புதன், 23 செப்டம்பர், 2026

இடைத்தேர்தலில் விஜய் அலை இல்லை.. வெற்றி வாய்ப்பு யாருக்கு? ஐடிபிஎஸ் கருத்துக்கணிப்பு

  tamil.oneindia.com  -Mani Singh S  : சென்னை: தாராபுரம், மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ள நிலையில், இரண்டு தொகுதிகளிலும் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது? விஜய் ஆட்சியை மக்கள் எப்படி பார்க்கிறார்கள்? என்பது உள்ளிட்ட கருத்து கணிப்பு முடிவுகளை ஐடிபிஎஸ் திருநாவுக்கரசு வெளியிட்டுள்ளார். இடைத்தேர்தல் களத்தில் விஜய் அலை இல்லை என்றும் அவர் கணித்துள்ளார்.


தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலை முன்னிட்டு ஐடிபிஎஸ் நிறுவனம் இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. ஐடிபிஎஸ் திருநாவுக்கரசு இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசி கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
By-election opinion poll No vijay wave in Dharapuram Maduranthakam who will win IDPS predicts
விஜய் அலை இல்லை

இடைத்தேர்தல் வெற்றி வாய்ப்பு என்று பார்க்கும் பொழுது இரண்டு தொகுதிகளிலும் விஜய் அலை இல்லை. திமுக, அதிமுக சட்டசபை தேர்தலைவிட தேர்தல் பணியை சிறப்பாக செய்து வருகிறது. கடுமையான போட்டி உள்ளது. தாராபுரத்தில் தவெக வேட்பாளருக்கு கடும் எதிர்ப்பு உள்ளது. பணம் வாங்கிவிட்டுதான் ராஜினாமா செய்து இருக்கிறார்கள் என்ற புரிதல் மக்களிடையே வந்துள்ளது.

2 தொகுதிகளிலுமே தவெக வேட்பாளர் போட்டது பின்னடைவுதான். கடுமையான போட்டி இழுபறியாக உள்ளது என்பதையே புள்ளி விவரம் காட்டுகிறது. எந்த கட்சி ஜெயிக்கும் என்று தெரியாது. கடுமையான போட்டி உள்ளது. எதிர்பாராத முடிவுகள் கூட வரலாம் என்ற எதிர்பார்ப்பு இந்த தேர்தலில் உள்ளது.
புதிய தலைமை செயலகம்:

தமிழக அரசுடைய தற்போது நிதி நிலையில் புதிய தலைமை செயலகம் தேவையா? என்ற கேள்விக்கு தேவை என்று 18 சதவீதம் பேரும், தேவையில்லை என்று 76 சதவீதம் பேரும் தெரிவித்து உள்ளனர்.

முதல்வராக விஜய் இருப்பதை மக்கள் விரும்புகிறார்களா? என்ற கேள்விக்கு விருப்பம் என 31 சதவீதம் பேரும், விரும்பவில்லை என்று 59 சதவீதம் பேரும் கருத்து சொல்லவில்லை என 10 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.
விஜய் தொடர வேண்டுமா?

எடப்பாடி பழனிசாமி செயல்பாடு தேர்தலுக்கு பின் எப்படி உள்ளது? என்ற கேள்விக்கு நன்று என 52 சதவீதம் பேரும், ஓரளவு என 12.33 சதவீதம் பேரும், மோசம் என 30 சதவீதம் பேரும், கருத்து சொல்லவில்லை என்று 5.51 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வராக விஜய் தொடர வேண்டுமா? என்ற கேள்விக்கு உடனே ஆட்சியை கலைக்க வேண்டும் என்று 49.2 சதவீதம் பேரும், ஆட்சி தொடர வேண்டும் என 10.53 பேரும், பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் என 39.80 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
நடிகர்கள் தனிக்கட்சி

தமிழக முதல்வர் ஆட்சியில் இன்னும் எஞ்சிய ஆண்டுகள் பூர்த்தி செய்யக்கூடிய வாய்ப்பு? என்ற கேள்விக்கு ஆம் என்று 18.52 சதவீதம் பேரும், இல்லை என்று 73 சதவீதம் பேரும், கருத்து சொல்லவில்லை என 8.33 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

நடிகர்கள் தனிக்கட்சி தொடங்குவதில் வரவேற்பு உள்ளதா? என்ற கேள்விக்கு வரவேற்பு என 42 சதவீதம் பேரும், இல்லை என 73 சதவீதம் பேரும், கருத்து சொல்லவில்லை என 8.33 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.
இடைத்தேர்தல்

மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனல் பறக்க பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில் ஆளும் தவெக, எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சிகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வேட்பாளரை களமிறக்கியுள்ளன. இடைத்தேர்தல் என்றாலும் இந்த தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை தமிழக மக்கள் இடையே ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக