சனி, 9 மே, 2026

யாழ்ப்பாணத்து மடைப்பள்ளிகளும் தெலுங்கு மடுகா நடிகர் விஜய்யும்

நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : Simon Casie Chetty..  தமிழும் அகராதிகளும் உள்ளவரை சைமன்காசிச் செட்டியார் புகழ் வாழும் ம்.

ராதா மனோகர்   யாழ்ப்பாணத்தில் 17 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர் காலத்தில் ஒரு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடைபெற்றது 
அதில் மூன்றாவது பெரிய ஜாதியாக மடைப்பள்ளி என்ற ஜாதி குறிப்பிடப்பட்டிருக்கிறது 
இன்றும் கூட கோயில்களில் உள்ள சமையல் அறையை மடப்பள்ளி என்றுதான் அழைக்கிறார்கள் 
சமைப்பவரை மடைப்பள்ளி என்றும் முன்பு அழைத்தார்கள் 
இது பற்றிய செய்திகளை சைமன் காசி செட்டி simon kasi chetty அவர்களின் வரலாற்று ஆவண குறிப்புக்களில் காணலாம் 
இப்போதும் அந்த வழக்கம் அற்று போய்விட்டது.
மொத்த யாழ்ப்பாண மக்கள் தொகையில் இந்த மடைப்பள்ளி என்ற ஜாதி ஐந்தில் ஒரு பகுதியாக உள்ளது 
பின்பு காலப்போக்கில் இந்த ஜாதி காணாமல் போய்விட்டது 
இவர்களும் ஏனைய  பல ஜாதிகளை போலவே வெள்ளாள ஜோதியில் கலந்திருக்க வாய்ப்புள்ளது 
குறிப்பாக இசைவேளாளர் தேவேந்திர குல வெள்ளாளர் போன்று பல ஜாதிகள் தங்கள் ஜாதிப்பெயர்களோடு வெள்ளாளர்கள் லேபிளை ஒட்டி கொள்ளுதல் ஒரு மரபு 
அந்த வகையில் விஜய்யின் பெற்றோரும் வெள்ளார் ஜாதி லேபிளை ஒட்டியிருக்க கூடும்.

புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகள்” - திமுக தலைவர் ஸ்டாலின்

 hindutamil.in - அனலி    சென்னை: “மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மாநிலம் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் அவர் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்வார். இதனால், பெரும்பான்மைக்கு 11 இடங்கள் தேவைப்பட்ட நிலையில் காங்கிரஸ் 5 எம்எல்ஏக்களுடன் முதலில் ஆதரவு தந்தது. பின்னர், சிபிஐ, சிபிஎம் தனது ஆதரவை அளித்தன. இதனையடுத்து தவெகவுக்கு மேலும் 2 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே தேவைப்பட்டது.

இந்தச் சூழலில், மிகுந்த எதிர்பார்ப்புக்குப் பின்னர் இன்று விசிகவும் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியது. தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் ஆதரவைக் கொடுத்துள்ளது.

பாஜக பாலியல் கொடூரன்களை பாதுக்காக்கும் பாஜக ஐ டி விங் கொடூரன் சிடிஆர். நிர்மல் குமார்

May be an image of one or more people and people smiling

 Parama Cpim  · நிர்மல் குமார் யார் என்பதை தெரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே.
யார் இந்த நிர்மல் குமார்..,?
தவெக வின் நிர்மல்குமார்  பற்றி தெரிய இதை படிக்க வேண்டியது அவசியம்...!! 
* 2020 செப்டம்பர் 14 ஆம் தேதி, உபியில் ஹத்ரஸ் என்கிற கிராமத்தில் 19 வயதான ஒரு தலித் பெண், ஒரு பண்ணைக்கு வழக்கம்போல சாணி அள்ளச் சென்றார். 
* அப்போது ஆதிக்க தாகூர் சாதியைச் சேர்ந்த சந்தீப், ராமு, லவகுசா, ராவி ஆகிய நால்வரும் அந்தப் பெண்ணைப் பிடித்து, அவளது துப்பாட்டாவையே எடுத்து அவள் கழுத்தில் சுற்றி மாட்டி, அதைப்பிடித்துக்கொண்டே, ஒரு ஒதுக்குப்புறமாக தரதரவென்று தரையில் இழுத்துக்கொண்டு சென்றனர்.
* அங்கே, அந்த நான்கு கொடூர மிருகங்களும் அவளைக் கூட்டுப் பாலியல் வன்புணர் செய்தனர். இறுதியாக அவளைக் கொன்று வீசுவதற்காக அவளது கழுத்தில் துப்பாட்டாவை இறுக்கி மரத்தில் தொங்கவிட முயற்சி செய்தனர். அப்போது கழுத்தை நெருக்கியபோது, துடித்ததில் அவளது நாக்கு பாதி துண்டானது. அவள் துடித்துப்போய் கத்தினாள்.

தவெக வெற்றி வாக்கு இயந்திரத்தால் வடிவமைக்கப்பட்ட வெற்றி

 Surya Xavier : ஊடகங்கள் வெளிப்படுத்தாத ஒரு முக்கிய தகவலைப் பகிர்கிறேன்.
தபால் வாக்குகளில்  திமுக 163 தொகுதிகளிலும்
அதிமுக 46 தொகுதிகளிலும்
தவெக 25 தொகுதிகளிலும்
முன்னிலை பெற்றுள்ளது.
பதிவான தபால் வாக்குகளில்
திமுக 47 முதல் 52 சதமும்
அதிமுக 30 முதல் 35 சதமும்
தவெக 12 முதல் 17 சதமும்
பெற்றுள்ளது.
மூன்று நாளாக ஒவ்வொரு தொகுதியாக தேடி தேடி எடுத்துள்ளேன்.
தேர்தல் ஆணையம் முழுமையாக இதை வெளியிடவில்லை.
ஆனால் மேற்கண்ட முன்னிலை வகிக்கும் தொகுதிகளில் வாக்கு இயந்திரத்தில் திமுக பின்னோக்கி செல்வதாக உள்ளது.
முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில்
முதலமைச்சர் 982 வாக்குகளும்
அதிமுக 215 வாக்குகளும்
தவெக 383 வாக்குகளும்
நாதக 34 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன உடல் மீட்பு!

 hirunews.lk  : சந்தேகத்திற்குரிய வகையில் மரணமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்தே அவரது உடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏர்பஸ் வானூர்திகளை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கையூட்டல் ஊழல் வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்பட்டிருந்த கபில சந்திரசேனவை, மீண்டும் கைது செய்யுமாறு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதராகம நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

தவெகவுக்கு ஆதரவு இல்லை: ஐயூஎம்எல் கே.எம். காதர் மொகிதீன்விளக்கம்

 hindutamil.in - வெற்றி மயிலோன்  : சென்னை: தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க தவெகவுக்கு ஆதரவு இல்லை என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து அந்த கட்சியின் சமூக வலைதளப் பதிவில், ‘தவெக ஆதரவு இல்லை. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்கிறது என காதர் மொகிதீன் கூறினார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற புதுச்சேரி கொடூரனுக்கு துாக்கு

 dinamalar.com  : புதுச்சேரி: புதுச்சேரியில், 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்து, கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு துாக்கு தண்டனை விதித்து, புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பாதிக்கப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
புதுச்சேரி, முத்தியால்பேட்டை, சோலை நகரை சேர்ந்த, 5ம் வகுப்பு படித்த, 9 வயது சிறுமி, 2024 மார்ச் 2ம் தேதி, வீட்டின் அருகே விளையாடிய போது மாயமானார்.
முத்தியால்பேட்டை போலீசார் தேடிய நிலையில், மார்ச் 5ம் தேதி, வீட்டில் இருந்து, 100 மீட்டர் துாரத்தில், கழிவுநீர் வாய்க்காலில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.
பிரேத பரிசோதனையில், சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது உறுதியானது.

அமமுக எம்.எல்.ஏ. பெயரில் விஜய்க்கு போலி ஆதரவு கடிதம்.. விசாரித்த ஆளுநர்.. ஆட்சியை பிடிக்க தவெக மோசடி..

  minnambalam.com - Mathi :  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் எம்.எல்.ஏ. காமராஜ் பெயரில் தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு என ஆளுநர் அர்லேகரிடம் போலி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது; இது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்க இருக்கிறோம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் நேற்று இரவு ஆளுநர் அர்லேகரை சந்தித்து 3-வது முறையாக ஆட்சி அமைக்க உரிமை கோரினார். 
அப்போது அமமுக எம்.எல்.ஏ. காமராஜ், விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளதாக கடிதம் ஒன்றும் ஆளுநரிடம் கொடுக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

வெள்ளி, 8 மே, 2026

திமுகவின் கல்வி புரட்சியை கண்டு மிரண்ட தனியார் கல்வி கொள்ளையர்கள் உருவாக்கிய ரோபோதான் நடிகன் விஜய்

 Giri Sundar : இந்த ஐந்தாண்டு பள்ளி கல்வித்துறை, உயர் கல்வி கல்லூரித்துறையில் பெரும் புரட்சி ஏற்பட்டுள்ளது.
இதனால் மிரண்ட தனியார் கல்வி நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து திமுகவுக்கு எதிராக தற்குறி நடிகனை உருவாக்கி  
திமுகவை தோற்கடித்தது.
இதன் பிண்ணனியில் வி●ஐ●டி வி●ஸ்வநாதன் இருக்கிறார்.
எண்பதுகளில்  எம்ஜிஆர் கட்சியில் ஜெயலலிதா இணைந்த உடன் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக எம்ஜிஆர் கட்டுப்பாட்டை இழந்து ஜெயலலிதாவிடம் செல்ல ஆரம்பித்தது.இது அன்றைய வலம்புரி  ஜான் பேட்டிகளில் தெரியும்.
எம்ஜிஆர் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தன்னுடைய தீவிர ஆதரவாளர்களான ஜேப்பியார், முனிரத்னம், ஏசி சண்முகம், ஜெகத்ரட்சகன், பச்சை முத்து, ஜிவிஸ்வநாதன், இன்னும் பலர 
பணம் கொடுத்து கல்லூரி ஆரம்பிச்சி அரசியலை விட்டு ஒதுங்க சொல்லி விட்டார்.

காங்கிரசோடு திமுக கொண்டிருந்த 22 வருட உறவு இன்றோடு முடிவடைந்தது! ஆசீர்வாதம் ஆசாரியின் வாக்குமூலம் :

 எரியும் சூரியனே திராவிடம் தோற்காது 
காங்கிரசோடு திமுக கொண்டிருந்த 22 வருட உறவு இன்றோடு முடிவடைந்தது!
ஆசீர்வாதம் ஆசாரியின்  வாக்குமூலம் :
அப்பொழுது 2004 ஆம் வருடம் ஜனவரி மாதம் முதல் வாரம். டெல்லியில் எனது இல்லத்தில் அமர்ந்து சன் டிவியில் சினிமா பார்த்துக் கொண்டிருந்தேன். எனது கைப்பேசியில் அமைச்சர் ஆ. ராஜா அவர்கள் (@dmk_raja) அழைத்தார். அப்போது அவர் சென்னையில் தலைவருடன் அறிவாலயத்தில் இருந்தார். அதற்கு முந்தைய மாதம் அவர் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருந்தார். அவருக்கு கூடவே இருந்து பணி செய்யும் பொருட்டு எனது அரசுப் பணியில் இருந்து 6 மாதம் விடுமுறை எடுத்து இருந்த காலம் அது.
அலைபேசியில் பேசிய அமைச்சர் ராஜா,  டெல்லியில் இருந்து ஒரு முக்கியமான VVIP சென்னை வர வேண்டி இருப்பதாகவும், அந்தப் பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறும்  எனக்கு உத்தரவிட்டார். யார் அந்த VVIP ? என்று நான் கேட்டேன்.

வியாழன், 7 மே, 2026

முன்னாள் போலீஸ் கமிஷனர் Ravi Muthusamy Ipsயின் மோசடி கருத்து திணிப்பு வியாபாரம்

May be an image of one or more people and people smiling
No photo description available.

 Arul Doss Borntowin  · 2240 ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரிகளை வைத்து 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 2.44 லட்சம் வாக்காளர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தினேன். அதில் 41 சதவீதம் வாக்குகள் த.வெ.கவிற்கு செல்லும் என முன்னாள் போலீஸ் கமிஷனர் Ravi Muthusamy Ips  ஊடகங்களில் சொல்லி இருந்தார். அவர் சொன்ன கருத்து தற்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் ஏறக்குறைய உண்மை ஆயிருக்கிறது.
ஏறக்குறைய 35 சதவீதம் வாக்குகளை 
த.வெ.க வாங்கி ஆட்சி அமைக்கவிருக்கிறது.. அவர் சொன்ன படி நடந்திருக்கு. அவரின் கடின முயற்சிக்கு வாழ்த்துக்கள் ரவி அவர்களே ! அதில் ஒரு வார்த்தையை இன்று உங்களின் முகநூல் பக்க வீடியோவில் பார்க்க நேர்ந்தது. அதில் உங்கள் தந்தை சமூக நீதியை சொல்லிக் கொடுத்தார் என்றும் , அதன் அடிப்படையில் மக்கள் பணியையும் , காவல் பணியையும் செய்ததாக சொல்லி உள்ளீர்கள். மகிழ்ச்சி.
நேர்மைக்கு பெயர் போன நீங்கள் நேர்மையாக பதில் சொல்வீர்கள் என நம்புகிறேன். 2.44 லட்சம் மக்களிடம் கருத்து கணிப்பு நடத்த உங்களுக்கு எவ்வளவு தொகை செலவானது?

ராகுல் - பிரியங்காவின் ப்ரெயின் சைல்ட் தான் விஜய். அவருக்கான நிதி ஆதாரத்திற்கு பின் துணை பிரியங்கா வகையறா

May be an image of one or more people, beard and text that says "BREAKING புதிய தலைமுறை 'நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட்டணி""

 குமரிக் கிழவனார்  :         நான் தேர்தலில் நாதக சார்புநிலை எடுத்திருந்தேன். 
நான்கு நாதக வேட்பாளர்களை ஆதரித்து பதிவுகள் எழுதியிருக்கிறேன். 
மூன்று நாதக வேட்பாளர்களிடம் நேரடி தொடர்பில் இருந்தேன். 
இரண்டு வேட்பாளர்களின் களப்பணிக்கு பின் துணையிருந்தேன். 
கிட்டத்தட்ட அவர்களின் எல்லா தேர்தல் நடவடிக்கைகளையும் ஏதோ ஒரு விதத்தில் நெருக்கமான தொடர்பில் இருந்தேன்..........
தேர்தல் கணிப்புகளில் இதுவரையில்லாத ஒரு வகையில் நான் மிக தவறாக கணித்திருந்தேன். 
அதை நான் ஒத்துக்கொள்கிறேன். 
விசில் நோயால் இத்தனை லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று நான் முன் உணரவில்லை. 

“திமுக – அதிமுக கூட்டணி… எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர்…” – பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் பகீர் கணிப்பு

 Arivazhagan T -     news18-tamil : 
"தவெக ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுவதில் தாமதம் ஏற்படுது, அதிமுக, திமுக கூட்டணி, எடப்பாடி பழனிசாமி முதல்வராகலாம்” என மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தவெக தனிப்பெரும் கட்சியாக 107 இடங்களை (தவெக தலைவர் விஜய்யின் ஒரு தொகுதி நீங்கலாக) வைத்துள்ளது. 
இதனைத் தொடர்ந்து காங்கிரஸிடம் பேசி ஆதரவு பெற்றுள்ளது. 
இதன் மூலம், காங்கிரஸின் ஐந்து எம்.எல்.ஏ.க்கள் தவெகவுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.

திமுக அதிமுக ஒன்றிணைந்த ஆட்சி ஸ்டாலின் எடப்பாடி கூட்டணி ஆட்சி அமைகிறது?

 மின்னம்பலம் -Mathi : திடீர் திருப்பம்: பெரும்பான்மையில்லாத விஜய்… ஸ்டாலினை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி- ஆட்சி அமைக்க ஆதரவு கோருகிறார்!
தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வென்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஆளுநர் அர்லேகரை இன்று மே 6-ந் தேதி சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் கொடுத்தார்.
ஆனால் மெஜாரிட்டிக்கு 118 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை; ஆகையால் ஆட்சி அமைக்க ஆதரவு தரக் கூடிய 118 எம்.எல்.ஏக்களின் பட்டியலை தர வேண்டும் என விஜய்யிடம் ஆளுநர் அர்லேகர் கேட்டுள்ளார். இதனால் நாளை மே 7-ந் தேதி முதல்வராக விஜய் பதவியேற்க திட்டமிட்டிருந்தது தற்போதைய நிலையில் சாத்தியமில்லாத ஒன்றாகி இருக்கிறது.

புதன், 6 மே, 2026

திமுக கூட்டணியை முறித்த காங்கிரஸ் - திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு காட்டமான அறிக்கை

 Vimalaadhithan Mani  : BREAKING | திமுக கூட்டணியை முறித்த காங்கிரஸ் - திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு காட்டமான அறிவிக்கை
”அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியாகி இருக்கும் அறிக்கை, சில காலம் மறைந்திருந்த அவர்களின் குணத்தை வெளிக்காட்டியிருக்கிறது. எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு இக்கட்டான சூழலும் நெருக்கடியும் உண்டானதோ, அப்போதெல்லாம் உற்றத் தோழமையாக உடனிருந்தது திராவிட முன்னேற்றக் கழகம். அதற்காக நாங்கள் கொடுத்த விலை அதிகம். ஆனால் அவற்றை இன்முகத்தோடு ஏற்றோம்.

எடப்பாடியில் தொலைக்காட்சி சின்னத்திற்கு EVM போட்டது 50000 வாக்குகள் . உதயசூரியனுக்கே வெறும் 44000 தான்! புரிகிறதா இ வி எம் தில்லுமுல்லு?

 Muralidharan Pb : ஒரு எளிமையான கேள்வி. உணர்வுபூர்வமாக சிந்திக்காமல் கொஞ்சம் பகுத்தறிவோடு சிந்திப்போம்.
காட்சி ஒன்று
தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் விஜய் நிக்கறாரு, அவர் திமுகவில் இரண்டு முறை வென்ற ஆர்.டி. சேகரை எதிர்த்து நிற்கிறார். அதிமுக கமுக்கமாக கூட்டணிக்கு விட்டுக்கொடுத்து கிட்டத்தட்ட பரிச்சயமில்லாத முகமான பாமகவின் திலகபாமாவை நிற்க வைக்கிறது என்டிஏ.
இதைவிட பெசல் அயிட்டம் தான் அடுத்த காட்சி.
காட்சி இரண்டு.
எடப்பாடியில் எதிர்கட்சித் தலைவரான பழனிச்சாமி நிற்பது எப்போதோ முடிவானது. தவெக சார்பில் நிற்க வைக்கப்பட்ட வேட்பாளரோட நிலை என்ன? அவர் தலைமறைவு. அவரது டம்மி கேண்டிடேட்டான அவரது மனைவியோட வேட்புமனுவும் நிராகரிக்கப்பட, வேறு சுயேட்சை வேட்பாளர் பிரேம்குமார் என ரசிகர் மன்ற நிர்வாகியின் பெயரை தலைவர் முன்மொழிகிறார், தவெகவின் விசில் சின்னம் கிடைக்காததால் அவருக்கு தொலைக்காட்சி பெட்டி சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.

தமிழகத்தில் இனி RSS/ பாஜக அரசின் செயல் திட்டங்கள் செயல்படுத்தப் படும்.!

 Kandasamy Mariyappan  :  RSS... எதிரியை அழிக்க, எல்லா யுத்திகளையும் கையாளும்.
முடியாது போனால், தன்னையே அழித்துக் கொண்டு, தனக்கான மற்றொன்றை உருவாக்கும்.!
அப்படித்தான், 1971 முதல் திமுகவை அழிக்க முயன்று, பிறகு அதிமுகவை உருவாக்கி அதுவும் பலனளிக்காமல் போனதும்... 
தமிழ்நாட்டில், அது தனக்கான ஒரு அரசியல் இடத்தை உருவாக்கியுள்ளது.!
2026 தேர்தல் முடிவை நன்றாக கவனித்தால் இது புரியும்.!
இளைஞர்கள் மத்தியில் ஹீரோவாக இருந்த பாஜக அண்ணாமலை ஓரங்கட்டப்பட்டார்.!
நயினார் நாகேந்திரன், வானதி, முருகன், தமிழிசை எல்லாம் அமைதியாக்கப் பட்டனர்.!
பாஜக போட்டியிட்ட 27 இடங்களில், 26 இடங்களில் தோல்வியை வாங்கி கொண்டது.! அதாவது, தன்னையே அழித்துக் கொண்டது.!
ஜோஸஃப் விஜயின் சினிமா பிரபலத்தை பயன்படுத்திக் கொண்டு, தவெக போட்டியிட்ட 233 தொகுதிகளில், சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், சேலம் போன்ற நகர்ப்புறங்களில் மட்டுமே வெற்றிபெற வைத்தது.!

தவெகவுக்கு எடப்பாடி ஆதரவு கிடையாது! திட்டவட்டமாக சொன்ன ஓ.எஸ். மணியன்

 tamil.oneindia.com - Vigneshkumar  : சென்னை: தவெகவுக்கு அதிமுக ஆதரவு தராது என்று மாஜி அமைச்சர் ஒ.எஸ். மணியன் கூறியிருக்கிறார். சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை சந்திப்பிற்கு பிறகு, ஒஎஸ் மணியன் இந்த கருத்துகளை கூறினார். 
அதிமுகவிடம் ஆதரவு கேட்டு தவெக பேச்சுவார்த்தை நடத்துவதாக லீமா ரோஸ் கூறிய நிலையில், மனியன் அதற்கு நேர்மாறான தகவலை கூறியுள்ளார்.
தமிழக அரசியலில் மே 4 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு 108 இடங்களைப் பிடித்துத் தனிப்பெரும் கட்சியாகத் தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியமைக்கத் தேவையான 118 என்ற மேஜிக் எண்ணைத் தொட இன்னும் 10 இடங்கள் தேவைப்படுகின்றன.

EVM இது அலையில்லை இ வி எம் சதிவலை பொன்ராஜ் அதிரடி

 Devayani Hariharan  :  ஒரு பெரிய சந்தேகமும் மனதில் வலுக்கிறது!
நான் காங்கிரஸ்காரி உண்மைக்கு புறம்பாக ஒரு போதும் நிற்க மாட்டேன்...
EVM மீது சற்று சந்தேகம் உள்ளது...
இந்தியாவில் பாஜக ஆட்சி மிகவும் மோசமாக உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, தனியார் மயமாதல் மற்றும் கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்று தோல்வி,மோசமான ஆட்சியை கொடுத்தும் பாஜக ஆட்சியில் உள்ளது எவ்வாறு EVM மிஷன் தான் காரணம் அதில் உள்ள முறைகேடு...
தமிழ்நாட்டில் EVM ல் தில்லு முல்லு செய்ய சரியான புதிய கட்சி தேவை அப்போது தான் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பி வாக்களித்தனர் என்று நம்ப வைக்க முடியும்.... மக்களின் சினிமா மோகத்தை பயன்படுத்தி பாஜக நடத்திய EVM சதியாக கூட இருக்க வாய்ப்பு இருக்கிறது...

செவ்வாய், 5 மே, 2026

தவேக எம் எல் ஏ முஸ்தபாவின் ஹிந்தி பேட்டி

 ஆர் எஸ் எஸ் இன் சம்பள கூலிக்கட்சிதான் தமிழக வெற்றி கழகம் என்பதில் சந்தேகமே இல்லை.
இப்போது தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்திருப்பது ஆர் எஸ் எஸ்தான் 
கடந்த ஒரு  நூற்றாண்டாக தமிழ்நாட்டை அவர்களின் ஆரிய சனாதன ஆதிக்கத்திற்குள் கொண்டுவருவதற்கு விடாது முயற்சி செய்தார்கள் 
அதன் பலனை தற்போது ஓரளவு பெற்றுவிட்டார்கள் என்றுதான் தெரிகிறது 
இந்திய  மண்ணின் வெகுஜன மக்களை ஆள்வதற்கு ஆரியம் உருவாக்கிய மதவெறி கோட்பாடுதான் சனாதன பார்ப்பனீயம்..
தப்பி தவறியும் மண்ணின் மக்களுக்கு கல்வி செல்வம் அதிகாரம் கிடைத்து விடக்கூடாது என்பதுதான் அவர்களின் முக்கிய கொள்கை.
சுயமரியாதை இயக்கத்தின் நீட்சியான இன்றைய திராவிட முன்னேற்ற கழகம் இந்திய மண்ணின் மக்களின் அத்தனை உயர்வுக்கும் உந்துவிசையாக செயல்பட்டு கொண்டிருப்பதை எதிரிகளும் ஏற்று கொள்வார்கள்.
ஆரியத்தின் முதல் குறி மொழி 
அடுத்த குறி கல்வி 
அதற்கடுத்த குறி அடித்தட்டு மக்களின் பொருளாதார மீட்சி.

Delimitation bill ஐ தோற்கடிக்க காரணமான முக.ஸ்டாலினை வஞ்சம் தீர்த்திருக்கிறார்கள் இனப்பகைவர்கள்.

 சுப.மோகன் ராஜ் : அரவிந்த் கெஜ்ரிவாலை உள்ளே வைத்து படுத்திய, செந்தில் பாலாஜியை ஒரு வருடம் மேல் சிறையில் வைத்து கொடுமை செய்த, இந்தியாவின் தன்னாட்சி அமைப்புகளை எல்லாம் corrupt செய்து தன்னுடைய ஏவல் படையாக பயன்படுத்தும் ஒரு ஒன்றிய அரசு குறிப்பாக அமித்ஷா கரூர் சம்பவங்களில் கொத்தாக சிக்கிய விஜயை விட்டு விட்டார் என்று நம்பும் அளவு அப்பாவிகள் அல்ல நாம்.
நேரடியாக பிஜேபி என்றால் தானே வரமுடியாது இதோ உங்களுக்குள்ளே இருந்து எனக்கு தேவையானதை நான் செய்து கொள்கிறேன் என்று முடித்திருக்கிறார்கள்.
வெற்றி தோல்வி திமுகவிற்கு புதிதல்ல முதுகு குத்தல்களும் புதிதல்ல, முதல்வர் கொளத்தூரில் தோற்றது இன்றும் ஜீரணிக்க முடியாத ஒன்று. மேலும் பாஜக மாதிரியான ஒன்றிய அரசு ஆட்சி செய்யும் ஒரு நாட்டில் எந்தளவு தேர்தல் ஆணையமும் EVM எந்தளவு நேர்மையாக நடந்து கொள்ளும் என்கிற ஐயம் எழாமல் இல்லை. இன்னும் இது மக்களால் வழங்கப்பட்ட வெற்றியாக நான் கருதவில்லை.

பாஜகவின் சித்து விளையாட்டு ஆரம்பம்.

 தமிழ்க்கவி   :  பாஜகவின் சித்து விளையாட்டு ஆரம்பம்.
பெரும்பான்மை கிடைக்காத சட்டமன்றம். 
இது முதல் முறையல்ல. 
106 தொகுதிகளில் தமிழக வெற்றி கழகத்தை முடக்கியும், 72 தொகுதிகளில் திமுகவை மிஞ்சவிட்டும், 55 தொகுதிகளுக்குள் அதிமுகவை கட்டுப்படுத்தியும், தனது பேராசையை நிறைவேற்றிக் கொள்ள துடிக்கிறது பாஜக.
பெரும்பான்மை பெற 118 என்ற மேஜிக் எண் தேவைப்படுகிறது. இதில் 106 தொகுதிகளை விஜய் பெற்றிருக்கிறார். மீதம் 12 தொகுதிகள் பெரும்பான்மையை நிரூபிக்க தேவை. அதற்கு கால அவகாசம் 15 நாட்கள் வரை கொடுக்கப்படும். கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள் 106 தவெக, 5 தொகுதி காங்கிரஸ் 2 தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் 113 தொகுதிகள்  திமுக கூட்டணியில் இருந்து தேறிவிட்டது. 
மீதம்  வேண்டியது 6 தொகுதி. அதில், அமமுக 1 அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி 5. ஆக மொத்தம் 119. 
தன் போக்கிற்கு இனி ஆட வைப்பது ஒன்றிய பாஜகவின் திட்டம். 
விஜய் பாஜகவை மீறி எதுவும் செய்ய முடியாது. 

திங்கள், 4 மே, 2026

விஜய்க்கு மோடி வாழ்த்து

 minnambalam.com - Kavi : தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார். 
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 
“தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு  ஆதரவளித்த தமிழக வாக்காளர்களுக்கு எனது நன்றிகள். மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம்.
சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு  எனது பாராட்டுகள்.
தமிழகத்தின் முன்னேற்றத்திற்கும், தமிழக மக்களின் நலனை மேம்படுத்துவதற்கும் மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்ளும்.” என்று பதிவிட்டுள்ளார். 


JVP அரசாங்கத்தில் இருந்து 15 MPக்கள் விலகல்? owner

 வீரகேசரி : தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சுமார் 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் அரசாங்கத்திலிருந்து விலகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் அதிகளவில் பரவி வருகின்றன.
திசைகாட்டி ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகியுள்ள நிலையில், தற்போது சமூக ஊடகங்கள் இந்தச் செய்தியைப் பெரிதாகப் பேசி வந்தாலும், திசைகாட்டியின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசாங்கம் அமைத்து இரண்டு மூன்று வாரங்கள் கடந்த போதே இது குறித்து கிசு கிசுக்கள் எழுந்தன. திசைகாட்டி அரசாங்கத்திற்குள் பல்வேறு வடிவங்களில் ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு இடையே மோதல்கள் நிலவியமையே இதற்கு காரணம்.

கலாநிதி – பேராசிரியர் பதவிகள், கொள்கை ரீதியான பிரச்சினைகள் போன்ற பல்வேறு விடயங்களை மையமாகக் கொண்டு இந்த மோதல்கள் உருவெடுத்து வருவதாகவும், சில சந்தர்ப்பங்களில் ஜே.வி.பி.யின் அரசியல் குழுக்கூட்டங்கள் இதனால் மிகவும் சூடுபிடித்திருந்துள்ளன.

ஞாயிறு, 3 மே, 2026

ஆர் எஸ் பாரதி : வாக்கு எண்ணிக்கையில் குழப்பம் விளைவிக்க பாஜக திட்டம்!

  hindutamil.in  :  சென்னை: தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளான மே.4 அன்று சட்டம் ஒழுங்கு சீர்குலையக்கூடும் என்ற அச்சம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கக்கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தமிழக காவல்துறைத் தலைவர் ஆகியோருக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மனு அளித்துள்ளார்.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தமிழக காவல்துறைத் தலைவர் ஆகியோருக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அளித்த மனுவில், “2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று, பாரதிய ஜனதா கட்சியும் , அக்கட்சியின் தூண்டுதலின் பேரில் செயல்படும் பிற அரசியல் கட்சிகளும் இணைந்து, வாக்கு எண்ணும் மையங்களில் குழப்பங்களை விளைவிக்கத் திட்டமிட்டுள்ளதாக எங்களுக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.

வேடசந்தூர் தொகுதி : ஆண்டுகளாக அரியணை ஏறும் கட்சியை அடையாளம் காட்டும் தொகுதி!

 dinamalar.com  :  தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகள் இருந்தாலும் பெல்வெதர் தொகுதியான வேடசந்தூர் தொகுதியில் எந்த கட்சி வெற்றி பெறுகிறதோ அந்த கட்சி தான் அரியணை ஏறும். இந்த உண்மை 2026 தேர்தலிலும் தொடருமா என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 4ம் தேதி காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. அனைத்து முன்னிலை விவரங்கள், ஓட்டு எண்ணிக்கை விவரங்கள் அதன் பின்னர் படிப்படியாக அறிவிக்கப்பட இருக்கிறது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் கட்சித் தலைவர்களின் தொகுதிகள், முக்கிய கட்சிகளின் பாரம்பரிய தொகுதிகள் இருந்தாலும் ஒரேயொரு தொகுதியை தான் அனைத்து கட்சிகளும் உற்று நோக்கி வருகின்றன.

OCI Card வெளிநாடுவாழ் இந்திய குடிமக்கள் அட்டை எப்படி பெற்றுக்கொள்ள முடியும்? என்ன ஆவணங்கள் தேவை?

 ilakkiyainfo.com  : வெளிநாட்டு வாழ் இந்திய குடிமக்கள் கார்ட் என்பது என்ன? அதனை எப்படி பெற்றுக்கொள்வது? அதற்கான ஆவணங்கள் என்ன? என்பது போன்ற விடயங்கள் கேள்வி பதில் வடிவில் தரப்படுகிறது.
இலங்கைக்கு கடந்த வாரம் விஜயம் மேற்கொண்ட இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் வெளிநாட்டு வாழ் இந்திய பிரஜைகள் அட்டையை பெற்றுக் கொள்வதற்கான புதிய நடைமுறைகள் தொடர்பில் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார்.
இந்நிலையில் வெளிநாட்டு வாழ் இந்திய பிரஜைகள் அட்டை என்பது என்ன? அதனை எப்படி பெற்றுக்கொள்வது? அதற்கான ஆவணங்கள் என்ன? என்பது போன்ற விடயங்கள் கேள்வி பதில் வடிவில் தரப்படுகிறது.