வியாழன், 15 செப்டம்பர், 2011

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள்.


கடந்த ஆகஸ்ட் மாதம் 21 திகதி நடந்து முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று நண்பகல் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையபளர் அனுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார். இன்று நண்பகல் 12 மணிமுதல் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பரீட்சை பெறுபேறுகளை பாரவையிட முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையபளர் அனுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டுக்கான 5ம் ஆண்டு மாணவர்களின் புலமை பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளியாக 195 புள்ளிகளை மூவர் பெற்றுக்கொண்டுள்ளனர் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதன் பிரகாரம் கெக்கிராவ முஸ்லீம் மஹா வித்தியாலய மாணவன் நலீம் பாத்தி மற்றும் மிரிஸ்வத்தை மஹா வித்தியாலய மாணவி நிதிமி ரணவீர, களுத்துறை மகளிர் வித்தியாலய மாணவன் சசிபிரபா பொன்சேகா ஆகியோரே அதிகூடிய புள்ளியாக 195 புள்ளிகளை பெற்றுள்ளனர்.

அத்தோடு காத்தான்குடி மீரா பாலிகா வித்தியாலய மாணவி பாத்திமா ஸீனா (ZEENAA) 190 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக