புதன், 20 நவம்பர், 2024

ஹரியானாவில் ஹைட்ரஜன் ரயில் விரைவில் சோதனை ஓட்டம் த

Latest Tamil News

தினமலர் : புதுடில்லி, ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயிலின் முதல் சோதனை ஓட்டத்தை, ஹரியானாவின் ஜிந்த் - சோனிபட் வழித்தடத்தில், அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன் மற்றும் சீனாவில் ஹைட்ரஜன் எரிபொருள் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், ஹைட்ரஜன் ரயில் தயாரிக்கும் பணியில் இந்தியாவும் இறங்கியுள்ளது. சென்னையில் உள்ள, ஐ.சி.எப்., எனப்படும் ரயில் பெட்டி தொழிற்சாலையில், ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில் தயாரிக்கப்படுகிறது.



இந்த ரயில், மேம்பட்ட எரிபொருள் செல்களைப் பயன்படுத்தி இயக்கப்படும். இந்த செல்கள் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனை இணைப்பதன் வாயிலாக மின்சாரத்தை உருவாக்குகின்றன. டீசல் ரயில் இன்ஜின்களை போல சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாது.

நீராவியை மட்டுமே இந்த ரயில்கள் உமிழ்கின்றன. வரும் 2030க்குள் நிகர பூஜ்ஜிய கரியமில உமிழ்வை அடைவதற்கான ரயில்வேயின் இலக்கை எட்டுவதில், இந்த ஹைட்ரஜன் ரயில் முக்கியப் பங்காற்ற உள்ளது.

ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரயில் வருகை முகுந்த்பூரில் முதல்வர் ஆதிஷி ஆய்வு

ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரயில் வருகை முகுந்த்பூரில் முதல்வர் ஆதிஷி ஆய்வு

 இந்த ரயில், மணிக்கு 140 கி.மீ., வேகத்தில் பயணிக்கும் திறன் உடையது. ஆனால், இந்த ரயில்களுக்கான முதலீடு, டீசல் இன்ஜின் ரயில்களை விட மிக அதிகம்

 ஒரு ரயிலை தயாரிக்க, 80 கோடி ரூபாய் வரை செலவாகும். இதற்கான வழித்தட கட்டமைப்புகளை நிறுவ, மேலும் 70 கோடி ரூபாய் செலவாகும் என கூறப்படுகிறது

 ஹரியானாவின் ஜிந்த் முதல் சோனிபட் வரையிலான, 90 கி.மீ., துாரத்திற்கு இந்த ரயிலின் முதல் சோதனை ஓட்டம், அடுத்தாண்டு ஜனவரியில் நடத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது

 இந்த சோதனை வெற்றி பெற்றால், 2025ல் மேலும் பல வழித்தடங்களில் ஹைட்ரஜன் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக