனுக் கோரல் இன்றி, இந்தியாவிற்கு சொந்தமான அதானி நிறுவனத்திற்கு கையளிக்கப்பட்டமை, தற்போது பேசுப் பொருளாக மாறியுள்ளது.
பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்ற தெரிவுக் குழு (கோப் குழு) முன்னிலையில் இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ.பெர்டினான்டோ வெளியிட்ட கருத்து, இன்று பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் விடுக்கப்பட்ட அழுத்தத்திற்கு மத்தியில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த திட்டத்தை அதானி நிறுவனத்திற்கு வழங்குமாறு கூறியதாக மின்சார சபையின் தலைவர் கூறியிருந்தார்.
பினராயி விஜயனுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
தினத்தந்தி : கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கேரளாவில் தங்கம் கடத்தலில் முக்கிய குற்றவாளியான சுவப்னா சுரேஷ், முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது மனைவி, மகளுக்கு தங்கம் கடத்தலில் தொடர்பு இருப்பதாக பரபரப்பு தகவலை வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் எதிர்கட்சியினர் கடந்த 5 நாட்களாக பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆங்காங்கே முதல்-மந்திரி செல்லும் இடங்களில் சாலை மறியல், கருப்பு கொடி காட்டுதல் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதையடுத்து முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டு உள்ளது.
144 தடை.. : “கலவரங்களுக்குப் பின்னால் பா.ஜ.க.வின் சதி உள்ளது” - மம்தா ஆவேசம்
கலைஞர் செய்திகள் : இந்த வன்முறைகளுக்குப் பின்னால் சில அரசியல் கட்சிகள் உள்ளன. பா.ஜ.க.வினர் கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கிறார்கள் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக அவதூறு கருத்துக்கள், மத வெறுப்பு பேச்சுக்களை பா.ஜ.க தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை தொடர்ந்து பேசிவருகின்றனர்.
இந்நிலையில் அண்மையில், பா.ஜ.க செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா முகமது நபிகள் நாயகம் குறித்துப் பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
துணைக்கண்ட மொழிகளை அழித்து இந்தி வளர்ந்த வரலாறு
இளங்கோவன் சந்திரன் : ஹிந்தியின் வரலாறு:
1.12ம் நூற்றாண்டில் வட இந்தியாவில் ஏற்பட்ட முகலாயர்களின் ஆட்சியில் பார்சி, அரபி மொழிகளே ஆட்சியாளர்களின் மொழிகளாக இருந்தது. அதேநேரம் பொதுமக்கள் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு மொழி பேசுபவர்களாக இருந்தார்கள். இந்நிலையில் ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்ட மொழியே உருது மொழி. பார்சி எழுத்துக்களில் எழுதப்பட்ட இம்மொழி பேச்சுவழக்கில் இந்திய மொழிகளை உள்ளடக்கியதாக இருந்தது. அதே நேரம் மிகுதியாக பார்சி,அரபி சொற்கள் கலந்த மொழியாக இருந்தது.
2.19ம் நூற்றாண்டில் பரத்தேந் ஹரிஷ் சந்த்ர அகர்வால் என்பவர், "உருது மொழி இஸ்லாமியர்களின் மொழி. இந்துக்களுக்கான ஒரு மொழி வேண்டும்." என குரல் கொடுத்தார். இவரே இந்தி மொழியின் தந்தை என போற்றப்படுகிறார். இவரது தாய் மொழியும் உருது தான்.
3.1893ல் வாரணாசியில் நாகரி பிரச்சாரிணி சபா என்று ஹிந்தி மொழி பரப்புரைக்காக ஏற்படுத்தப்பட்டது.