வியாழன், 15 செப்டம்பர், 2011

ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்


ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் கூட்ட தொடரில் பங்குபற்றுவதற்காக ஜெனிவா சென்றுள்ள அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான இலங்கை தூதுக்குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.
இச்சந்திப்பில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதேவேளை, ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் தலைமையகத்திற்கு முன்னாள் இலங்கைக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக