செவ்வாய், 2 நவம்பர், 2010

முன்னாள் புலி உறுப்பினர்கள் நடத்தப்படும் விதம் தொடர்பில் சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டும் : டியூ.குணசேகர

முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் நடத்தப்படும் விதம் தொடர்பில் சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டுமென சிறைச்சாலைகள் அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கு முன்னர் முன்னாள் போராளிகளை அரசாங்கம் நடத்தி வரும் விதம் குறித்து கவனிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் போது சரணடைந்த போராளிகளுக்கு மறுவாழ்வு அளித்து அவர்களை சமூகத்தில் இணைத்த ஒரே நாடு இலங்கை என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் போராளிகளுக்கு தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக போராட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவர்கள் மீளவும் பரீட்சைக்கு தோற்றுவதற்கு வழிவகை செய்துள்ளதுடன், அவர்களுக்கு தனியார் பிரத்தியேக வகுப்புக்களையும் அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் போது சரணடைந்த 11696 விடுதலைப் புலி உறுப்பினர்களில் காயமடைந்த சகலருக்கும் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சரணடைந்த பெரும்பான்மையான பெண் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை அரசாங்கத்தின் மனிதாபிமான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் கூர்ந்து கவனிக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக