tamil.oneindia.com - VelmuruganP.:
கோவை: கோவை காரமடையில் லாட்டரி அதிபர் மாட்டினின் உதவியாளர் பழனி மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் மார்ட்டின். இவர் லாட்டரி தொழில் செய்து வருவதுடன், ரியல் எஸ்டேட் தொழிலும் நாடு முழுவதும் செய்து வருகிறார்.
இந்நிலையில் மார்ட்டின் கணக்கில் காட்டாத பணம் வைத்திருப்பதாக வருமானவரி புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மார்ட்டினுக்கு சொந்தமாக நாடு முழுவதும் 70 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 3 நாட்களாக சோதனை நடத்தினார்கள்
கோவையில்
22 இடங்களிலும், சென்னையில் 10 இடங்களிலும், கொல்கத்தாவில் 18
இடங்களிலும், மும்பையில் 5 இடங்களிலும் வருமான வரித்துறையினர் ஒரேநேரத்தில்
சோதனை நடத்தினார்கள்.
லாட்டரி
அதிபர் மார்டினை வருமான வரித்துறையினர் கொல்கத்தா விமான நிலையத்தில்
வைத்து அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். அவரிடம் தொடர்ந்து விசாரணை
நடத்தி வருகிறார்கள்
இதனிடையே
வருமானவரி சோதனையில் அவரது தொழில் சம்பந்தமான பல்வேறு முக்கிய ஆவணங்கள்
ஆய்வுக்காக பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. இது தொடர்பாக கடந்த 2 நாட்களாக
மார்ட்ன் உதவியாளர் பழனியிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தி
வந்தார்கள்.
இந்நிலையில்
கோவை காரமடையில் பழனி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கோவை மாநகராட்சி
குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் எதிரே குட்டையில் பழனியின் உடல்
கண்டெடுக்கப்பட்டு உள்ளது. வருமான வரித்துறை விசாரணையின் போது பழனி தனது
கையை அறுத்து கொண்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றன
கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் மார்ட்டின். இவர் லாட்டரி தொழில் செய்து வருவதுடன், ரியல் எஸ்டேட் தொழிலும் நாடு முழுவதும் செய்து வருகிறார்.
இந்நிலையில் மார்ட்டின் கணக்கில் காட்டாத பணம் வைத்திருப்பதாக வருமானவரி புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மார்ட்டினுக்கு சொந்தமாக நாடு முழுவதும் 70 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 3 நாட்களாக சோதனை நடத்தினார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக