புதன், 15 ஜூன், 2022

கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்க ஏற்பாடுகள் தயார்- அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு

மாலை மலர்  :  18 வயதைக் கடந்து சிலர் காதல் திருமணம் செய்து கொள்வதும் குழந்தை திருமணம் என்றே கருதப்படுகிறது.
செ‌ன்னை‌யி‌ல் அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- 1 முதல் 5-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் விரைவில் தொடங்கி வைப்பார்.
மாணவியருக்கு உயர்கல்வி உறுதித்தொகை ரூ.1,000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்ட உடன், ரூ.1,000 உறுதித்தொகை நேரடியாக மாணவியரின் வங்கிக்கணக்குக்கு செலுத்தப்படும்.
முதியோர் உதவித்தொகை வழங்கும் பணி இனி விரைவுபடுத்தப்படும். தாமதம் இருக்காது.  
விரைவில் திட்டம் தொடங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் தைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
விரைவில் வழங்கப்படும். 18 வயதைக் கடந்து சிலர் காதல் திருமணம் செய்து கொள்வதும் குழந்தை திருமணம் என்றே கருதப்படுகிறது. குழந்தைத் திருமணத்தை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

சத்துணவு முட்டை டெண்டரில் கிறிஸ்டி நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான தரவுகள், புகார்கள் ஏதும் அரசிடம் இல்லை. தொடர்ந்து டெண்டர் கோரும் நிறுவனங்கள் பட்டியலில் கிறிஸ்டி நிறுவனமும் உள்ளது.  விலைப்பட்டியலை பொறுத்து டெண்டர் ஒதுக்கப்படும்.

சத்துணவு பணியாளர் நியமனம் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும். முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. முதியோர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முதியோர்களுக்கான தனி கொள்கை வடிவமைக்கப்பட்டு வருகிறது விரைவில் வெளியிடப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் தொலைநோக்குடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முதியோர் இல்லங்களே கூடாது என்பதே அரசின் எண்ணம். ஆனால் சூழல் அப்படி இல்லை. தனியாக இருப்பது முதியோர்களுக்கு பாதுகாப்பில்லை என்பதால், முதியோர் இல்லங்களைத் தேடி பலர் வருகின்றனர். இவ்வாறு கீதாஜீவன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக