புதன், 20 நவம்பர், 2024

அம்பேத்கர் மலை வாழ் பழங்குடி மக்களுக்கு முழுக்க முழுக்க எதிராக இருந்தார்?

 முகமது ஜமீல் : மலை வாழ் பழங்குடி மக்களுக்கு முழுக்க முழுக்க எதிராக இருந்த அம்பேத்கரை,
 மலைவாழ் மக்களுக்கு எதிராக செயல்பட்ட அம்பேத்கரை,
 மலைவாழ் மக்களிடம் வம்படியாக திணிக்கும் வேலையை மகா லட்சுமி என்ற ஆசிரியை செய்கிறார்..
தோழர் மகா லட்சுமியின் சேவைக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கிறேன்..
ஆனால் நீங்கள் முன்னிறுத்தும் அம்பேத்கர் அப்படி பட்டவர் இல்லை.....
பழங்குடியினர் தங்கள் அரசியல் அதிகாரத்தை பெறும் அளவிற்க்கு அறிவு இல்லாதவர்கள் என்றும், அவர்களுக்கு இட ஒதுக்கீடு பத்தி தெரியாதுனும் நான் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை பத்தி பேசல, மேலும் அவர்களுக்கு பிரிட்டீஸ் அரசு கொடுத்து இருந்த இட ஒதுக்கீட்டையும் பறிச்சு இருக்காரு அம்பேத்கர்.  வேணும்னா ஒரு 20 வருசம் கழிச்சு மலைவாழ் பழங்குடிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம்னு பரிந்துறைக்குறாரு



அம்பேத்கர்.மேலும் ஒரு வேலை பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு குடுத்தா எங்களுக்கு குடுத்த இட ஒதுக்கீட்டுல குடுக்காதீங்க அப்புடி குடுத்தா அதை எதிர்க்குற முதல் ஆளாய் நான் இருப்பேன் னு அம்பேத்கர் சொல்லுறாரு.. அது மட்டும் இல்லாம வேணும்னா மலை வாழ் பழங்குடிகளுக்கு முஸ்லீம்களுக்கு குடுத்த இட ஒதுக்கீட்டுல இருந்து எடுத்து குடுங்கனு சொல்லுறாரு..
அடுத்து மலைவாழ் பழங்குடிகளுக்கு அடிப்படை உரிமையான வாக்குரிமை கூட அளிக்க முடியாதுனும் சொல்லுறாரு.. மலைவாழ் பழங்குடிகளுக்கும் குற்றப்பரம்பரையினர் இட ஒதுக்கீட்டை பறிச்சது மட்டும் இல்லாம அத எதிர்த்தது மட்டும் இல்லாம அவர்களின் ஓட்டு உரிமையையும் பறிச்சு இருக்காரு அம்பேத்கர்..
அது மட்டும் இல்லாமல் குற்றப்பரம்பரையினர் குல மரபினர்களுக்கு முழுக்க முழுக்க எதிராக அம்பேத்கர் இருந்து இருக்கிறார். சாதி இந்துக்களுக்கு முழுக்க முழுக்க எதிராக இருந்து இருக்கிறார்.மீனவர்களுக்கு எதிராக இருந்து இருக்கிறார் அம்பேத்கர். முஸ்லீம் கிருஷ்தவர்களுக்கு முழுக்க முழுக்க RSS காரனை போல இருந்திருக்கிறார்.   அவரின் மகர் சாதிக்காக மட்டும்தான் பேசுவேன்னு சொல்லி இருக்கிறார் . தன் மகர் சாதி சூரிய /சந்திர குல சத்திரியர்கள் என்று மார் தட்டுகிறார். மகர் இளைஞர்கள் படிப்பை பாதியில நிறுத்திட்டு ராணுவத்துல சேர்ந்து வீர மரபினர்னு நிரூபிக்கனும்னு சொல்லுறாரு அம்பேத்கர்.
இப்பேர் பட்ட அம்பேத்கரை மன சாட்சியே இல்லாமல், அவர் கூறாத சொல்லாத விசயத்தை எல்லாம் அம்பேத்கர் கூறியதாக கூறி, பழங்குடிகள் மீது பார்ப்பணிய எண்ணம் கொண்டு இருந்த அம்பேத்கரை திணிப்பது உட்ச பட்ச வன்முறையின் உச்சம்....  தோழர் ஆசிரியர் மகா லட்சுமி அம்பேத்கரின் ரசிகராக இருப்பது அவரின் உரிமை அதை அனைவரிடத்திலும் திணிப்பது அதி மோசமான வன்முறை அதை அவர் நிறுத்த வேண்டும்.....
மேலும் ஒரு பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவனாக வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்....
நன்றி.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக