Sen Balan :
சற்றே நீண்ட.... நன்றி
மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அமேசான் கிண்டில் pen to publish 2018 போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. எனது "பரங்கிமலை இரயில் நிலையம்" புத்தகம் முதல் பரிசாக ரூபாய் ஐந்து இலட்சம் வென்றுள்ளது.
கல்தோன்றி மண் தோன்றா காலத்தில் இருந்து இருக்கும் தமிழ் மொழியின்
எழுத்துலகில் "முதல் பரிசு - ஐந்து இலட்சம்" எனும் மெகா அறிவிப்புடன் இதுவரை எந்த எழுத்துப் போட்டியும் வந்ததில்லை என்று தான் நினைக்கிறேன். இதுவரை நான் கண்ட, சிறுகதை / பெருங்கதை / குறுங்கதைப் போட்டிகள் எல்லாம் "முத்திரைக் கதைகள்; முதல் பரிசு பத்தாயிரம்" எனும் அளவில் தான் வந்துள்ளன. ஒரு கதைக்கு பத்தாயிரம் வந்ததே எழுத்துலகின் ஆரோக்கியமான சூழல் என்றெல்லாம் பேசப்பட்டது. ஏனெனில் இங்கு நம் கதைகளை பிரசுரிக்க நாம் தான் பணம் தரவேண்டும் என்ற நிலைமை. எனக்குத் தெரிந்து விகடன் மட்டும் தான் ஓரளவு மதிப்பாக வெளியில் சொல்லக்கூடிய அளவு சன்மானம் தருபவர்கள்.