வியாழன், 28 நவம்பர், 2024

ஃபெங்கல் புயல்- எங்கே கரையை கடக்கிறது- சென்னைக்கு வராது - வெளியான பிந்திய கணிப்பு

tamil.asianetnews.com - Ajmal Khan  : Fengal cyclone : தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று, தமிழகத்தை நோக்கி நகர்கிறது.
இதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவரம் அடைந்துள்ளது.
அந்த வகையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை பெய்தது.

இந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுபெறக்கூடும். அதன் பிறகு, மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

கன முதல் மிக கனமழை எச்சரிக்கை
இதன் காரணமாக இன்று (28-11-2024 )தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டது.

மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே இடத்தில் நிற்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

இந்தநிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 6 மணி நேரமாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் அதே இடத்தில் நீடிப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஒரே இடத்தில் நிலை கொண்டிருப்பதால் இன்று காலை ஃபெங்கல் புயல் உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உள்ளது.

இன்று மாலை புயலாக உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.  
மேலும்  புயலாக உருவெடுத்து வட கடலோர மாவட்டங்களை நெருங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.  அதன் படி சென்னை- புதுச்சேரி இடையை கரையை கடக்கும் என கணிக்கப்பட்டது

article_image4

Tamil Nadu Rains

எந்த பகுதியில் கரையை கடக்கும்

தற்போது இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் செல்லும் பாதையில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் படி மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என தற்போது கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலின் மையப்பகுதியான கண் புதுவை பகுதியில் இருக்கும் என தெரியவந்துள்ளது. 29ஆம் தேதி நாளை மாலை ஃபெங்கல் புயலானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து 30ஆம் தேதி கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

கரையை கடக்கும் போது புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தாழ்வு மண்டலம் என்ற நிலைக்கு வரும் என தெரியவந்துள்ளது. மேலும் கரையை கடக்கும் போது மணிக்கு 70 கி மீட்டர் வேகத்தில் காற்றோடு மழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக