செவ்வாய், 2 நவம்பர், 2010

சரத் பொன்சேகாவின் கோரிக்கையை பரிசீலிக்க புதிய நீதியரசர் குழு

தனக்கு பாராளுமன்ற நடவடிக்கைகளில் கலந்துக் கொள்ள அனுமதி வழங்குமாறுக் கோரி ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா முன்வைத்துள்ள கோரிக்கையை பரிசீலனை செய்யவென மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவரினால் மூன்று நீதியரசர்கள் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் ரஞ்சித் டி சில்வா, ஏ.டபிள்யூ.ஏ.கலாம் மற்றும் உபாலி அபேரட்ன ஆகிய மூவர் அடங்குகின்றனர். இவர்கள் குறித்தக் கோரிக்கையினை பரிசீலிக்கவுள்ளனர். இதன்படி கோரிக்கை நாளை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
சரத் பொன்சேகாவின் இந்த மனுவை விசாரணை செய்யவென இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட நீதியரசர்கள் மத்தியில் மாறுபட்டக் கருத்துக்கள் காணப்பட்டதால் மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் புதிய நீதியரசர் குழுவை நியமித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக