சனி, 2 மே, 2026

கூட்டணி கட்சிகளை பற்றி தலைமை பார்த்துக்கொள்ளும்.. தான்தோன்றித்தனம் வேண்டாம்

Sabaa Naayagam :  கூட்டணி கட்சிகளை பற்றி தலைமை பார்த்துக்கொள்ளும்...
பத்து மாசம் குழந்தையை தாங்கி பெற்று எடுக்கும் தாயுக்கு தான் தெரியும் உண்மையான வலி...
தந்தைக்கு கூட பிரசவ வலி தெரியாது..
இது cringe ஆக இருந்தாலும் உண்மை...அதேப்போல தான் கூட்டணி கட்சி விஷயமும்..
கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் உட்கார்ந்துட்டு easy ஆக விசிக வேண்டாம் என சொல்லலாம்..திருமா waste என பக்கம் பக்கமாக கட்டுரை எழுதலாம்... தேர்தல் நேரத்தில் அசோக் நகர் விசிக அலுவலகத்துக்கு சென்று நம்ம தொகுதிக்கு திருமா பிரச்சாரத்திற்கு வருவாரா என ஏங்கி தவிக்கும் வட மாவட்ட திமுக மாவட்ட பொறுப்பாளர்கள், வேட்பாளருக்கு தான் தெரியும் விசிகவின் உபயோகம்...  MRK, SS, நெய்வேலி சபா, அன்னியூர் சிவா, VILLUPURAM லட்சுமணன், நந்தகுமார், மெட்ராஸ் SEKAR BAABU, சைதை மாசு, கார்த்திக் மோகன்,  ஜெயங்கொண்டம் கண்ணன், குடந்தை ANBU, மருதூர் செழியன், பூம்புகார் நிவேதா என 150 மேற்பட்ட தொகுதி பொறுப்பாளர்கள், செலவு செய்யும் வேட்பாளர்கள், கழக நிர்வாகிகளுக்கு தான் கூட்டணி கட்சியான விசிக வின் USE தெரியும்... 
இது நாகர்கோவில் காரனுக்கு புரியாது, ராமநாடு காரனுக்கு தெரியாது...திருமா வுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்பார்கள் ??
இதேபோல தான் சீர்காழியில் உட்கார்ந்துகிட்டு காங்கிரஸ் வெளியே போ என கூவலாம்..உண்மையில் காங்கிரசின் அருமை மனோ தங்கராஜ், ஆஸ்டின், மகேஷ் போன்றோருக்கு தான் தெரியும் ... எங்க ஊருல காங்கிரஸ் டம்மி என்பதால் மாநிலம் முழுவதும் அப்படி என நினைப்பது சிறு பிள்ளைதனம்....
நுங்கம்பாக்கத்தில் உக்காந்துகிட்டு இடதுசாரிகள் கூட்டணிக்கு வேண்டாம் என உளறலாம்..ஆனால் இடதுசாரிகளின் தேவை பூண்டி கலைவாணன், நாகை கவுதமன், TRBR, திருப்பூர் திமுக நிர்வாகிகளுக்கு தான் தெரியும்.... இடதுசாரிகளின் திண்ணை பிரசார கட்டமைப்பு பலம் தெரியுமா ?
இதேபோல தான் இசுலாமிய கட்சிகளும்...அனைத்திற்கும் பலம் இருக்கவே செய்கிறது.. உழைப்பு கண்டிப்பாக போடுகிறார்கள்...கூட்டணி கட்சிகள் ஊமையா அல்லது அடிமையா..அவர்கள் பேசத்தான் செய்வார்கள்....சிறு விமர்சனம் செய்துவிட்டு கடந்து தான் போகணும்...அதுதான் ஆரோக்கியம்...
கட்சி நடத்தவும், தேர்தலில் நிற்கவும் பல கோடி தேவை ..அனுசரிக்காமல் வெற்றி கிடைக்காது...முகநூலில் உக்காந்துகிட்டு  அவன் வேணாம் இவன் வேணாம் என சொல்வது தற்குறித்தனம்...
இந்த 2026 இல் கூட்டமாக சேர்ந்துகொண்டு போடுங்கம்மா ஓட்டு உதயசூரியனை பார்த்து என சாலையில் கத்திட்டு போனால் மட்டும் வெற்றி பெற்றிட முடியுமா...இப்படி கத்துவதால் எத்தனை ஓட்டு கூடிட போகுது???
- சபாநாயகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக