சனி, 2 மே, 2026

சூரியசக்தியில் தமிழகம் முதலிடத்தில் , 218.60 கோடி யூனிட்கள் - ஒன்றிய மின்சார ஆணையம் மார்ச் மாத அறிவிப்பு

 தினமலர் : சென்னை: தென் மாநிலங்களில் உள்ள சூரியசக்தி மின் நிலையங்களில், கடந்த மார்ச்சில் உற்பத்தியான மின்சாரம் விபரத்தை மத்திய மின்சார ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில், தமிழகம், 218 கோடி யூனிட்களுடன் முதலிடத்தில் உள்ளது.
தமிழகத்தில் சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து ஆண்டுக்கு 300 நாட்களுக்கு மேல், மின்சாரம் கிடைக்கும் வகையில், சாதகமான வானிலை நிலவுகிறது. இதனால், தனியார் நிறுவனங்கள், நிலத்தில் அதிக திறனில் சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்க, ஆர்வம் காட்டுகின்றன.



இது தவிர பலரும், மின் கட்டண செலவை குறைக்க, வீடு, அலுவலகம் உள்ளிட்ட கட்டடங்களில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்கின்றனர். கடந்த மார்ச் நிலவரப்படி, மொத்த சூரியசக்தி மின் உற்பத்தித்திறன், 13,579 மெகாவாட் என்றளவில் உள்ளது. அதில், மழை தவிர்த்த நாட்களில் தினமும் சராசரியாக, 4 - 5 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியாகிறது.

 கடல் மீன் உற்பத்தியில் 3 சதவீதம் உயர்வு 6.85 லட்சம் டன் பிடித்து தமிழகம் முதலிடம்

 கடல் மீன் உற்பத்தியில் 3 சதவீதம் உயர்வு 6.85 லட்சம் டன் பிடித்து தமிழகம் முதலிடம்

இந்த ஆண்டு மார்ச்சில், தென் மாநிலங்களில் உள்ள சூரியசக்தி மின் நிலையங்களில் உற்பத்தியான மின்சார விபரங்களை மத்திய மின்சார ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. அந்த மாதத்தில், தென் மாநிலங்களில், 613 கோடி யூனிட் சூரியசக்தி மின்சாரம் உற்பத்தியாகி உள்ளது.

அதில், தமிழகம், 218.60 கோடி யூனிட்களுடன் முதலிடத்தில் உள்ளது. இது, 2025 மார்ச்சில், 160 கோடி யூனிட்களாக இருந்தது. தமிழகத்திற்கு அடுத்து, கர்நாடகா 181; ஆந்திரா, 113; தெலுங்கானா 71; கேரளா 29 கோடி யூனிட்களுடன், அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. புதுச்சேரியில், 10 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தியாகியுள்ளது.

தமிழகத்தில், 2025 ஏப்., முதல் இந்த ஆண்டு மார்ச் வரை, சூரியசக்தி மின் உற்பத்தி, 1,969 கோடி யூனிட்களாக அதிகரித்துள்ளது. இது, 2024 - 25ல், 1,573 கோடி யூனிட்களாக இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக